Thottal Thodarum

Nov 12, 2012

கொத்து பரோட்டா 12/11/12

வாசகர்கள்.. பதிவர்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துகள் -கேபிள் சங்கர்
நான்கைந்து படங்கள் வந்து போட்டிப் போடும் பண்டிகை நாட்களை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது இந்த தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளிக்கு துப்பாக்கி, போடா போடி, அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் ஆகிய நான்கு படங்கள் ரேஸில் இருப்பது ரசிகர்களுக்கு படம் பார்க்கும் ஆப்ஷனை அதிகப்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.  பெரிய படங்களுடன் சிறிய முதலீட்டு படங்களை வெளியிட்டால் கவனம் பெறாமல் போய்விடக்கூடிய வாய்ப்புண்டு என்பதாலும், அவர்களுடய படங்களுக்கு தியேட்டர் கிடைக்காமல் இருக்க வாய்ப்புண்டு என்பதாலும், சிறு முதலீட்டு தயாரிப்பாளர்கள் ஆட்டத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் இம்முறை சிறு முதலீட்டுப் படமான அம்மாவின் கைபேசி, காசிகுப்பம் போன்ற படங்கள் வருவது ஒரு விதத்தில் இந்த பெரிய பட மொனோபாலியை உடைக்கும் முயற்சியாகவே படுகிறது. நிறைய சமயங்களில் பெரிய படங்களோடு வெளியான சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்ற கதைகளும் உண்டு. பார்ப்போம் இந்த வருடம் வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்களின் வெற்றி கேள்விக்குறிதான் என்று அடியேன் சொன்னதை இந்த துப்பாக்கியாவது தகர்க்குமா? 
@@@@@@@@@@@@@@@@@@@


மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவது நாம் மட்டுமல்ல இந்தியாவில் பல கிராமங்களும் கூடத்தான். முக்கியமாய் உத்திரபிரதேச மாநிலங்களில் உள்ள பல கிராமங்களில் மின்சாரமே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியாப்பட்ட கிராமங்களில் தங்களின் குளிர்பானங்கள் ஜில்லென விற்கப்படாமல் இருப்பதைப் பார்த்த கோகோகோலாவின் இந்திய தலைவர் இதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும் என்று தங்கள் குழுவில் கூற, அக்குழு அதற்கு ஒரு மாற்று ஏற்பாட்டை கொண்டு வந்திருக்கிறது. அதாவது சோலார் பவர் மூலம் வேலை செய்யும் ப்ரிட்ஜை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சோலார் பேனலிருந்து கிடைக்கும் மின்சாரத்தை நேரடியாய் கூலருக்கு வழங்கி ஜில்லென்ற கோகோகோலாவை மின்சாரமில்லா கிராமங்களில் கிடைக்கப் பெற்றிருக்கிறார்கள். இதனால் அந்தக் கடையின் வியாபாரமும் மேம்பட்டிருக்கிறது. எப்படியென்றால் அக்கடையில் மட்டுமே மின்சாரம் இருக்க, வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் போனை சார்ஜ் செய்ய க்யூவில் நிற்க, அவர்கள் அப்படி நிற்கும் நேரத்தில் கடையில் எதையாவது வாங்கி சாப்பிடுவதால் வியாபாரம் ஏறியிருப்பதாய் சொல்கிறார்கள்.
@@@@@@@@@@@@@@@@@@
கம்போடியாவிலிருந்து மணல் இறக்குமதி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனிக்காரர்கள். ஏற்கனவே ஏறிக் கொண்டிருக்கும் மற்ற கட்டுமான பொருட்களின் விலையினால் கண் முழி பிதுங்கிப் போய் இருக்கும்  பில்டர்களுக்கு மணல் விலை உயர்வும், தட்டுப்பாடும் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால் தான் கம்போடியாவிலிருந்து இறக்குமதி செய்திருக்கிறார்கள். ஒரு குழி 12 ரூபாய் வரும் அந்த மணலை மற்ற செலவுகள் எல்லாம் சேர்த்தால் கூட இருபது ரூபாய்க்கு மேல் மிகாது. ஆனால் நம்மூர் மணல் குழி 65 ரூபாய்க்கு மேல். அதை கொடுக்க தயாரானாலும் கிடைக்காது என்கிற நிலைதான் இப்போது தமிழகத்தில். இம்மாதிரியான தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும், மணல் மாபியாவையும் தடுக்கத்தான் அரசே மணல் குவாரிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வந்தது. ஆனால் இவர்கள் மூலமாய் நியாய விலையில் மணல் கிடைப்பதற்கு பதிலாய் அதிக விலையும், மணல் பதுக்கி வைத்து விற்பனையும் நடைபெறுவது தான் அதிகரித்து உள்ளது. அரசு இதைப் பற்றியெல்லாம் கவலைப் பட்டதாய் தெரியவில்லை.
@@@@@@@@@@@@@@@@@
ஹீரோ கம்பெனிக்காரர்கள் சென்ற வாரம் தினசரிகளில் கொடுத்த விளம்பரத்தினால் அவர்களுக்கு கிடைத்த ரீச்சை எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள். அந்த விளம்பரத்தில் ஒரு ஆணும், குழந்தையும், ஹீரோ பைக்கும் இருக்க, ஆணுக்கு சேகர் ஐயர் என்றும், பெண்ணுக்கு ஸ்வேதா ஐயர் என்றும், வண்டிக்கு ஹீரோ ஐயர் என்று பெயர் போட்டு விளம்பரப்படுத்தியிருந்தார்கள். வடநாடுகளில் தங்கள் பெயர்களுடன் ஜாதிப் பெயரைப் போட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் இருக்கிறது. அது போல ஹீரோ வண்டியும் அவர்களுடன் சேர்ந்ததால் குடும்பத்தில் ஒருவராக மாறி விட்டது என்பதை சொல்லத்தான் விழைந்திருந்தார்கள். ஆனால் நம்மூர் வழக்கப்படி ஜாதிப் பெயரைப் போட்டதினால் அந்த விளம்பரம் பல பேரால் அனைத்து சமூக தளஙக்ளிலும் ஷேர் செய்யப்பட்டு, சாதாரணமாய் கிடைத்திருக்க வேண்டிய விளம்பரத்தை விட, நான்கு மடங்கு கிடைத்துவிட்டது. அது மட்டுமில்லாமல் அடுத்த நாள் தமிழ் மக்களின் உணர்வுக்கு மதிப்பு கொடுத்து ஜாதிப் பெயரை எடுத்து மீண்டும் அதே விளம்பரத்தை கொடுக்க, இன்னும் பெரிய ஹிட். எது எப்படியோ ஐயர் என்று போட்டதால் கிடைக்க வேண்டியதுக்கு  மேலேயே கிடைத்துவிட்டது  விளம்பரம்.
@@@@@@@@@@@@@@@@@
வருகிற 17ஆம் தேதி நாகரத்னா பதிப்பகம்  ஆறு புத்தகங்களை வெளியிடுகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஃப்ரீ ரிலீஸ் ஆஃபராக, ஆறு புத்தகங்களையும் 300 ரூபாய்க்கு பத்து சதவிகித கழிவோடும், தமிழ்நாட்டிற்குள்  இலவச டெலிவரியும் அளிக்கறது. வேண்டுபவர்கள் இந்த சலுகையை உபயோகித்து புத்தகங்களை பெற இங்கே க்ளிக்கவும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
Flashback
Roy Orbisonனின் ப்ரெட்டி உமன் பாடல் இந்தப் படம் வந்த காலத்தில் மிகப் பிரபல்யம்.  இந்த பாடலை நகலெடுத்து இந்தியில் சில பாடல்கள் வந்துள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்த பாடலைக் கேட்டதும் என் நினைவுக்கு வருஅது ஜூலியா ராபர்ட்ஸின் முகம் தான். இந்த வீடியோவில் வரும் அவரது முகபாவங்களைப் பாருங்கள். இப்படத்தை பார்த்தவர்களுக்கு எந்தந்த நேரங்களில் இவரது முகபாவங்கள் இப்படி இருக்கும் என்று தெரியும். பாடலின் இந்த எடிட்டட் வர்ஷன் மீண்டும் படம் பார்த்த திருப்தியைக் கொடுக்கும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
உன்னால் மற்றவர்களுக்கு சந்தோஷப்பட வைக்கும்படியான வார்த்தைகளை சொல்ல முடியாதென்றால் சொல்லாமல் இருப்பதே மேல்

