Thottal Thodarum

Mar 22, 2010

கொத்து பரோட்டா – 22/03/10

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்
வருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கை தமிழர்களுக்காக தன் உயிரை விட்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றிய தன் சாட்சியத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்பவாத செய்ல்களை பற்றியும் இயக்குனர் ராம் எழுதியிருக்கிறார். காலம் கடந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் தெரிய வேண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். முத்துகுமாரின் தியாகம் எப்படி இருட்டடிக்கபட்டது என்பதை விளக்கும் கட்டுரை. எனக்கு கோபமும் அழுகையும் ஒரு சேர வந்தது அதை படித்தவுடன். முத்துகுமார் யாரோ ஒருவன் அல்ல என்னுடன் வேலை பார்த்த உதவி இயக்குனரும் கூட. அந்த கட்டுரையை படிக்க
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாப்பாட்டுக்கடை
what todo what to do
சிங்கப்பூரில் சன்டெக் சிட்டியின் உள்ளே ஒரு புட் கோர்ட் இருக்கிறது. அங்கே பல விதமான உணவுக்கடைகள் அதில் ஒரு கடை WHAT YOU DO PARTA என்கிற ஒரு பரோட்டா கடை உள்ளது. அருமையான, க்ரிஸ்பான, ஸாப்டான, ப்ளெயின் பரோட்டா, சிக்கன் பரோட்டா, மட்டன் பரோட்டா, வாழைப்பழ பரோட்டா, என்று பல பரோட்டா அயிட்டங்களை போட்டு அசத்துகிறார்கள். சிங்கப்பூர் செல்பவர்கள், சிங்கப்பூரில் உள்ளவர்கள், செல்பவர்கள் நிச்சயம் ஒரு ட்ரை செய்து பார்க்க வேண்டிய உணவகம். செம டேஸ்ட் ம்ம்ம்ம்..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
காதுக்கினிமை
சிங்கப்பூரில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் விண்ணைத்தாண்டி வருவாயா தான். மூன்று திரையரங்குகளில் மூன்றாவது வாரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் டூரிஸ்ட் ஹெல்ப் கைடான ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்த போது, அவளின் ஐபாடில் தமிழ் பாடல்கள் வைத்திருக்கிறேன் என்று சொல்லி ஒரு பாட்டை போட்டாள். அது ரஹ்மானின் “ஆரோமலே”. I Love This Songs. It Hurt’s me a lot என்றாள் கண்களில் கண்ணீர் தளும்ப. காதலின் வலி. ரஹ்மான்….
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
உலக தண்ணீர் தினம்
உலகின் தண்ணீர் ஆதாரங்கள் குறைய, குறைய, தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்குமா என்று எதிர்கால கேள்வியே பயமாய் இருக்கிறது. உலகில் உள்ள தண்ணீர் ஆதாரஙள் எல்லாம் மாசு படுத்தப்பட்டு, அதனால் நிலத்தடி நீர் வளமும் மாசு பட்டுவிட, எதிர்காலத்தில் தண்ணீரே இல்லாத பாலைவனமாகிவிடுமோ என்று அச்சப்படும் அளவுக்கு தண்ணீரின் பற்றாக்குறை இருக்கும் என்று ஐநா அஞ்சி, இன்று உலக தண்ணீர் தினமாய் அறிவித்து, இதன் மூலம் நீர் ஆதாரங்களை காப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறது. நீர் நிலைகளை காப்போம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார புத்தகம்
rajiv gandhi kolai vazhaku ரகோத்தமன் எழுதிய “ ராஜீவ் காந்தி கொலை வழக்கு” புத்தகம் படித்து முடித்தேன். ஆரம்பம் முதல் கடைசி வரை புத்தகத்தை எடுத்தால் கீழே வைக்க முடியாத அளவுக்கு பரபரவென ஓடுகிறது. அவ்வளவு சுவாரஸ்யம். நிகழ்வுகளை மிக அருமையான தொகுத்து கொடுத்திருக்கும் விதத்தை பார்க்கும் போது, ஒரு தேர்ந்த திரைக்கதையாசிரியரின் கைவண்ணம் தெரிகிறது. நிச்சயம் ராஜீவ் என்ற ஒரு விஷயத்தை எடுத்துவிட்டு, வேறு ஒரு புனைவை புகுத்தினால் ஸ்க்ரிப்ட் ரெடி. நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
Replay அருமையான அனிமேட்டட் குறும்படம். ஒவ்வொரு ஷாட்களும் அனிமேஷன் செய்யப்பட்டது என்றால் நம்ப கொஞ்ச நேரம் ஆகும். அவ்வளவு தத்ரூபம். கதை மாந்தர்களை தவிர. படத்தில் சொல்லும் சேதியும் மனதை கலக்கத்தான் செய்கிறது.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார டிப்ஸ்
காதலை சொல்ல சரியான நாள் ஏப்ரல் ஒண்ணாம் தேதி. ஏன்னா ஓகே சொல்லிட்டா அப்படியே கண்டின்யூ செய்யலாம். இல்லேன்னுட்டா சும்மா ஏப்ரல் பூல் செஞ்சேன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்கலாம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
காதல்ன்னா என்ன தெரியுமா? யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார பதிவர்
joseph


