Thottal Thodarum

Mar 26, 2010

Joyfull சிங்கப்பூர் –4

IMGA0258 Image0456

அடுத்தநாள் ஜெய்யிடம் நான் எழுந்தபின் பேசிய நேரம் சுமார் 10 மணியிருக்கும், நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம். அங்கிருந்து ஒரு ரவுண்ட் அடித்தால் முக்கிய இடங்களை பார்த்து விடலாம் என்று சொன்னார். எல்லாவற்றையும் நோட் செய்துவிட்டு, அவசர அவசரமாய் குளித்துவிட்டு, மெல்ல நடக்க ஆரம்பித்தேன்.
IMGA0252 IMGA0254

காலையிலேயே வெயில் உறுத்தியது. நம்மூரைவிட அதிகப்படியான ஹூமிடிட்டியினால் வழக்கத்தை விட அதிகமாய் வியர்த்தது. விஷ்..விஷ் என கிஞ்சித்தும் புகையில்லாத, ஹாரன் சத்தமில்லாத ஹைவேக்கள், நெஞ்சை பிடிக்கும் டி.சர்டுகளோடும், சர்வ நிச்சயமாய் ஒரு ஐ போனோ அல்லது ஐ பாடையோ, காதில் சொருக்கிக் கொண்டு போகாத இளைஞிகளோ, இளைஞர்களோ பார்க்க முடியாது. மாற்றி மாற்றி திடீர் திடீர்ரென நடு ரோட்டில் இறுக அணைத்து கொண்டு, காதல் வயப்படுவதும், கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு ஆபீஸுக்கும், காலேஜிக்கும் போகும் அழகு சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள் கொண்ட பெண்கள்.எந்தவித ஆக்கிரமிப்பும் இல்லா நடைபாதையின் பளீர் தரைகள், பத்தடிக்கு ஒரு குப்பை தொட்டி, ரோட்டில் நடக்கும் நடையர்களுக்கான முக்கியத்துவம். நீங்கள் எவ்வளவு பிஸியான ரோடானலும் க்ராஸ் செய்ய வேண்டுமென்றால் சிக்னலில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அதற்கேற்ப மற்ற சிக்னல்களை சீரமைத்து, அடுத்த நிமிடங்களில் உங்களுக்கான வழி விடும் தொழில் நுட்பம். எவ்வளவு தான் மழை பெய்தாலும் அடுத்த நிமிடங்களில் பளிச்சாகும் ரோடுகள். சிட்டியில் மட்டுமில்லை, புறநகர்களில் கூட அஃதே. எல்லாவற்றையும் மீறி நாம் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு இருந்து கொண்டே இருகிறது.
IMGA0228 IMGA0225
ஊர் சுத்தமாய் இருக்கிறது என்று சொல்வது சூரியனுக்கு டார்ச் அடித்தது போல. அதனால் அதை பற்றி பேசுவதை விட, இந்த ஒழுக்கத்தை இன்றளவில் மாட்டினால் ஃபைந்தான் என்ற ஒரு பயத்தை உள்ளூர விதைத்து, லஞ்சம் கொடுத்தெல்லாம் வேலைக்காகாது என்ற நிலையில், அந்த பயத்தை கொண்டே ஒழுக்கத்தை வளர்கிறார்கள். அந்த இறுக்கத்தின் வெளிப்பாட்டை நம்மூர்காரர்கள் லிட்டில் இந்தியாவில் வெளிப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட நம்மூர் ஆட்டிட்யூடுடன்.
IMGA0219 IMGA0245

