Thottal Thodarum

Jan 7, 2013

கொத்து பரோட்டா -7/01/13

சனி இரவு சுமார் 11.30 இருக்கும் லஷ்மண் சுருதியை தாண்டும் போது அத்துனை ட்ராபிக் சத்தத்திலும் ஒரு பெண்ணின் “வீல்” அலறல். என்னவென்று பார்த்த போது ஒரு ஆட்டோ சுத்தமாய் நசுங்கியிருக்க, அதன் பக்கத்தில் ஒர் நசுங்கிய புல்லட்டோடு கால் உடைந்த வலி பொறுத்தபடி அமர்ந்திருந்த ஒருவர், தலையில் நல்ல அடியுடன், காதோரத்தில் ரத்தம் வழிந்த ஒரு ஐம்பது வயதுக்காரரின் உடல், அவரை மடியில் போட்டுக் கொண்டு, தலையில் வழியும் ரத்தத்தை துடைத்தபடி இருந்த ஆட்டோட்ரைவர் வாய் கிழிந்து ரத்தமும் எச்சிலுமாய் வழிந்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்க்க நின்றவர்கள் பல பேர் “போயிருச்சா.. போயிருச்சா” என்று கேட்க, அய்யோ யாராச்சும் காப்பாத்துங்களேன் என்று நம்பிக்கையோடு மேலும் வீல் என்று அலறினால் பெண்மணி. அவளை மினி ஜெராக்ஸாய் உரித்தார்ப் போல், ஒன்றும் புரியாமல் மலங்க, மலங்க விழித்தபடி நிற்கும் பதிமூன்று வயதிருக்கும் பெண் குழந்தை. விபத்து நடந்து பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். போலீஸும் வரவில்லை, ஆம்புலன்ஸும் வரவில்லை. நானும் என் நண்பரும் உடனே 108க்கு போன் செய்துவிட்டு, போலீசுக்கும் சொன்னார்கள்.  போலீஸ் வந்தார்கள். கூட்டம் விரைவாக செயல்படுவதாய் நினைத்து ஒரு மட்டடேர் வேனை வழிமறித்து அதில் பெரியவரை தூக்கிப் போட்டு அருகில் உள்ள பல்லவாவுக்கு போனார்கள். ஆம்புலன்ஸ் வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆக, கால் உடைந்தவரை ஏற்றிவிட்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரிடம் இன்னொரு விக்டிம் பல்லவா ஆஸ்பிட்டலில் இருக்காங்க.. என்று சொல்லிவிட்டு பின்னால் சென்றேன். பல்லவா ஆஸ்பிட்டலின் வாசல் கண்ணாடி கதவை பூட்டி விட்டு உள்ளிருந்து நர்சுகள், டாக்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். முதலுதவி கூட செய்ய் முடியாதாம். ஏனென்றால் ஐ.சியூ இல்லையாம். ஆம்புலன்ஸ் வந்து அவரை ஏற்றும் போது அவருக்கு உயிர் இருந்ததாய் தெரியவில்லை. உடன் இருந்த பெண்ணும், ஆட்டோ ட்ரைவரும் சிறு பெண்ணுமாய் ஆம்புலன்ஸில் கிளம்ப,  உடன் இருந்து உதவியவ ஆஸ்பிட்டல் உதவியாளர் ஒருவர்  சொன்னார்..” ஆக்சிடெண்ட் கேஸு எவன் பில்லு கொடுப்பான். அட்மிட் பண்ணிட்டு அலைய இவனுங்க என்ன சும்பனுங்களா?” என்றபடி உள்ளே போனார். ஆஸ்பிட்டலின் மீதுள்ள கோபம் அதில் தெரிந்தது. சென்னையில் மிக முக்கியமான சந்திப்பு அது பெரும்பாலான நேரங்களில் அருகிலேயே வடபழனி போலீஸ் நிலையம் இருந்தும் ட்ராபிக் போலீஸ் இருப்பதில்லை. இந்த ஆட்டோவை ஒரு லாரி  ஆட்டோவின் மீது மோத, எதிர்பக்கம் வந்த பைக்கின் மீது ஆட்டோ மோதிட,  இந்த விபத்து. லாரிக்காரன் ஓடி விட்டான் என்கிறார்கள். சென்னையில் மிக அபாயகரமான சிக்னலும் அதுதான். தயவு செய்து நள்ளிரவு வரை போலீஸ் இருப்பது அவசியமான ஒன்று.
@@@@@@@@@@@@@@@@@@@
எனக்கு அடுத்து ஸ்டாலின் என்றதும் ஸ்டாலின் கோஷ்டியினரும், பொதுவான திமுகவினரும் அப்பாடி ஒரு வழியாய் இப்போதாவது தாத்தா சொன்னாரே என்று சந்தோஷப்பட, திமுக மடமல்ல என்று மதுரை பெருசு அறிக்கை விட்டதும், ஆரம்பிச்சிருச்சுடா ஏழரை என்று புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள் தொண்டர்கள். இன்றைய தினசரி பேட்டிகளில் நான் எங்கே திமுகவிற்கு அடுத்த தலைவர் என்று சொன்னேன். பொது தொண்டாட்றுவதற்கு தான் எனக்கு அடுத்து என்றேன் என்றும் பத்திரிக்கைகள் திரித்து எழுதியிருக்கிறது என்றும், ஆனால் எனக்கு முன்மொழிய வாய்ப்பு கிடைத்தால் நான் ஸ்டாலினைத்தான் முன் மொழிவேன் என்று சொல்லியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி சட்டப்படி பொதுக்குழுவின் முடிவில்லாமல் ஒரு தலைவர் தேர்தெடுக்கப்பட மாட்டாது என்று தெரிந்தாலும், இந்த பதில் கடவுள் இல்லைன்னு எங்க சொன்னேன் இருந்தா நல்லாருக்கும்னுதானே சொன்னேன் என்பது போல இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@