ஜோசப் பால்ராஜ்
பதிவர் என்றால் எதையாவது எழுதித்தான் ஆகவேண்டுமா? என்று கேள்வி கேட்பவர் இவர். அதிகம் எழுதாமலேயெ பிரபல பதிவர் என்ற அடைமொழிக்கு சொந்தக்காரர். (அப்படின்னு சொல்ல சொல்லியிருக்காருப்பா..) சிங்கையின் நட்புச் சின்னம். (அலொவ்… இவ்வளவு சொல்லிட்டேன். அதுக்காச்சும் வாரத்துக்கு ஒண்ணு எழுதுய்யா..:()
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஏ ஜோக்
கூட்டு குடும்பத்தில் வாழும் இளம் ஜோடிகள் தங்களுக்குள் உடலுறவு கொள்வதற்கு ஒரு சங்கேதத்தை ஏற்படுத்தி கொள்ள முடிவெடுத்தனர். கணவன் மனவியிடம் எனக்கு உறவு வேண்டும் என்றால் உன் பின் பக்கத்தில் வந்து மூன்று முறை தட்டுவேன். வேண்டாம் என்றால் நீ என் லுல்லாவை 50 முறை இழுத்துவிடு என்றான்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

கேபிள் சங்கர்
Post a Comment

47 comments:

ரவிசாந் said...

//காதல்ன்னா என்ன தெரியுமா? யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல்.//
நீங்கள் அழகான நேர்த்தியுடன் எழுதுறீங்கள் அண்ணா. வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

சிங்கையில இருக்கிற பரோட்டாக்கடையையே அறிமுகமா! அசத்தல்தான் போங்க!

கொத்து, கலக்கல்...

பிரபாகர்.

ஜெட்லி... said...

டிப்ஸ் மற்றும் காதல் தத்துவம் சூப்பர் அண்ணே....

Ashok D said...

நல்ல கலவை அங்கிள்....

சென்னை பதிவர் சந்திப்பு.. தலைவர் போஸ்ட் கொடுக்கனும் அப்பதான் வருவோம்... (பல குருப் உருவாக வாழ்த்துகள்)

Unknown said...

அண்ணே, சிங்கப்பூரில் சைனீஸ் மற்றும் மலாய் வகை உணவுகளை சாப்பிடவில்லையா?.
குறும்படம் அருமை.

புலவன் புலிகேசி said...

இந்த ஆரத் தத்துவம் சூப்பர்..அப்பறம் வி.தா.வ மூன்று முறை பர்த்தாச்சு..அடுத்து எப்ப போலாம்னு யோசிச்சிட்டிருகேன்...

தராசு said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.

ராஜீவ் கொலை வழக்கு, நானும் கையிலெடுத்ததும் கீழே வைக்காமல் படித்து முடித்தேன்.

மணிஜி said...

செஞ்சிடுவோம்..

Punnakku Moottai said...

