Thottal Thodarum

Feb 20, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -5

kissingஷ்ரத்தாவின் நம்பரைபார்த்ததும் தூக்கமெல்லாம் பறந்து போய் துள்ளி எழுந்து  போனை எடுத்தேன். எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் “சொல்லு ஷ்ரத்தா” என்றேன்.“நீ.. என்னை லவ் பண்றியா..?”

அவளிடமிருந்து நான் இந்த கேள்வியை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வது என்று யோசிப்பதற்குள் “ஆமாம்” என்று சொல்லிவிட்டேன். அவ்வளவு அவசரம். எதிர்முனையில் ஏதும் சத்தமில்லாமல் இருக்க, நான் “ஹலோ..ஹலோ.?” என்று கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். லைன் கட் ஆகாமல் இருந்தாலும் பதிலில்லை. நான் மறுபடி,மறுபடி கூப்பிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென கொஞ்சம் உடைந்த கரகரத்த குரலில் “நாளை நுங்கம்பாக்கம் காபிடேவுக்கு வந்திரு சயங்காலம்” என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தாள்.

எனக்கு டென்ஷன் தாங்கவில்லை. ஒரு கணம் என் இதயம் வாய் வரை வந்து போனது போல இருந்தது. நாளைக்கு சாயங்காலமா..? அதற்கு இன்னும் எத்தனை மணி நேரம் இருக்கிறது. அது வரை நான் என்ன செய்ய? அதன் பிறகு நான் தூங்கவே இல்லை. விடிய விடிய முழித்துக் கொண்டேயிருந்தேன்.

காலையில் ஆபீஸுக்கு போய் எந்த வேலையும் செய்ய பிடிக்கவில்லை. மனம் முழுக்க ஷ்ரத்தா… ஷ்ரத்தா… என்று அவளின் முகமே ஓடிக் கொண்டிருந்தது. அவளின் கர்ல் முடியும், காதில் ஆடும் பெரிய தொங்கட்டானும் திரும்ப திருமப் நிழலாடியது. சாப்பிட ப்டிக்கவில்லை, யாருடனும் பேச பிடிக்கவில்லை. சாயங்காலம் போக வேண்டிய காபிடேக்கு மதியமே போய் உட்கார்ந்து கொண்டேன்.

தனியே யாருமே இல்லாத ஒரு இடமாய் இருந்தது. எல்லோரும் குழுவாகவோ, அல்லது ஜோடியாகவோத்தான் இருந்தார்கள். ஆண்கள் சத்தமாய் பேசிக் கொண்டும், அவ்வப்போது  “Fuck Man”  என்று மிக இயல்பாய் சொல்லிக் கொண்டிருக்க, பெண்கள் அதற்கு உற்சாகமாய் பெரிதாய் சிரித்தார்கள், மிக நாசுக்காய் சாப்பிட்டார்கள், அவர்களில் சில பேர் வெளியே சென்று புகைத்தார்கள். சுலபமாய் கட்டிக் கொண்டார்கள். பையன்கள் பெண்களை  தொடுவதில் லஜ்ஜை இல்லாமல் இருந்தது. இதையெல்லாம் பார்க்க, பார்க்க நான் வேறு உலகத்தில் இருக்கிறோமா. என்று தோன்றியது. நான் முதல் முறையாய் இங்கு வந்திருக்கிறேன். ஒரு காப்பிக்கு 50ரூபாய் கொடுப்பதற்கான வசதியில்லாததால்.  பர்சை எடுத்து பார்த்தேன்.300 ரூபாய் இருந்தது.

செல்லில் மெசேஜ் வந்தது. ஷ்ரத்தாதான். “Are u in cd?” என்றது. நான் ‘யெஸ்ஸினேன்”. நிமிடங்களில் டைட் ஜீன்ஸில், லூஸான டாப்ஸில் அடங்கவே அடங்காத.. நிச்சயமாய் நீங்கள் நினைப்பதில்லை அவளுடய சுருள் முடியை அடக்கி க்ளிப் போட்டு, சின்னதாய் ஒரு ரிங் போட்டிருந்தாள். அவள் என்னைப் பார்த்து மந்தகாசமாய் சிரித்து “ஹாய்” என்றபடி என்னெதிரில் உட்காரும் போது என்னை சுற்றி அவளின் மிண்ட் மணம் பரவியது.