கற்பழிப்பு பிரச்சனைகளுக்கு பிறகு, எங்கேயாவது ஒரு பெண் காணாமல் போனாலோ, அல்லது தற்கொலை செய்து கொண்டாலோ உடனே ஊர்வலம், போராட்டம் என்று கொடி பிடிக்க ஆரம்பிக்கும் பழக்கம் அதிகமாகியிருக்கிறது. அதே போல அரசியல்வாதிகள்  கருத்து சொல்கிறேன் என்று எதையோ ஒன்றைச் சொல்ல, அது பல சமயங்களில் ப்ரச்சனைக்குரியதாய் ஆகிவிடுகிறது. அப்படித்தான் சமீபத்தில் ஒரு ப.ஜ.க முக்கிய புள்ளி, “சீதை அவளது எல்லைக் கோட்டை தாண்டியதால் தான் ராவணன் தூக்கிக் கொண்டு போனான். அதனால் யாரும் அவரவர் எல்லைகளை உணர்ந்து தாண்டாமல் இருக்க வேண்டும்” என்று சொல்ல.. காங்கிரஸ்க் காரர்கள் ‘ஹைய்யா.. மாட்டினியா’ என்பது போல குதூகலமாய் திட்டித் தீர்க்கிறார்கள். அந்த முக்கிய புள்ளி என்ன சொல்கிறார் என்றால் நான் பெண்களுக்கு என்று சொல்லவில்லை. சமூதாயத்தில் உள்ள அனைத்து ஆண், பெண்களையும் அவரவர் லிமிட் மீறி செயல் பட வேண்டாம் என்பதைத்தான் சொல்கிறேன் என்றிருக்கிறார். இன்னொரு பா.ஜ.க பெண்மணி, மலைஜாதி பெண்கள் கற்பழிப்புகள் பற்றி கருத்து சொல்லும் போது “அவர்களில் சேர்ந்து வாழும் கலாச்சாரம் இருக்கிறது. அவ்வுறவு பிரியும் பட்சத்தில் போலீஸ் நிலையங்களில் கற்பழிப்பு வழக்குகளாய் மாறிவிடுகிறது” என்கிறார். அது மட்டுமில்லாமல் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு பெண்களும் காரணம் என்றிருக்கிறார். எனக்கென்னவோ இவர்கள் சொல்வது சரியெனவே தோன்றுகிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@
பள்ளிப் பெண்களுக்கு சல்வார் துப்பட்டாவுக்கு பதிலாக ஓவர் கோட், ஆண்/பெண் இருவரும் ஒன்றாக பேச, பழக தடை, தனித் தனி பஸ், என பள்ளிப் பெண்களின் மேலான பாலியல் வன்கொடுமையை தடுக்க பாண்டிச்சேரி அரசாங்கம் சட்டம் இயற்ற இருக்கிறது. மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு செல்லப் போகிறார்களோ என்ற பயம் வருகிறது. சென்னையில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சந்தித்து பேசக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இக்கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியே வந்து தனிமையில் சந்தித்து காதலிப்பது எல்லாம் நடக்கத்தான் செய்கிறது. அப்படி நடந்த விஷயங்கள் வெளியே தெரிய வரும் போது அந்தச் செய்தி வெளியே தெரியாமல் மறைக்கப் படுகிறது. இப்படி எல்லாம் தடை போடுவதை விட, ப்ரி கேஜியிலிருந்தே கோ எஜுகேஷனில் படிக்க வைப்பது பெட்டராக தெரிகிறது. என்னுடய கல்லூரி வரை நான் கோ எஜுகேஷனில் தான் படித்தேன். படிக்கும் காலத்தில் அந்தந்த வயதுக்கே உரிய இனக்கவர்ச்சி விஷயங்களைத் தவிர எனக்கு தெரிந்து வேறெந்த அத்துமீறலும் மாணவர்களிடையே நடந்ததில்லை. பிரித்து வைக்க, வைக்க, இன்னும் மாற்று பாலினத்தினவர் மீது ஆர்வமும், வெறியும் அதிகமாகுமே தவிர அன்பு அதிகமாகாது என்பது என் எண்ணம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@
