Thottal Thodarum

Mar 18, 2010

Joyfull சிங்கப்பூர்

IMGA0251ரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம்.
IMGA0217
சுவாமி ஓம்காருடன் என் பயணம் என்றவுடன், என்னை பற்றி தெரிந்தவர்கள் “பாவம் சாமி” என்று வருத்தபட்டதாக சொன்னார்கள். “அவருக்கு கூட வர்றதுக்கு வேற ஆளே கிடைக்கலையா..?” என்று எல்லோர் மனதிலும் கேள்வி இருந்தது. நான் ஒரு ஆன்மீகவாதி என்பதை உணர்ந்தவர் ஆதலால் ஓம்கார் ஒரு புன்னகையுடன் “சொன்னா சொல்லிட்டு போகட்டும்” என்றார். என்னா பெருந்தன்மை. வேற வழி.

மதியம் இரண்டு மணி விமானத்தை பிடிக்க, காலை 11.00 மணிக்கு ஏர்போர்ட்டுக்கு வந்தோம். நானும் என் மனைவியும் சாமிக்காக காத்திருந்த போது, அவரும் மெல்ல வந்து சேர்ந்தார். இரண்டு பேரும் போர்டிங் போட கிளம்பிய போது ஒரு வெண் சட்டை உருவம் எங்களை கடக்க, நான் “அண்ணே” என்று கூப்பிட, சட்டென திரும்பினார்… அப்துல்லா.. அலுவலக விஷயமாய் யாரையோ செண்ட் ஆப் செய்ய வந்திருந்ததாய் சொன்னார். வெளிநாட்டு பயணத்துக்காக என்னை வாழ்த்திவிட்டு கிளம்பினார்.IMGA0216 உள்ளே போய் போர்டிங் போட்டுவிட்டு, இமிக்ரேஷன் எல்லாம் செக் செய்துவிட்டு, வெயிட்டிங் லவுஞ்சில் உட்கார்ந்து நானும் சாமியும் ஆளுக்கொரு காபி அருந்திவிட்டு ஒரு மணி வாக்கில் பேச ஆரம்பித்தோம். மிக சுவாரஸ்யமான பேச்சு. எனக்கு. பாவம் சாமி. நான் மட்டுமே பேசிக் கொண்டிருந்தேன். சாமியாய் இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று பின்னால் தான் புரிந்தது.

பேசிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் விமான நேரத்தை மறந்திருந்த போது ஒரு போர்டில் எங்கள் விமானத்தின் நம்பர் ஒளிர, கிட்டே போய் பார்த்தால் விமானம் 1.30 மணி நேரம் லேட். சாமி முகத்தில் முதல் முதலாய் லேசான கிலி ஓடியது. இன்னும் லவுஞ்சிலேயே என் பேச்சை கேட்கணுமா? என்ற ஒரு விஷயம் அவருள் ஓடியதை என்னால் கண்டுபிடிக்க முடிந்தது.

ஒரு வழியாய் விமானம் வந்து, இடம் பார்த்து உட்கார்ந்து செட்டிலானோம், விமானம் கிளம்பியது. சாமி ஒரு சூவிங் கம்மை எடுத்து என்னிடம் கொடுத்து, போட்டு மெல்லுங்கள் காதடைப்பு குறையும் என்றார். சாமி ஒரு ஐடியா மணி என்பது எனக்கு தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.
Image0450 உடுக்கை போன்ற இடுப்பு என்று ஆங்காங்கே பார்த்திருகிறேன். சும்மா சொல்லி வைத்து செய்தார் போன்ற ஒரு இடுப்பை கிஞ்சித்தும், பெருக்காத ஒரு இடுப்பை, கொண்ட் இரு ஹோஸ்டஸுகளை பார்த்து பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. நாங்கள் போனது டைகர் ஏர்வேஸ் என்பதால் அவள் கட்டியிருந்த பெல்ட் கூட புலிக்கலரில் இடுப்பில் தழுவியிருந்தது அழகாய் தான் இருந்தது. நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி எது என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். பாருங்கப்பா நான் அதை பத்தி எழுதலை. எழுதலை.. எழுதலை..