ரொம்ப சீரியஸாய் மெனுவை பார்த்தபடியிருந்தாள். கார்டை பார்கிறார் போல், மேலான பார்வையில் என்னையும் கவனிப்பது எனக்கு தெரிந்த்து. என்ன பேசுவது என்று தெரியாமல், அவஸ்த்தை படுவது என் வாழ்வில் இதுதான் முதல் முறை. கனைத்துக் கொண்டு “ என்ன சாப்பிடலாம்?” என்றேன். அவள் மெனுவை பார்த்துக் கொண்டே “கேப்ப்சினோ.. “ என்றாள்.

“உனக்கு அதையே சொல்.. நன்றாக இருக்கும்” என்று என் பதிலை எதிர்பாராமல் ஆர்டர் செய்தாள். அது அவளின் டாமினென்ஸை காட்டுகிறது என்றாலும் என்னால் மறுக்க தோன்றவில்லை. எடுத்தவுடனேயே உரிமை கொண்டாடும் அந்த அரகன்ஸ் எனக்கு பிடிக்கத்தான் செய்தது. கேப்பசினோ வந்ததும் ஏதும் பேசாமல் உறிஞ்சினாள். கேப்பசினோ சாப்பிடிருக்கிறீர்களா..? காபின் மேலண்ணத்தில் டிகாக்‌ஷனையும் பாலையும் கலந்தார் போல ஒரு ஆட்டின் டிசைனை உருவாக்கியிருப்பார்கள். என்னால்  மேலே இருந்த ஆட்டின் சின்னத்தை கலைக்க விரும்பாமல் நான் பார்த்துக் கொண்டிருக்க, “என்ன.. லவ்வா..?” என்றாள்.

நான் திடுக்கிட்டு நிமிர்ந்து பதிலேதும் சொல்லாமல் அவளை பார்த்தேன். “காதல் வயப்பட்டவன் தான் இம்மாதிரியான சில்லியான விஷயத்துக்கெல்லாம் எமோஷனலாகியிருப்பான். நீ என்னை காதலிக்கிறாயா.?  அதான் ஆமாம் என்று போனில் சொன்னாயே. என்னை பார்க்கும் உன் கண்களின் பளபளப்பை பார்த்தாலே தெரிகிறது. அதெப்படி பார்த்த ஒரு நாளில் காதல் வயப்படுகிறாய்? அதிலும் உனக்கும் எனக்கும் முதல் சந்திப்பே சண்டையில். அப்படியிருக்க தமிழ் சினிமாவில் மட்டுமே சாத்தியமான லாஜிக்கின் படி பார்த்தால் நாம் காதலிப்பதுதான் சரி.  ஆனால் என்னை பொருத்தவரை இந்திய ஆணக்ளுக்கு பெண்ணின் அருகாமைக்காகவும், என்னை போன்ற சுமாரான பெண்களின் நெருக்கதில் கொஞ்சம் எல்லை மீறினால் கிடைக்கும் செக்ஸுக்காகவும் தான் காதல் வயப்படுகிறார்கள். ஒரு முறை படுத்தெழுந்தால் காதலுக்கான விடை என்ன என்று தெரிந்துவிடுமென தோன்றுகிறது. எனக்கு உன்னை பிடிக்கிறது. ஆனால் காதல் எல்லாம் தோன்றவில்லை. நீ என்னை காதலிக்கிறாய் என்பதற்காக உன்னை விட்டு விலக எனக்கு இஷ்டமில்லை. என்றாவது ஒரு நாள்  உன் மீது காதல் வந்தால் அன்றிலிருந்து நாம் காதலர்களாய் சுற்றலாம். அது வரை ப்ரெண்ட்ஸ். ஓகே” என்றாள்.

நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். என்ன பேச்சு பேசுகிறாள்? ஒரு முறை படுத்தெழுந்துவிட்டால் காதல் போய் விடுமா? ”இதோ பார் ஷ்ரத்தா… நீ அமெரிக்காவில் வளர்ந்தவள், அங்கு வேண்டுமானல் படுதெழுந்தவுடன் காதல் போய்விடலாம். ஆனால் நாங்கள் அப்படியல்ல. ஒருத்திக்காக தவம் கிடப்பவர்கள், அவளுக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராகயிருப்பவர்கள். அதெல்லாம் உனக்கு இப்போது புரியாது. அது ஒரு பீலீங். உள்ளுக்குள்ளே ஆயிரம் ஜெனரேட்டர் போட்டால் கிடைக்கக்கூடிய சக்தியை காதல் ஏற்படுத்தும் தெரியுமா..? ஓகே நான் உன்னை காதலிப்பது உண்மை. எனக்கு அந்த ஒரு நாள் போதும் உனக்கும் எனக்குமான உறவை ப்ரோபோஸ் செய்ய. அதுவரை நீ என்னை காதலிக்கிறாயோ இல்லையோ? நான் உன்னை காதலிக்கிறேன். உனக்குள் காதல் வரும் வரை ப்ரெண்ட்ஸாகவே இருந்து கொள். ஆனால் நான் உன்னை காதலிக்கத்தான் செய்வேன்.” என்றேன்.