இயக்குனர் ராஜமவுலியும், கமல்ஹாசனும் விஸ்வரூபம் பற்றி மா டிவியில் உரையாடிய நிகழ்ச்சியின் பதிவு இது. டி.டிஎச் பற்றி, படத்தில் கமல் உபயோகப்படுத்தியிருக்கும் டெக்னாலஜி பற்றி, ஒளி,ஒலி அமைப்பைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள். பார்க்க, பார்க்க படம் பார்க்கும் நாளுக்கான ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டிடிஎச்சில் வெளியிடுவதால் விஸ்வரூபத்துக்கு தியேட்டர் தரமாட்டோம் என்று ஊர் ஊராய் தியேட்டர், விநியோககஸ்தர்கள் கூட்டம் போட்டுக் கொண்டு சொல்லிக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் தேவி, சத்யம், ஐநாக்ஸ் போன்றவர்கள் தியேட்டர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களுக்கு மறைமுகமான ப்ரெஷரை மற்ற சங்கத்து ஆட்கள் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  தியேட்டர்காரர்கள் ஏதோ ப்யந்து போய் சொல்கிறார்கள் ஓகே.. விநியோகஸ்தர்களுக்கு எங்கே வலித்தது. கமல் இப்படத்தை பொறுத்தவரை நேரடியாய் தியேட்டர்களில் வெளியிடுகிறார். அந்த வகையில் விநியோகஸ்தரும் அவரே.. இந்தப்படத்தின் வெற்றியைப் பொறுத்து கோச்சடையான், கடல் ஆகிய படங்களை வெளியிட தயாராக இருக்கிறார்கள். கோச்சடையானை 175 கோடிக்கு விற்க முயன்ற போது விலை படியாமல் விலகிய கார்பரேட் நிறுவனங்கள் பல.  அது மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் மொத்த நேரடி 3டியில் ஒளிபரப்ப தக்க தியேட்டர்கள் சுமார் 45க்கும் கீழே தான். அப்படியிருக்க, வெறும் 3டி, 2டியை மட்டும் நம்பாமல், ரிலீஸுக்கு முன் ப்ரிவியூவாக டிடிஎச்சில் போட்டால் இன்னும் நல்ல வசூலை அள்ள முடியும் என்று அவர்கள் நினைத்து கணக்குப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் வெளிப்படையாய் கமலுக்கு இவர்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஏன் இதனால் நேரடியாய் லாபமடையப் போகும் த்யாரிப்பாளர்களில் பல எங்கே தீவிரமாய் ஆதரித்தால் அடுத்து தாங்கள் வெளியிடப் போகும் படத்துக்கு ஏதாவது ப்ரச்சனை வருமோ என்று பயந்து அமைதி காக்கிறார்கள் என்று நினைக்கிறேன். நியாயமாய் பார்த்தால் தார்மீக ரீதியாய் ஒவ்வொரு தயாரிப்பாளரும் தியேட்டர் அதிபர்களின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். சரி விடுங்க எல்லா பூனைக்கும் கமலே மணி கட்டியவராய் இருந்துவிட்டு போகட்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@
என் ட்வீட்டிலிருந்து
கேபிளின் கதை புத்தகத்திற்கு எதிர்பாராதவர்களிடமிருந்து பாராட்டு வருவது சந்தோஷமாய் இருக்கிறது. இன்றைய சந்தோஷம் மனுஷ்யபுத்ரன். நன்றி தலைவரே