எல்லாம் நன்றாக போய் கொண்டிருந்த நேரத்தில், எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடக்க வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்.
(தொடரும்)


கேபிள் சங்கர்

Post a Comment

68 comments:

தராசு said...

//பாருங்கப்பா நான் அதை பத்தி எழுதலை. எழுதலை.. எழுதலை..//

இதுக்காக சாமி உங்களை திட்டலையா, பாவம் சாமி.

பித்தனின் வாக்கு said...

நல்ல ஆரம்பம், தொடரும் டேக் ஆப் ஆயிருக்சு. எழுதுங்க. நன்றி.

இராம்/Raam said...

அண்ணே,

ஜீப்பரூ, ஜிங்கப்பூரூ வந்திருந்தீங்களா??நீங்க இங்கே இருந்தப்போ நான் இந்தியா’வுக்கு வந்திருந்தேன்.. அடுத்து வாய்ப்பு கிடைச்சா கட்டாயம் மீட் பண்ணலாம்.. :)

Paleo God said...

சிங்கபூருக்கு போகும்போது சுவிங்கம் சாமி கொடுத்தது, விதி அறிந்தா, அறியாமலா..:)))

VISA said...

//டைகர் ஏர்வேஸ் என்பதால் அவள் கட்டியிருந்த பெல்ட் கூட புலிக்கலரில் இடுப்பில் தழுவியிருந்தது அழகாய் தான் இருந்தது. //

புலி தோல் போர்த்திய முயல் குட்டிகள்!!!

வடுவூர் குமார் said...

உடுக்கையை அடிச்சிருந்தா உங்களூக்கும் உடுக்கையை அடிச்சிருப்பாங்க. :-))
சென்னை அல்லது இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு சாங்கி விமான நிலையமே ஒரு மிகப்பெரிய பிரம்மிப்பை உருவாக்கிவிட்டு தான் உள்ளேவே செல்லவிடும்.அருமையான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

ஜெய்லானி said...

சாமியாருங்க கூட காசி , ராமேஸ்வரம் போகலாம்னு கேள்விபட்டிருக்கிரேன், முதல் முறையாக சிங்கப்பூரா...ஓகே...ஓகே..என்ஜாய்..

ஜெய்லானி said...

//சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன். //

வயத்து வலியா சார் ??

Veliyoorkaran said...

@ Cable Sankar Annen.///

அண்ணன் இது சரி இல்ல..நேத்து புதுசா எழுதற பதிவர்களுக்கு கூட மொதோ ஆளா போய் பின்னூட்டம் போட்டு வாங்க வந்து நல்லா எழுதுங்கன்னு சொல்லி வாழ்த்திட்டு வர்ற பதிவுலகத்தோட தலைமகன் நீங்க..நான் இதுவரைக்கும் நாப்பத்தி எட்டு பதிவு எழுதிருக்கேன்.நீங்க ஒரு பதிவுக்கு கூட வந்து கருத்து சொன்னதில்ல..அது உங்க தனிப்பட்ட கருத்து..கேபிள் அண்ணனுக்கு புடிச்ச மாதிரி நமக்கு எழுத இன்னும் வரலைன்னு நெனைச்சிகறேன்..ஆனா ,சரியா மூணு பதிவுக்கு முன்னாடி நான் உங்களோட உக்காந்து கொத்து பரோட்டா சாப்டறது என்னோட ரொம்ப பெரிய ஆசைன்னு எழுதிருக்கேன்...நீங்க இவ்ளோ தூரம் வந்துட்டு என்ன பார்க்காம போயிருக்கீங்க..இது எந்த விதத்துல நியாயம்.நான் என்ன தப்பு பண்ணேன்..???

