Thottal Thodarum

Mar 23, 2010

Joyfull சிங்கப்பூர்-3

DSC_5752 காலையில் எழுந்ததும், ஒரு காப்பியை போட்டு கொடுத்துவிட்டு “அப்புறம்ணே. நல்லா தூங்கினீங்களா?” என்றவரிடம் “நீங்க ஏன் தூங்கவேயில்லை..? “ என்றவனை கோபமில்லாமல் பார்த்து, “தூங்க விட்டாத்தானே?” என்றார்.

எனக்கு கூட அவர் சொன்ன காரணத்தை நினைத்து பாவமாய்தான் இருந்தது. காலையில் நம்ம ப்ளாக்கில் லோக்கல் நம்பரை கொடுத்தவுடன் தொடர்ந்து போன் வர ஆரம்பித்தது. வந்த போன்களை பார்த்து பிரபாகர் “அண்ணே.. சிங்கப்பூர்ல இவ்வளவு நண்பர்களா? என்று அதிசயப்பட்டார். புண்ணாக்கு மூட்டை பாலாவும், என்னுடய வாசக நண்பர் ஜெய்கிருஷ்ணாவும் இன்றே சந்தித்தாகவேண்டும் என்று சொல்ல, இரவு லிட்டில் இந்தியாவில் சந்திப்பதாய் பிக்ஸ் செய்து கொண்டு, வண்ணத்திரை தொலைக்காட்சியில் விக்ரம் படம் போட்டிருந்தார்கள் அதை பார்த்துவிட்டு ஒரு தூக்கத்தை போட்டு, மாலை அவரக்ளை சந்திப்பதற்காக கிளம்பினோம்.
IMGA0221
அருமையான எம்.ஆர்.டி, மற்றும் பஸ் பயணங்களையும், அதன் தொழில்நுட்பங்களையும், கட்டமைப்பு நேர்த்திகளையும் சற்றே பொறாமையோடு வியந்தேன். வழியில் விஜய் ஆனந்தை எம்.ஆர்.டி ஸ்டேஷனில் சந்தித்துவிட்டு, முஸ்தபாவின் வாசலில் காத்திருக்க சொன்ன ஜெய்யையும், பாலாவை சந்தித்தோம். எத்தனையோ முறை போனில் பேசியிருந்தாலும், நேரில் பார்பது இதுதான் முதல் முறை. மிலிட்டரி ஆபிஸர் போல விரைப்பாக, ஸ்மார்ட்டாக இருந்தார். இவரிடம் எனக்கு பிடித்தது, இவருடய பேச்சும், நம் பேச்சை கேட்கும் போது தலையாட்டிக் கொண்டே “ஹா..ஹா” என்று செய்யும் ரெஸ்பான்ஸும்தான்.
IMGA0220அடுத்த சில நிமிடங்களில் ஜெய்யையும் பார்த்துவிட, என் கற்பனையை விட இளமையாய் இருந்தார். தீவிர ரஜினி ரசிகர். மிகவும் சாப்டான மனிதர். ஜோவியல். பார்த்தவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் இயல்பானவர். பிரபா, நான், பாலா, ஜெய் எல்லோரும் கலந்தபின், பிரபாவுக்கு நைட் ஷிப் போக வேண்மென்பதால் அவருடன் சாப்பிட அஞ்சப்பருக்குள் நுழைந்தோம். போனவுடன் பொரித்த அப்பளத்தை வைத்தார்கள். பியர்? என்று ஆர்டர் செய்ய, பிரபா மட்டும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார். அதற்குள் ஒரு மக்கை முடித்துவிட்டு கிளம்ப யத்தனித்த போது, கோவியார் வந்து எங்களை சந்தித்தார். அப்போது அங்கே இன்னொரு நண்பர் வந்து “சார்.. நீங்க கேபிள் சங்கரா..? ப்ளாகர் தானே? என்று கேட்டபடி தன்னை முத்து என்று அறிமுகபடுத்திக் கொண்டார். ரொம்ப நேரமாய் ப்ளாக் பற்றி பேசிக் கொண்டிருப்பதை பார்த்து அட நம்ம ஆட்களா? என்று வந்து கலந்ததாகவும் தானும் ஒரு ப்ளாகர் என்று சந்தோஷப்பட்டு, சிறிது நேரம் பேசிவிட்டு. கிளம்பினோம். வெளியே வந்து பார்த்தால் சாமி நின்றிருந்தார்.