எனக்கு தெரிந்து தமிழில் வந்த ப்ளாக் ஹூயூமர் மும்பை எக்ஸ்பிரஸ் என்று நினைக்கிறேன்.

சத்யம், ஐநாக்ஸ், தேவி எஸ்2, ஆகிய தியேட்டர்களில் விஸ்வரூபம் வெளியாகிறது. இன்னும் கூடும் என்கிறார்கள்.

சிகரெட் விற்பனைக்கு, தங்ககாசு பரிசு அறிவிப்பு. சின்ன டாக்டர் எதிர்ப்பு. எப்பவாச்சும் சரியான எதிர்ப்பு தெரிவிக்கிறாய்ங்கய்யா

சந்தோஷம் என்பதற்கான முக்யத்துவம் கிடைக்க கிடைக்க மாறிக் கொண்டேயிருக்கும்

டேக்கன் திரைப்படம் பெரியவர்களுக்கான Finding Nemo # எங்கயோ படிச்சது.

ஓவர் சைஸ் பெண்கள் டைட்ஸ் போடும் போது ஏனோ கறிக்கடை லெக் பீஸ் ஞாபகம் வருகிறது.# அவதானிப்பு

தமிழ்நாட்டில் மட்டுமே கேபிள் டிவி தொழில் அரசியலாக்கப்பட்டு ஆப்பரேட்டர்களின் வாழ்வில் விளையாடுகிறது. பாவம்.

நாங்க சின்னப் படங்களை நம்பித்தான் இருக்கிறோம். பின்ன நம்பித்தானே ஆகணும்..# தியேட்டர் அதிபர்கள்

நாங்களும் தனியா நிக்க போறோம் ப.ம.க# நிக்கிறேன்..நிக்கிறேன்..நான் நிக்கிறேன்.

மீனவர்கள் 3/4 பேண்ட் போடும் போது, கொஞ்சம் லைட்டாக கோவன் டைப் மீயூசிகில் பாட மாட்டார்களா என்ன? கொளுத்துவோம். #கடல்