Veliyoorkaran said...

@ Singapore Pathivar Sangam.///

வெளியூர்க்காரன் சிங்கப்பூர் பதிவர் சங்கத்திற்கு தனது கடும் ஆதங்கத்தை தெரிவிக்கிறான்..முக்கியமா பிரபாகர் அண்ணன்,கோவி கண்ணன் அண்ணன்,வெற்றிகதிரவன் அண்ணன்,ஜோசப் அண்ணன்,ரோஸ்விக் இவங்க எல்லாரும் என் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்..என்னோட மூணாவது பதிவுலையே என்ன உங்ககூட சேர்த்துக்கங்கன்னு கேட்ருந்தேன்..நீங்க இன்னிக்கு வரைக்கும் என்னை உங்க சங்கத்துல சேர்த்துக்கல..சேர்த்துக்கறவன் மனுஷன்..சேர்த்துக்கங்கன்னு கேக்கறவன் பெரிய மனுஷன்..நான் பெரிய மனுஷன்..நீங்க மனுசனா...??

கார்க்கிபவா said...

/நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி எது என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.//

ஆதி எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்

Ashok D said...

Welcome to chennai... டக்கிலா..இருக்கா....

சி தயாளன் said...

:-) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. :-)

அறிவிலி said...

நடத்துங்க.... எங்க பார்ட் வரும்போது பாத்துக்கறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

அட, இதுவே ஒரு தொடர்கதை போல் இருக்கிறதே.

Punnakku Moottai said...

போட்டு தாக்குங்க.

கொறட்ட மேட்டரு கண்டிப்பா வரணும்.

சங்கர் said...

//நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி எது என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்//


உங்க சட்டைல இருக்குற புடைப்பு என்னான்னு ஊருக்கே தெரியுமே அதை தனியா சொல்லணுமா?

vasu balaji said...

வந்தாச்சா! கலக்குங்க:)

ஜெகதீசன் said...

:-) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. :-)

ஜெகதீசன் said...

அது எப்படி பாஸ்...
பயணக் கட்டுரை எழுதுற எல்லாருமே, விமானத்துலயே ஒரு பகுதியை முடிச்சிடுறீங்க...
:)

எம்.எம்.அப்துல்லா said...

//சாமி ஒரு சூவிங் கம்மை எடுத்து என்னிடம் கொடுத்து, போட்டு மெல்லுங்கள் காதடைப்பு குறையும் என்றார். சாமி ஒரு ஐடியா மணி என்பது எனக்கு தெள்ளத் தெளிவாய் தெரிந்தது.

//

வாயில எதையாவது மெண்டுகிட்டு வந்தா தொணத்தொணங்காம வருவீருன்னு சாமி கரெக்ட்டாதான் ஐடியா செஞ்சுருக்கு :))//சும்மா சொல்லி வைத்து செய்தார் போன்ற ஒரு இடுப்பை கிஞ்சித்தும், பெருக்காத ஒரு இடுப்பை, கொண்ட் இரு ஹோஸ்டஸுகளை பார்த்து பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது //

உங்களை இந்தியன் ஏர்லைன்ஸ்சில் அனுப்பி இருக்கணும்.அப்ப தெரிஞ்சுருக்கும் டயரு,டிரம்மெல்லாம் :))

Anonymous said...

அண்ணா,

//சுவாமி ஓம்காருடன் என் பயணம் என்றவுடன், என்னை பற்றி தெரிந்தவர்கள் “பாவம் சாமி” என்று வருத்தபட்டதாக சொன்னார்கள். “அவருக்கு கூட வர்றதுக்கு வேற ஆளே கிடைக்கலையா..?” என்று எல்லோர் மனதிலும் கேள்வி இருந்தது. நான் ஒரு ஆன்மீகவாதி என்பதை உணர்ந்தவர் ஆதலால் ஓம்கார் ஒரு புன்னகையுடன் “சொன்னா சொல்லிட்டு போகட்டும்” என்றார். என்னா பெருந்தன்மை //