கேபிள்,

What you do prata ன்னு கடை பேரு போட்டாச்சி. என்னோட போட்டோவ போட்டுட்டு என் பேர போடலேன்னா எப்பிடி?

போடுங்க என்னோட பெயரை!

நந்தாகுமாரன் said...

உங்கள் ஏ-ஜோக்குகள் தொகுத்து ஒரு புத்தகம் போடலாமே ...

Rajan said...

//50 முறை இழுத்துவிடு என்றான்.//

அவ்வவ்வ்வ்வ் ! ஆசை எனும் புயல் வீசி விட்டதடி ! ஆணி வேர் வரை ஆட்டி விட்டதடி !

நிலாரசிகன் said...

//இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. //

Very short notice :(

03.04.10 சனிக்கிழமைக்கு இந்த சந்திப்பை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-சென்னைவாழ் இணைய எழுத்தாளர்கள்.

க.பாலாசி said...

அந்த புத்தகம் படிக்கணும்...

R.Gopi said...

//WHAT YOU DO PARTA //

WHAT YOU DO PRATA ன்னு இல்ல இருக்கு அந்த போர்ட்ல...

பிரிட்டோ said...

ஏ ஜோக் சூப்பர்....குருப்ல நானும் இணைந்து கொள்ளளாமா?

Santhappanசாந்தப்பன் said...

அந்த காதல் மேட்டர் டாப்பு....

சாப்பாட்டுக் கடை சிங்கை வரைக்கும் போய்டுச்சா.. சிரமம்தான்

திருவாரூர் சரவணா said...

ராஜீவ் கொலை வழக்கு புக்கோட விலை எவ்வளவுங்க்னா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இந்த வார தத்துவம் super.

neenga pazhaiya hit aana padathukku vimarsanam ezhuthalaame. ungal paarvaiyil naanm paarththu pazhakiya padankalim vimarsanankal arumaiyaaka irukkum enpathu en karuththu..

Anonymous said...

//இலங்கை தமிழர்களுக்காக தன் உயிரை விட்ட முத்துகுமாரின் இறுதி ஊர்வலத்தை பற்றிய தன் சாட்சியத்தை, அரசியல்வாதிகளின் சந்தர்பவாத செய்ல்களை பற்றியும் இயக்குனர் ராம் எழுதியிருக்கிறார். காலம் கடந்த விஷயமாய் இருந்தாலும் நிச்சயம் தெரிய வேண்டிய ஒன்று என்றே சொல்ல வேண்டும். முத்துகுமாரின் தியாகம் எப்படி இருட்டடிக்கபட்டது என்பதை விளக்கும் கட்டுரை.//

இந்த மாதிரி கேவலமான அரசியல் பண்ணுறதுக்கு போய் தூக்கு போட்டு சாவுங்கடா சாவு கிராக்கி நாயிகளா...


//காதல்ன்னா என்ன தெரியுமா? யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். //


இது ரொம்ப நல்லா இருக்கு...இப்படித்தான் இன்னைக்கு நிறைய காதல் (வெட்டி வேலை) இருக்கு....

கொத்து பொரட்டா எப்பவும் போல நல்லா இருக்கு...

Sanjai Gandhi said...

//சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். //

இணைய எழுத்தாளர் என்பதன் அளவுகோல் என்ன? :)

இது இணைய எழுத்தாளர் சங்கம் என்றால் அனைத்துப் பதிவர்களும் ஏன் இணைந்துக் கொள்ள வேண்டும்?

அப்படின்னா அனைத்துப் பதிவர்களும் இணைய எழுத்தாளர்கள் தானா?

