Thottal Thodarum

Jan 16, 2013

புத்தக கண்காட்சி நாள்-3

ஞாயிற்றுக்கிழமை கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் வேறு ரிலீஸாகியிருந்ததால் ஒரு பக்கம் திரைப்பட ஆசையும், இன்னொரு பக்கம் இலக்கியவாதி (???) ஆசையுமாய் அலைபாய்ந்தாலும், திரைப்பட ஆசையே வெற்றி பெற்றது. காலைக் காட்சி படம் பார்த்துவிட்டு, கே.ஆர்.பிக்கு போன் செய்தால் மனிதர் மதியத்திலிருந்தே கண்காட்சியில் இருப்பதாய் சொன்னார். இன்று பைக் பாஸ் வாங்கி வைத்திருந்ததால் நேரடியாய் கண்காட்சிக்கு அருகிலேயே வண்டியை பார்க் செய்துவிட்டு சென்றேன். போகிற வழியில் நாஞ்சில் நாடனுடன், பரமேஸ்வரி, அகநாழிகை வாசு, போகன் ஆகியோர் பேசிக் கொண்டிருக்க, ஒரு வணக்கத்தைப் போட்டேன். வாசு என்னை பரமேஸ்வரியிடம் அறிமுகப்படுத்த, என்னைத் தெரியும் என்றார். புத்தகங்களின் விலையைப் பற்றி நாஞ்சில் நாடனும், வாசுவும் பேசிக் கொண்டிருந்தார்கள். வழக்கமாய் கூடும் டிஸ்கவரியில் போய் நின்றேன். நம் மக்கள் நிறைய பேர் இருந்தார்கள். மணிஜி மிகவும் டயர்டாக இருந்தார். போய் கொஞ்ச நேரத்தில் எல்லாம் டீ சாப்பிட கிளம்பினோம். கேண்டீன் வரை சென்ற போது சினிமா எக்ஸ்பிரஸில் இருந்த கிராபியன் ப்ளாக் வணக்கம் சொன்னார். அவருடன் சன் டீவி வெற்றிவேந்தன் இருந்தார். எல்லோரும் அளவளாவியபடி சாப்பிட வாங்க உணவகத்தில் டீ சாப்பிட்டோம். 


உணவகம் வழக்கம் போல புத்தக கண்காட்சி ஸ்டால்களை விட பிஸியாய் இருந்தது. ஒரே கடையில் மூன்று பேர் ஸ்வீட் கார்ன் விற்று கொண்டிருந்தார்கள். தக்குணூண்டு கப் முப்பது ரூபாயாம். அநியாயம். ஸ்வீட் கார்ன் சார்.. ஸ்வீட் கார்ன் சார்.. என்று தட்டின் மேல் தட்டித் தட்டி கூப்பிட்டது பிரியாணி கடைகளை ஞாபகப்படுத்தியது. சாப்பிட வாங்கவில் கலயாண பஃபே போல வரிசையாய் அயிட்டங்களை வைத்திருந்தார்கள். பாஸ்கர் சக்தியின் புதிய புத்தகம் வேறு வெளியாகியிருந்தது. தேனி ஈஸ்வரின் புகைப்படங்களைக் கொண்டு  லேஅவுட் செய்யப்பட்ட அட்டைப்படம் நன்றாக இருந்தது. புத்தகமும் நன்றாகவே இருக்கும் என்பதால் ஒரு காப்பி புக் செய்தாகிவிட்டது. சாரு புத்தக கண்காட்சிக்கு வந்திருந்ததாய் சொன்னார்கள். பார்க்கவில்லை. காட்சிப்பிழை திரைக்காக எழுதச் சொல்லி கேட்டிருந்தார்கள். இன்று அதன் ஆசிரியர் தளவாய் சுந்தரம் அவர்களை சந்தித்தேன். விரைவில் ஒர் தொடர் எழுதினாலும் எழுதுவேன். ஜாக்கிரதை.

கல்பாக்கத்திலிருந்து வாசகர் ஒருவர் மொத்தமாய் என் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்து சந்தித்தார். அவரின் குடும்பமே என்னை விரும்பி வாசிப்பார்கள் என்று சொன்னார். மிகவும் சந்தோஷமாய் இருந்தது. நண்பர்/வாசகர் தாமுவுடன் அவரின் நண்பர் கிருஷ்ணகுமாரும் வந்திருந்தார். அநியாயமான சினிமா ரசிகர். அதுவும் அவரிடம் உள்ள கலெக்‌ஷன்களைப் பற்றி கேட்டால் ஆச்சர்யப்பட்டுவிடுவீர்கள். 1930களில் வெளியான ஹாலிவுட் படங்கள் கூட அவரிடம் இருக்கிறது. முதல் பாதையின் ஓரத்தில் மூவரும் சினிமா பற்றி ஒர் அரை மணி நேரம் பேசினோம். படு சுவாரஸ்யமாய் இருந்தது. நன்றி கிருஷ்ணகுமார்/தாமு. வேறொரு வாசக நண்பர் “உங்க புக்கை வாங்கி என் நண்பரிடம் கொடுத்துவிட்டேன். அவர் வேறொரு பாதையில் இருக்கிறார். கொஞ்சம் இருங்க ஒரு போட்டோவும், கையெழுத்து வாங்கணும் என்று சொல்லிவிட்டு திரும்ப வந்து மேற்ச் சொன்ன விஷயங்களை வாங்கி/எடுத்துக் கொண்டு போனார்.  வழக்கம் போல் கடையடைக்க சொன்ன பிறகு கிளம்பினோம். நேற்றைய கால்வலி இன்று இல்லை. நந்தகுமாரின் மைனஸ் 1ஐ, ஆசிரியரே புத்தக வெளியீட்டன்று கொடுத்தார். படிகக் வேண்டும். கோபி கிருஷ்ணனின் முழு தொகுப்பை நற்றிணை வெளியிட்டிருக்கிறார்கள். அருமையாய் வந்திருக்கிறது. நிச்சயம் வாங்க வேண்டிய தொகுப்பு.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

கார்த்திக் சரவணன் said...

இன்னைக்கு போகணும்...

துளசி கோபால் said...

தினம் தினம் எழுதுங்க. படிச்சுத் தெரிஞ்சுக்குவேன்!!!

இளம் பரிதி said...

பாஸ்கர் சக்தி புத்தகம் எந்த பதிப்பகம், என்று சொல்லுங்கள் ...அவர் எழுத்துக்கு தீவிர ரசிகன் நான் ...

vasan said...

I will see U today

Ponchandar said...

என்னமோ தெரியலை உங்க ”டைரி”-யை படிக்கிற மாதிரி இருந்துச்சு இந்த புத்தக கண்காட்சி நாள்-3