டைரக்டருக்கே தெரியாத பல விஷயங்களை நுணுக்கமாய் ஆராய்ந்து பின்நவீனத்துவ மேட்டர்களை கண்டுபிடிப்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@
அம்பத்தூர் ஓ.டி வரை நேற்று ரொம்ப வருடங்களுக்கு பிறகு பைக்கில் போயிருந்தேன். இன்ஜினியரிங் படித்துவிட்டு ரெண்டு வருடம் அம்பத்தூர் எஸ்டேட்டில் மெட்ராஸ் இன்ஜினியரிங் என்கிற கம்பெனியில் வேலை பார்த்து வந்தேன். அப்போதெல்லாம் சைதையிலிருந்து அங்கே போவதற்கு கிட்டத்ட்ட இரண்டு மணி நேரம் ஆகிவிடும். எப்போது ரோடு ஹைவேஸிலிருந்து விலகிப் போகும் கிராமத்து ரோடு போலத்தான் இருக்கும். சென்ற ஆட்சியில் வில்லிவாக்கம் பாடி ஏரியாவுக்கு ஓவர் பிரிட்ஜ் எல்லாம்  கட்டியவுடன் பாடி வரை போயிருக்கிறேன் நல்ல அகலமான ரோடுகள் இருந்தது. இன்று போய் விட்டு வந்தவுடன் மீண்டும் பல வருடங்களுக்கு முன் சென்ற கிராமத்து சாலை போலத்தான் இருக்கிறது. என்னதான் த்ரூவே, ஓவர் பிரிட்ஜ் எல்லாம் போட்டாலும் கீழே போகும் வண்டிகளுக்கான ரோடுகளை இவ்வளவு மோசமாகவா வைத்திருப்பது?. பாடி தாண்டியவுடன் ரோட்டின் தூசுகளின் நடுவேத்தான் வண்டி ஓட்ட வேண்டியிருக்கிறது. ம்ஹும்.. டி.நகர் பக்கமெல்லாம் மழைக்கு முன்னாடி போட்ட அத்தனை ரோடுகளும் மீண்டும் அதே பள்ளம் மேட்டோடு.  ரோடு போட்டால் இத்தனை ஆண்டுகளுக்கு மெயிண்டெயின் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அந்த ரோடு போட்ட காண்ட்ரேக்டருக்கு தண்டனை தரவேண்டும் என்கிற சட்டம் போட வேண்டும். 
@@@@@@@@@@@@@@@@@
செவிக்கினிமை
சமீபத்தில் கேட்டதிலிருந்து மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருக்கும் பாடல் Jab Tak Hai Jaan  படத்தில் வரும் இந்த Jiya Re  பாடல் தான். ஒரு மாதிரி ஹாண்டிங்காக இருக்கிறது. பாடலை பாடிய பெண்ணின் குரலும், பின்னால் வரும் வயலினும், பெர்க்யூஷனும் தலையாட்ட வைக்கிறது என்று சொன்னால் மெல்ல அந்த தலையாட்டல் ட்ரான்சுக்கு கொண்டு விடுமோ என்ற அச்சம் வந்துவிடுகிறது. பின்னணிவயலினில் லேசாய் பழைய போனி எம்மின் சாயல் இருக்கிறது. இந்த வீடியோ அனுஷ்கா சர்மாவின் எக்ஸ்ப்ரெஷனைப் பார்க்கும் போது காதல் கதை மன்னன் என்று யாஷ் சோப்ராவை சொன்னது சரிதான் போலிருக்கிறது. அவ்வளவு க்யூட்டான எக்ஸிக்யூஷன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
ஒரு பெண் டாக்டரிடம் சென்று “டாக்டர் சமீபகாலங்களில் என்னால் செக்ஸில் ஆக்டிவாக ஈடு பட முடியவில்லை. சோர்வடைந்து விடுகிறேன்” என்று சொல்ல, அதற்கு டாக்டர் “வாரத்தில் எத்தனை நாள் நீங்கள் செக்ஸ் வைத்துக் கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். “ ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிறு என்றாள். டாக்டர் “அப்ப நடுவுல வர்ற புதனை கட் பண்ணிப் பாருங்க” என்றவுடன் அவசர அவசரமாய் அந்த பெண் “ டாக்டர் அது மட்டும் என்னால் முடியாது” என்றாள். “ஏன்?” “புதன்கிழமை என் புருஷனோட டே” என்றாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Philosophy Prabhakaran said...

