Thottal Thodarum

Nov 5, 2012

கொத்து பரோட்டா 05/11/12

சரவணக்குமாரையும், ராஜன்லீக்ஸையும் பெயிலில் எடுத்திருக்கிறார்கள். இதன் நடுவில் கார்த்திக் சிதம்பரம் வேறு தன்னைப் பற்றி அவதூறு சொன்னார் என்று ஹசாரே ஆதரவாளர் ஒருவர் மீது புகார் கொடுத்து, அவரை கைது செய்து பெயில் கொடுத்திருக்கிறார். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஃபேஸ்புக்கில் நண்பர் ஒருவர் தலித்துகளைப் பற்றி தவறான கருத்து எழுதியதாய் அவர் மீது புகார் கொடுத்திருக்கிறார்கள். போகிற போக்கைப் பார்த்தால் இணையத்தில் எல்லாராலும் கலாய்க்கப்பட்ட, ஓட்டப்பட்ட, சாம் ஆண்டர்சன், பவர் ஸ்டாரெல்லாம் கூட மன உளைச்சல் கொடுத்தார்கள் என்று கேஸ் கொடுப்பார்கள் போல. கருத்து என்ற இணையதளத்தை ஆரம்பித்து நடத்திய கார்த்திக் சிதம்பரம் போன்றவர்கள் பொது வெளியில் மக்களின் கருத்துக்களை ஏற்கும் சகிப்புத்தன்மை கூட இல்லாமல் இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. போகிற போக்கை பார்த்தால் திரைவிமர்சனம் எழுதியவர்கள் மீது இப்படத்தின் விமர்சனத்தில் திட்டியதால் மன உளைச்சல் ஆனேன் என்று தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் எல்லாம் கேஸ் போட்டால் என் நிலைமை என்ன ஆவது? ரூல்ஸை மாத்துங்கப்பா...
@@@@@@@@@@@@@@@@@@@@@


செவிக்கினிமை
டிவிட்டரில் ஏ.ஆர்.ரஹ்மானின் Unplugged Mtvயில் என்று ஒவ்வொரு பாட்டைப் பற்றியும் சொல்ல ஆர்வத்துடன் டீவியை ஆன் செய்தேன். சரியாய் இந்தப் பாடல் ஆரம்பமானது. “நெஞ்சுக்குள்ளே..” என்கிற இந்தப் பாடல் மணிரத்னத்தின் கடல் படத்தில் வருகிறது. அருமையான ஸூத்திங் மெலடி. பாடல் ஆரம்பிக்கும் போது வரும் பியானோ அக்கார்டியனும், வருடும் கிடாரும். வாவ்.. எக்ஸ்பட்டேஷன் தூக்குதே... பாடிய சக்திஸ்ரீ கோபாலனின் உச்சரிப்பு அவ்வளவாக சரியாக இல்லாவிட்டாலும்.. அருமையான.. பாடல்.

@@@@@@@@@@@@@@@@@@@@
சென்ற வாரம் நான் வசனம் எழுதிய ஈ.கோ படத்தின் ட்ரைலர் வெளியீடும், பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்தது. நல்ல வரவேற்பு திரைத்துறையினரிடம் கிடைத்திருக்கிறது. ஜாலியான ஒரு ரொமாண்டிக் காமெடியை கொடுக்க முயற்சித்திருக்கிறோம். ட்ரைலர் உங்கள் பார்வைக்கு

@@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
பழைய தமிழ் செண்டிமெண்ட் படங்களையெல்லாம் எல்லா சூப்பர் ஹீரோ படங்களாய் எடுத்து தள்ளினால் ஒலகப் பட இயக்குன ரசிகர்கள் கூத்தாடுகிறார்களே? ஏன்?

தோல்வி என்பதை நமக்கு வராதது எது என்பதை தெரிவிக்கும் ஒரு நிகழ்வாகவும் எடுத்துக் கொள்ளலாம்.:)

ஸ்கை ஃபால் செண்டிமெண்ட் ஃபேமிலி ட்ராமா அவ்வ்

மன உளைச்சல் கொடுத்தாங்கன்னு பவர் ஸ்டார் மட்டும் கேஸ் கொடுத்தா இணையத்தில இருக்கிற எத்தனை பேரு மேல கேஸ் கொடுக்க வேண்டியிருக்கும்.:)

மன உளைச்சல் என்பது கரண்டியை மனதில் விட்டு உளைத்து விடுவதா? டவுட்டு..