IMGA0223

அவருடன் அவரது பிரதம சிஷ்யனாக அவதாரமெடுத்திருக்கும், விஜய் பாஸ்கர் என்கிற வெற்றிக்கதிரவனும், கோவியாரும் அடுத்த நாள் சாமி செய்ய இருக்கும் திருமந்திர உபன்யாச நோட்டீசுகளை விநியோகித்து கொண்டிருந்தார்கள். சாமி என்னை பார்த்து “என்ன எல்லாம் முடிச்ஞ்சாச்சா? “என்று அர்த்தததோடு வினவ, “இனிமே தான் ஆரம்பிக்கணும்” என்றேன்.

அடுத்து நாங்கள் உட்கார்ந்த இடம் ஒரு லோக்கல் ஓப்பன் பார். 12 வருட ஷீவாஸ் ரீகலுடன் ஆரம்பித்தார் ஜெய். ரஜினி, பதிவுலகம், அரசியல், செக்ஸ், சாமி,பதிவர்கள் என்று எங்கள் பேச்சில் வந்து விழாத விஷயங்களே இல்லை. இதற்கிடையே பதிவர்களுடன் தொலைபேசி பேச்சு வேறு. அவ்வளவு சுவாரஸ்யமாக ஆரம்பித்த அந்த மாலை விடியற்காலை மூன்று மணிக்கு முடிந்தது. இனிய அனுபவத்தை தந்த ஜெய்க்கும், பாலாவுக்கும் இந்த பதிவுலகத்திற்கும் நன்றிகள் பல.
IMGA0227

அங்கிருந்து டாக்ஸி பிடித்துக் கொண்டு பாலா தங்கியிருந்த ஹோட்டலான “மரினா மாண்ட்ரீயனுக்கு வந்து சேர்ந்து பதினாலாவது மாடிக்கு ஏறி விழுந்ததுதான் தெரியும். வரும் வழியில் டாக்ஸியில் “விண்ணைத்தாண்டி வருவாயா” பாட்டை கேட்டுக் கொண்டு வந்தது மங்கலாக கேட்டது.
IMGA0226கேபிள் சங்கர்
Post a Comment

40 comments:

ஜெகதீசன் said...

//
விஜய் மகேஷ் என்கிற வெற்றிக்கதிரவனும்
//
அண்ணே....அவரு விஜய பாஸ்கர்.
:)

எறும்பு said...

Present sir

பிரபாகர் said...

கூடவே இருந்தும், கிடைச்ச கொஞ்ச கேப்ல தொடர்ல தெரியாத பல விஷயங்கள், சஸ்பென்ஸ்.... சும்மா விளையாடுங்க அண்ணா!

பிரபாகர்.

venkit_Raj said...

ஏண்ணே.. பிரபாகர் அண்ணன் பீர் அடிக்கமாட்டாறா?..பாவம்.. அவர மட்டும் விட்டுட்டீங்க...ம்...

நாடோடி said...

சிங்கபூர் வாழ்க்கையை நல்லா அனுபவிக்கிறீங்க.. கேபிள்ஜி

சைவகொத்துப்பரோட்டா said...

நிதர்சன கதை நல்லா இருக்கு :))

jai said...

//*அடுத்த சில நிமிடங்களில் ஜெய்யையும் பார்த்துவிட, என் கற்பனையை விட இளமையாய் இருந்தார். தீவிர ரஜினி ரசிகர். மிகவும் சாப்டான மனிதர். ஜோவியல். பார்த்தவுடன் பச்சக் என்று மனதில் ஒட்டிக் கொள்ளும் இயல்பானவர்*.//என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே

செல்ல நாய்க்குட்டி மனசு said...

பதிவுலகம் அது தனி உலகமாகிக் கொண்டிருக்கிறது அந்தக் கால ham நண்பர்கள் போல. எங்களைப் போல சின்ன உலகத்தில் இருப்பவர்களுக்கும் பரந்த உலகத்தை காட்டும் ஒரு சாளரம் பதிவுலகம்.

Jana said...

ஹாய்..சங்கர் ஜி...எப்படி உங்கள் சுகங்கள்... அக்கரைச்சீமை அழகினிலே மனம் ஆடக்காண்கின்றீர்களோ????

vasu balaji said...

பார்ல கேமரா டேபிள் மேல இருந்ததோ. படமெல்லாம் கொஞ்சம் மப்பாவே இருக்கே:))

Cable சங்கர் said...