அப்படின்னா ஜெயமோகன் என்னை இணைய எழுத்தாளர் சஞ்சய்காந்தி என்று சொன்னதை நானும் நம்பலாமா? :)

என் சந்தேகங்களை தீர்த்து வைத்தால் கோவையில் கிளை திறக்கப் படும். :))

சிங்கைலையும் புரோட்டாவா? என்னே உங்கள் கடமை உணர்ச்சி? :)

நிலத்தடி நீரை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. இன்று வரை கிணற்றை நம்பி இருந்தவர்கள் உடனடியாக போர் போட்டே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு வந்துவிட்டோம்.. நீர் மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டது.. :(

ராஜிவ் கொலைவழக்கு புத்தகம் படிச்சேன்.. கிழக்குக்கே உரிய ஒரு முறை மட்டுமே படிக்க முடியும் சுவாரஸ்ய வாசிப்பிற்கான புத்தகம்.. கார்த்திகேயன் மீதும் சந்தேகத்தை கிளப்புகிறார்.. விசாரணை முழுமையாக நேர்மையாக இல்லை என்கிறார்.. என்ன கண்றாவியோ?

ஜோசப்பை, கார் இல்லாமல் தனியாக இருக்கும் படத்தை போட்ட கேபிளாரின் நுண்ணரசியலை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

.... பதிவு மட்டும் தான் கொத்து புரோட்டாவா இருக்கனுமா? பின்னூட்டம் அப்டி இருக்கக் கூடாதா என்ன? :)

சைவகொத்துப்பரோட்டா said...

ஆரோமலே, எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.
A - சோக்கு ரிப்பீட் ஆனா மாதிரி நினைவு (ஏற்கெனவே எழுதி இருந்தீர்கள் என நினைக்கிறேன்)

பனித்துளி சங்கர் said...

/////////சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்
வருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. ///////////


சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

பனித்துளி சங்கர் said...

/////////சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்
வருகிற சனிக்கிழமை மாலை சென்னையில் உள்ள இணைய எழுத்தாளர்களை ஒன்றினைத்து ஒரு குழுவாக அமைக்க எண்ணி பதிவர் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சென்னை பதிவர்க் அத்துனை பேரும் வந்து கலந்து கொண்டு குழுமத்தில் இணைத்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். இதற்கான இடம் நேரம் ஆகியவற்றை பற்றிய அறிவிப்பு இன்னும் ரெண்டொரு நாளில் அனைவரிடமும் கலந்தாலோசித்துவிட்டு வெளியிடப்படும். இப்போதைக்கும் சனிக்கிழமை மாலை 27.03.10 என்பது நிச்சயமாகியிருக்கிறது. ///////////


சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் !

பனித்துளி சங்கர் said...

//////////இந்த வார தத்துவம்

காதல்ன்னா என்ன தெரியுமா? யாரோ பெத்து போட்ட பொண்ணுக்கு ஐஸ்கிரீம், சாக்லேட், ஸ்வீட்ஸ், எல்லாம் வாங்கி கொடுத்து உடம்பை தேத்தி விட்டு, சுடிதார், புடவை, வாட்சு, செப்பல்னு கிப்ட் வாங்கி கொடுத்து, அட்டு பிகரை அழகான பிகராக்கி வேற யாருக்கோ கட்டி வைக்கிற வெட்டி வேலை தான் காதல். ////////////




காதலுக்கு இவளவு பெரிய தத்துவம் இருக்க .
இவளவு நாளா இது தெரியாம போச்சே இனி சூதானமா இருக்கவேண்டியதான் .

எறும்பு said...

//
Very short notice :(

03.04.10 சனிக்கிழமைக்கு இந்த சந்திப்பை மாற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
-சென்னைவாழ் இணைய எழுத்தாளர்கள்.///

Repetuuuuuu... pLs CoNsIdEr...

நாமக்கல் சிபி said...

லேட்டா வந்தாலும் சேர்த்துக்குவீங்களா?

நான் பின்னாடி சென்னைல வந்து செட்டில் ஆகுற ஐடியா இருக்கு!

ரோஸ்விக் said...

அண்ணே! பரோட்டா கடை பேரு போட்டுட்டீங்க...

பாலா அண்ணேன் பேரு போட்டுருங்க...