காலையில் ஆபீஸ், காலேஜ் போகும் பெண்கள் வீட்டிலிருந்து கிளம்பி தெருமுனை திரும்பியது எடுப்பது மெபைல் போன். # வாங்கிங் அவதானிப்பு
@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சமீபத்தில் ஒர் இஸ்லாமிய அமைப்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை பற்றிய தவறான பிரச்சாரம் இருப்பதாகவும், அம்மாதிரியான கருத்துடன் படம் வெளிவந்தால், ப்ரச்சனை உண்டாகும் என்றும், உடனடியாய் தங்களுக்கு அப்படத்தைப் போட்டுக் காட்டிவிட்டுத்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர். எல்லா படத்தையும், எல்லா மத, ஜாதி சங்கங்களுக்கு போட்டுக் காட்டிவிட்டுத்தான் படம் வெளியிட வேண்டுமென்றால் சென்சார் போர்ட் என்கிற ஒன்று எதற்காக செயல் படுகிறது?.நிஜமாகவே படம் வெளியான பின்பு அம்மாதிரியான கருத்துக்கள் இருந்தால் சொல்லலாம். சும்மா ட்ரைலர் பார்த்துவிட்டு குரல் கொடுப்பது கொஞ்சம் ஓவர் என்றே தோன்றுகிறது. எனக்கென்னவோ ஓசில பிரிவியூ பாக்குறதுக்கு ஐடியா பண்ணுறாங்களோன்னு தோணுது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
டெல்லியில் நேற்றும் ஒரு கற்பழிப்பு கொலை நடைப் பெற்றிருக்கிறது. தமிழ் நாட்டில் 55 வயது பெண்ணை 60 வயது ஆண் கற்பழித்திருப்பதாய் செய்தி. இப்படி பேப்பரைத் திறந்தால் தினம் நாலு கற்பழிப்பாவது நடைபெற்ற செய்தி கொஞ்சம் கலக்கமாய்த்தான் இருக்கிறது. பெண்கள் கராத்தே, குங்குபூ, மிளகாய்பொடி, ஸ்ப்ரே ஆகியவைகளை வைத்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பழக வேண்டும் என்று அட்வைஸ் வேறு பல மூலைகளிலிருந்து வர, தானேயைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் இருவர், பெண்கள் தங்களை  பாதுகாத்துக் கொள்ள ஒரு ஈஸியான விஷயத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.எந்த அளவிற்கு இது உதவும் என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் பெண்களுக்கு ஒர் பாதுகாப்பை கொடுக்கும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது இக்கண்டுபிடிப்பு. 
@@@@@@@@@@@@@@@@@@
ப்ளாஷ்பேக்
இளையராஜாவின் 100 படம் என்று நினைக்கிறேன். இன்று வரை இந்தப் பாடல் தலைமுறைகள் தாண்டி புதிதாகவே இருக்கிறது. கிட்டாரின் ஊடே பயணிக்கும் பாடல். ஜேசுதாஸின் அற்புதமான குரலில் க்ளாஸிக்கல் வெஸ்டர்னில் ப்ளூஸ் போல அமைந்த பாடல்.  பாலுமகேந்திராவின் ஜிம்மிக் இல்லாத மாண்டேஜ் ஷாட்களும், ஷோபாவின் இன்னொசென்ஸான  நடிப்பும் இப்பாடலுக்கு  ப்ளஸ் பாயிண்ட்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அடல்ட் கார்னர்
Three guys were deciding where to go drinking tonight.
The first, an Italian, said, "Let's go the the Italian-American Club. I heard that if you buy one beer you get the second for free."
The second guy, a Frenchman, said, "That sounds good but I heard that if you go to the Franco-american club, when you buy one beer, you get TWO for free."
The third guy, a Polish guy, said, "Hold on... we have to go to the Polish-American club. I heard that they buy you drinks all night and at closing time they take you to the parking lot and you get LAID!!!
"Wow!" said the other two. "Where did you hear about that?"
The Polish guy stated, "I overheard my WIFE talking about it with my sister."

Post a Comment

12 comments:

குரங்குபெடல் said...

"கமல் உபயோகப்படுத்தியிருக்கும் டெக்னாலஜி பற்றி, ஒளி,ஒலி அமைப்பைப் பற்றியெல்லாம் பேசியிருக்கிறார்கள்."

பேசியதை விட கூடுதல் எபெக்டுடன்

போரூர் கோபால கிருஷ்ணாவில்

விஸ்வரூபம் . . .



காண தவறாதீர்

Cable சங்கர் said...

என்ன பண்றது குரங்கு பெடல்.. நல்லா காட்டலாம்னுதான் படம் எடுக்குறாங்க.. காட்டுறவங்க மேடை தரலைன்னா.. கிடைக்கிற இடத்துல காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயமா இல்லை இருக்கு.

saravanan selvam said...

உங்களது கொத்து பரோட்டா மிக்க ருசி.உங்களை பாராட்டுகிறேன் நீங்கள் விபதுற்ற்வருக்கு உதவியதுக்காக.

