Thottal Thodarum

Feb 24, 2015

மீண்டும் ஒரு காதல் கதை - 7

Gintama___Wash_it_Away_by_nuriko_kunகாலையிலிருந்தே நசநசப்பாய் தூறிக் கொண்டுதானிருந்தது. மீராவுக்கு பிறந்தநாள் எனபதால் சத்யமில் படம், ரெயின் ட்ரீயில் டின்னர் என்று ஏற்பாடாகியிருந்ததால், எல்லாம் முடிந்து வீட்டிற்கு கிளம்ப லேட்டாகிவிட, நான் ஷ்ரத்தாவை அண்ணாநகரில் ட்ராப் செய்யும் போது நடு ராத்திரி ஆகியிருந்தது.  வரும் போது பெருமழையில் நினைந்து தொப்பலாகி போயிருக்க, முதல் முதலாய் அவள் வீட்டிற்குள் அழைத்தாள்.



டபுள் பெட்ரூம் ப்ளாட், மிக அழகாக  ஒரு மாளிகை போல இண்டீரியர் செய்யப்பட்டிருந்தது. சடுதியில் சாகசமாய் ஒரு லூஸான டிசர்டும், நைட் பைஜாமாவில் ரிப்ரெஷ் ஆகியிருந்தாள் ஷ்ரத்தா. கையில் ஒரு துண்டை கொடுத்து துடைத்துக் கொள் என்பதைப் போல நீட்டினாள். தலையில் ஆங்காங்கே துடைக்காமல் இருந்த தண்ணீர் துளிகள் அவளின் தலை மேலிருந்த விளக்கின் ஒளியில் மின்னியது.  உள்ளே சென்று ஒரு ஜீன்ஸை எடுத்து வந்து இதை வேண்டுமானால் போட்டுக் கொள் என் அண்ணனுடயது. அவன் இங்கிருக்கும் போது என்கூடத்தான் தங்குவான். நான் ஏதும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். ம் …போ என்று அருகிலிருந்த ரூமுக்குள் தள்ளி விட்டாள். என்றுமில்லாத நாளாய் அவளுடன் பேச ஏதோ ஒன்று தடை செய்ய, உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு சூடாய் இன்ஸ்டெண்ட் காப்பி தயார் செய்து ரெடியாய் வைத்திருந்தாள். மழைக்கு நன்றாக இருந்தது. வெளியே மழை இன்னும் விட்டபாடில்லாமல் தூள் பரத்திக் கொண்டிருந்தது.

“சரி வீட்டிற்கு கிளம்பறேன்” என்றேன்

“இந்த மழையிலேயா..?”

“மழை அது பேஞ்சிகிட்டேதானிருக்கும் அதுக்காக..”

“வேணுமின்னா இன்னைக்கு தங்கிடறியா..?”

உள்ளுக்கு ஒரு சந்தோஷ பூ வெடித்தது. முகத்தில் காட்டிக் கொள்ளாமல்,

“உனக்கு எதுக்கு ஷ்ரத்தா.. கஷ்டம்..”

“இதில் எனக்கென்ன கஷ்டம்.. நீ ஹாலில் படுக்கப் போகிறாய். நான் உள்ளே.. வேண்டுமானால் டிவி போட்டுக் கொள்” என்று கிளம்ப எத்தனித்தவளை.

“கொஞ்ச நேரம் டிவி பார்த்திட்டுருக்கலாமே?” என்றதும் ஏதும் பேசாமல் டிவியை ஆன் செய்துவிட்டு பக்கத்தில் உட்கார்ந்தாள். கையிலிருந்த ரிமோட்டின் பட்டனை ஒரு நிமிடம் கூட பொறுமையாய் பார்க்காமல் மாற்றிக் கொண்டேயிருந்தாள்.” சே. போர்பா ஒரு ப்ரோக்ராம் கூட இல்லை?” என்றவளிடம் “சன் மியூசிக் போடு என்றவுடன், ஹெச்.பி.ஓவில் செட்டிலானாள் அவள் வழக்கப்படி.

அவளின் அருகாமை என்னை என்ன என்னவோ செய்தது. அவளுக்கும் அதே உணர்விருந்திருக்க வேண்டும் என  தோன்றியது. டிவி  ஓடிக் கொண்டிருந்ததே தவிர நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். ஷ்ரத்தா என் கையை பிடித்துக் கொண்டு, தோளோடு என் கையை எடுத்து அவளின் தோள் மீது போட, நெருக்கமானோம். அவளின் மூச்சுக் காற்றுடன் வழக்கமான மிண்ட் வாசணை என்னை கிறங்கடித்தது.