அப்புடியே அதுல மாடல் ஒருத்தரு போஸ் கொடுத்துருக்காரு பாருங்க... அவரு பேரு ரோஸ்விக்-னு போட்டுருங்க... அவரு பெரிய மாடல்-ணே.. அப்புறம் கோவிச்சுக்கப்போறாரு... :-)))


ஜோசப் அண்ணே, என்னா அண்ணேன் உங்கள இப்புடி மானத்தை வாங்கிட்டாரு.... திரும்ப சிங்கைக்கு கூட்டிகிட்டு வந்து கும்மிருவமா?? :-)

ரோஸ்விக் said...

அண்ணே! பரோட்டா கடை பேரு போட்டுட்டீங்க...

பாலா அண்ணேன் பேரு போட்டுருங்க...

அப்புடியே அதுல மாடல் ஒருத்தரு போஸ் கொடுத்துருக்காரு பாருங்க... அவரு பேரு ரோஸ்விக்-னு போட்டுருங்க... அவரு பெரிய மாடல்-ணே.. அப்புறம் கோவிச்சுக்கப்போறாரு... :-)))


ஜோசப் அண்ணே, என்னா அண்ணேன் உங்கள இப்புடி மானத்தை வாங்கிட்டாரு.... திரும்ப சிங்கைக்கு கூட்டிகிட்டு வந்து கும்மிருவமா?? :-)

Naadodigal said...

ஆஹா...இப்படி ஒரு வழி இருக்கா....தல..என்னையும் கொஞ்சம் அடுத்த கொத்து பரோட்டாவில் பிரபல பதிவரா அறிமுக படுத்துங்களேன்....உங்கள 'கவனிசுடறேன்' ...ஹி.ஹி..ஹி...

Naadodigal said...

அப்புறம், ரொம்ப நாள் கழிச்சு, 'A ' ஜோக் காரமா இருந்துச்சு...

அறிவிலி said...

எங்க தலைவர் மற்றும் பரோட்டா கடை அறிமுகத்திற்கு நன்றி.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

சிங்கபூர் ஸ்பெஷல் கொத்து

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஒரு கடை WHAT YOU DO PARTA என்கிற ஒரு பரோட்டா கடை உள்ளது. //

PARTA இல்ல. பிராட்டா-PRATA(காபி ரைட்டு: சிங்கப்பூர்,மலேசியா). வழக்கம் போல் நீங்க பரோட்டா என்று எழுதி இருக்கிறீர்கள்! யார் எழுதினாலும் இதைக் கவனிப்பது வழக்கம்!(இன்னும் எனக்கு புடிபடல அதேன்!)

Ganesan said...

சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம் .

குழுமம் -- சங்கமா?

பரோட்டா கடை -அங்க போயும் விடலயா.

A ஜோக்--அடங்க மாட்டிங்க போல

ஜோசப் பால்ராஜ் said...

// சிங்கையின் நட்புச் சின்னம். //

அண்ணே, சிங்கையில இருக்க அத்தனை பதிவர்களுமே நட்புச் சின்னம் தான். கலைஞர் ஆட்சியில தமிழ்நாடு முழுக்க எப்புடி நினைவுச்சின்னமா இருக்கோ, அதுமாதிரி சிங்கைமுழுக்க நிறைய நட்புச் சின்னங்கள் இருக்கோம். இதை கூட்டா எலோருடனும் சேர்ந்து ஏத்துக்கிறேன்.

ராஜிவ் கொலை வழக்கு புத்தகம் எனக்கு வாங்கிட்டு வாங்கன்னு சொன்னேன், அத எடுத்து ப்ளைட்ல வர்றப்ப படிச்சு முடிச்சுட்டிங்க. அப்டித்தானே ?நான் இன்னும் படிச்சு முடிக்கல. முடிச்சதும் என் கருத்துக்கள சொல்றேன்.

இம்புட்டு சொல்லிட்டிங்க, விரைவில் எழுதுகிறேன்.

வெடிகுண்டு வெங்கட் said...

தல,
அங்கிட்டு போயும் பரோட்டா கடை தானா?
பகிர்ந்தமைக்கு நன்றி.
வெங்கட்,
வெடிகுண்டு வெங்கட்
கிரிக்கெட் கேப்டன் தோனி ஆரம்பித்து வைக்கும் நடிகர் விஜயகாந்த்தின் கேப்டன் டிவி

மதுரை சரவணன் said...