எம்.ஆர்.டி எனப்படும் மெட்ரோ ரயில் சர்வீஸின் தரத்தையும், ஒரு ஊரை எல்லாவிதங்களிலும், இண்டெர்கனெக்ட் செய்ய மால்களின் பேஸ்மெண்டிலேயே எல்லா விதமான போக்குவரத்து வசதிகளையும் ஏற்படுத்தியிருப்பது ஆச்சர்ய படுத்துகிறது. அதே போல் பேருந்து வசதிகள். பேருந்துக்கும், எம்.ஆர்.டிக்கு ஒரு அடையாள அட்டையை எடுத்துக் கொண்டால் போது அந்த கார்டை உள்ளே நுழையும்போதும், வெளியேறும் போது காட்டினால் ஆட்டோமேட்டிக்காக நம் அக்கவுண்டிலிருந்து பணம் எடுத்துக் கொள்கிறார்கள். டாக்ஸிகள் பக்கத்து ரோடுக்கு கூப்பிட்டாலும் வருகிறார்கள். ஆனால் அவை வார இறுதி நாட்களில் கிடைப்பது தான் குதிரை கொம்பாக இருக்கிறது.
IMGA0242 IMGA0250

எல்லா மால்களிலும் புட்கோர்டுகளால் நிரம்பியிருக்க, எங்கேயும், எப்போதும் எல்லா கோர்டுகளிலும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். எதையாவது வாங்கிக் கொண்டுதானிருக்கிறார்கள். சண்டெக் சிட்டியில் வார இறுதியில் ஐ.டி ஷோ நடந்து கொண்டிருந்தது. மால் முழுவதும், ஐ.டி ஷோ ஸ்டால்கள்தான். உலகில் உள்ள அத்துனை கம்பெனியும் வந்திருக்குமோ என்ற சந்தேகம். நடக்க முடியாத அளவுக்கு கும்பல் அம்மியது. எதோ மளிகை கடையில் சாமன்களை ட்ராலியில் தள்ளி வருவது போல, பெரிய பெரிய ட்ராலிகளில், கம்புயூட்டரையும், லாப்டாப்பையும், இன்ன பிற எலக்ட்ரானிக் வஸ்துக்களையும், அள்ளி போட்டுக் கொண்டு, எதையாவது தின்று கொண்டும், பீர் சப்பிக் கொண்டும், வாக் வேயில் பின்பக்கத்தை அழுத்தியபடி முத்தமிட்டுக் கொண்டே பிஸியாக இருந்தார்கள்.

நான் எக்ஸ்பிளனேட் மாலுக்குள் நுழைந்தேன். வழக்கமான கூட்டம் நெறியும் மால்லாய் இல்லாமல் மிக அமைதியாக இருந்தது. இந்த கட்டிடத்தை ஏதாவது டாப் ஆங்கிளிலிருந்து பார்த்தால் சிங்கப்பூரின் பிரபல பழமான தூரியனின் வடிவத்தில் அமைக்கப்பட்ட கட்டிடம். முழுக்க,முழுக்க, இசை, இசை கருவிகள் தியேட்டர் கான்செர்ட் ஹால் தியேட்ட்ர் ஹால், நிச்சயம் பார்க்க வேண்டிய் நூலகம், மற்றும் பல புட்கோர்டுகளுடன் இருந்தது.
IMGA0231 IMGA0235

அங்கிருந்து பின்பக்கம் போனால் க்ளார்க் வாக் வர, அங்கிருந்த டூரிஸம் கூண்டிலிருந்த ஒரு பெண், பதினைந்து டாலருக்கு ஆற்றில் படகின் மூலம் சிங்கப்பூரை சுற்றிக் காட்டும் நிகழ்ச்சிக்கு கேம்பெயின் பண்ண, நான் படகுக்காக காத்திருந்தேன். காத்டிருந்த நேரத்தில் அவளுடன் பேச ஆரம்பித்தேன். எல்லா விஷயத்திற்கும் மிக அதிகமான எக்ஸ்பிரஷனுடன், அவளின் சின்ன கண்களை விரித்து பேசியது இண்ட்ரஸ்டிங். நான் தமிழ் சினிமாவில் வேலை செய்கிறேன் என்றவுடன், தனக்கும் தமிழ் பாடல்கள் பிடிக்கும் அதன் அர்த்தம் புரியாவிட்டாலும் என்றாள். தன் ஐ போனை விரலால் நிரடி, ஒரு பாட்டை போட்டு ஒரு பக்க இயர் போனை என் காதிலும், மற்றதை அவளுடய காதிலும் பொருத்தி, ப்ளே செய்தால்.. “ஆரோமலே” பாட்டு முழுவதும் முடியும் வரை, கண் திறக்கவேயில்லை, அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல்.
IMGA0249 IMGA0253

அதற்குள் ஒரு போட் வர, டூருக்கு கிளப்பினேன். அருமையான ஒரு குட்டி டூர் ஆற்றின் பேக்ரவுண்டில். பல நாட்டுகாரர்களுடன். அதில் உடன் வந்த ஒரு பிரஞ்சு பெண் க்யூட். முடிந்து வந்து மெல்ல மீக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு கால் போன போக்கில நடக்க ஆரம்பிக்க, திடீரென பெருமழை பிடித்துக் கொண்டது. அருகே இருந்த் ஒரு ஸ்டேடியத்தில் மொஸாயிக் என்று இசை திருவிழாவுக்கான ஆயுத்தஙக்ள் நடைபெற்று கொண்டிருக்க, நிறைய சைன பெண்கள் போவதை பார்த்து நானும் உள்ளே போக எத்தனித்தேன். அங்கே இருந்த ஒரு செக்யூரிட்டி கார்டு என்னை தடுத்தார்.” சார் இவர்கள் எல்லாம் குழுவின் ஆட்கள். இப்போது யாரையும் அனுமதிக்க முடியாது” என்றார். வேறு வழியில்லாமல் மழைக்கு ஒதுங்கி கொள்கிறேன் என்று சொன்னேன். அவர் பெயர் ரத்னம். தஞ்சாவூர்காரர். ஆனால் தஞ்சாவூருக்கே போகாதவர். சிங்கையில் பிறந்து வளர்ந்த தமிழர். நெடு நேரம் பேசிக் கொண்டிருந்த போது அவர் என்னை எங்கேயோ பார்திருப்பதாய் சொன்னது ஆச்சர்ய படுத்தியது. கடைசியில் தான் தெரிந்தது அவர் என் பதிவுகளின் வாசகராம். கடல் கடந்து ஒரு புதிய வாசகரை ச்ந்தித்தது உற்சாகமாய் இருந்தது.
IMGA0255 IMGA0288

மழை நின்றவுடன், மீண்டும் நடக்க ஆரம்பித்து, மெல்ல, மெல்ல ஒவ்வொரு மாலுக்குள்ளூம் சென்று, மேலிருந்து, கீழே, கீழே என்று அலைந்து, நடு நடுவே புட்கோர்டுகளில் ஜுஸும், காப்பியுமாய் குடித்தலைந்து, மீண்டும் சண்டெக் சிட்டி வந்து அங்கிருந்த பரோட்டா கடையில் பரோட்டா சாப்பிட்டுவிட்டு, அந்த மாலில் உள்ள மல்ட்டிப்ளெக்சை பார்க்க நடக்க ஆரம்பித்தேன். மேலே இருந்த வழிகாட்டிகளை படித்தபடி சுமார் அரை மணி நேரம் நடந்து அந்த மல்ட்டிப்ளெக்ஸை அடைந்தேன். ஏதாவது ஒரு படத்தை பார்கக்லாம் என்றால் எல்லா படங்களும் ஆரம்பித்து கவுண்டர் க்ளோஸ். இரண்டு 3டி படங்கள் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கண்ணாடி கொடுத்த பெண்ணும் குட்டையாய் 3டியில் இருந்தாள். மால்களை சுற்றிச் சுற்றி கால்கள் களைப்படைந்ததனால். மீண்டும் பாலாவின் ஹோட்டல் ரூமுக்கு சென்றடைந்தேன் நடந்தே. பாலா போன் செய்தார் இன்னும் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாகவும். “என்ன ப்ரோக்ராம் என்றார். சாமியின் திருமந்திர சொற்பொழிவு என்றேன்.
Image0452 IMGA0290

லிட்டில் இந்தியாவில் செராங்கூன் ரோடிலிருக்கும் காளியம்மன் கோவிலில் நடைபெற்றுக் கொண்டிருந்த்து. முற்றிலும் வேறான ஒரு இடத்தில் அவரின் பேச்சு மிக சுவாரஸ்யமாக இருந்தது. சொற்பொழிவு முடிந்ததும், கேள்விநேரம் ஆர்ம்பிக்க, வந்திருந்த பக்தர்களில் ஒருவர், ஒரே நாளில் ஆன்மீகட்தை கரைத்து குடிக்கும் முடிவுடன் கேள்விகளால் துளைத்தெடுக, சக்கரை பொங்கல், புளியோதரையுடன் அந்நாள் இனிதே நிறைவுற்றது. கூட்டத்தில் மீண்டும் ஜோசப், கோவி, கிரி, அறிவிலி, பித்தனின் வாக்கு சுதாகர், மற்றும் பல நண்பர்களை சந்தித்துவிட்டு அளவளாவி கிளம்பினோம். ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை.


கேபிள் சங்கர்
Post a Comment

34 comments:

தமிழ் மதுரம் said...

படப்பிடிப்பும் எழுத்தாக்கமும் அருமையாக உள்ளன.

Paleo God said...

நித்தி எபெக்ட்ல பரபரப்பா இருக்கு..:))

3D கோணமா ?? நடத்துங்க.!

வடுவூர் குமார் said...

IT ஷோவில் இன்னும் கூட்டம் அம்முதா? விலை தெரியாதவர்கள் தான் அங்கு வாங்குவார்கள்.அங்கு கிடைக்கும் விலைக்கு குறைவாகவே Sim Lim Square யில் வாங்கலாம்.

சிவகுமார் said...

Interesting cable .

வரதராஜலு .பூ said...

//நெஞ்சை பிடிக்கும் டி.சர்டுகளோடும்
சர்வ நிச்சயமாய் ஒரு ஐ போனோ அல்லது ஐ பாடையோ, காதில் சொருக்கிக் கொண்டு போகாத இளைஞிகளோ,

கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு //

இதுதான் சைட் சீயிங்கா?


//“ஆரோமலே” பாட்டு முழுவதும் முடியும் வரை, கண் திறக்கவேயில்லை, அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல். //

காதல்

//கடைசியில் தான் தெரிந்தது அவர் என் பதிவுகளின் வாசகராம். //

:)

ம்ம்ம். சுவாரசியமாக செல்கிறது.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

appadiye enkal kaikalai pidiththu singapore sutri kaattiyathupol unarvu. arumaiyaana katturai.

thayavuseythu ella nattukkum pongal.

Unknown said...

Dear Youth,
vasagargal nalai varalama?

Ashok D said...

சக்கரை பொங்கல், புளியோதரையல வந்து உங்க ஆன்மீகம் நின்னுச்சு பாருங்க... அங்க தான் நிக்கறார் கேபிள் அங்கிள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

அருமை

பிரபாகர் said...

இந்த எபிசோட்ல இருக்கிற எல்லாம் புது தகவல்கள் அண்ணா!

அருமை.

பிரபாகர்.

பித்தனின் வாக்கு said...

ஆகா நல்லா சொல்லி வர்றிங்க பாஸ். இன்னமும் வெளுத்த குட்டைப் பெண்களை மறக்கவில்லையா?

தருமி said...

//“ஆரோமலே” பாட்டு ..// --- ??

vasu balaji said...

தலைவரே! அந்த நீருற்றுக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோல பின்னாடி இருக்கிற வெள்ளக்காரரு ஏன் தலைல அடிச்சிக்கிறாரு. யூத்துன்னு அவர்கிட்ட சொல்லிட்டீங்களா என்னா?

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

//அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல்.//

nesamava???

க.பாலாசி said...

தலைவரே... போட்டோவுல ஒண்ணு க்ளோஸப்ல கண்ணாடி போட்டமாதிரி இருக்கே... ரொம்ப பயமா இருக்குங்க...

க ரா said...

//தலைவரே! அந்த நீருற்றுக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோல பின்னாடி இருக்கிற வெள்ளக்காரரு ஏன் தலைல அடிச்சிக்கிறாரு. யூத்துன்னு அவர்கிட்ட சொல்லிட்டீங்களா என்னா?//

அய்யா கேக்கறாருள்ள பதில் சொல்லுங்கன்னா.

இராகவன் நைஜிரியா said...

கலக்கறீங்க தலைவரே..

Romeoboy said...