@ஜெகதீசன்
சாரி..சாரி.. மாத்திட்டேன்

@எறும்பு
ஓகே ரைட் பிஸியா..

@பிரபாகர்
ஆமாம்

@வெங்கிட்ராஜ்
அவர் ஒரு நான் ஆல்கஹாலிக்..

@நாடோடி
பின்ன வாழ்க்கையில் சான்ஸோ, சாய்சோ.. அத என் ஜாய் பண்ணனுமில்லையா..

@சைவகொத்துபரோட்டா
என்னது நிதர்சன கதைகளா?

@ஜெய்
தலைவரே நிஜத்தை சொன்னா நம்ப மாட்டீங்களே..:)

@நாய்க்குட்டி மனசு
ஆமாம். அது மிகப்பெரிய உலகமாகிக் கொண்டிருக்கிறது.. என்பது சந்தோசபபடவேண்டிய விஷயம்.

@ஜனா

ஆமாம். ஜனா.. ஐ என் ஜாயிட் இட்.
எங்க ஊருக்கு போயிட்டீங்காளோ..?

Punnakku Moottai said...

ஜெய் said , //என்னைய வெச்சி ஏதும் காமெடி கீமெடி பண்ணலியே//

ஹீரோவே நீர்தானையா. comedy பீசுக்குதான் கேபிள் இருந்தாரே. போதாதா ?

அன்றிரவு நாங்கள் தொலைபேசியில் ஒரு மிக பிரபல பதிவருடன் உரையாடினோம். அவர் எழுதிய கருத்திருக்கு வாசகர் என்றமுறையில் விமர்சனம் செய்தோம். அவருடைய கருத்திற்கு மாற்று கருத்து தெரிவித்தோம். அவர் அதை ஏற்க வில்லை. அத்துடன் விட்டால் பரவாஇல்லை . மேலும் அவர், "நான் எழுதுவது என்னுடைய கருத்து. அதற்கு மாற்று கருத்து கூற நீ யார். உன்னால் முடிந்தால் நீ பதிவு போடுடா. நீ என்னுடைய பதிவை படிக்க வேண்டிய அவசியம் இல்லை", என்று அவருடைய தொடர் வாசகனை (வாசகர்களை) ஒருமையில் மிகவும் அவமரியாதை செய்து விட்டார். நாங்கள் பேசியது speaker phone ல். இதை கேட்ட நாங்கள் இருவரும் அன்றிரவே அவருடைய வாசகராக இருந்து விலகிவிட்டோம். இதை கேள்விப்பட்டு திரு. பிரபா அவர்களும் விலகி விட்டார்.

அந்த பதிவர் யாரென்று நான் கூற எனக்கு விருப்பமில்லை.

Cable சங்கர் said...

//பார்ல கேமரா டேபிள் மேல இருந்ததோ. படமெல்லாம் கொஞ்சம் மப்பாவே இருக்கே:))//
சே.சே. ஹோட்டல் லைட்டிங் அப்படி..

Cable சங்கர் said...

//ஹீரோவே நீர்தானையா. comedy பீசுக்குதான் கேபிள் இருந்தாரே. போதாதா ?//

அதுசரி.. ஹீரோக்கள் இருக்கும் போது காமெடி பீஸ் ஸில்லாம எப்படி.. “:))

இராகவன் நைஜிரியா said...

ம்... நடக்கட்டும் நடக்கட்டும்

Punnakku Moottai said...

Cable Sankar said , //அங்கிருந்து டாக்ஸி பிடித்துக் கொண்டு பாலா தங்கியிருந்த ஹோட்டலான “மரினா மாண்ட்ரீயனுக்கு வந்து சேர்ந்து பதினாலாவது மாடிக்கு ஏறி விழுந்ததுதான் தெரியும்.//

உங்களுக்கு எங்க தெரியும், எனக்கு (பிரபாவுக்கும்) தானே தெரியும். 3 .30 am படுத்தும்கூட தூக்கம் வரலையே. அது எப்படி கொறட்டையிலும் ஒரு ரிதமிக்கா மியுசிக் போடுறிங்க. நல்ல வேலை ரெண்டு பக்கத்து ரூமும் காலி.

Cable Sankar said , // மிலிட்டரி ஆபிஸர் போல விரைப்பாக, xxxxxxxxடாக இருந்தார்//.