நீங்க ஒரு நல்லவர்ன்னு தெரியும்...ஆனா ஒரு ஆன்மீகவாதின்னு சொல்லவே இல்ல...!!
எல்லாரும் ரெடியா இருங்க...."சிங்கப்பூரில் சங்கர்"ன்னு ஒரு புத்தகம் ரெடியாகிட்டு இருக்கு..... அவ்வ்வ்வ் ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

anna naan unkalai miss panniten. neenga 18 kilampurathaa ninachu nethu unga no kku call panninen.

Ok next meet panren

நர்சிம் said...

வாழ்த்துகள் கழிந்ததற்கு.. நான் பாஸ்போட்டச் சொன்னேன்.

Ravichandran Somu said...

தலைவரே, சிங்கையில் தங்களைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பின் கேபிள்,

சிங்கையில் லொக்கேஷன் பார்த்துவிட்டு மகிழ்வுடன் தமிழ் நாடு திரும்பியதில் மகிழ்ச்சி!(எந்தெந்த லொக்கேசன் பாத்தியள்ணூ வெளாவாரியா எழுதுங்க)

தங்களை சந்தித்த தருணங்கள் இனிமையானவை.


ஏரோபிளேனுல முட்டாலி குடுக்குற பொண்ணுகள பாத்ததும் சாமி தவத்த கலைக்கலையே!? :)

சும்மா தெரிஞ்சுக்கலாமுன்னு தானுங்க...!

க.பாலாசி said...

hot spot ல... அந்தம்முணியோட போட்டோவ போட்டிருந்தா நல்லாயிருக்கும்....

ஸ்வாமி ஓம்கார் said...

:) வெட்டித்தனமா பயணம் செஞ்சதய் கூட சுவாரசியமா எழுத முடியுமா? இங்க தானய்ய பார்க்கறேன்...

ஆமா அந்த ரெண்டாவது படத்தில இருக்கிறது யாரு? உங்க அடுத்த பட ஹீரோவா?

;)

ஹிஹிஹி

கோவி.கண்ணன் said...

:)

கலக்கலாக தொடங்கி இருக்கிறீர்கள்.

பிரபாகர் said...

எழுதுங்கண்ணா எழுதுங்க... பத்து பாகத்துக்கு மேல போகும் போலிருக்குதே... புக்கா போட்டுடுவோம்!

பிரபாகர்.

ஜோ/Joe said...

உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி :)

நிஜமா நல்லவன் said...

:-) உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. :-)

CS. Mohan Kumar said...

சுவாரஸ்யமா இருக்கு. வார இதழ் மாதிரி suspense-உடன் நிறுத்திட்டீங்க

butterfly Surya said...

ஜி,அதுக்கு.. இப்படிதான் சொல்லாம கொள்ளாம போயிட்டு வரதா..

சரி .. ரைட்டு.

Unknown said...

யோவ் வெளியூர்க்கார மேல அப்டி என்னய்யா காண்டு ..?

Unknown said...

ஆனாலும் வெள்ளிக்கிழமை எபிசொட் மாதிரி கடைசில ஒரு ட்விஸ்ட் வெச்சே ஆகணுமா?

Unknown said...

நீங்க 'அத'ப்பத்தி எழுதாட்டி பில்லி சூனியம் வெக்கலாம்னு இருக்கேன்...

பனித்துளி சங்கர் said...

சிறந்த புனைவு நண்பரே !
மிகவும் ரசிக்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள் !

மீண்டும் வருவான் பனித்துளி !

பனித்துளி சங்கர் said...

எனக்கு குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் என்னாச்சு ?????


மீண்டும் வருவான் பனித்துளி !

சிங்கை நாதன்/SingaiNathan said...

//எழுதுங்கண்ணா எழுதுங்க... பத்து பாகத்துக்கு மேல போகும் போலிருக்குதே... புக்கா போட்டுடுவோம்!

