வெகு நாட்கள் கழித்து நண்பர் அண்ணன் பிரபாகரரிடமிருந்து போன். இன்னைக்கு மாலை என்ன வேலைன்ணே.. என்றார். அன்றைக்கு ஏதும் பெரிதாய் வேலையில்லை என்பதால் “ப்ரீதான்’ என்றேன். அப்ப நைட் டின்னருக்கு வந்திருங்க என்று மஸ்த் கலந்தர் அட்ரசை சொன்னார். அசோக்நகரிலிருந்து கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலையை நோக்கிப் போகும் ரோட்டில் அசோக்நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிரில் மாடியில் அமைந்துள்ளது இந்த உணவகம்.
முழுக்க முழுக்க வட இந்திய உணவு வகைகளே இங்கு கிடைக்கிறது. நல்ல இண்டீரியருடன், அமைந்திருந்தது உணவகம். மெனுவும் கொஞ்சம் வித்யாசமாகவே இருந்தது. பெரும்பாலும் காம்போவாகத்தான் அமைந்த்திருந்தார்கள். சில காம்போக்களில் எனக்கு அவ்வளவாக பிடிக்காத டால் மட்டுமே இருக்க, நான் கேட்டுக் கொண்டதற்கு இணங்க வேறு மசாலா கொடுத்தார்கள். நான் HP3 எனும் காம்போவை ஆர்டர் செய்தேன். 129 ரூபாய்க்கு, ஒரு தால்தட்கா, பன்னீர் கறி, 3 புல்கா, புலவ், கொஞ்சம் காய்கறி சாலட், குலாப்ஜாமூன், சாஸ், மற்றும் ரைத்தா ஆகியவை தான் இந்த காம்போவில்.
நான் மட்டும் தால் தட்காவுக்கு பதிலாய் வேறு கிரேவி கேட்டிருந்தேன், அவர்கள் மீண்டும் ஒர் பன்னீர் கறியையே தந்தார்கள். புல்கா மிக சாப்டாக இருந்தது. ஆனால் என்ன ஒரு வாயில் சுவாஹா ஆகிவிடக்கூடிய சைஸாக இருப்பதால் பசி இன்னும் அதிகரிக்க, அடுத்து புலாவில் விழ்ந்தேன். மொத்தமே எட்டு டேபிள் ஸ்பூன் தான் இருக்கும். இதற்கு கறி, ரைத்தா என்று அயிட்டங்கள் வேறு. பன்னீர் கறியில் நல்ல பேஸ்ட் மிக்ஸ். அளவான காரமும், திரித்திரியாய் வராத பன்னீரை நிறைய கட் செய்து போட்டிருந்தார்கள். சுவையும் நன்றாகவே இருந்தது. நல்ல பிரியாணி அரிசியில் நன்றாக சமைக்கப்பட்டிருந்தது. பிரியாணி அரிசிக்கே உண்டான ஒரு தனி சுவை அதை சரியான முறையில் சமைத்தால் நம் நாக்கின் டேஸ்ட் பட்களை தூண்டிவிட்டு விடும். அப்படி தூண்டி அஹா என்று இன்னொரு ஸ்பூன் இருக்குமா என்று பார்த்தால் டப்பா காலி. சாப்பிட்டு முடித்தவுடன் மீண்டும் பசித்ததுதான் மிச்சம். நம்மை மாதிரி ஓரளவுக்கு சாப்பிடுகிறவர்களுக்கு இந்த காம்போ கூட சரிப்பட்டு வராது என்றே தோன்றுகிறது. பின்பொரு முறை அதே உணவகத்தில் நானும் என் மனைவியும் சாப்பிட்டோம். இம்முறை நான் முன்பு சாப்பிட்ட காம்போவோடு, சட்பட்டா பன்னீர் கபாப் சாப்பிட்டேன். நன்றாக இருந்தது. ப்ரச்சனை இதிலும் அளவுதான்.
இங்கு சர்வ் செய்வதற்கு ஒர் வித்யாசமான முறையை பின்பற்றுகிறார்கள். சிங்கப்பூரில் உள்ள ஆனந்தா பவன் போல காம்போ செலக்ட் செய்துவிட்டு பணம் செலுத்தினால் நம்பர் போட்ட ஸ்டாண்ட் ஒன்றை தருகிறார்கள். நாம் அதை டேபிளின் மேல் வைத்துக் கொண்டு காத்திருந்தால் நாம் ஆர்டர் செய்த அயிட்டம் வருகிறது. சாப்பாட்டின் அளவுகளிலும், இன்னும் கொஞ்சம் லா- கார்டே அயிட்டங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இவ்வுணவகத்திற்கு நல்ல எதிர்காலம் சென்னையில் இருக்கிறது. கூட்டிப் போன நண்பர் பிரபாகருக்கு நன்றி.
கேபிள் சங்கர்
Comments
ஏன் இப்டி . . .
மக்கள் டிவில உங்களை பாத்தேன் . .
ஊர் அளவுக்கு சாப்பிடற மாதிரி இருக்கிங்களே . . .
விஷ்வரூபம் பல்ப பத்தி எழுதுவீங்கன்னு பாத்தா சாப்பாடு கடைய போட்ருக்கீங்க?
இன்னும் கொஞ்சம் லா- கார்டே அயிட்டங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் இவ்வுணவகத்திற்கு நல்ல எதிர்காலம் சென்னையில் இருக்கிறது.
//
உங்கள் வாய் முகூர்த்தம் கண்டிப்பாக பலிக்கும் ..
இன்று
FACEBOOK இல் உள்ள உங்கள் படங்கள் அனைத்தையும் எளிதில் download செய்ய வேண்டுமா ?