R. Jagannathan said...

கலைஞர் சொல்கிறார்: தே. தி. மு. க. வுக்குள் தி. மு.க. இருக்கிறது! இது நன்றாகவா இருக்கிறது? அ .தி.மு.க. வுக்குள்ளும் தான் தி.மு.க. இருக்கிறது, அப்படியானா; அவர்கள் சேர்வார்களா? அத்துடன், தி.மு.க.வுக்குள் தே.தி.மு.க. அடைக்கலம் ஆவது பெருமையா இல்லை தே.தி.மு.க.வுக்குள் தி.மு.க. அடைக்கலம் ஆவார்களா? (தி.மு.க. வுக்குள் மு. க. ஐக்கியம் ஆவது சரி, மு. க. வுக்குள் தி.மு.க. ஐக்கியம் என்பது கட்சிக்கு எப்படி பெருமையாகும்?

//அது மட்டுமில்லாமல் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு பெண்களும் காரணம் என்றிருக்கிறார். எனக்கென்னவோ இவர்கள் சொல்வது சரியெனவே தோன்றுகிறது.// சில சமயம் பெண்களும் காரணம் என்பதுதான் சரி. அதனால் தான் சிலர் பெண்களை சரியாக உடை உடுத்தும்படி சொல்கிறார்கள். ஆனால் இதற்கு பலத்த எதிர்ப்பு! ஆணின் animal instinct ஐ ஏன் தூண்ட வேண்டும்?


விச்வரூபம்: // பார்க்க, பார்க்க படம் பார்க்கும் நாளுக்கான ஆவல் அதிகமாகிக் கொண்டேயிருக்கிறது.// இந்த எதிர் பார்ப்புதான் கொஞ்சம் பயப் பட வைக்கிறது!


-ஜெ .

Vadivelan said...

ஏன் இதனால் நேரடியாய் லாபமடையப் போகும் த்யாரிப்பாளர்களில் பல எங்கே தீவிரமாய் ஆதரித்தால் அடுத்து தாங்கள் வெளியிடப் போகும் படத்துக்கு ஏதாவது ப்ரச்சனை வருமோ என்று பயந்து அமைதி காக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

All (super heros, directors, producers) are waiting for result of Vish.. in DTH.. If it success, everyone will start to praise Kamal.

But if goes worst in DTH, even small heroes will give funny comment on kamal..

Lets hope for good result for all.

rajamelaiyur said...

//சமீபத்தில் ஒர் இஸ்லாமிய அமைப்பு விஸ்வரூபம் படத்தில் முஸ்லிம்களை பற்றிய தவறான பிரச்சாரம் இருப்பதாகவும், அம்மாதிரியான கருத்துடன் படம் வெளிவந்தால், ப்ரச்சனை உண்டாகும் என்றும், உடனடியாய் தங்களுக்கு அப்படத்தைப் போட்டுக் காட்டிவிட்டுத்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விட்டுள்ளனர்
//

போற போக்குல மாணவர்களை பற்றி படம் எடுத்தால் தமிழ் நாட்டில் உள்ள எல்லா மாணவர்களும் பார்த்த பின்தான் திரையிடனும்ன்னு சொல்வாங்க போல

rajamelaiyur said...

இன்று

"பாதுகாக்க வேண்டிய பதிவு இது ( ஜோக் அல்ல )":

raja said...

பம்பாய் படத்தை பால் தாக்கரே கூட பிரீவ்யூ தான் பார்த்து இருப்பாரோ ??? டவுட் :):)

நம்பள்கி said...

அப்படியே, பாண்டி பசங்களுக்கு இரும்பு ஜட்டி ;வாத்தியாருக்கும் தான்...!

Selvaraj said...

very good interview of Kamal. May iknow the list of theartes in chennai are having auro 3d sound?

R.Gopi said...

//Selvaraj said...
very good interview of Kamal. May iknow the list of theartes in chennai are having auro 3d sound?//

Only one Theatre in Chennai has that facility, that is Serene in Sathyam theatre Complex

Unknown said...

Thala,

Please watch my new comedy short film "Sombu".

http://www.youtube.com/watch?v=Bakw_AjhR8Y&feature=youtu.be