பிரபாகர்.//

10ஆ 100 அடிக்கப்போறார்

இல்ல அட்லீஸ்ட் 90

அன்புடன்
சிங்கை நாதன்

ரோஸ்விக் said...

//எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்//

இது அச்சுறுத்தல் இல்லை அண்ணே... சிங்கபூர் வருகைக்கான மனம் "திறந்த" வரவேற்பு... :-)

சாமிக்கு ஒரு மாதிரியும், ஆசாமிக்கு ஒரு மாதிரியும் ஏற்பாடு பண்ணப்பட்டது... :-))

ரோஸ்விக் said...

//எனக்கு மட்டும் ஏன் இம்மாதிரி நடகக் வேண்டும்? என்று என்னையே கேட்டு நொந்து போகும் அளவிற்கு ஒரு சம்பவம் நடந்தது? சரியாய் சிங்கப்பூர் சாங்கி ஏர்போர் (பட்ஜெட்) சேருவதற்கு ஒரு அரை மணி நேரம் முன்பு அந்த சம்பவம் நடந்தது. எப்படி எடுத்து கொள்வது இதை வரவேற்பாகவா? அல்லது அச்சுறுத்தலாகவா? மனம் குழம்பி போனேன்//

இது அச்சுறுத்தல் இல்லை அண்ணே... சிங்கபூர் வருகைக்கான மனம் "திறந்த" வரவேற்பு... :-)

சாமிக்கு ஒரு மாதிரியும், ஆசாமிக்கு ஒரு மாதிரியும் ஏற்பாடு பண்ணப்பட்டது... :-))

ரோஸ்விக் said...

சென்னையில இந்த வரவேற்பு உங்களுக்கு கிடைக்கல பாத்தீகளா...??

ஜோசப் பால்ராஜ் said...

//ஆமா அந்த ரெண்டாவது படத்தில இருக்கிறது யாரு? உங்க அடுத்த பட ஹீரோவா? //

அண்ணே,
ஸ்வாமிகள் கூட எனக்கு போட்டியா வர்றாருண்ணே. ஆனா நீங்க மனசு மாறமாட்டிங்கன்னு எனக்கு தெரியும்.

ஜோசப் பால்ராஜ் said...

//@ Singapore Pathivar Sangam.///

வெளியூர்க்காரன் சிங்கப்பூர் பதிவர் சங்கத்திற்கு தனது கடும் ஆதங்கத்தை தெரிவிக்கிறான்..முக்கியமா பிரபாகர் அண்ணன்,கோவி கண்ணன் அண்ணன்,வெற்றிகதிரவன் அண்ணன்,ஜோசப் அண்ணன்,ரோஸ்விக் இவங்க எல்லாரும் என் கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்..என்னோட மூணாவது பதிவுலையே என்ன உங்ககூட சேர்த்துக்கங்கன்னு கேட்ருந்தேன்..நீங்க இன்னிக்கு வரைக்கும் என்னை உங்க சங்கத்துல சேர்த்துக்கல..சேர்த்துக்கறவன் மனுஷன்..சேர்த்துக்கங்கன்னு கேக்கறவன் பெரிய மனுஷன்..நான் பெரிய மனுஷன்..நீங்க மனுசனா...??
//

வணக்கம் சார்.
நீங்க யாரு சார் ? சிங்கையில இருக்கீங்களா ? 93372775 இதான் என்னோட அலைபேசி எண். கூப்புடுங்க. இதுக்கு முன்னர் யாரையாச்சும் தொடர்பு கொண்டிங்களா?

shortfilmindia.com said...

தம்பி சோசப்பு.. புள்ள தனியா தவிக்குது பார்த்து சேத்துக்கப்பு..
:)

க ரா said...

