கேபிளின் கதை பற்றி ஒர் சிறு உரையாடல்
அது ஒரு முன்பனிக் காலம். சேலத்தின் என் பெற்றோர் வீட்டில் இருந்தேன், சேலம் ஏற்காடு அடிவாரம் அருகில் அமைந்த ஊர் அது. உடல்நிலை சரியில்லாத என் அப்பாவிற்கு பால் வாங்க பூத்திற்கு போன என் அண்ணன் அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்து காபி போட பால் தந்துவிட்டு, பதறியபடி சொன்ன நியூஸ் “பிரபல ரவுடி” ஆட்டோ சங்கர் தூக்கிலடப்பட்டு விட்டான் அவன் உடல் சென்றா வேனை நான் மிக அருகில் செர்ரி ரோடு அருகில் பார்த்தேன் என்றான். அவன் சுஜாதா வாசகர் அன்று “ஆட்டோ சங்கர்” என்ற அந்த “சரித்திர புகழ்’ பெற்ற பெயர் தந்த திடீர் அதிர்ச்சி, பயம், சஸ்பென்ஸ், திரில் இதையெல்லாம் ரொம்ப வருடங்களுக்கு பிறகு ‘கேபிள் சங்கர்” என்கிற மாஜிக் பெயர் எனக்கு தந்து கொண்டே இருந்தது, இருக்கிறது.
மேலே கண்ட வரிகளுக்கு இடையில், படித்து தப்பர்த்தம் செய்து கொள்வதற்கு அல்ல, இதை நான் சொன்னது. ஆச்சர்யங்களை தினம் அள்ளித் தருகிற சங்கர் நாராயணனின் வண்ணத்தில் பல்வேறு புத்தகங்கள் வெளிவந்து வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன. நானும் தொடர்ந்து சில வருடமாக வரை படித்து வருகிறவள். அவர் தொழிலை நேசிப்பவர், மிக மிக அதிகமாக என்பதை அவரது முந்தைய புத்தகமான “சினிமா வியாபாரம்” வெற்றி மூலம் நிருபணமாகி உள்ளது. இப்போது “கேபிள் சங்கர்”ன் நெக்ஸ்ட் இன்னிங்க்ஸ் தனது கேபிள் சாம்ராஜ்யத்தைப் பற்றி நல்ல தமிழ் நடையில், எளிமையான சொற்களுடன், மக்களுக்கு வெகு அருகாமையில் ஒர் பொழுது போக்கு தொழிலை நடத்தி வெற்ரி பெற்ற தனது அனுபவங்களோடு, ஊர், உலகத்தில் இருக்கிற கேபிள்காரர்களின் கஷ்ட நஷ்டங்களை சுக துக்கங்களைப் பற்றி எழுதியுள்ள நூல் “கேபிளின் கதை”. தமிழில் இது புது முயற்சி, ஆவணப்படம், எடுக்கும் பல பேரை நான் பார்த்திருக்கிறேன். இவர் ஆவணப் எழுத்துப்படம் பண்ணி உள்ளார். புது வகையான முயற்சி இது. தன் வரலாறு கூறல் மட்டுமல்ல விஞ்ஞான வளர்ச்சி அவர் வாழ்வில் தனது பங்கையும் செலுத்தியுள்ள அனுபவசாலி சங்கர் என்பது நூலின் பயணத்தில் தெரிகிறாது. மேலுல்ம் பல உண்மை செய்திகள் நம்மை ஆச்சர்யப்பட வைக்கும்.
மேலே சொன்ன இத வரிகளின் மூல இது போர் அடிக்கிறா புத்தகம் என்று நினைத்து விட வேண்டாம் நண்பர்களே. சூர்யா என்கிறா கேபிள் ஆப்பரேட்டர் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு வலைப் பின்னலை பின்ன அரம்பிக்கிறார் கேபிள் வயர் எவ்வாறு நம்மை ஸ்பைடர் மேன் போல ஆக்கிரமிப்பு செய்கிறது என்கிறா வரலாற்று உண்மையை புத்தகம் நிருபிக்கிறது.
நிதம் நிதம் வளரும் செந்தமிழில் புதிய கலைச் சொற்கள் இந்த புத்தகத்தின் மூலம் புது வரவு. உதாரணம் கேபிள் புரியும். டெட்டாப்பாக்ஸ், பெய்ட் சேனல், பூஸ்டர், கண்ட்ரோல் ரூம், பெரிய ஆப்பரேட்டர், லோக்கல் பாலிமர் சேனல், மடுலேட்டர், ஆகியவை புரியுமா? இப்படி பல கலைச் சொற்கள். ஹாத்வே, மற்றும் நவீன டிடிஎச் - விஸ்வரூபம் வரை எக்ஸலெண்ட் சங்கர்.
நாம் வீட்டில் உட்கார்ந்து மதக் கலவரத்தை தூண்டாமல் மொத்தமாக ஆமைதிப் படுத்தி வைக்கிற சீரியல்களின் கதையை விட திகில் திருப்பங்கள் நிறைந்தது இப்புத்தகம், பண்பாடான தமிழ் நாட்டின் அரசியல் கட்சிகலின் பிடியில் சிக்கி இருக்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும், கேபிள் டிவிகாரர்கள் சிக்கி இருக்கும் வெளிநாட்டுச் சேனல் பூதங்களான டிஸ்கவரி, ஸ்டார் என்பவை பற்றி சாதாரண நடையில் இலகுவாக புரியும் படியான நடையில் உள்ளது புத்தகம். தன் மக்களோடு மக்களாய் இயக்கியிருக்கிறவர் என்ற ஒன்று சங்கர் நாராயணனின் பலம்.
அப்புறம் காடாறு மாதம் சென்னை ஆறு மாதம் என்பது போல எனக்கு இரண்டு வருடமாக எனக்கு ரெண்டு வருடமாய் ஆமைந்திருக்கிறது கேலண்டர். நான் எப்போதும் தயங்காமல் அலைபேசியில் தொட்ர்பு கொள்ளுகிற முக்கியமான நண்பராய் கேபிள் சங்கரின் முதல் சிறுகதை தொகுப்பு வாசகியாக ஆனதிலிருந்து, இதோ இன்று வரை மாறாத மனசுக்கு சொந்தக்காரர். ஒர் புனைவு, மொழிபெயர்ப்பு, கவைதை, இப்படியெல்லாம் வகை தொகையில் சேர்க்க முடியாத இப்புத்தகத்தை படித்தேன் என்பது நிஜம். நண்பரே தொடர்ந்து எழுதுங்கள், உங்கள் படம், இயக்கம் முடிவடையும் போது சொல்லுங்கள். இந்த புத்தாண்டு பல நன்மைகளை நம் எல்லோருக்கும் வாரி வழங்கட்டும்
பி.குறிப்பு : நம் கமல் மற்றும் டி.டிஎச் பற்றி விரிவாக கூறிய ஒரே நாவல் என்று கூட விளம்பரப்படுத்தலாம்.
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
பி.குறிப்பு : நம் கமல் மற்றும் டி.டிஎச் பற்றி விரிவாக கூறிய ஒரே நாவல் என்று கூட விளம்பரப்படுத்தலாம்.
கீதாஞ்சலி பிரியதர்ஷனி
Comments
\