மெல்ல அவளின் நெருக்கம் என்னுள் உறைக்க, நான் முதலடி எடுப்பதற்கு முன்னமே ஷ்ரத்தா என்னை மேலும் நெருங்கி என் கீழுதட்டை மெல்ல கவ்வினாள். எனக்கு நரம்பெல்லாம் மெல்லியதாய் ஷாக் கொடுத்தது போலிருந்தது. நிறைய தடவை நானும் அவளும் முத்தமிட்டிருக்கிறோம். முத்தமிடுவது புதிதல்ல என்றாலும் இன்றைக்கு புதிதாய் இருந்தது. வெளியே பெய்யும் மழையும், ஷ்ரத்தவின் அருகாமையும், இருவரது உடல் சூடும், தனிமையும் சாதாரணமாகவே தைரியமான பெண்ணான ஷ்ரத்தாவுக்கு இன்னும் தைரியத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்,

அவளே முதல் அடியை எடுத்து வைத்ததும், என்னால் சும்மா இருக்க முடியாமல், இன்னும் நெருங்கி, அவளை அணைத்து, விரல்களால் அவளை பரவி, அழுத்தி, வாசம் பார்த்து, உதடு கடித்து, கழுத்து மடிப்புகளில் முகர்ந்து, காது நுனி கடித்து கிறங்கி போயிருந்தவளின் டி.சர்ட்டை கழட்ட முற்பட்ட போது, வெறி கொண்டவள் போல காலால் என்னை எத்தி விட நான் இரண்டடி தள்ளி போய் விழுந்தேன்.

திடீரென அவ்வாறு தள்ளிவிடப்பட்டது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

“ஏய்.. என்ன.. என்னாச்சு..?”

“வேணாம்.. நீ ..கிளம்பு”

“எங்க.. வெளியில மழை பெய்யுதுப்பா..”

“பரவாயில்லை நனைஞ்சுட்டு போ..”

”நனைஞ்சா ஜுரம் வரும்பா. கிட்ட வந்து தொட்டுப் பாரேன். இப்பவே எனக்கு ஜுரம் அடிக்குது”

”அது வேற ஜுரம். தொட்டா எனக்கும் தொத்திக்கும். நீ கிளம்பு ஷங்கர்”

எனக்கு கோபம், கோபமாய் வந்தது.. என்ன அராஜகம் இது, காப்பியிலிருந்து, டிவி சேனல் வரை அவளின் முடிவை ஏற்றுக் கொண்ட என்னால், இந்த விஷயத்தில் அதுவும் அவளாகவே ஆரம்பித்து வைத்துவிட்டு, நிறுத்த சொன்னால் என்ன அர்த்தம்? இதிலும் அவள் முடிவாக இருப்பது எனக்குள் உள்ள ஈகோவை ஏற்றியது.

இதற்குள் கலைந்திருந்த உடைகளையெல்லாம் சரி படுத்திக் கொண்டு ஏதும் நடக்காதது போல எழுந்து நின்று என்னை கிளம்பு என்கிறார் போல ஒரு பார்வை பார்த்தது இன்னும் கோபத்தை எழுப்பியது.

“எல்லாத்தையும் நீயே ஆரம்பிச்சிட்டு.. .. நான் வேணா அந்த ரூமுல படுத்துக்கவா..?”

ஷ்ரத்தா முறைத்தாள். “கிளம்பறியா..? ” என்றாள்

“இதெல்லாம் அராஜகம் தெரியுமா.. மேட்டர் வேண்டாம் சரி.. என்ன திடீர்னு பத்தினித்தனமெலலம் காட்டுறே. இந்த மழையில வெளிய போகச் சொல்லுற?” என்றது தான் தாமதம்.

“யூ.. இடியட்.. என்ன சொன்னாய்? என்ன சொன்னாய்.. பத்தினித்தனம் காட்டுகிறேன் என்றா..? அப்படியென்றால் உனக்கு என்னை பற்றிய எண்ணம் தான் என்ன? அமெரிக்காவில் வளர்ந்தவள், கூப்பிட்டாள் வந்து படுத்துவிடுவாள் என்றா? “

“ஹேய்.. என்ன ஷ்ரத்தா..? இவ்வளவு சீரியஸா எடுத்துக்கிற?”

“இதை சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் எப்படி எடுத்துக் கொள்வது? எனக்கென செல்ப் ரெஸ்பெக்ட் இல்லை? உன்னை காதலித்தேன். அதனால் உன்னுடன் நெருக்கமாய் இருந்தேன், முத்தமிட்டேன். யெஸ்.. இந்த மழையும், உன் அருகாமையின் சூடும் என்னை கிளப்பி விட்டு உன்னை முத்தமிட்டது காதலால் தானே தவிர அலைந்து கொண்டு அல்ல.. ஆனால் உன் வக்கிரம் புரிந்துவிட்டது. சான்ஸ் கிடைக்கிற போது முடித்துவிட்டு கிளம்பிவிடலாம் என்று நினைத்திருந்தவனுக்கு, கைக்கெட்டி கிடைக்கவில்லையென்றதும், உன் சுயரூபம் தெரிந்துவிட்டது. கெட் லாஸ்ட்.. இனி மேல் என் முகத்தில் முழிக்காதே..” என்று பத்ரகாளியாய் கத்தினாள்.

எனக்கு என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை. பத்தினித்தனம் என்கிற வார்த்தைக்கு இவ்வளவு சீரியஸாய் ஒரு விஷயத்தை எடுத்துக் கொள்வாள் என்று நினைக்கவேயில்லை. ஒரு ஆணை இப்படி தூண்டிவிட்டுவிட்டு நிறுத்தச் சொன்னால் எப்படி? அவனால் முடிகிற காரியமா? முத்தமிட்டது காதலினாலாம்.. அப்ப நான் மட்டும் என்ன காமத்தின் காரணமாய் முத்தமிட்டேனோ..? காமம் தான் காதலின் அடுத்த கட்டம் என்று புரியாதவளா..? இவர்கள் முத்தமிட்டால் காதலுடன் முத்தமிட்டார்கள் என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இநத பெண்கள் எப்படியெல்லாம் சட், சட்டென பேச்சை மாற்றுகிறார்கள்.

ஏதும் பேசாமல் நான் கிளம்பிவிட்டேன். பெரிதாய் பெய்ந்த மழையில் நனைந்து கொண்டே வண்டியை ஸ்டார்ட் செய்தேன். ஜன்னல் வழியாய் அவள் என்னை பார்பது தெரிந்தது. அவளின் ப்ளாக்குக்கு வெளியே வந்து பையிலிருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தேன். புகையை ஆழமாய் இழுத்து அவளை பார்த்து ஊதினேன். கோபம். அவளுக்கு பிடிக்காத ஒன்றை செய்யும் போது அவளை பழிவாங்கும் சந்தோஷம் வந்தது.

அதன் பிறகு ரெண்டு நாட்களாய் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவளால் எப்படி இருக்க முடிந்ததோ தெரியவில்லை.. ஆனால் என்னால் முதல் நாள் மதியமே முடியவில்லை. முதல் நாள் காலையில் இருந்த கோபம், அவளாய் பேசட்டும் என்றிருந்த ஈகோவெலலம் மதியம் காணாமல் போயிருந்தது. ஆனால் போனிலோ, நேரிலோ பேச பயமாய் இருந்தது என்பதுதான் நிஜம். அவளை எதிர் கொள்வது எப்படி என்ற எண்ணம் மனதினுள் ஓடியதே ஒரு பெரிய மன உளைச்சலை கொடுத்தது. அவள் நிலையில் எனனை வைத்து பார்க்கும் போது அவள் என்னை தள்ளிவிட்டது அவளை பாதுகாக்க என்று இப்போது தோன்றியது. பின்னால் வரும் ப்ரச்சனைகளை தவிர்க்க இதை விட வேறு எதையும் செய்ய முடியாது என்று சப்பைக்கட்டு ஒரு பக்கம் தோன்றினாலும், இன்னொரு பக்கம் நாம் தான் இவ்வளவு வருத்தப்படுகிறோம். அவள் என்னை பற்றி நினைக்கிறாளோ இல்லையோ? என்ற கேள்வி ஓடிக் கொண்டிருந்த்து. மீராவுக்கு போன் செய்தேன்

மீரா வழக்கமான உற்சாகத்துடன் பேசினாள்.ஷ்ரத்தாவை பற்றி கேட்டவுடன் மீட்டிங்கில் இருக்கிறாள் வந்தா பேசச் சொல்றேன் என்றாள். என்ன நேத்து ஒரே ரொமான்ஸா.. ஷரத்தா செம க்யூட்டா இருக்கா.? என்று கிண்டல் வேறு அடித்தாள். கல்லுளி மங்கி.. க்யூட்டா இருக்காளா? என் முகத்தை பைக் கண்ணாடியில் பார்த்த போது இஞ்சி தின்ன குரங்கு போல இருந்த்து. ஏதும் பேசாமல் போனை வைத்துவிட்டேன்.

தினமும் அவளை நினைத்ததை விட இந்த இரண்டு நாட்களில் அவளை பற்றிய எண்ணங்களின்  ஆக்கிரமிப்பும், அதிகமாய் தான் இருந்தது. பார்க்கும் பெண்களின் காஸ்டியூமில், காது மடல் வலையங்களில், சுருள் முடி பெண்களை பார்க்கும் போதெல்லாம் வலித்த்து. பேசிவிடுவோமா.. என்று மனம் அலைந்தது. ரொம்ப நாளுக்கு பிறகு நாளுக்கு ரெண்டு பாக்கெட் சிகரெட் செலவானது. இன்னும் ரெண்டு நாளானால் கையில் பாட்டில் நாய் சகிதமாய் தேவதாஸ் ஆகிவிடுவேனோ என்று பயமாய் இருந்தது. என்ன சொல்லப் போகிறாள் எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று முடிவெடுத்து அவளை பார்க்க கிளம்பும் போது மீரா போன் செய்தாள்.