/* உடுக்கை போன்ற இடுப்பு என்று ஆங்காங்கே பார்த்திருகிறேன். சும்மா சொல்லி வைத்து செய்தார் போன்ற ஒரு இடுப்பை கிஞ்சித்தும், பெருக்காத ஒரு இடுப்பை, கொண்ட் இரு ஹோஸ்டஸுகளை பார்த்து பெரு மூச்சு மட்டுமே விட முடிந்தது. நாங்கள் போனது டைகர் ஏர்வேஸ் என்பதால் அவள் கட்டியிருந்த பெல்ட் கூட புலிக்கலரில் இடுப்பில் தழுவியிருந்தது அழகாய் தான் இருந்தது. நான் அளவுகளை பற்றி சொல்ல நினைத்து எழுதாமல் விட்ட, சட்டை புடைப்புகளை பற்றி எது என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். பாருங்கப்பா நான் அதை பத்தி எழுதலை. எழுதலை.. எழுதலை.. */

நீங்க யூத்துதான். யூத்துதான். ஒத்துக்கறோம். கலந்து அடிங்க.

ஸ்வாமி ஓம்கார் said...

@ரோஸ்விக்... :)

//இது அச்சுறுத்தல் இல்லை அண்ணே... சிங்கபூர் வருகைக்கான மனம் "திறந்த" வரவேற்பு... :-)
//

அங்கே நடந்தது நித்யானந்த எபஃக்ட்..!

:))

கதவை திற...

Mahesh said...

அண்ணே மன்னிக்கணும்.... ஆபீஸ்ல கடப்பாரைக கொஞ்சம் ஜாஸ்தியாப் போச்சு.... நீங்க ஊருக்குப் போறது கூட மறந்துட்டேன்...

மணிஜியைக் கேட்டதா சொல்லுங்க :)

சுரேகா.. said...

இப்பதான் ஜி கச்சேரி களை கட்டுது!

வாழ்த்துக்கள்..!

பயணக்கட்டுரையை தினசரி போடுங்க!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

பயணக் கட்டுரை super ...waiting for next part..

ஜெட்லி... said...

கதாநாயகி கிடைச்சாங்களா??,,,,,

ரோஸ்விக் said...

//அங்கே நடந்தது நித்யானந்த எபஃக்ட்..!

:))

கதவை திற...//


காற்று வந்திருந்தால் பரவாயில்லை... காய்ச்சல் வந்தால்... ?? :-)

Romeoboy said...

பயண கட்டுரை .. தலைவரே சூப்பரா இருக்கு முதல் தொகுப்பு. அப்படியே தொடருங்க.

புலவன் புலிகேசி said...

ம் பறக்கட்டும்...

venkit_Raj said...

அண்ணே..
சிங்கை பயணத்தை அனுபவித்திருப்பீர்கள் என எண்ணுகிறேன்..

ஓம்கார் அய்யா,சிங்கையிலே நிரந்திரமாக தங்க யோசித்துக்கொண்டிருப்பதாக
செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன..
-ராஜ் வெங்கட்

மரா said...

சொல்லாம போய்ட்டு வந்த கேபிளார்க்கு வாழ்த்துக்கள்.’Green label' நல்லா இருந்தது.நன்றி.

thanjai gemini said...

சாமி உங்களுக்கு சுவிங்கம் குடுத்தது உங்க காதடைப்புக்கு இல்ல இத மெல்ற வரைக்கும் பேசாம வருவீங்கள்ள உங்க பேச்சுனால அவர் காதடைக்காம இருக்கறதுக்கு,(பேச்சகுறை னு சொல்லாம செர்ல்லீருக்காருங்கோ),,

இளமுருகன் said...

நல்ல தொடர் ஒன்று வரப்போவதற்கான அறிகுறி தெரிகிறது ...கலக்குங்க!!!

Veliyoorkaran said...

