Thottal Thodarum

Mar 29, 2010

கொத்து பரோட்டா –29/03/10

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்
சனியன்று நடந்த பதிவர் சந்திப்பு கூட்டத்தில், பல ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்களுக்கிடையே ஒரு வழியாய் வந்திருந்த எழுபதுக்கும் மேற்பட்ட பதிவர்கள், வாசகர்கள் ஒரு மனதாய் இணைய எழுத்தாளர் குழுமம், என்பதை மாற்றி தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் என்று பெயரிட முடிவு தெரிவித்தனர். விரைவில் அதற்கான வேலைகளை நம் எல்லோரும் பகிர்ந்து செய்வோம். விவாதங்களிடையே முக்கியமான கருத்துக்களை அளித்த திரு ஞானி, ராதாகிருஷ்ணன், லக்கி, உண்மை தமிழன், நர்சிம், ஆகியோருக்கும், ஏன் ஆரம்பிக்க வேண்டும் என்று கேள்வி கேட்டு, பதிவர்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் விவாதத்தை சுவார்ஸ்யமாக்கி தனக்கும் குழுமம் ஆரம்பிப்பதில் ஆதரவு உண்டு என்று அறிவித்த பைத்தியக்காரன் அவர்களுக்கும் நன்றி. இக்குழுமத்தில் தமிழில் பதிவுகள் எழுதும், அனைவரும் இணையலாம். இக்குழுமம் மூலமாய் நாம் என்ன என்ன செய்யப் போகிறோம் என்பதை விரைவில் கூடிப் பேசி வரையறுப்போம் என்பதை அறிவித்து கொள்கிறோம். குழுமத்தில் உங்களை இணைத்து கொள்ள, tamilbloggersforum@gmail.com க்கு உங்களது பெயர், உங்களது வலைப்பூவின் பெயர், தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் ஆகியவற்றை மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு குழுமத்திலிருந்து அழைப்பு அனுப்பி வைப்போம். அதன் மூலம் உங்களை குழுமத்துடன் இணைத்துக் கொள்ளலாம். உங்கள் மின்னஞ்சல்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம். நமது குழுமத்தின் வலைப்பூ http://www.tamilbloggersforum.blogspot.com
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
செவிக்கினிமை
படம் பார்ப்பதற்கு முன்பே மனதினுள் ரீங்காரமிட்ட பாடல் தான். படம் பார்த்தவுடன் இன்னும் அகல மறுக்கிறது. “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” ஸ்வீட் மெலடி.

அதே போல் நான் முன்பே சொன்னதை போல திரும்பவும் தமன் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று நிருபித்து வருகிறார். அதற்கு சான்று “முன்தினம் பார்த்தேனே” படப் பாடல்கள். முக்கியமாய் முன்தினம் பார்த்தேனே பாடலும், பேசும் பூவே யும் கலக்கலான லாலிபாப் துள்ளல்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார புத்தகம்
Saanthamaniyum Innapira Kaadhal Kathaigalum
சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்.. வா.மு.கோமுவின் நாவல். இவ்வளவு இயல்பாய் பாலுணர்வை எழுத முடியுமா ? என்று எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்திய புத்தகம். பெரு நகரங்களில் நடப்பதை விட சிறு நகரங்களிலும், கிராமங்களில் நடக்கும் மிக இயல்பான அடல்டரியும், காதலும் காமமும் தகித்தெரியும் நிகழ்வுகளை மிக இயல்பாய் சட சடவென ஓடும் நடையில் தந்திருக்கிறார். பழனிச்சாமியும், சாந்தாமணியும், பூங்கொடி, ஜான்சி, சுகந்தி, பத்மப்ரியா, பெல்லா, சுமதி,ஷாலினி, சுகந்தி, மீனா என்று பல விதமான பெண்கள், கேரக்டர்கள். எனக்கு பிடித்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சாப்பாட்டுக்கடை
சென்னையில் நார்த் உஸ்மான்ரோடில் ஜீதமிழ் டிவிக்கு எதிரே உள்ள சோமசுந்தரம் பார்க் அருகில் பார்பக்யூ நேஷன் என்ற ஒரு உணவகம் உள்ளது. பெயர் மட்டுமல்ல உள்ளே அவர்களது சர்வீஸும் வித்யாசமாய் இருந்த்து. நமது டேபிளின் நடுவே ஒரு பெரிய ஓட்டை இருக்கும் நீங்கள் உட்கார்ந்தவுடன் அதில் ஒரு கரி அடுப்பு க்ரில்லோடு நமது டேபிளின் நடுவே உட்கார, அதில் இரும்பு கம்பியில் சொருகப்பட்ட, சிக்கன், மட்டன், மற்றும் வெஜ் அயிட்டஙக்ள் எல்லாவற்றையும் , குமுட்டி அடுப்பின் மேல் தனலில் வைக்க, அதன் மேல் ஊற்றுவதற்காகான சாஸேஜுகள் எல்லாம் நாமே அதன் மேல் தடவி மேலும் அதற்கு சுவைகூட்ட, ஒரு பதத்தில் எடுத்து வாயில் வைத்தால், ம் ஹா…. அருமை. இது தவிர புல் பஃபே வேறு. சகல விதமான அயிட்டங்களோடு. இத்துடன் வெல்கம் ட்ரிங்காய் குட்டி பீர் முதல் எல்லாவிதமான் ட்ரிங்களும் தரப்படுகிறது. ஒரு முறை. வார நாட்களில் பகலில் லஞ்சுக்கு இரண்டு பேகேஜுகளில் உணவு கிடைக்கிறது, 300 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும், 450 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜும். சார்ஜ் செய்கிறார்கள். ஆனால் இரவு உணவிலும், வார இறுதி நாட்களிலும் எந்த விதமான் பேக்கேஜ்கள் கிடையாது. 575 ஆகும். நிச்சயம் அவர்களின் பர்பக்க்யூ சுவை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார குறும்படம்
பல உணர்வுகளை வெளிப்படுத்தும் குறும்படம். அருமையான பின்ணனி இசையோடு.


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த வார தத்துவம்
நோ அல்லது யெஸ் என்கிற இரண்டு சின்ன சொற்களை பயன்படுத்துவதற்கு மிக நீண்ட யோசனை தேவை. வாழ்க்கையில் பல நேரங்களில் இவ்விரு வார்த்தைகள் தான் நம் தலையெழுத்தை நிர்ணையிப்பதாய் இருக்கிறது. என்ன நான் சொல்றது..?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஜோக்
பிஎம்டபிள்யூ காரில் தன் காதலியுடன் மிக நெருக்கமாய் இருந்த காதலன் காதலியிடம்

காதலன் : உன்னிடம் ஒரு உண்மை சொல்லியாக வேண்டும். எனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. என்றதும்

காதலி : நல்லவேளை எங்கே இந்த கார் உன்னுடயது இல்லை என்று சொல்லிவிடுவாயோ என்று பயந்தேன் என்றாள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏஜோக்
வாழைப்பழ கடைக்கு போன 11 பெண்கள் ஆளுக்கொரு வாழைப்பழம் கேட்க, கடைக்காரன் எடுத்தால் ஒரு டஜன் என்று சொல்ல, பெண்களில் ஒருத்தி கடைக்காரை பார்த்து, ”பரவாயில்லை ஒரு பழத்தை மட்டும் நான் சாப்டுக்கிறேன். என்றாள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

கேபிள் சங்கர்
Post a Comment

42 comments:

vasu balaji said...

தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு வாழ்த்துகள்.

/சிந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்../

சாந்தாமணி:)

குறும்படம்: ஹா!

இராகவன் நைஜிரியா said...

மீ த பர்ஸ்ட் சொல்ல வரலாம்ன்னு பார்த்தா.... வடைப் போச்சே.... அண்ணே வானம்பாடிகள் அண்ணே... தூங்கவே மாட்டீங்களா...

தமிழ் வலைப்பதிவர் குழுமத்திற்கு என்னையும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளச் சொல்லி மெயில் அனுப்பியாச்சுங்க.

ரெண்டாவது ஏ-ஜோக் - சுமார் -- படு சுமார் ரகம்.

துபாய் ராஜா said...

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்.இணைந்திடுவோம். இனிய நிகழ்வுகள் நடத்திடுவோம்.

ப்ரியமுடன் வசந்த் said...

//தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்//

இப்பொழுது சங்கத்து பெயரை சொல்வதற்க்கு எவ்வளவு பெருமிதமாக இருக்கிறது...

வாழ்த்துகள்

பா.ராஜாராம் said...

குறும்படம் அற்புதம்!

நேசமித்ரன் said...

சிந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்?

தட்டச்சு பிழை சரி பாருங்க தலைவரே

குறும்படம் நல்லா இருக்கு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sankaththu aalai yaaravathu adichaa gniyayam kettka varuveengalaa brother?

புலவன் புலிகேசி said...

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு வாழ்த்துக்கள்

தமிழ் உதயன் said...

தமிழ் வலைப்பதிவாலர்கள் சங்கத்திற்க்கு வாழ்த்துக்கள்....
நானும் இணைந்துகொள்கிறேன்...
நன்றி
தமிழ் உதயன்

தமிழ் உதயன் said...

தமிழ் வலைப்பதிவாலர்கள் சங்கத்திற்க்கு வாழ்த்துக்கள்....
நானும் இணைந்துகொள்கிறேன்...
நன்றி
தமிழ் உதயன்

cheena (சீனா) said...

தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு நல்வாழ்த்துகள் கேபிள் சங்கர்

அனைவரையும் இணைத்துவிடலாம் - நல்லதே நடக்கும்

நட்புடன் சீனா

மணிஜி said...

என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கங்கப்பு!!

Unknown said...

பல உணர்வுகளை வெளிப்படுத்தும் குறும்படம். அருமை....

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தமிழ் வலை பதிவர்கள் குழுமத்திற்கு என் நல்வாழ்த்துக்கள்
என்னையும் சேர்த்துப்பிங்க இல்ல

butterfly Surya said...

கேபிள் நடத்துங்க..

குழுமத்திற்கு வாழ்த்துகள்

இருங்க நானும் வரேன்.

ஸ்ரீ.... said...

தலைவரே,

மெயில் அனுப்பியாச்சு. வாழ்த்துக்கள். என்னையும் சேர்த்திருங்க.

ஸ்ரீ....

அகநாழிகை said...

கேபிள், கேபிள், கேபிள்...

Anonymous said...

மெயில் அனுப்பியாச்சு தலைவரே!என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்க்!

Sukumar said...

வாழ்த்துக்கள்... கலக்குவோம்....

Paleo God said...

வாழ்த்துகள்.!

Ashok D said...

தத்துவம் - Yes

Romeoboy said...

சாப்பாடு கடை அறிமுகம் அருமை ..

Kolipaiyan said...

//நான் முன்பே சொன்னதை பொல திரும்பவும் தமன் ஒரு திறமையான இசையமைப்பாளர் என்று நிருபித்து வருகிறார். அதற்கு சான்று “முந்தினம் பார்த்தேனே” படப் பாடல்கள். முக்கியமாய் முந்தினம் பார்த்தேனே பாடலும்,//

பிழைகளை பொறுத்துக்கொள்ள முடியாது.

Anonymous said...

சாந்தாமணி உங்களுக்குப் பிடிக்கமல் போயிருந்தால்தான் அதிசயம்.

க.பாலாசி said...

ஏங்க தலைவரே.... ஹாட் ஸ்பாட்ட எடுத்திட்டீங்க...???

Unknown said...

//இக்குழுமம் மூலமாய் நான் ஏன்ன என்ன//

"நாம்”ன்னு வரணும்ன்னு நினைக்கிறேன். குழுமத்திற்கு வாழ்த்துகள்

இரசிகை said...

m....
verum joke nallaayirukkunga!

thaththuvam...S


:)

அக்னி பார்வை said...

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை.. இளவட்டங்களுக்கு இனி தேசிய கீத்மாகும்.. தமிழ் இணைய குழும் வெற்றி பெற வாழ்த்துக்கள்

நந்தாகுமாரன் said...

Barbeque Nation is famous in Bangalore. Their Starters are enough to fill the stomach not to mention the buffet that follows. To add up they give a pint of beer for free.

மங்குனி அமைச்சர் said...

கேபிள் சார் நான் ஏற்கனவே மெயில் அனுபிட்டேன் .

ஒரே ஒரு வாட்டி எல்லாரும் என் ப்ளாக் -கு வாங்க

மங்குனி அமைச்சர் said...

sir , please visit to my blog

பனித்துளி சங்கர் said...

தமிழ் வலைப்பதிவர் குழுமத்துக்கு வாழ்த்துகள் .

விரைவில் நானும் குழுமத்தில் ஒருவனாக !

அறிவிலி said...

அப்ப எங்கள மாதிரி வெளியூர்காரங்களும் சங்கத்துல சேந்துக்கலாமா???

(ஹாட் ஸ்பாட் திருப்பி வர்லன்னா உங்க படத்த ரிலீசான ரெண்டாவது நாள்தான் பாப்பேன்.:)))

வெள்ளிநிலா said...

:)

தோழி said...

Excellent Short movie. Thanks for sharing Cable Sankar

ஜோசப் பால்ராஜ் said...

அடடா, உங்களுக்கு BBQ புடிக்கும்னு தெரியாம போச்சே :-(
இங்க ஒரு ஜப்பானிஸ் BBQ இருக்கு, நீங்க சொன்ன மாதிரி, டேபிளுக்கு நடுவுல அடுப்பு வைச்சு நாமளே சுட்டுத்தின்ன வேண்டியதுதான். சூப்பரா இருக்கும்.
சரி, சீக்கிரம் அடுத்த ட்ரிப் ப்ளான் பண்ணுங்க. போயிருவோம்.

Subbaraman said...

This is from the Australian movie "The Piano"..Nice composition.

யு.எஸ்.தமிழன் said...

குறும்படமா????

:))

ILLUMINATI said...

'அவள் அப்பாடி ஒன்றும் அழகில்லை' பாடல் உண்மையிலேயே ஒரு சுகமான மெலடி.இந்த மாதிரி பாடல்கள் அதிகம் வராததில் வருத்தமே....

ஸ்ரீ.கிருஷ்ணா said...

மெயில் அனுப்பியாச்சு. வாழ்த்துக்கள். என்னையும் சேர்த்திருங்க.

பித்தனின் வாக்கு said...

ஏனுங்கண்ணா இந்த ஓட்டலில் சோறு கேட்டா அரிசி,உலை வைக்க அடுப்பு எல்லாம் தருவாங்களா?. அதுக்கு எங்க ஊட்டு அம்மினிய பொங்க வைக்கச் சொல்லி திங்கலாம்.

கொத்துபுரோட்டா இன்னிக்கு அவ்வளவு காரம் இல்லை.

மரா said...

நூலறிமுகத்திற்கு நன்றி தலைவரே!