நீங்க வேற. 1993 ல் அப்படி இருக்க போய் ஆபத்தில் மாட்டிக்கொண்டேன் . Assam ல் வேலை அப்பொழுது. வயது 23 . இள ரத்தம் . அப்போ பயமில்லை. இப்பொழுதும் இல்லை. ஆனால் அப்போ கவலை இல்லை. ஒட்ட வெட்டிய முடி. தொப்பை கிடையாது. என்னை மிலிட்டரி ஆபிசர் என்று நினைத்து ULFA தீவிரவாத குழு பாலோவ் செய்தது. போட்டு தள்ள. பின் ஒரு நாளில் இதை கேள்விப்பட்டு ஆச்சிரியம்/ அதிர்ச்சி அடைந்தேன்.

Cable சங்கர் said...

பாலா நீங்க பிரபாவை பத்தி சொன்ன ரகசியத்தை நான் அப்புறமா எழுதலாம்னு இருக்கேன்..:)

தோண்ட தோண்ட நிறைய கதை சொல்றீங்களே.

மணிஜி said...
This comment has been removed by the author.
Cable சங்கர் said...

//காட்டி கொடுக்கறீங்களே !//

kusumbu jaasthiya.. umakku

ரோஸ்விக் said...

ஆஹா... நிறைய சுவாரஸ்யங்கள் நடந்திருக்கும் போலையே... பாலா அண்ணா வேற செம நக்கல் பார்ட்டி...

ம்ம்ம். கேபிள்-ஜி தொடருங்க... காத்திருக்கிறேன்.

Punnakku Moottai said...

// //காட்டி கொடுக்கறீங்களே !// //

kusumbu jaasthiya.. umakku

என்ன தலைவரே. கட் பண்ணிடீங்க.

மீண்டும் வரும் சனிக்கிழமை சென்னை வருவதாக உள்ளேன். முடிவானால் முடிந்தால் சந்திக்கலாம்.

ரோஸ்விக் said...

பாலா அண்ணா... ULFA தீவிரவாதிகள் மேட்டரு பீதிய கெளப்புது... பாத்து ராசா இன்னும் விரைப்பா இருக்காதீங்க.... கொஞ்சம் தொந்தி வந்திருச்சு அதுனால ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். :-)))

Punnakku Moottai said...

ரோஸ்விக்கு

//கொஞ்சம் தொந்தி வந்திருச்சு அதுனால ஒன்னும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன். //

பிரச்னையே இப்பதான். தொப்பைய தூக்கிக்கிட்டு ஓட முடியாது பாரு. புருஞ்சிக்கயா.

Punnakku Moottai said...

ரோஸ்விக் said ,

//பாலா அண்ணா வேற செம நக்கல் பார்ட்டி...//
என்னப்பா நீயும் என்ன போய் நக்கல் பார்டின்னு சொல்லறே. நிறைய பேரு இதையே சொல்லுறாங்க.

சும்மா சொல்ல கூடாது. நம்ம வாய் கொஞ்சம் நாறவாய் தான். இல்லன்னு சொல்லலே! சும்மா இருக்காது. வாயால இழுத்து வச்சி அல்லல் பட்டுகிட்டு வம்பு இன்னும் ஒரு தலைமுறைக்கு தாங்கும்.

இது தொடர்பாக ஒரு சின்ன சேதி.

ரொம்ம நாளுக்கு (15 வருஷம்) அப்புறம் ஒரு கல்லூரி நண்பனோட தொலைபேசி எண் கிடைத்தது . ஓரிரு முறை பேசினேன் . பின் ஒரு நாள் மீண்டும் அழைத்தேன் அவனை.

நான்: என்ன மாபிள்ள சௌக்கியமா ?
அவன்: இல்லடா. ஊருக்கு போறேன். சுகமில்ல. நாளைக்கு flight . திருச்சி போறேன் treatment பண்ண.
நான்: என்ன ஆச்சி. Fuse புடுங்கிகிச்சா. 40 வயசு ஆனாலே பியுஸ் போயிடும் .
அவன்: போடா நீ வேற.
நான்: இல்லே கொட்டை கிட்டை கீழ இறங்கி போச்சா. கொட்டை இப்போ ஜட்டிக்குள்ளே இருக்கா. இல்ல இறங்கி போனதாலே தூக்கி socks குள்ளே சொருகி வச்சிருக்கியா.
அவன்: !!!!!!
நான்: சொல்லு மாபிள்ளே.
அவன்: நீ இன்னும் திருந்தவே இல்லையடா. ஒன்னோட மூளை வளராம அப்பிடியே இருக்கு. நாயே.
நான்: எனக்கு மூளையும் வளரல, கொட்டையும் தொங்கிபோகல.
அவன்: நான் எப்படா சொன்னேன் தொங்கிபோசின்னு.
நான்: சரி இப்ப சொல்லுடா.
அவன்: என்னத்த சொல்லுறது. mood out பண்ணிட்டியே.
நான்: நான் நல்ல மூடுல தான் இருக்கேன்.
அவன்: போடா பு -- --- --- --- -- -- - --

சொல்லிட்டு போண வச்சிட்டான். பல முறை முயன்றும் அவன் போண எடுக்கவே மாட்டேங்கறான்.

சொல்லுங்க மக்களே. எதாவது தப்பா நான் பேசிட்டனா?

எல்லாரும் என்னை ஏன் நக்கல் பார்டி ன்னு சொல்லுறாங்க தெரியலே.

பேர வச்சி முடிவு பண்ணிடாங்க போல. போகட்டும் போ ரோஸ்விக்.

MSV Muthu said...

Guess you had good time in Singapore! :)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

marupadiyum naan crying. super kalakkunga annaaa

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Punnakku Moottai
சும்மா சொல்ல கூடாது. நம்ம வாய் கொஞ்சம் நாறவாய் தான். இல்லன்னு சொல்லலே! சும்மா இருக்காது. வாயால இழுத்து வச்சி அல்லல் பட்டுகிட்டு வம்பு இன்னும் ஒரு தலைமுறைக்கு தாங்கும்.

இது தொடர்பாக ஒரு சின்ன சேதி.
//

ஏண்ணே.. நானும் கண்ணுல விளக்கெண்ணை விட்டுட்டு தேடிப்பார்க்கிறேன்..
இதுல எட்ந்த கெட்ட வார்த்தையே இல்ல..

அப்புறம் எதுக்கு கோவிச்சுட்டாரு?..


ஆகா.. பட்டாபட்டி கண்டுபிடிச்சிட்டேன்..

நீங்க குட் மார்னிங் சொல்லி பேச்ச ஆரம்பிக்கல..அதுதான் பிரச்சனைண்ணே..

Punnakku Moottai said...

ஐயா பட்டாப்பட்டி,
//ஆகா.. பட்டாபட்டி கண்டுபிடிச்சிட்டேன்..

நீங்க குட் மார்னிங் சொல்லி பேச்ச ஆரம்பிக்கல..அதுதான் பிரச்சனைண்ணே..//

என்னை avoid பண்றதுக்குன்னு புது வழி கண்டுபுடிச்சவனெல்லாம் இருந்தான் ஒரு காலத்தில்.

நம்ப 'பித்தனின் வாக்கு' மாதிரி நானும் ஒரு நாள் பாவமன்னிப்பு கடுதாசி எழுதணும் போலிருக்கு.அவர மாதிரி ரெண்டு பதிவ போட்டு முடிச்சிட முடியாது.

பெரிய புக் போடணும். ஆனா என்னை யாராவது கிண்டல் பண்ணுனா கோவம் வராது. நான் கிண்டல் பண்ணுபோது கோவிச்சிக்க கூடாது. போடா போ மாட்டும் போது பார்த்துகிறேன் ன்னு விட்டுடுவேன் அப்போ. இப்போ எப்பிடின்னு தெரியலே. சமிமபத்தில் யாரும் என்னை நக்கல் / கிண்டல் செய்தது இல்லை. ஆனா நானும் இன்னும் திருந்தலே என்பது உண்மை.

ஜோ/Joe said...

ஓ! அதான் பதிவர் சந்திப்புல சுவாமி ஓம்கார் பேசும் போது நல்லா தூங்கினீங்க :)

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

@Punnakku Moottai
என்னை avoid பண்றதுக்குன்னு புது வழி கண்டுபுடிச்சவனெல்லாம் இருந்தான் ஒரு காலத்தில்.
நம்ப 'பித்தனின் வாக்கு' மாதிரி நானும் ஒரு நாள் பாவமன்னிப்பு கடுதாசி எழுதணும் போலிருக்கு.அவர மாதிரி ரெண்டு பதிவ போட்டு முடிச்சிட முடியாது.
பெரிய புக் போடணும். ஆனா என்னை யாராவது கிண்டல் பண்ணுனா கோவம் வராது. நான் கிண்டல் பண்ணுபோது கோவிச்சிக்க கூடாது. போடா போ மாட்டும் போது பார்த்துகிறேன் ன்னு விட்டுடுவேன் அப்போ. இப்போ எப்பிடின்னு தெரியலே. சமிமபத்தில் யாரும் என்னை நக்கல் / கிண்டல் செய்தது இல்லை. ஆனா நானும் இன்னும் திருந்தலே என்பது உண்மை.