நல்ல பதிவு. சுவரஸ்யமாக கொடுத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

Romeoboy said...

ஏய் நாங்களும் ஒரு சங்கத்தை ஆரமிக்க போறோம் ... தலைவரே 2011ல நம்ம சங்கம் அரசியல் கட்சியா மாறி தேர்தலில் நிக்கிறோம்..

Cable சங்கர் said...

@ரவிசாந்
மிக்க நன்றி

@பிரபாகர்
நன்றி

@ஜெட்லி
ம்..நன்றி

@அசோக்
ஆரம்பிச்சிட்டியா..

@கே.ஆர்.பி.செந்தில்
சாப்பிட்டேன்

@புலவன் புலிகேசி
அடுத்த முறை போகும் போது என்னை கூப்பிடு

@தராசு
முடிச்சிட்டு சொல்லுங்க

@மணிஜி..
ஓகே ரைட்

@புண்ணாக்கு மூட்டை
இருங்க இப்பத்தானே பில்டப் ஆரம்பிச்சிருக்கு..

@நந்தா
ஏற்கனவே புத்தகத்திலிருந்து சுடுபவை தான் நந்தா..:0

@ராஜன்
பாட்டு பலமா இருக்கே

@நிலாரசிகன்
ஓகே.. பேசிட்டு சொல்கிறேன்

@க.பாலாசி
நிச்சயம்

@ஆர்.கோபி
ரைட்டு சரி பண்ணிட்டேன்..:)

@பிரிட்டோ
நிச்சயம் யார் வேணும்னாலும்சேரலாம்

@பிள்ளையாண்டான்
எது சிரமம்?:)

@திருவாருரிலிருந்து சரவணன்
100 ரூபாய்

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
ட்ரை பண்ணுறேன்

@நல்லவன் கருப்பு
விடுங்க..லூசுல விடுங்க

@

Cable சங்கர் said...

@சஞ்செய்காந்தி
/இணைய எழுத்தாளர் என்பதன் அளவுகோல் என்ன? :)

இது இணைய எழுத்தாளர் சங்கம் என்றால் அனைத்துப் பதிவர்களும் ஏன் இணைந்துக் கொள்ள வேண்டும்?

அப்படின்னா அனைத்துப் பதிவர்களும் இணைய எழுத்தாளர்கள் தானா?

அப்படின்னா ஜெயமோகன் என்னை இணைய எழுத்தாளர் சஞ்சய்காந்தி என்று சொன்னதை நானும் நம்பலாமா? :)

என் சந்தேகங்களை தீர்த்து வைத்தால் கோவையில் கிளை திறக்கப் படும். :))//
இணையத்தில் ஆணி புடுங்குகிறவர்கள் அத்துனை பேருமே இணைய எழுத்தாளர்கள்தான்..:) போதுமா.. ரைட்ட் டு ப்ராஞ்சை ஆரம்பியுங்க..

Cable சங்கர் said...

@சஞ்செய்காந்தி

பின்னே போன இடத்துல நம்ம கடமையை மறந்திடறாதா..?

@ஜோசப் மேட்டர்ல இவ்வள்வு விஷயம் இருக்கா..?

DREAMER said...

கேபிள் சார்,
சிங்கை PRATAவும், கொத்துப்பரோட்டாவும் அருமை...

//சென்னை இணைய எழுத்தாளர் குழுமம் ஆரம்பம்//
மனமார்ந்த வாழ்த்துக்கள்...

இசையால் பலரை வசியம் செய்யும் ரஹ்மான் சாருக்கு இன்னொரு சான்று அளித்ததை படித்தேன். நன்றி!

//உலக தண்ணீர் தினம்...//
இப்போதான் கடல்நீரை குடிநீராக்குறாங்க, இன்னும் கொஞ்ச நாள் கழிச்சி, நம்ம கண்ணுல வரப்போற கண்ணீரை குடிநீரா மாற்றும் திட்டம் வந்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்லை..!