நான் என்னையே கலாச்சிக்கிட்டாலும் ஜெயில்ல போடுவாங்களா?
@@@@@@@@@@@@@@@@@@@@@@
“கேபிளின் கதை” நாகரத்னா பதிப்பகத்தாரின் சார்ப்பாக வருகிற 17ஆம் தேதியன்று தக்கர் பாபா ஹாலில் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. இப்புத்தகத்துடன் மேலும் ஆறு புத்தகங்கள் வெளியிடுகிறார். இப்புத்தகம்  என்னுடய ஏழாவது புத்தகம். கேபிளின் கதை பதிவுகளில் தொடராக வந்த போதே பலரின் பாராட்டுதல்கள் பெற்றது. தொடரில் எழுதியதை விட அதிக விஷயங்களோடு புத்தக வடிவில் உங்கள் முன்னால். முன் பதிவு ஆஃபராக மிக நல்ல ஆஃபர்களை நாகரத்னா குகன் அறிவித்துள்ளார். வாய்ப்பை பயன்படுத்தி புத்தகங்களுக்கு ஆதரவு கொடுக்கவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இந்த பாடல் Righteous Brothers - Unchained Melody என்கிற இந்தப் பாடல் கோஸ்ட் என்கிற படத்தில் வந்த பாடல். இந்தப் பாடலை எப்போது கேட்டாலும் காதலியை அணைத்துக் கொண்டு நடனமாட வேண்டும் போல் தோன்றும். இப்பாடலில் வரும் விஷுவல்கள் நம்மை அப்படியே கட்டிப் போடும். க்யூட் டெமி மூரின் கண்களில் தெரியும் கண்ணீரும், காதலும், பாட்ரிக் ஸ்வாசி முகத்தில் தெரியும் இயலாமையும் ஆயிரம் கதைகள் சொல்லும். காதல் கொப்பளிக்கும் இந்தப் பாடலையும், விஷுவலையும் மீண்டும் பார்த்ததில் இன்று முழுவதும் காதல் மூடில் தான் அலைவேன் போலிருக்கிறது. நீங்களும் பார்த்து காதல் கொள்ளுங்கள். இப்படத்தின் காட்சிகளைப் பார்த்து நான் ஈயுடன் லிங்க் செய்தீர்கள் என்றால் அதற்கு நான் பொறுப்பல்ல..

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
The pretty teacher was concerned with one of her young students so she took him aside after class one day.

"Little Johnny, why has your school work been so poor lately?"

"I'm in love,` replied Little Johnny.

Holding back an urge to smile, the teacher asked, "With whom?"

"With you!" he said.

"But Little Johnny," said the teacher gently, "don't you see how silly that is? Sure I'd like a husband of my own someday... but I don't want a child."

"Oh, don't worry," said Little Johnny reassuringly, "I'll use a rubber!"
கேபிள் சங்கர்


Post a Comment

12 comments:

maruthamooran said...

நெஞ்சுக்குள்ள பாடினது “சக்திசிறீ கோபாலன்“. ஹிந்திக்கார பொண்ணு இல்ல, மலையாளப் பொண்ணு அது.

Raj Chandra said...

>>ரிச்சர் கேரின் - சங்கர் சார், அவர் Patrick Swayze.

Pulavar Tharumi said...

ஈ.கோ படத்தின் ட்ரைலரே செம நகைச்சுவையாக இருக்கிறது. படம் நன்றாக இருக்கும் போல. வாழ்த்துக்கள்!

தமிழ் காமெடி உலகம் said...

உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி........

நன்றி,
மலர்
http://www.tamilcomedyworld.com/

Unknown said...

ஐயா ஒரு சிறு குறிப்பு... ஹார்மோனிகா என்பது மவுத் ஆர்கனின் மறு பெயர். மேற்கூறிய பாடலில் இசைப்பது பியானோ அர்காடியன்.

மாதேவி said...

வாழ்த்துகள்.

Rafeek said...

ego- hero sema mokkai!!! on his appearance n dialogue delivery!!

Rafeek said...

hero sema mokkai!! in EGO.

Anonymous said...

//பாடிய இந்திக்காரப் பெண்ணின் உச்சரிப்பு அவ்வளவாக சரியாக இல்லாவிட்டாலும்//

I found nothing wrong with her Tamil pronunciation. Be specific on what you say! BTW, she's not a north Indian!

விஜய் said...

//திரைவிமர்சனம் எழுதியவர்கள் மீது இப்படத்தின் விமர்சனத்தில் திட்டியதால் மன உளைச்சல் ஆனேன் என்று தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் எல்லாம் கேஸ் போட்டால் என் நிலைமை என்ன ஆவது?//

ஆமா...அந்த பயமிருக்கட்டும்... :):)

r.v.saravanan said...

ஈ.கோ படம் வாழ்த்துக்கள்!

Sathish said...

ஈகோ ட்ரைலர் கலக்கல்.. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ..