தமிழ் சினிமா ரிப்போர்ட் – நவம்பர் 2011


சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். ரா.ஒன் நூறு கோடி பேண்ட்வேகனில் ஏறினாலும், தயாரிப்பு செலவை கணக்கில் கொண்டால் ஒரு தோல்விப் படம் என்று தான் சொல்ல வேண்டும்.


தம்பி வெட்டோத்தி சுந்தரம்
ரொம்ப நாளாய் தயாரிப்பில் இருந்து வெளியான திரைப்படம். கரண் மிகவும் எதிர்பார்த்திருந்த படம். விதயாசாகரின் இசையில் ஒரு பாடல் சூப்பர்ஹிட். படத்தின் முதல் நாள் ஓப்பனிங் ஆவரேஜாய் இருந்ததற்கு காரணம் அஞ்சலி என்பது திரையில் அஞ்சலி தெரிந்தவுடன் கிடைத்த விசிலை வைத்தே சொல்லிவிடலாம். சுமார் நான்கரை கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம், எழுபத்தியைந்து லட்சம் எம்.ஜி. முறையில் வெளியாகி, அதுவும் கடைசி நேரத்தில் அந்த விநியோகஸ்தர் பணப்பிரச்சனையில் மாட்டி வெளிவந்த படம். இதற்கு முன்னால் வந்த படங்களைவிட சுமாரான படமாய் இருந்தும் கரண் என்கிற நடிகரின் ப்ரெசென்ஸும், கதையே இல்லாமல் படம் வரும் காலத்தில் அதிகப்படியான கதை சொல்லி குழப்படித்ததன் காரணத்தினாலும், இடைவேளைக்கு பிறகு பார்க்கிறவர்கள் கழுத்தையெல்லாம் அறுத்து கொண்டிருந்ததால் டூமச்சாகி விட்டது. மீண்டும் கரணுக்கு இது ஒரு தோல்விப்படமாய் அமைந்தது வருத்ததிற்குரியதே. விமர்சனம் படிக்க

வித்தகன்
பார்த்திபன் நடித்து வெளிவரும் 50வது படம். வித்த”கன்” என்றெல்லாம் சுவாரஸ்யமாய் விளம்பரத்துக்கு யோசித்தவர் அதே போல வித்யாசமாய் யோசிக்கிறேன் என்று படத்தின் ரெண்டாவது பாதி முழுவதும் வித்யாசமாய் யோசித்து உட்கார முடியாமல் செய்து விட்டபடியால் படம் வேலைக்காகமல் போய்விட்டது. நல்ல பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் சுமார் இரண்டு வருடங்கள் தயாரிப்பில் இருந்தது என்று நினைக்கிறேன். பார்த்திபனின் லொல்லுக்காக பார்க்க உட்கார்ந்தாலும் பின்பாதியில் அவராலேயே தியேட்டரை விட்டு கதிகலங்கி வரும்படி படமிருந்தது வருத்தத்துக்குரியதே. விமர்சனம் படிக்க

மயக்கம் என்ன?
தீபாவளிக்கே வந்திருக்க வேண்டிய படம். தியேட்டர் கிடைக்காததாலும், பெரிய படங்களோடு வர வேண்டாம் என்று நினைத்ததாலும் இரண்டு வாரம் தள்ளி வந்தது. பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியிருந்தும், படத்தின் ரெண்டாவது பாதி மிகவும் மெதுவாக சென்று பல பேரின் பொறுமையை சோதித்ததால் படம்  வெகுஜனங்களிடம் எடுபடவில்லை . சென்னை,கோவை போன்ற ஏ செண்டர்களில் படத்திற்கு ஓரளவு நல்ல வரவேற்பு இருக்கிறது. என்றாலும், வசுலைப் பொறுத்தவரைக்கும் தோல்வி என்றே சொல்ல வேண்டும்.விமர்சனம் படிக்க

பாலை
என்ன தான் அழுது புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும், செண்டிமெண்ட் பேசியும் இப்படம் ஒரு தோல்விப் படமே. சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது. விமர்சனம் படிக்க

இதை தவிர, கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் மழை, நான் சிவனாகிறேன் போன்று இன்னும் சில சின்னப் படங்கள் வந்தாலும் எதுவும் சொல்லிக் கொள்கிறார்ப் போல இல்லை என்பதால் அவை லிஸ்டில் வரவில்லை. மொத்ததில் இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மோசமான மாதமே.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

என்னது மயக்கம் என்ன வசூல் ரீதியாக தோல்வியா...???
PARAYAN said…
//படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.//
This is Overstated.
Chandrmaukhi ran coz of the Sentiment and emotional attachment to Rajini, not because of story/sentiment ( which was a crap )
Anonymous said…
//தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும்,//

ஸ்ஸ்ஸ்..யப்பா. அவங்களோட உங்க இம்ச தாங்கல சார். :-)
Anonymous said…
//Philosophy Prabhakaran said...
என்னது மயக்கம் என்ன வசூல் ரீதியாக தோல்வியா...???//

யோவ்.. இப்ப எதுக்கு 'இந்திரா காந்தி எறந்துட்டாங்களா' எபக்ட்டை போடுற..?
Jayaprakash said…
சார் அந்த ரெண்டு படம் எதுன்னு சொல்ல வேல் இல்லையே!
rajamelaiyur said…
வித்தகன் .. செத்த கண்
Anonymous said…
///இந்த மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு மோசமான மாதமே///

என்ன பண்றது ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் வந்து போகுது...
[[[சுமார் நான்கரை கோடி பட்ஜெட்டில் தயாரான இத்திரைப்படம், எழுபத்தியைந்து லட்சம் எம்.ஜி. முறையில் வெளியாகி, அதுவும் கடைசி நேரத்தில் அந்த விநியோகஸ்தர் பணப் பிரச்சனையில் மாட்டி வெளிவந்த படம். இதற்கு முன்னால் வந்த படங்களைவிட சுமாரான படமாய் இருந்தும் கரண் என்கிற நடிகரின் ப்ரெசென்ஸும், கதையே இல்லாமல் படம் வரும் காலத்தில் அதிகப்படியான கதை சொல்லி குழப்படித்ததன் காரணத்தினாலும், இடைவேளைக்கு பிறகு பார்க்கிறவர்கள் கழுத்தையெல்லாம் அறுத்து கொண்டிருந்ததால் டூ மச்சாகி விட்டது. மீண்டும் கரணுக்கு இது ஒரு தோல்விப் படமாய் அமைந்தது வருத்ததிற்குரியதே.]]]

ச்சும்மா எல்லாத்தையும் தெரிஞ்ச மாதிரி அடிச்சு விடாதீங்க கேபிள் ஸார்..!

படத்தின் தயாரிப்புச் செலவு 3 கோடியே சொச்சம்தான்னு இயக்குநரும், தயாரிப்பாளரும் துண்டை போட்டுத் தாண்டாத குறையா சொல்றாய்ங்க..! பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே எழுதுறீங்களே.. எப்படி..?

படம் ஒண்ணும் தோல்விப் படமில்லை.. போட்ட காசுக்கு மேல தயாரிப்பாளருக்கும், நிறைய இடத்துல வாங்கின விநியோகஸ்தர்களுக்கும் லாபத்தைத்தான் கொடுத்திருக்கு..! படம் இப்பவும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு..!
[[[என்னதான் அழுது புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம். தமிழுணர்வு, தமிழ் உறவு என்று ஜல்லியடித்தும், செண்டிமெண்ட் பேசியும் இப்படம் ஒரு தோல்விப் படமே. சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.]]]

உங்களுடைய உணர்வுகளுக்கும், விமர்சனத்திற்கும் நன்றிகள் கோடி.. ஆனாலும் சில லட்சங்கள் என்று சொல்லி ஜல்லியடிக்க வேண்டாம்.. நான் முன்பே சொல்லியிருந்ததுபோல ஒன்றே கால்கூட போகவில்லை என்பதை சற்றுத் தாமதமாக தெரிந்து கொண்டேன். ஆனால் கடைசி நேர விளம்பரங்களையும் சேர்த்து 1 நோட்டு ஆகிவிட்டது..!

இனிமேல் ரிலீஸ் ஆகப் போற படங்களையெல்லாம் எவ்வளவுக்கு தயாரிச்சாங்கன்னு உங்ககிட்ட சொல்லிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிட்டா இந்தக் குழப்பம் தீர்ந்திரும்னு நினைக்கிறேன்..! தயாரிப்பாளர் சங்கத்துல சொல்லி பிரச்சினையை முடிச்சிரலாம்.. நோ பிராப்ளம்..!

புரிதலுக்கு நன்றி..!
Jerome said…
கேபிள் சார் 1௦ லட்சம் போட்டு ஒரு படம் எடுத்து அது 50லட்சம் லாபம் தந்தால் அது எந்த வகை படம்?
உண்மைதமிழன்..நான் அடிச்சு விடறானா..இல்லை நீங்க பாசத்துல விடறீங்களான்னு நான் ப்ரூப் பண்ண முடியும். டி.சி.ஆர். ரிப்போர்ட் காட்டட்ட்டுமா?
துண்டைப் போட்டு தாண்டாத குறையாய் சொல்றாங்கன்னு சொல்றீங்களே யார் துண்டை..?