சென்னைனா சென்ட்ரல் ஸ்டேஷன் காட்டுறதா மாதிரி சிங்கப்பூர்னா அந்த சிங்கம் சிலை. சிங்கப்பூர் போனா அதுக்கு பக்கத்துல நின்னு போட்டோ எடுத்தா தான் சிங்கப்பூர் போனேன் ஒத்துக்குவாங்க போல .. ஹீ ஹீ ஹி

Unknown said...

உங்க பதிவைப் படிக்கும்போது சிங்கப்பூர் போகணுங்கிற ஆசை இன்னும் அதிகமாகுது

அறிவிலி said...

//ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை.//

பகல் வெளிச்சத்துல சுத்துன எடத்தையெல்லாம் ஒரு தடவை இரவு வெளிச்சத்ததுல சுத்தி காமிச்சசாரா பாலா?

:-)))

அறிவிலி said...

//ஆனால் கிளம்பிய வேகத்தில் போய் சேரத்தான் முடியவில்லை.//

பகல் வெளிச்சத்துல சுத்துன எடத்தையெல்லாம் ஒரு தடவை இரவு வெளிச்சத்ததுல சுத்தி காமிச்சசாரா பாலா?

:-)))

அறிவிலி said...

// Written by பிரபாகர்
12:36 PM
இந்த எபிசோட்ல இருக்கிற எல்லாம் புது தகவல்கள் அண்ணா!

அருமை.

பிரபாகர்.//

த.. பார்ரா... கூடவே இருந்தவர்கிட்ட கூட பொண்ணு கைய புடிச்சத சொல்லவே இல்ல்...

ஜெகதீசன் said...

//
சக்கரை பொங்கல், புளியோதரையுடன்
//
பாஸ்... அது ரவா கேசரி வித் புளியோதரை பாஸ்.. :)

Unknown said...

////வடுவூர் குமார்
11:16 AM
IT ஷோவில் இன்னும் கூட்டம் அம்முதா? விலை தெரியாதவர்கள் தான் அங்கு வாங்குவார்கள்.அங்கு கிடைக்கும் விலைக்கு குறைவாகவே Sim Lim வாங்கலாம்/////

தவறான தகவல் .. IT ஷோவில் மிக தரமான கணினி வகைகளை விலை மலிவாக வாங்கலாம்.
Bashkaran

நேசமித்ரன் said...

கலக்கறீங்க தலைவரே

நீர்ப்புலி said...

//மாற்றி மாற்றி திடீர் திடீர்ரென நடு ரோட்டில் இறுக அணைத்து கொண்டு, காதல் வயப்படுவதும், கிட்டத்தட்ட ரொமான்ஸுக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பாயும் கைகள்,பாண்டீஸ் சைஸுக்கு ஒரு ட்ராயரையும், போட்டுக் கொண்டு ஆபீஸுக்கும், காலேஜிக்கும் போகும் அழகு சப்பை மூக்கு, இடுங்கிய கண்கள் கொண்ட பெண்கள்.//

புகைப்படம் இல்லாம நம்பமாட்டோம்.

ராஜாதி ராஜ் said...

தலைவா, சின்ன typo... 'Joyful'-னு நினைக்கிறேன்

பதிவு எப்பவும் போல சூப்பர்

ராஜ்.

Veliyoorkaran said...

@@Cable Sankar///நான் இருக்கும் இடம் தான் சிங்கப்பூரின் நடு செண்டராம்.////

நடு செண்டர்ணா எதுன்னேன்.?.
ந வுக்கும் டு வுக்கும் செண்டர்லையா..?

(நடு ன்னாலும் செண்டர்னாலும் ஒரே அர்த்தம்னு என் ஹிஸ்டரி வாத்யார் சொல்லி குடுத்து தப்பா அப்போ..?)

Veliyoorkaran said...

நீங்க சொன்ன எடத்துக்கேலாம் நாளைக்கு போய் பார்க்கறேன்...! நல்லாத்தான் இருக்கு போலருக்கு சிங்கப்பூர்...!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

//அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல்.//

அது நீங்கதானா.. அண்ணே..சொல்லாம போயிட்டீங்கனு அந்த பொண்ணு ஒரே அழுகைணே..

நான் டீயும் பொறையும் வாங்கிக்கொடுத்து அசுவாசப்படுத்தியிருக்கேன்...

அடுத்த எப்ப வரீங்கனு மட்டும் சொல்லிடுங்க.. ஜாம்.. ஜாம்னு நடத்திடலாம்/ ( சத்தியமா பதிவர் மாநாட்டை பற்றிதான் சொன்னேன்..)

அதிலை said...

//“ஆரோமலே” பாட்டு முழுவதும் முடியும் வரை, கண் திறக்கவேயில்லை, அனிச்சையாய் என் கை ப்டித்திருந்தாள். நேரம் போக, போக, இறுக்கம் அதிகமாகியது. பாட்டு முடிந்து கண் திறந்தவளின் கண்களில் கண்ணீர் திரள, “I love this song. It’s Hurt me a lot” என்றாள். காதல். //

Idhu tamil paatta????

Cable சங்கர் said...

@kamal
நன்றி

@ஷங்கர்
என்னது நித்தி எபெக்டா..?:)

@வடுவூர் குமார்
அப்படி இல்லை என்று சொன்னார்கள் குமார்

@சிவகுமார்
நன்றி

@வரதராஜுலு.பூ
பின்ன?

நன்றி

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
யாராவது ஸ்பான்ஸர் செஞ்சா இன்னும் நல்லாருக்கும் ரமேஷ்..ஹி..ஹி..

Cable சங்கர் said...

@ஜெகதீசன்
பேக் டூ பார்மா..?:(

@சுரேஷ்
நிச்சயம்

@அசோக்
ஆன்மீகத்துல அதுவும் ஒண்ணு தானே அசோக்?

@ராதாகிருஷ்ணன்
நன்றி

@பிரபாகர்
உங்களூக்கே புதுசா.. ரைட்ட்..

@பித்தனின் வாக்கு
எப்புடி மறக்க முடியும்?

@த்ருமி
அரோமலே பாட்டு..?? புரியலையே..??

@வானம்பாடிகள்
ஹா..ஹா..

@நாளைப்போவான்
அட நிசம்தாங்க..

@க.பாலாசி
ஹி..ஹி..ஒரு திருஷ்டிக்குத்தான்

@இராமசாமி கண்ணன்
ஹி..ஹி..

@இராகவன் நைஜிரியா
நன்றி

@ரோமியோ
பின்ன எப்படி புரூப் பண்றதாம்..

@முகிலன்
நிச்சயம் போய் வாஙக்

@அறிவிலி
அதெப்படி கரெக்டா சொன்னீங்க..:)

பொண்ணு கையை பிடிச்சி பேசுறதெல்லாம் ஒரு பெரிய விஷயமா பாஸ்..:)

@ஜெகதீசன்
என்னது ரவா கேசரியா...:)

@பாஸ்கரன் சுப்ரமணியன்
ஆமாம் பாஸ்கரன் நானும் அதைத்தான் கேள்விப்பட்டேன்

@நேசமித்ரன்
நன்றி

@தினா
இதையெல்லாம் கூட படமெடுத்து போட்டாத்தானா.. நம்புங்கய்ய..:)

@வெளியூர்காரன்
அதை ஞாபகப்படுத்ததான்.. :)

@பட்டாபட்டி
பார்த்துக்கப்பூ.. நலல் பொண்ணு.. உன் கிட்ட சாக்குறதையா இருக்க சொல்லி அவளூக்குமெயில் பண்ணனும்..:)

@வெளியூர்காரன்
மொதல்ல வெளிய வாங்க.. ஏஸியிலேயே இருந்தா அப்படித்தான்

Cable சங்கர் said...

@அதிலை

நீங்கள் ஒருவர் தான் அடஹி கரெக்டா புடிச்சிருக்கீங்க.. அவளை பொறுத்த வரைக்கும் அது ஒரு தமிழ் பட பாடல். அவ்வளவுதான். அவளிடம் நான் அதைத்தான் சொன்னேன் இது தமிழ் படத்தில் வரும் மலையாள பாடல் என்று..