//இந்த வாரப் புத்தகம்//
அந்த புக்குல இருக்கிற ஃபோட்டோவை உத்துப்பாத்தா, நம்ம அஜித்-ஐ மார்ஃப் பண்ண மாதிரியில்ல..? ஹி..ஹி.. ச்சும்மா ஒரு OPTICAL ILLUSION.

//ஏ ஜோக்//
கூட்டுக் குடும்பத்திலியே இப்படியா.. இவங்கள்லாம் தனிக்குடித்தனம்போனா என்னாகுறது..! Anywayz(பெருமூச்சுடன்), ஜோக் அருமை..! A+


-
DREAMER

Cable சங்கர் said...

@சைவகொத்துப்பரோட்டா
அப்படியா../

@பனித்துளி சங்கர்
நன்றி
இனிமேலாவதுபாத்து நடந்துக்கங்க..

Cable சங்கர் said...

@எறும்பு
ம்.. சொல்றேன்

@நாமக்கல் சிபி

உங்களுக்கு இல்லாமயா...

@ரோஸ்விக்
ஆமாம்மமா..
என்னது திரும்ப சிங்கப்பூருக்கு கூட்டிகிட்டு வந்து கும்ம போறீங்களா..? ஓகே நான் ரெடி எப்ப டிக்கெட் அனுப்பறீங்க..:)

@நாடோடிகள்
உங்களூக்கு இன்னும் வருஷம் போகணும்..:)

@அறிவிலி
நன்றி

@ஸ்ரீ.கிருஷ்ணா
நன்றி

@அத்திவெட்டி ஜோதிபாரதி
சரி செஞ்சிட்டேன்ணே..

@காவேரி கணேஷ்
குழுமம்.சங்கம்.. இரண்டும் ஒன்ணு இல்லையா..? அவ்வ்வ்வ்

@ஜோசப் பால்ராஜ்
கலைஞர் பேர் சொன்னவுடனேயே அவரை போல பேசுறீங்க பாருங்க.. நிச்சயம் ஜோசப்.. அத்துனை பேரின் அன்பில் நினைந்தவன் என்கிற சந்தோஷத்திலேர்ந்து இன்னும் வெளிவரவில்லை..

ராஜிவ் புக் நான் முன்னமே படிச்சிட்டேன்

ஓகே ரைட்.. சீக்கிரம் எழுதுங்க..:)

@வெடிகுண்டு வெங்கட்
நன்றி

2@மதுரை சரவணன்
நன்றி

@ரோமியோ
ஆரம்பிச்சிட்டாங்கய்யா..

Sukumar said...

சிங்கை பயணமெல்லாம் அட்டகாசம் போல.... இன்னும் மெயின் கதை எல்லாம் சொல்லுங்க தல.....

இணைய எழுத்தாளர்களா ?? அப்ப நாங்க எல்லாம் கிடையாதா....

கோடம்பாக்கம் பரோட்டா கடைநா பரவா இல்லை... சிங்கபூர் பரோட்டா கடையா....?

பனித்துளி சங்கர் said...

///////Written by Cable Sankar
8:12 AM
@சைவகொத்துப்பரோட்டா
அப்படியா../

@பனித்துளி சங்கர்
நன்றி
இனிமேலாவதுபாத்து நடந்துக்கங்க..////////



அப்படியே ஆகட்டும் நண்பரே !

Paleo God said...

ஆஹா யூத்து கிளப் ஆரம்பமா??? தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்..:))

--
அந்த கட்டுரை..ப்ச்.. :(
--
அகில உலக கொத்து பரோட்டா டாட்டா பேஸ் ரெடி பண்றீங்க போல.. ரைட்டு..:)
--
ஹும்ம்.. கைடு.. கண்ணீர்.. எண்டர தட்டுங்க.. சீக்கிறம்..:)
--
உலக தண்ணீர் தினம்.. காப்போம்.:)
--
புத்தகம் - படிச்சாச்சு..
--
குறும்படம், பதிவர் ஜோசப் - அசத்தல்.
--
ஏ-ஜோக் - சங்க தேர்தல்ல மைனஸ் தான் விழும்..:)))