@@@@ஜோசப் பால்ராஜ் said...
வணக்கம் சார்.
நீங்க யாரு சார் ?////
/////////////////////////////
என்னாது நான் யாரா...ஐயகோ அவமானம்...ஒரு உலக புகழ் பெற்ற பதிவர பார்த்து நீங்க யாருன்னு கேட்டு வெளியூர்க்காரன அசிங்கபடுத்திடீங்க ஜோசெப் அண்ணேன்...இத நான் சும்மா விடமாட்டேன்...இன்னும் ஒரே பாட்டுல தமிழ்மணம் அவார்ட்,தமிளிஷ் அவார்ட், தமிழ் 10 அவார்ட், தமிழ்வெளி அவார்ட் எல்லாத்தையும் வாங்கி உங்க முன்னாடி வந்து நிப்பேன்...இது பித்தனின் வாக்கு அண்ணேன் போட்ருக்க அழுக்கு டை மேல சத்தியம்...இத செஞ்சி காமிச்சிட்டு நான் வந்து சிங்கப்பூர் பதிவர் சங்கத்துல வந்து சேர்றேன்...அதுதான் வெளியூர்காரனுக்கு கவுரவம்...!!

Veliyoorkaran said...

@@@@ஜோசப் பால்ராஜ்///////

ஜோசப் அண்ணேன்...கோவி கண்ணன் அண்ணேன்,பிரபாகர் அண்ணேன் மாதிரி நீங்களும் பெரிய மனுசன்தான் அண்ணேன்..! :)

Veliyoorkaran said...

Hi Joseph,

Thanks dude..Thanks for your sweet words..We will meet soon..I love to meet you people.. :)

Cheers,
Veliyoorkaran.

Veliyoorkaran said...

@@@கேபிள் அண்ணன்..////////

அண்ணேன் என் பஞ்சாயத்து முடிஞ்சிருச்சு...பெரிய அண்ணேன்கெல்லாம் தம்பிய சங்கத்துல சேர்த்துக்கறதா சொல்லிட்டாங்கா...உங்க பதிவுல வந்து சண்டை போட்டதுக்கு மன்னிக்கணும்...பதிவு சூப்பர் அண்ணேன்...இனி உங்க பயண கட்டுரை எல்லாத்துலயும் தம்பி வந்து சிலம்பாட்டம் ஆடுவேன்...(ஆமாம், டைகர்ல பிகர்லாம் அவ்ளோ நல்லாவா இருக்கு..இது தெரியாம ரெண்டு மூணு தடவ சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்ல காச வேஸ்ட் பண்ணிடன்னே அண்ணேன்..கொழுகட்ட போச்சே...)

shortfilmindia.com said...

@தராசு
அவரு ஏன் என்னை திட்டணும்

2பித்தனின் வாக்கு
நன்றிங்க

@இராம்
நிச்சயம் மீட் பண்ணுவோம்

@ஷ்ங்கர்
சாமிக்கு தெரியாதா?

@விசா
அஹா..

@வடுவூர் குமார்
நிச்சயம் பிரம்மிப்பை அடைந்தேன்

@ஜெய்லானி
அங்கேயும் ஆன்மீகம் பரப்பத்தான் போனார்

@ஜெய்லானி
வெய்ட் அண்ட் சீ

@வெளியூர்காரன்
நிச்சயம் நான் ஏற்கனவே படித்திருக்கிறேன். பின்னூட்டம் போட்ட்டிருக்க மாட்டேன்
நிச்சயம் படிக்கிறேன் தலைவரே.. ஏன் என்னை சிங்கையில் தொடர்பு கொள்லவில்லை

@கார்க்கி
இதுக்கு எதுக்கு ஆதி..

@அசோக்
ம்

@டொன்லீ
நன்றி எனக்கும்தான்

@அறிவிலி
வரும்.. வரும்ம்
@சைவக்கொத்துபரோட்டா
அது சரி


@புண்ணாக்கு மூட்டை
என்னாது..?

@சங்கர்
என் சட்டைய பத்தி இங்க மேட்டர் கிடையாது

@வானம்பாடிகள்
நன்றி

@ஜெகதீசன்
எனனாது எழுதிட்டியா..?