நிறைய ஆப்ஷன்ஸ் என்றெல்லாம் சொல்ல முடியாது... துப்பாக்கி, போடா போடி மட்டுமே... அம்மாவின் கைபேசி, காசிகுப்பமெல்லாம் சாமான்ய ரசிகர்களுக்கு தெரிவதில்லை...

Philosophy Prabhakaran said...

// எது எப்படியோ ஐயர் என்று போட்டதால் கிடைக்க வேண்டியதுக்கு மேலேயே கிடைத்துவிட்டது விளம்பரம். //

இதனால் தாங்கள் கூற விரும்புவது...

குரங்குபெடல் said...


"டைரக்டருக்கே தெரியாத பல விஷயங்களை நுணுக்கமாய் ஆராய்ந்து பின்நவீனத்துவ மேட்டர்களை கண்டுபிடிப்பவர்களைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. "


கரக்டா சொன்னிங்க அண்ணே . . .

சில எலக்கிய பத்திரிகையில

படத்தின் ஸ்க்ரிப்ட விட பெரிசா விமர்சனம் . .

வர்றது ரொம்ப கொடுமை . .

r.v.saravanan said...

தீபாவளி நல் வாழ்த்துக்கள் சங்கர் சார்

Kalai Amuthan said...

தீபாவளி வாழ்த்துக்கள் தல.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

Anonymous said...

அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

Ivan Yaar said...

கேபிள் சங்கர்,
தீபாவளி நல் வாழ்த்துகள்
அடுத்த தீபாவளிக்கு நீங்கள் இயக்கிய படம் திரைக்கு வர வாழ்த்துக்கள் !

Unknown said...

ஹீரோ ஹோண்டா ஸ்ப்லெண்டர் விளம்பரம் ஏதோ சரியான ஒன்று என்பதாக எழுத வேண்டி வட நாட்டு ஜாதிப் பெயரையெல்லாம் தாங்கள் துணைக்கழைப்பதும் கூட ஒரு மழுப்பல்தான்.அதன் உள்ளர்த்தம் உயர்ந்த ஜாதி, உயர்ந்த வண்டி என்பதுதானெயொழிய வேறொன்றுமில்லையென்பதனை தாங்கள் மறுக்க இயலுமா. இந்தியாவில் நாம் வாழ்ந்தாலும் தமிழகம் ஒரு முன்னோடி மாநிலம் என்பதனையும் இங்குதான் ஜாதி ஒழிப்பு மாநாடு என்ற ஒன்று நடந்த்தனையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. ஜாதிகளை வட நாட்டில் போட்டுக் கொள்வதைத் தாங்கள் ஆதரிப்பதென்பது அது இங்கும் பின்பற்றப்பட்டால் தவறில்லை என்ற எண்ணவோட்டத்தினைக் காட்டுகின்றது. ஜாதி மட்டுமல்லாது இது இன ரீதியான உயர்வர்க்கச் சிந்தனையாகப் பார்க்க வேண்டியுள்ளது. ஆரியர் உயர்ந்தோர் என்பதனை உறுதி செய்ய உற்பத்தி செய்யப்பட்ட விளம்பரமென்பதனால் இது உறுதியாக எதிர்க்கப்பட வேண்டியதுதான்.