Thottal Thodarum

Nov 3, 2012

Denikaina Ready

எதுக்கும் தயார் என்கிற அர்த்தம் வரும் டைட்டிலில் விஷ்ணுவின் நடிப்பில், அவருடய அப்பா மோகன்பாபுவின் தயாரிப்பில் வந்திருக்கும் படம்.  படம் ஆவரேஜ் ஹிட் என்கிறார்கள் தெலுங்கு மார்க்கெட்டில் அந்த நம்பிக்கையில் பார்க்கப் போனால் நாமும் எதற்கும் தயார் நிலையில் பார்த்த படம். 


உலகத்தில் சினிமா என்று அல்ல கதை சொல்ல ஆரம்பித்த காலத்திலிருந்து இருக்கும் கதைதான். இரண்டு குடும்பங்கள், அவர்களுக்குள் ப்ரச்சனை, இதை பயன்படுத்தி சூடு காயும் வில்லன், அந்தக் குடும்பத்தை இணைக்க, இந்த வீட்டில் இருக்கும் ஒரு பையனும், அந்த வீட்டிலிருக்கும் ஒரு பெண்ணும் சேர்ந்து முயற்சிப்பது. சேர்ந்தார்களா? இல்லையா? என்ற க்ளைமாக்ஸ். ஆயிரம் முறை அடித்து துவைத்தாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும், ஒவ்வொரு அப் கம்மிங் நடிகர்கள் இம்மாதிரி ஒரு கதையில் நடித்துவிடுவார்கள். இதே போலத்தான் மாமியாரை எதிர்க்கும் மருமகன் கதையும். அந்த லிஸ்டில் விஷ்ணு இப்போது.

விஷ்ணு சுலைமான், சாஸ்திரி என்று இரண்டு விதமான கேரக்டர்களிலும், பெரிய வித்யாசமே இல்லாமல் நடித்திருக்கிறார். ஆங்காங்கே வரும் பிராமண ஸ்லாங்குகளைத் தவிர, எங்கும் பிராமண பைனுக்கும், முஸ்லிம் பையனுக்கும் எந்த ஒரு பெரிய லீப் கேப்புல் இல்லாமல் இருப்பது கொடுமை. அறிமுக பாடல் காட்சிகளில் தெரியும் ஸ்டைல் நன்றாக இருந்தது. 
ஹன்சிகா கொஞ்சம் இளைத்திருப்பதாய் தெரிகிறது. நெருக்கப் பார்க்க, பழைய குஷ்பூவை ஞாபகப் படுத்துகிறார். ரெண்டு பாடலுக்கு ஆடிவிட்டு, க்ளைமாக்ஸில் கண்களில் க்ளிசரின் தளும்ப நடிக்க முயற்சித்திருக்கிறார். 

படத்தை சிங்கிள் ஹேண்டாக இதற்கு முன் இதே போல பல முறை செய்த கேரக்டர் தான் என்றாலும், சலிக்காமல் நம்மை காப்பாற்றும் ப்ரம்மானந்தம்தான் ஹீரோ என்று சொல்லலாம். சுலைமானை, சாஸ்திரி என்று நம்பி வீட்டிற்கு விட்டுவிட்டு அவன் தன்னை பாராட்டும் போது ஃபீலாவது ஆகட்டும், பின்னால் அவன் ஒரு முஸ்லிம் என்று தெரிந்து விட்ட பிறகு மீண்டும் அவன் பாராட்டும் போது அவஸ்த்தைப் படும் இடமாகட்டும், படம் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்கு பிறகு அவர் எண்ட்ரி கொடுத்ததில் இருந்து க்ளைமாக்ஸ் வரை அவரும், எம்.எஸ்.நாராயணாவும் அடிக்கும் கூத்து நல்ல காமெடி.
படத்தில் பிரபு, சுமன், சீதா, கோட்டா சீனிவாசராவ் என்று தெலுங்கு குடும்ப படங்களில் இருக்கும் எல்லோரும் இருக்கிறார்கள். சுரேகா வாணி தன் கணவனை மற்றவர்களின் பார்க்கும் காமெடி கொஞ்சம் காம நெடித்தான். யுவன், சக்ரியின் இசையில் ரெண்டு பாடல்கள் தேவலாம். ஒளிப்பதிவும் ஓகே.  எல்லா பாடல்களுக்கும் ஃபாரின் பிகர்களை டான்ஸர்களாய வைத்து ஆட வைத்திருப்பதில் இருப்பது இயக்குனரின் ரசனைக்கு ஒரு சான்று.ஒரு மீடியோகர் டெம்ப்ளேட் காமெடி படம். அதை மீறி சொல்வதற்கு ஏதுமில்லை.
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: