Thottal Thodarum

Jan 28, 2013

கொத்து பரோட்டா -28/01/13

சென்னையின் மிக மோசமான கலாச்சாரம் சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவது. அது எந்த இடமாக இருந்தாலும் சரி. போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதற்காக சுவர் முழுவதும் இயற்கை காட்சிகள், நிறைந்த படங்களை வரைந்தால் அதன் மேலும் ஒட்டுகிறார்கள். அனுமதியில்லாத இடங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்று சட்டமிருந்தாலும், அது எப்போது மீறப்படுகிறது என்றால் ஆளூம் கட்சிக்காரர்களே அங்கே போஸ்டர் ஒட்டும் போதுதான். மாநகராட்சியும் அவ்வப்போது அறிக்கை விடுவதோடு சரி. சமீபத்தில் என் வெளிநாட்டு நண்பர் ஒருவர் சென்னை வந்த போது மெட்ரோ ரயில் வேலைக்காக மறைப்பாக வைத்திருக்கும் இரும்பு ஷீட்களில், மெட்ரோ தூண்களில் எல்லாம் போஸ்டர் ஒட்டியிருப்பதைப் பார்த்து உங்க அரசாங்கம் இதை கண்டிக்காதா? என்று கேட்டார். கண்டிக்கும் ஆனா கேட்க மாட்டாங்க.. என்றதும் எங்க ஊரில் எல்லாம் அப்படி மீறி போஸ்டர் ஒட்டினால் அந்த போஸ்டர் சம்பந்தப்பட்ட ஆட்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, உடனடியாய் மிகப் பெரிய ஃபைன் வசூலிக்கப்படும். இங்கேயும் அதை இம்ப்ளிமெண்ட் செய்தால் அரசுக்கு வருமானத்துக்கு வருமானமும் ஆச்சு, ஊரும் சுத்தமாயிருக்கும் இல்லையா? என்றால் இருக்கும் தான் செய்யணுமே..? அதுக்கு எவ்வளவு கட்டிங் போவுதோ? 
@@@@@@@@@@@@@@@@@@@@@


விஸ்வரூபம் படத்தை பார்க்க போன பயணத்தை ஒர் கட்டுரையாக எழுதும் அளவிற்கு கண்டெண்ட் கிடைத்துக் கொண்டிருக்க, நண்பர்கள் சிலர் ஒரு சினிமாவுக்காக இப்படி மெனக்கெடனுமா? என்று கேட்கவும் செய்தார்கள். எனக்கென்னவோ இப்படி மெனக்கெட்டாவது பார்பது ஒன்றும் தவறில்லை என்றே தோன்றுகிறது. நானாவது பரவாயில்லை. நான்கைந்து நண்பர்களுடன் காரில் வெறும் இருநூறு கி.மீட்டர் தான் பயணித்தேன். நம் சக பதிவர் உலகசினிமா ரசிகன் ஆரோ 3டியில் பார்ப்பதற்காக சென்னை மாயாஜாலில் ரிசர்வ் செய்து வைத்திருக்க, கோவையிலிருந்து சென்னை பயணித்தார். வந்த இடத்தில் படம் தடை செய்யப்பட்டது என்றதும், வேறு வழியில்லாமல் விமானம் பிடித்து கேரளாவுக்கு போய், அங்கிருந்து காரில் போய் படம் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். இன்னொரு பத்திரிக்கையாளர் நண்பர் விஜயகுமார் நேரே ரயில் பிடித்து விஜயவாடாவுக்கே போய் விட்டார். இன்னும் சில திரையுலக நண்பர்கள் தமிழில் பார்ப்பதற்காக பெங்களூருக்கு பயணப்பட்டுவிட்டார்கள். படம் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து இருந்தாலும், வெகு நாட்கள் கழித்து மக்களிடையே ஒர் சினிமாவை பார்த்தே தீர வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்திய சகோதரர்களுக்கும், தடை விதித்த அரசுக்கும் நன்றி சொல்லத்தான் வேண்டும்.  பார்த்த அத்துனை பேருமே முக்கியமாய் இஸ்லாமிய நண்பர்கள் படத்தில் இஸ்லாமியர்களை எதிர்த்து எந்த கருத்துமில்லை என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அப்படி சொன்னவர்களை தனி மெயிலிலும், போனிலும், பப்ளிக் போரமிலும், இனத்துரோகி எனவும், கூட்டத்திலிருந்து விலக்கி வைத்துவிடுவோம் என்றெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மிரட்டுகிறார்கள் என்று சொல்கிறார்கள். கலாச்சார தீவிரவாதம் என்று சொன்னது சரிதான் என்று தோன்றுகிறது.
############################################
குறும்படம்
நேற்று மாலை ஏ.வி.எம் ப்ரிவியூ தியேட்டருக்கு ஒர் குறும்பட வெளியீட்டு நிகழ்ச்சிக்காக அழைத்திருந்தார்கள். படத்தின் பெயர் “வாரண்ட்” அரசியல் காரணங்களுக்காக தவறிழைக்காத ஒருவனை கைது செய்ய மதுரை போலீஸ் தேடுகிறது. அவனுக்கு ஒர் காதலி வேறு. மதுரையிலிருந்து தப்பி வந்து சென்னையில் நண்பருடன் பதுங்கியிருக்கும் வேலையில் அவனின் காதலி வேறு வீட்டில் ப்ரச்சனை என்று ஊரை விட்டு வந்துவிடுகிறாள். இன்னொரு பக்கம் ஹீரோவின் நண்பனை மிரட்டி போன் பேச வைத்தபடி அவன் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அரஸ்ட் செய்ய முயற்சி செய்கிறது போலீஸ். என்ன ஆனது என்பதுதான் கதை. வெறும் பதினைந்து நிமிட படம் தான். ஆனால் சுவாரஸ்யமாய் சொன்னார்கள். நடித்திருந்த ஹீரோ, ரத்னம், நண்பனாக நடித்தவர் அத்துனை நடிப்பு நன்றாக இருந்தது. வசனங்களிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் வாரண்ட் விஷயத்தை சொல்வதற்காகவே கான்ஸ்டபிளிடம் கதையின் ஆரம்பத்தை சொல்வது, உருக்கமாய் இருக்க வேண்டும் என்பதற்காக நுழைக்கப்பட்ட க்ளைமாக்ஸ் என்ற சிறு சிறு குறைகள் இருந்தாலும், சங்கரின் ஒளிப்பதிவும், ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், அபிநவ் சுந்தர் நாயக்கின் எடிட்டிங்கும் குறிப்பிடத்தக்கது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
படத்தில் பாட்டு இல்லை, டான்ஸில்லை, காமெடியில்லை, ஆயிரம் கதையிருக்க கமல் ஏன் இந்த களத்தை தேர்தெடுக்க வேண்டும்? என்றெல்லாம் டிவியில் பேசிய சினிமா குறித்த பரந்த அறிவு கொண்ட ஒர் முஸ்லிம் அடிப்படைவாத குழுவின் நபர் ஒருவர் பேசினார். உங்களில் மத கோட்பாட்டின் படி சினிமாவே ஹராம் எனும் போது அதை பின்பற்றும் நீங்கள் எத்துனை சினிமாக்களை பார்த்து இருப்பார்கள். அப்படி சினிமா வாசனையே இல்லாதவர்கள் எப்படி ஒரு படத்தை தடை செய்ய போராட் முடியும்?. அப்படி சினிமா ஹராம் என்பதை மீறி படம் பார்கிறவர்கள் என்றால் உங்களின் கோட்பாடுகளை நீங்களே மீறியவர்களாவீர்களே? அப்போது உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?. அது தவிர இணையத்தில் நடு நிலைமை என்று சொல்லிக் கொண்டு அடிப்படைவாதிகளுக்கு ஆதரவாய் பேசுகிற, எழுதுகிறவர்கள் கூட படம் பார்க்காமல் தான் எழுதுகிறார்கள். அவன் சொன்னான், இவன் சொன்னான், அவன் கிட்ட பேசினதுக்கு அப்புறம் எழுதுறேன்னு சொல்லி எழுதுவது எல்லாம் செம காமெடியான முட்டாள்தனமான வாதமாய் இருக்கிறது.விஸ்வரூ பட பிரச்சனையைப் பற்றி பேச என்னை இரண்டு மூன்று தொலைக்காட்சிகளில் அழைத்த போது , படம் பார்க்காமல் நான் விவாதத்திற்கு வர மாட்டேன் என்று சொன்னேன்.  பாகிஸ்தானிய சிறுமி மலாலாவிற்காக தலிபான்களை எதிர்த்து அவர்களுக்கு தடை போட போராடியதா இந்த குழு?. இந்திய பொருளாதாரத்தை கெடுக்கும் கள்ள நோட்டு புழக்கத்திற்காக கைதான முஸ்லிம் இளைஞர்களைப் பற்றி இவர்கள் எனன் சொல்வார்கள்?. முகமுடி அணிந்து பணயக் கைதிகளை கொல்லும் வீடியோக்களில் குரான் ஓதிவிட்டு கொலை செய்வதை அல்ஜீரா டிவி ஒளிபரப்ப்பும் போது எங்கே போனார்கள் இவர்கள்?. இப்படத்தை முழுக்க முழுக்க தலிபான்கள் படம் என்று சொல்லும் போது அதெல்லாம் கிடையாது. முஸ்லிம்கள் என்று சொல்லும் போது  அவர்களை தீவிரவாதிகளாக காட்டக்கூடாது என்று சொல்கிறவர்கள் தலிபான்களின் கற்கால செயல்களுக்கு என்ன சப்பைக் கட்டு கட்டப் போகிறார்கள்?  என்னைப் பொறுத்தவரை இப்படத்திற்கு தடை கோருகிறவர்கள் தலிபான் ஆதரவாளர்கள் என்றே சொல்ல தோன்றுகிறது.என்னுடன்  படம் பார்த்துவிட்டு வெளிவந்த ஒரு இஸ்லாமிய நண்பர் சொன்னது தான் மனமெங்கும் வியாபித்து திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்கிறது. :”யாரோ ஒரு கும்பல் அரசியல் லாபத்திற்காக இஸ்லாமை வைத்து ப்ரச்சனை பண்றதுனால நமக்குள்ள பேசிக்க சாதாரண விஷயமே இல்லைன்னு ஆயிருச்சு பாத்தீங்களா? இனி ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்து பேசினாலும் உள்ளூக்குள்ள வேற எண்ணம் ஓடத்தானே செய்யும்? விஷத்தை படம் விதைக்கல இவங்க தான் விதைச்சிட்டாங்க” என்றதுதான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விஸ்வரூப ட்வீட்கள்
பாட்டு, காமெடி எதுவும் இல்லை அதை எப்படி படம்னு சொல்ல முடியும்? இவங்க எல்லாம் படம் பார்த்து புரிஞ்சு.. கிழிஞ்சுது போ. - கேபிள் சங்கர்


Its not who lost but who WON is terrifying. This happened Today to Kamala Hassan Tom it can happen to any one of us. WAKE UP everyone.

 the movie is just beyoooooond words. Kamal sir was just brilliant. a new way of film making. worth the wait :)

தமிழ் திரையுலகத்தினரே.. ஒன்று கூட வேண்டிய நேரமிது.. கமலுக்காக அல்ல.. உங்களுக்காக.. தயக்கம் வேண்டாம்.

 is smartly scripted, technically sound and excellently executed in acting.

எனக்கென்னவோ இந்த ஜமாருல்லா ப்ளாக் வச்சிருப்பாருன்னு தோணுது.. விமர்சனம் எழுதறதுக்காக மொதல்லயே பார்த்துட்டாரு.

 is MINDBLOWING! SUPERB!!! Can't wait for Part 2! Wats with the ban???? Wake UP! PPL NEED TO WATCH THS MOVIE!

Protesters will be protesters. . . Film-makers will always be film-makers! Protesters have intentions. . . But film-makers doesn't! Simple!

உண்மையான வன்முறைகளுக்கு குரல் கொடுக்காத அமைப்புகள் திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கள் வீரத்தைக் காட்டிக்கொள்கின்றன
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
காளஹஸ்திக்கு படம் பார்க்க தியேட்டருக்கு போகும் முன் கோயிலுக்கு போனோம். எங்கு பார்த்தாலும் பணம் புடுங்கும் வேலைதான் நடக்கிறது. காரைப் பார்த்ததும் கோயில் வாசலிலேயே நாற்பது ரூபாய் பணம் கேட்கிறார்கள். சீட்டு கொடு என்றால் 24 ஹவர் பெட்கோண்டி சார் என்கிறார்கள். உள் நுழைந்ததுமே.. நான்கைந்து கைடுகள் வழி மறித்து நார்மல் க்யூவில் போனால் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகும் என்றும் ஸ்பெஷல் க்யூவில் சென்றால் உடனே சாமி பார்க்கலாம் என்ற சொல்ல, திக்குதிசை தெரியாமல் க்யூவில் போய் மாட்டினா என்னாவது என்ற எண்ணத்தில் இருப்பவர்கள் சட்டென அவர்களை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். எதிர்பார்த்ததைப் போல கூட்டமில்லாமல் காலியாகவே இருந்தது கோயில்.  எல்லா கர்பக்கிரகங்களுக்கும் வழிகாட்டி கைடு, பேசிய தமிழைப் கேட்டதும் பல்ராம் நாயுடு ஞாபகத்துக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை. பட்.. நல்ல தரிசனம். மணிஜி கமலுக்கும் ஒர் அர்சனை செய்திருக்கலாம் என்றார்.
############################################
கேபிள் சங்கர்

Post a Comment

19 comments:

Sethupathy said...

/*:”யாரோ ஒரு கும்பல் அரசியல் லாபத்திற்காக இஸ்லாமை வைத்து ப்ரச்சனை பண்றதுனால நமக்குள்ள பேசிக்க சாதாரண விஷயமே இல்லைன்னு ஆயிருச்சு பாத்தீங்களா? இனி ஒருத்தர் மூஞ்சியை ஒருத்தர் பார்த்து பேசினாலும் உள்ளூக்குள்ள வேற எண்ணம் ஓடத்தானே செய்யும்? விஷத்தை படம் விதைக்கல இவங்க தான் விதைச்சிட்டாங்க” */

"உங்க நண்பருக்கு கவலை பட வேண்டாம்ன்னு சொல்லுங்க"
நல்லேதே நடக்கும்

திருவாரூர் சரவணா said...

///////////சென்னையின் மிக மோசமான கலாச்சாரம் சுவர் கண்ட இடமெல்லாம் போஸ்டர் ஒட்டுவது. ////////////

நீங்க சொல்றது அப்பட்டமான பொய். தமிழ் நாட்டில் பெரும்பாலான ஊர்களில் அனேகமாக எல்லா நகரங்களிலும் இதுதான் நடக்கிறது. சென்னையில் மட்டுமல்ல. (எங்குமே விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை. இவர்கள் எப்போது சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றால், அரசு எந்திரத்தை நியாயமாக கேள்வி கேட்கும் ஒரு ஆள் முறைப்படி 6 நாட்களுக்கு அனுமதி வாங்கி பேனர் வைத்திருப்பார். அதில் கட்டியிருக்கும் கயிறு பேனர் அளவை விட ஒரு அங்குலம் வெளியே தெரிந்துவிட்டது என்று கேஸ் போட வருவார்கள்.)


---------
விஸ்வரூபம் படத்துக்கு எதிரான பிரச்சனை உண்மையில் இப்போது வெளியில் சொல்லப்படும் காரணத்துக்காக இருக்கும் என்றே தோன்றவில்லை. ஆஃப் த ரெக்கார்டாக கிடைக்கும் தகவல்கள்................... வேண்டாம் இந்த படத்து போஸ்டரை பார்த்து மூச்சு விட்டால் கூட விஷ மூச்சு விடுவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில் நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.

hitechramesh said...

sir,
Pls see this problem in their point of view ....
there is virtually no film to tell their religion's stand on terror attacts over the entire globe..
but to mymind i feel sorry about the global propagando thru film's do muchmore damage to their respect ...
but what the tamil film industry actually have to do is...
not exposing the terror technics of Taliban in Tamilnadu
and setting unwanted things in the minds of young generation of both the communities...
but actor like Kamal why take the negative side in entire film to showcase....
for ex ...to tell rape is cruel.. then films like paruthiveeran is corret...it give's anyone shock
and anyone feels shame that is the correctway...i feel cimax is too long but it really happens in Delhi..
but instead of doing this the industry takes porno films to teach rape is cruel...
what is the result the fans became illminded...
so pls dont showcase toilets of any religion ....
everyone want to overcome the badsmell honestly...
i expecting more films giving correct view on islam to the world
see....terrorists is in thousands but religion's goodsouls in crores...
why exposing thousand's view repetedly than to tell the crores of crores good stories on their side
but industry always doing moneymaking....

திவ்யாஹரி said...

Unga vivatham parka aavalaai ullom. Tv ku vanga. Live epponu sollidunga munnadiye. Vera acters fan kuda kamalai like panranga. Support panranga.

rajamelaiyur said...

//ஒர் முஸ்லிம் அடிப்படைவாத குழுவின் நபர் ஒருவர் பேசினார். உங்களில் மத கோட்பாட்டின் படி சினிமாவே ஹராம் எனும் போது அதை பின்பற்றும் நீங்கள் எத்துனை சினிமாக்களை பார்த்து இருப்பார்கள். அப்படி சினிமா வாசனையே இல்லாதவர்கள் எப்படி ஒரு படத்தை தடை செய்ய போராட் முடியும்?.
//

சரியான கேள்வி ...

rajamelaiyur said...

இன்று
விஸ்வருபம் தடை சரியா ? தவறா ? மாபெரும் கருத்து கணிப்பு

Unknown said...

http://www.youtube.com/watch?v=3lMr2h0pJsw

SNR.தேவதாஸ் said...

அப்பாடா இப்பத்தான் ஒரு நியாயமான,சரியான வாதத்தை படிக்கிறேன்.மற்றவர்கள் எல்லோரும் தர்ம அடி கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
வாழக வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

Sunaitheen said...

முகலாயர் படையெடுப்பு ஆங்கிலேயர் வருகை . இது தான் நம்ம பாட புத்தகம் .அப்பறம் எப்படி ? கருத்து தீவிரவாதம் இது தான் பாஸ்

தொடர்ந்து முட்டாள்களாக இருப்பது நாங்களா அல்லது இந்த பாசிச மீடியாக்கள் தரும் ஒருதலை பட்ச செய்திகளை நம்பும் நீங்களா??? எத்தனை செய்தி தாள்கள் முதல் பக்கத்தில் வெளியிட்டது ஹிந்து தீவிரவாதிகள் செய்த வெடி குண்டை??? RSS ,VHP போன்ற தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய எந்த மீடியா கூறியது அல்லது இந்த அரசுக்கு தான் திராணி இருக்குதா அப்படி செய்வதற்கு??? பெண் சாமியார் சாத்வி போண்டவர்கள் அப்பட்டமாக மாடி உள்ளார்கள் ஆனாலும் அந்த தீவிரவாத அமைப்பை எதுவும் செய்ய முடியவில்லை அரசாங்கத்தால்....

உலக சினிமா ரசிகன் said...

நண்பரே...
இன்று இரண்டாம் முறை பார்த்தேன்.
இரண்டாம் முறை பார்க்கும் போது படத்தின் விறுவிறுப்பு ஒரு சதவீதம் கூட குறையவில்லை.

ஹூம்...ஆரோ3டியில் பார்க்கத்தான் இன்னும் வேளை வரவில்லை.
ஜட்ஜைய்யா கையில்தான் உள்ளது.

Ravi said...

Ulaga Cinema-

I haven't seen the film yet, neenge rendu thadavaya.. !!

Kadupu ethurar my Lord

unmaiyalan said...

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு எம் எல் ஏ ...உனக்கு அடிப்படை வாத குழு தலிவாரக தெரிகிறதோ .....உன் சுய ரூபம் நன்றாக தெரிகறது .....இனியும் நடுநிலைவாதி என்று வேஷம் போடதே.......உனக்கு திராணி இருந்தால் ராமகோபாலனை பற்றியோ ...இல்லை வெட்டி கூச்சல் போடும் சில அமைப்புகள் பற்றியோ எழுத துணிவுண்டா ?......

மன்சி (Munsi) said...

விஸ்வரூபம் தடை தடையில்லை பிரச்சினை பெரிதாகப்படவில்லை. ஒரு காலத்தில் நிறைய ஆங்கிலப்படங்களைச் சுட்டு கமல் படம் எடுத்திருந்தார். அந்த காலத்தில் எங்களிடம் லாப்டாப் இருக்கவில்லை. இன்டெர்னெட் இருக்கவில்லை. இலவசமாக படத்தை பார்க்கும் வசதியிருக்கவில்லை. இதை எல்லாவற்றையும் விட நம்மில் பலருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பும் கிடைக்கவில்லை. அந்நேரத்தில் வெளிநாட்டுப் படத்தைத் திருடிவிட்டு அந்தப்படத்தால் இன்ஸ்பிரேசன் ஆனேன் என்று போடாமல் போடுவது இலகுவானதாக இருந்தது. ஆனால் ரேய்டரைச் சுட்டது மிகவும் முட்டாள் தனம். லாப்டாப், நெட், திருட்டு விசிடி எல்லா வயதியும் இருக்கும் காலத்தில் ரிலடிவ்லி புதிய படத்தை சுட்டது மட்டுமல்ல, அந்தப்படத்தின் இன்ஸ்பிரேசன் என்று கூட சொல்லாமல் விட்டது பெரிய குற்றம். பெத்தம் பெரிய இன்டலிஜ்ட் நபர், 50 வருட நடிப்பின் சிகரம் என்பவர் திருடனும் கூட என்பது வேதனைக்குரியது. அல்பசீனோவின் வட இந்திய வேர்சன் அமிதாப் என்றால் தென்னிந்திய வேர்சன் கமல் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அவரோ மக்களை இன்னும் முட்டாள்கள் என்று எண்ணி திருட்டைத் தொடர்வது வேதனைக்குரியது. எவ்வளவு அலட்சியம் கமலிடம் இருக்கிறது. 90களில் இருந்த மாதிரியே இப்போதும் தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்று எண்ணி திருட்டை இன்னும் செய்வது வேதனைக்குரியது. விசனத்துக்குரியது. இஸ்லாமியர்கள் படத்தை தடை செய்யச் சொல்வது கமலின் நன்மைக்கே என்று நினைத்து பெருமூச்சு விடுவோம். ரேய்டர் பட தயாரிப்பாளரோ, டைரக்டரோ கமலிடம் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடராமல் இருக்க வேண்டிக்கொள்வோம். ஏன் என்றால், கமல் தமிழ் நடிகனாக உலகிற்குத் தெரிபவர். தமிழனுக்கு இழிவென்றால் நமக்கும் இழிவு.

Ilayangudi said...



ஆதிபகவன்’ படத்தில் இந்துக் கடவுள்களை அவமதிப்பது போன்ற காட்சிகள் இருக்கும் என்று சந்தேகிக்கிறோம். எனவே படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பும் முன் எங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும். தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற இந்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்து அமைப்பினருக்கும் திரையிட்டு காட்ட வேண்டும். ‘ஆதிபகவன்‘ தலைப்பையும் படத்தில் இருந்து நீக்க வேண்டும்.
----???விஸ்வரூபம் படத்தை வெளியிட வேண்டும் என்று சொன்ன BJB தான் இதற்கும் தலைமை தாங்கி உள்ளது.!
எதற்கு இந்த இரட்டை வேடம்.?

உங்களுக்கு வந்தால் ரெத்தம் எங்களுக்கு வந்தால் அது தக்காளி சட்டினியா.?

'பரிவை' சே.குமார் said...

நிறைய விசயங்களை அலசும் நல்ல பகிர்வு... இந்த கொத்துப் புரோட்டா...

Anbazhagan Ramalingam said...

முன்னாடிtrue lies இப்ப ரெய்டர். சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்கப்பா

k.rahman said...

apologies for not writing in tamil.

Cable sir,

do u really think muslim outfits are behind this ban? it seems that jaya govt has used this fringe outfits to ban the movie to settle the score between jayalalitha and kamal.
1. kamal has refused to sell the movie to jaya tv for a low amount and instead sold to vijay
2. kamal has publicly said that he wants to see chidambaram (jaya's sworn enemy) as pm in the future.

all these stupid muslim organizations are just a weapon she used against kamal. she has even passed some religious conversion act during her last term without worrying about muslim vote bank. how she will think about muslim vote bank now for some movie?

thats what i think. what is your opinion?

Basha said...

நல்லா இருக்கு உங்க நியாயம். முஸ்லிம்கள் படம் பார்ப்பது ஹராம் என்றால் அவர்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்பும் படங்களை எடுப்பது மட்டும் நியாயமா? சினிமா வாசனையே இல்லாதவர்கள் எப்படி ஒரு படத்தை தடைசெய்ய போராட முடியும் என்று சொல்ல என்ன உரிமை இருக்கிறது உங்களுக்கு.? இது கண் தெரியாதவன் இந்த உலகத்தில் வாழ கூடாதென்று சொல்வதைப் போலுள்ளது. உங்களுக்கு படம் பிடித்திருக்கிறதென்றால், படம் நன்றாக இருக்கிறது என்று சொல்வதோடு நிறுத்தியிருந்தால் நல்ல விமர்சகராக இருந்திருப்பீர்கள்.. அதை விடுத்து ஒருசார்பாக பேசுவது உங்களுக்கு அழகல்ல. உங்களை நடுநிலைவாதியாக கருதும் தகுதியை இழந்து விட்டீர்கள்.

Anonymous said...

இஸ்லாமியரில் சாதாரணரருக்கு,

உங்கள் மதத்தை தீவிரவாதிகள் கடத்திச்சென்றார்கள்...வாய் மூடி வேடிக்கை பார்த்தீர்கள்...இப்போது மிதவாதிகள் விதவிதமாய் சாயம் பூசி உலகுக்கு விற்கிறார்கள்...இப்பவும் உங்கள் மௌனம் தொடர்கிறது...மதம் பிடித்தவர்க்கு மட்டும் தான் உங்கள் மதம் சொந்தம் என்று அவர்களுக்கு பட்டா போட்டு கொடுத்துவிட்டு இனி நாங்கள் நாத்திகர்கள் என்று சொல்லிக்கொள்ளவா நீங்கள் தினமைந்து முறை தொழுகிறீர்கள்?


இஸ்லாம்,தீவிரவாதம் இரண்டையும் ஒரே வாக்கியத்தில் எழுதக்கூடாது என்று உலகின் கைகளை ஏதோ செய்து கட்டிப்போட்டு விட்டீர்கள்... ஆனால் உலகின் எந்த மூலையில் தீவிரவாதத்தால் சிறு சம்பவம் நிகழ்ந்தாலும் கண்டிப்பாய் அது இஸ்லாமியர்களால் தான் என்று ஒட்டு மொத்த மானிடமும் நினைக்கும் நிலையை எப்படி மாற்றப்போகிறீர்கள்?


மதராஸா என்றால் பாடசாலை என்ற பொருள் போய் நெடுங்கால மாகிவிட்டது உங்களுக்கு தெரியும் தானே...இப்போது முளையும் பயிர்களுக்கு நஞ்சடைக்கும் களமென்பது தானே உலகின் புரிதல்.


நிதர்சனம் பிரதிபலிக்கும் ஒரு திரைப்படத்தை இப்படி எதிர்க்கக்கிளம்பி கிளம்பி இவர்கள் கடைசியில் ஊழல் பெருச்சாளிகளோடு கை குலுக்கி ஓட்டு வங்கியாய் போவதோடு உறங்கிக்கிடக்கும் பிற மதவாதத்தையும் கூடவே உசுப்பி விடுகிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறது தானே?.


சமீபத்தில் மானுடம் அழித்த அத்தனை இஸ்லாமிய தீவிரவாதிகளும் அல்லாவின் நாமம் சொல்லியபின் தானே அத்தனை உயிர்களையும் பறித்தார்கள்? நம்மவர் தவற்றை தட்டிக்கேட்காது நீங்கள் காட்டும் தொடர் மௌனம் குற்றத்தில் உங்களுக்குத்தான் பெரும்பங்கு என்றே உரக்கச்சொல்கிறது.


மதத்தின் பேரால் அடிப்படை உரிமைகள் பறிபட்ட போதும், அப்பாவிப்பெண்கள் தீ வைத்தும், தலை வெட்டியும் கொல்லப்பட்ட போதும் பொங்கி எழாத நீங்கள் இவர்கள் இப்படி கோசம் போட்டு குரான் காவலராய் வேடம் போடுகையில் மட்டும் வாய் திறந்து பேசுவீர்கள் என்பது கொஞ்சம் அதீக எதிர்பார்ப்பு தான்...


இந்த படம் பார்த்து தான் தமிழன் இஸ்லாமில் ஊறிய தீவிரவாதத்தை புரிந்து கொள்வான் என்று இவர்கள் நினைத்தால் அது அறியாமையின் உச்சம்.


நம்மிடம் குறை உள்ளது என்று உணர்வதே மாற்றத்தின் முதல் படி. உங்களுள் சாதாரணருக்கும் மாற்றும் திறன் உண்டு என்று உங்களுக்கு அராபிய எழுச்சி உணர்த்தியிருக்கும். அதை விடுத்து தன் வாய் மூடி...ஊர் வாயை மூடுவது மட்டுமே உத்தி என்றால் அது பூனை தன் கண்ணை மூடி உலகம் இருட்டு என்று எண்ணிய கதை என்று ஊர் அறிய ரொம்ப காலமாகாது.


ஆதலில் நீங்கள் எதிர்க்க வேண்டியது படத்தை அல்ல...இஸ்லாமை கடத்திச்செல்லும் தீவிரவாதிகளையும் மிதவாதிகளையும் தான்