#ஜெகதீசன்
ரெண்டாவது தடவை எழுதிட்டியா..?

@எம்.எம்.அப்துல்லா
பேச்சு துணைக்குத்தானே போனேன்..

இந்தியன் ஏர்லைன்ஸா.. ஏர்போர்ட்லேயே பார்க்க முடியலை

2கருப்பு
ஆமா ரெடியாவுது


@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நிச்சயம்

@ந்ர்சிம்
அதானே

@ரவிச்சந்திரன்
மிக்க நன்றி தலைவரே.. எனக்கும் மிக்க சந்தோஷம் உஙக்ளை சந்தித்ததில்

@அத்திவெட்டி ஜோதிபாரதி
அவரு பாவம். என்னை பாத்துக்கிறதே பெரிய வேலையா போச்சு..

:)

@பாலாசி
கிடைக்கலியே

@ஸ்வாமி ஓம்கார்
எல்லாம் உங்க ஆசிர்வாதம் சாமி..
ஹீரோவா.. சரி நான் ரெடியாயிட்டேன்.. நீங்க ரெடியா..?

shortfilmindia.com said...

@கோவி.கண்ணன்
நன்றி

@பிரபாகர்
அவ்வள்வு போகாதுன்னு நினைக்கிறேன்

@நிஜமா நல்லவன்
நன்றி எனக்கும் தான்

@மோகன் குமார்
கொஞ்சம் மாவது பெப் வேனாமா..?

@சூர்யா
திடீர் ப்ரோக்ராம்

@அமிர்
இருந்தா நல்லாருக்கு இல்ல

@பனித்துளி சங்கர்
தலைவரே இது புனைவு இல்லை

@சிங்க நாதன்
அவ்வளவு எல்லாம் எழுதினா ஓடி போயிருவாஙக்

@ரோஸ்விக்
அவ்வளவு ஏற்பாடா..?

@இராமசாமி கண்ணன்
அதான் அதை சொல்லுங்க

@ஸ்வாமி ஓம்கார்
கதவை திற..:((

@மகேஷ்
பரவாயில்லை அண்ணே. ஆணிதான் முக்கியம்..

@சுரேகா
பின்ன எழுதறதுகு வேற ஏதும் இல்லை

@ஸ்ரீகிருஷ்னா
நன்றி

@ஜெட்லி
ம் பாத்தாச்சு

@ரோச்விக்
அதானே

@ரோமியொ
நன்றி

@புலவன் புலிகேசி
ஓகே

@வெங்கிட்ராஜ்
அய்யய்யோ.. அவர அனுப்பி விட்ட்ருங்க.. தலைவரே

@மயில் ராவணன்
வாங்கிட்டு வந்தீங்களா என்ன?

@தஞ்சை ஜெமினி
:(

@இளமுருகன்
நன்றி

@வெளியூர்காரன்
மூக்கு சப்பைனாலும்..

Atchuthan Srirangan said...

கேபிள் அண்ணா

“பாவம் சாமி”

பனித்துளி சங்கர் said...

/////ஒரு பயணம் எனக்கு இவ்வளவு சந்தோஷத்தை, இவ்வளவு நட்பை, இவ்வளவு ஆச்சர்யங்களை, அதிர்ச்சிகளை, கண்ணீரை அளிக்கும் என்று எண்ணவேயில்லை என்பது நிஜம். ஆம் இதை நிஜம் என்று உணர்ந்து முடிப்பதற்குள்ளேயே பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். புக் கிரிக்கெட்டில் ஓடும் காட்சியை போல் சடசடவென ஓடி மறைந்து விட்டது. அவ்வளவு வேகம். ////////யாராலும் மறுக்கமுடியாத உண்மைதான் .

முகவை மைந்தன் said...

சிறப்பா இருந்தது, இருக்கு. தொடருவோம்.