விநியோகஸ்தர்கள் லாபம் பார்த்தார்கள் என்று ப்ரூப் செய்ய முடியுமா? என்னால் முடியும்.

இல்லை என்று 75 லட்சத்துக்கு எம்.ஜியில் தமிழ் நாடு முழுவதும் ரிலிஸ் செய்த ஆள் என்று உங்களுக்கு தெரியுமா?

சும்மா புதிய தலைமுறை சேனலில் இருந்து கொண்டு ப்ரிவியூ பர்த்து கொண்டு இருபதை விட்டு நிஜத்தை புரிந்து கொள்ள் விழையுங்க.

அப்படி அந்த படம் ஹிட் என்றால் இன்றைக்கு அடுத்து இரண்டு நல்ல படங்கள் கரண் நடித்து ரெடியாய் இருக்கிறது யாராவது வாங்கி ரீலீஸ் பண்ண ரெடியா?
//இனிமேல் ரிலீஸ் ஆகப் போற படங்களையெல்லாம் எவ்வளவுக்கு தயாரிச்சாங்கன்னு உங்ககிட்ட சொல்லிட்டு அப்புறமா ரிலீஸ் பண்ணிட்டா இந்தக் குழப்பம் தீர்ந்திரும்னு நினைக்கிறேன்..! தயாரிப்பாளர் சங்கத்துல சொல்லி பிரச்சினையை முடிச்சிரலாம்.. நோ பிராப்ளம்..!

புரிதலுக்கு நன்றி..!//

தைரியமிருந்தா தயாரிப்பாளர் சங்கத்தில நான் வந்து நிக்க தயார் அவங்க ரெடியானு கேளுங்க..
ஒரு கோடிக்கு எத்த்னை சைபர்ன்னு தெரியுமா உ.தா?

முந்தா நாள் ஒன்றேல்கால் கோடி. இன்னைக்கு ஒரு கோடி.. நாளைக்கு.. ??/?

சரியான் காமெடி சார் நீங்க..?
ஜிரோம்/ ஒரு லட்சம் போட்டு ஒருலட்சத்தி ஐம்பதாயிரம் வந்தால் லாபமான படம் தான். அது தயாரிப்பாளருக்கா, இல்லை விநியோகஸ்தருக்கா என்பதை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு உங்களுக்கு சினிமா வியாபாரம் பற்றி தெரிய வேண்டுமென்றால் தயவு செய்து புத்தகத்தை படிக்கவும். ஜுரோம்.
மொத்தமாய் சிக்ஸ் ஷீட், ஃபோர் ஷீட் , டூ ஷீட் , சிங்கிள் ஷீட் போஸ்டர் அடித்து சுமார் அறுபது திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய என்ன செலவாகும் என்று தெரியுமா?

இதை சரியாக சொல்லிவிட்டால் பாலை படம் முன்று கோடி ரூபாய் பட்ஜெட் என்று ஒத்துக் கொண்டு விலகுகிறேன்.
உத. இயக்குனர் எனக்கும் நீங்க இங்க என்ன சொன்னீங்களோ அதையே எனக்கும் போன் ப்ண்ணி சொன்னார்.. நீங்க ஏதோ கண்டு பிடிச்சா மாதிரி பேசாதீங்க. என் கிட்ட ப்ருப் இருக்கு.. முடிஞ்சா ப்ரூப் பண்ணுங்க..
kandasami said…
மயக்கம் என்ன ஒரு தோல்வி படம் என்பதை நம்ப முடியவில்லை . சமிபத்தில் வந்த மிக சிறந்த படங்களில் இதுவும் ஒன்று ..
suharman said…
மயக்கம் என்ன பற்றிய கருத்து உங்களது சுய கருத்தே தவிர அதனை முழுவதுமாக தோல்விபடமாக ஒத்துக்கொள்ளமுடியாது.
This comment has been removed by the author.
கேபிள்,

// சில லட்சங்களில் எடுக்கப்பட்ட இப்படம் அதைக்கூட வசூல் செய்யாது என்பது வருத்ததிற்கு உரியதே. மீண்டுமொரு முறை சொல்கிறேன். படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது.]]]//

சில லட்சம்னா எப்படி 99 லட்சமா?

சில லட்சங்களில் படம் எடுக்க முடியுமா? நீங்க முடியும்னு சொல்வீங்க, ஆனா எடுக்க மாட்டிங்க, காரணம் செலவு தானா ஓடும்!

ஒரு நாள் ஷூட்டிங்க் வைக்கவே ஒரு லட்சம் தேவைப்படும் இந்த காலத்தில (நடிக ,நடிகையர், இன்ன பிற குழு சம்பளம் இல்லாம) ஆபெரேட்டிங்க் காஸ்ட் அது.

ஒரு 30 நாள் ஷூட்டிங்க், பின்னர் போஸ்ட் புரடக்‌ஷன் அப்படி இப்படினு ஒரு கோடில படம் முடிச்சா இமாலய சாதனை அதுவே.

என்ன கேபிள்ஜி துறைல இருக்கிங்க, லைட்டாக சில லட்சம்னு சொல்லிடுறிங்க!

இப்போ என்ன சொல்லிட்டார் உ.தானு அவர பாயுறிங்க!

அப்புறம் வேலாயுதம் மாபெரும் வெற்றிப்படம்னு விசய்லாம் பெருமைப்பட்டுக்கிறாராம், நீங்க வேற அது பெரிய வெற்றினே சொன்னீங்க முன்ன, இப்போ ஜஸ்ட் ஹிட் தான் சொல்றிங்க, அப்படினா என்ன? (கடலூர்ல வேலாயுதம் அல்ப சொல்பமாகவே ஓடிச்சு)
கேபிள்,

//அநேகமாய் இந்த தீபாவளிக்கு வந்த ரெண்டு படங்களில் நிதானமாய் ரேஸில் முந்தும் என்று சொல்லப் படுகிற படம். அதற்கு காரணம் படத்தின் பட்ஜெட். சுமார் 30 கோடியில் தயாரிக்கப்பட்ட படம். ஆஸ்கர் யாருக்கும் விற்கவில்லை. உலகம் முழுவதும் தானே ரிலீஸ் செய்தார். அந்த வகையில் அவருக்கு இப்படம் அறுவடைதான். எப்படி தசாவதாரத்தில் ஒரு பெரிய அறுவடையை செய்தாரோ அதே போல் இதிலும் வெற்றி பெற்று இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். வேலாயுதம் படத்திற்கு இது வரை ஒரே ஒரு ப்ரஸ் மீட் அதுவும் படம் ஹிட் என்று பிரகடனப் படுத்த வைத்தார்கள். அவ்வளவுதான். படத்தின் வெற்றிக்கு இன்னொரு காரணம் முதல் பாதி காமெடி, மற்றும் பாடல்கள். ஒரு வெகுஜன ரசிகனின் எதிர்பார்ப்பை சரியான விகிதத்தில் கலக்காவிட்டாலும் போன விஜய் படங்களை பார்த்தால் ஒரு எரிச்சல் வருமே அது வராமல் இருந்ததே இப்படத்திற்கு ஒரு ப்ள்ஸாக அமைந்துவிட்டது என்று சொல்ல வேண்டும். போட்ட முதலை முதல் வாரத்திலே கவர் செய்துவிட்டாரக்ள் என்று கூறுகிறார்கள்.//

இதில சொன்னத வைத்துப்பார்த்தா வேலாயுதம் சூப்பர் ஹிட் ஆக சில இஞ்சுகள் தான் வித்தியாசம் என்பது போல இருக்கே, இத சொன்னதும் ஒரு சினிமா விற்பன்னர் தான் :-))

//சென்ற மாதம் தீபாவளிக்கு வெளியான ஏழாம் அறிவு, வேலாயுதம், ரா. ஒன் என்று எல்லா படங்களும் ஆளுக்கு ஆள் சூப்பர் ஹிட என்று பரபரத்துக் கொண்டிருக்க, நிஜத்தில் தமிழ் படங்கள் ரெண்டுமே வெறும் ஹிட் வகையில் மட்டுமே சேரும். //

இதுல சொன்னத பார்த்தா ஜஸ்ட் போட்ட காச முக்கி முக்கி எடுத்த படம் வேலாயுதம் என்பது போலச் இருக்கு இத சொன்னதும் அதே விற்பன்னர் தான் என்பது ஆச்சர்யமான ஒற்றுமை! :-))

இப்போ எனக்கு மெய்யாலுமே ரொம்ப கொயப்பமாக இருக்கு பெரிய அறுவடைனா என்ன வெறும் ஹிட் னா என்னானு பிரியலையே :-))
Ba La said…
"படத்தில் செண்டிமெண்ட் இருந்தால் ஓடும். ஆனால் படம் ஓடுவதற்கு செண்டிமெண்ட் உதவாது" - கேபிள் சங்கர்
Anonymous said…
sterday i watched mayakkam enna in TRichy .. here the response is Good ..above 70% occupancy even in week days sir ..
vavval

முதல்ல போட்டது எக்ஸ்பெக்டட்.. இப்போது போட்ட்து ரிசல்ட்.. ஒரு மாதத்தில் எல்லாமே மாறும்

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.