//

அண்ணா.. உங்க கவலையப்போக்க நாங்க இருக்கோமுண்ணே..
ஆரம்பிச்சுடுவோம் சீக்கிரமாய்..

அண்ணே.. முக்கியமா எங்களுக்கு.. வெக்கம் மானம் சூடு சொரனை எதுவுமில்ல எனப்தையும் நினைவூட்ட விரும்பிகிறோம்..
ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிக்கிறேணே.. கும்மனுமுனா.. குப்புற படுக்கவெச்சு கும்முங்க..
மல்லாக்க வேண்டாமுணே..ஏன்னா நான் தலைச்சன் புள்ள..

Sukumar said...

// MSV Muthu said... Guess you had good time in Singapore! :) //
ரிப்பிட்டு...

முகவை மைந்தன் said...

அப்ப சிங்கைல நீங்க தூங்கவே இல்லையா??? என்ன இருந்தாலும் பிரபாகர் உங்களுக்கு கொடுத்த அதிர்ச்சி இவ்வளவு வேலை செஞ்சிருக்கக் கூடாது:-)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தொடரட்டும் தொடர்...!

வெற்றி-[க்]-கதிரவன் said...

கடவுள் இருக்குன்னு நா சொல்லுறதே இல்ல இதுல அவருக்கு சிஷ்யன் ?

ஜெக்கு என்ன உதைப்பாரு பின்ன அவரு போஸ்ட்ட எனக்கு கொடுத்தா எப்படி ?

Veliyoorkaran said...

@@ Punnaakkumoottai...////

என்னை யாராவது கிண்டல் பண்ணுனா கோவம் வராது. நான் கிண்டல் பண்ணுபோது கோவிச்சிக்க கூடாது.///

அண்ணேன்...சோடி போட்டு பார்ப்பமா...அப்பறம் கைய காணும், கால காணோம்னு கண்ண கசக்கிட்டு வந்து நிக்கபிடாது ...!!

(ஆனா, நீங்க எங்க லிஸ்ட்லே இல்லையே அண்ணேன்...ஏன், வாண்டடா மாட்றீங்க...இருங்க உங்க வலைப்பூவ போய் பார்த்திட்டு வர்றேன்...!!)

Veliyoorkaran said...

@@@@பட்டாபட்டி.. said...
@Punnakku Moottai
அண்ணா.. உங்க கவலையப்போக்க நாங்க இருக்கோமுண்ணே..
ஆரம்பிச்சுடுவோம் சீக்கிரமாய்..////

விடு பட்டாப்பட்டி.அண்ணேன் ஆசபட்டாப்டி.....அதனால புண்ணாக்கு மூட்டை அண்ணனுக்கு ஏன் இந்த பேர் வந்துச்சின்னு கூடிய சீக்கிரம் பதிவு போடறோம்...இதுனால எத்தன பேர் உயிர் போனாலும் பரவால்ல..எனக்கு அண்ணனோட ஆசைதான் முக்கியம்..!!

Veliyoorkaran said...

கேபிள் அண்ணேன்..ரொம்ப ஸ்லோ அண்ணேன்..இன்னும் மூணு வருசத்துக்கு எழுதுவீங்க போல..இங்க சிங்கப்பூர முழுசா சுத்திப்பர்க்கவே மூணு மணி நேரம் போதுமே அண்ணேன்...!!!
ஆனா படிக்க ஜாலியா இருக்குன்னேன்..!!

ஜெய்லானி said...

பட்டு, வெளி இன்னைக்கு ஆட்டம் இங்கையா!! எத்தனை தல உருள போகுதோ!!

யாசவி said...

Sorry planned to meet with you and all guys. But due to urgent office work left Jakarta.

Vadai poochheee.....

Jawahar said...

போட்டோக்கள் அருமை ஷங்கர்ஜி. இன்னும் கொஞ்சம் நீளமான எபிசொட்களா எழுதலாமே?

http://kgjawarlal.wordpress.com