ஷ்ரத்தா என்னை நேராக பார்த்தாள். “குட். இது நல்ல டீல். நிச்சயம் எனக்குள் ஒரு சின்ன சலனம் உன்னால் வந்தால் கூட என் காதலை சொல்லிவிடுகிறேன். அது வரை என்னை பொருத்தவரை  ப்ரெண்ட்ஸ் என்று கிளம்பி, “என்னை அண்ணாநகரில் ட்ராப் செய்கிறாயா..?” என்றாள்.

நான் வண்டியை ஸ்டார்ட் செய்த்தும் பின்னால் ஏறி உட்கார்ந்தவள், மிக இயல்பாய் என் தோள்களைபிடித்துக் கொண்டாள். வழி நெடுக ப்ரேக் போடும் போது அவள் என் மேல் இடித்துவிடாதபடி ஜாக்கிரதையாய் நடந்து கொண்டேன்.  அம்மா சிறுவயதிலேயே இறந்துவிட்டதாகவும், தான் வீட்டிற்கு ஒரே பெண் என்றும்,  அப்பாவையும், அண்ணனை தவிர வேறு யாருமில்லை என்றும், இருவரும் அமெரிக்காவில் இருப்பதாகவும் சொந்தமாய் பார்மா கம்பெனி வைத்திருப்பதாகவும், இங்கே அண்ணா நகரில் தான் தனியாக ப்ளாட்டில் இருப்பதாகவும், நடிப்பில் கமல் சூர்யா, இயக்கத்தில் மணிரத்னம், ஆகியோரை பிடிக்கும் என்று மேலும் பல பிடிக்கும்களை சொல்லியபடி வந்தாள். ஒவ்வொரு முறை அவள் பேச்சில் உற்சாகமடையும் போது, மெல்ல  என் காதருகில் வந்து  பேசினாள். அப்போது முதுகில் அவள் அழுத்தத்தை உணர்ந்தேன். அவளின் சுருள் சுருளான முடி என் கன்னத்தில் உரசியது எனக்குள் பல வைப்ரேஷன்களை ஏற்படுத்தியது. இவ்வளவு நேரம் தொடர்ச்சியாய் நான் பேசாமல், கேட்டபடி இருந்ததேயில்லை.


அண்ணாநகர் ரவுண்டானா வந்ததும் வண்டியை சரவணாபவன் பக்கம் நிறுத்தச்சொல்லி, அருகிலிருந்த ஒரு ப்ளாட்டை காட்டி அதில்தான் தான் இருப்பதாகவும், F4 என்றும் சொன்னாள். “ஓகே நாளை பார்க்கலாம்..பை..” என்றபடி  இறங்கியவள், சட்டென்று தோள் மீது கை போட்டு மெல்ல தன் பால் இழுத்து என் கன்னத்தில் அழுத்தமாய் “பச்சக்” என முத்தமிட்டு தன் ப்ளாட்டை நோக்கி ஓடி நின்று, “பை. ‘ என்றாள் ராட்சசி ஷ்ரத்தா.

(தொடரும்..)
கேபிள் சங்கர்

Post a Comment

3 comments:

Unknown said...

neenga en intha kadhaiya padama eduka koodathu?

'பரிவை' சே.குமார் said...

ம்....
பச்சக்... அதுதானே நடக்கும்...
நல்லாயிருக்கு அண்ணா...

Unknown said...

Hello Mr. Shankar,

I have read most of your posts since 2009 and I like most of them. I read your 'themakol devathaigal' book. It was very good. didn't get a chance to watch your movie yet. but read good reviews about it. Congratz to you. Meendum our khadal kathai is very lively and pleasant to read. I like it a lot. keep writing.

Regards,
JR