“ஷ்ரத்தா உன் கிட்ட பேசணுமாம்” என்று போனை அவளிடம் கொடுத்தாள். போனை வாங்கிய ஷ்ரத்தாவிடம் என்ன பேசுவது என்ற யோசனை ஓடிக் கொண்டிருநத்போது, “ஏய்.. என்னடா ஆச்சு? ரெண்டு நாளா  ஆளையே காணம்? ரொம்ப பிஸியோ..? ஒரு போன் கூட பண்ணல..? உனக்கெல்லாம் என் நினைப்பிருந்தாத்தானே?” என்று ஏதும் நடக்காதது போல பேசினாள். எனக்குள் இருந்த இறுகிய பாறை படால் என்று வெடித்து சிதறி மனம் லேசாகியது. அவ்வளவுதானா..? அவ்வளவுதானா அவள் கோபம்.? சே.. என்னன்னவோ நினைத்து பயந்திட்டிருந்தேனே.

“ஏய்.. என்ன பதிலே இல்லை.? ஆர்..யூ..தேர்..?”

“ம்..ஹாங்.. இருக்கேன். சொல்லு ஷ்ரத்தா..”

“ஆபீஸுக்கு வரியா.. நீ ஃபீரியா இருந்தா.?” என்ற அழைப்பில் கொஞ்சல் இருந்த்து.

ஸ்டாப் ப்ளாக்கில் ஆபீஸிலிருந்தேன். இரண்டு நாள் கழித்து பார்க்கும் போது ஷ்ரத்தா இன்னும் அழகாய் இருந்தாள். அவளின் சுருள் முடியை எல்லாம் “பப்” என ஒரு இறுக்காய் இறுக்கியிருந்தாள். அவளின் லேசான பிங்க் கலர் உதட்டு சாயம் என்னை கிறக்கியது. அவள் என் கீழுதட்டை கவ்வியது ஞாபகம் வந்தது. என்னை பார்த்ததும் முகமெல்லாம் சிரித்து, மீராவுக்கு பை சொல்லிவிட்டு, “வா.. கிளம்பு..கிளம்பு” என்று அவசரப்படுத்தி வண்டியெடுக்க வைத்தாள். கொஞ்சம் தூரம் ஏதும் பேசாமல் வண்டியோட்டிக் கொண்டு வந்தேன். எனக்கும் அவளுக்குமான நெருக்கத்தை அதிகமாக்கி கொஞ்சம் இடைவெளிவிட்டே உட்கார்ந்திருந்தேன். சாதாரணமாய் நான் அப்படி உட்காருபவன் அல்ல.

“ஏய்.. கொஞ்சம் முன்னாடி போ.. நான் கீழே விழுந்துடுவேன்.”

“என் மார்பென்ன உனக்கு சீட் ரெஸ்டா..?”

ஷ்ரத்தாவின் நெருக்கம் என் முதுகில் தெரிந்தது. மெல்ல அவளின் கை என் இடுப்பை சுற்றியது. என்னால் நெளியாமல் இருக்க முடியவில்லை. இருந்தாலும் காட்டிக் கொள்ளாமல் இருந்தேன். மெல்ல காது நுனியில் நாக்கை துருத்தி டீஸ் செய்தாள். நான் தலையை அசைத்து கோபப்பட்டது போல நடித்தேன். கிராதகி என் வீக்னெஸ் தெரிந்தவள்.

“என்ன என் மீது கோபமா..?”

“சே..சே.. எனக்கென்ன கோபம். கோபப்படறதுக்கு நான் யார்.? நீ கூப்பிட்டா வந்து நிக்கணும், முத்தம் கொடுன்னா கொடுக்கணும், வேணாம்னா போயிறணும் எனக்கெலலம் ஏதாவது உரிமை இருக்கா என்ன? கோபப்படறதுக்கு?”

“சாரி.. ஷங்கர்.. அன்று என்னால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை.. இன்னும் சில நிமிடங்கள் உன்னை அங்கிருக்க விட்டிருந்தால் அவ்வளவுதான். உன்னை நானே ரேப் செய்திருப்பேன். எனக்கென்னவோ என்னை உன்னிடம் இழப்பதற்கு அது சரியான நேரமில்லை என்று தோன்றியது. உன் கஷ்டம் எனக்கு புரிகிறது. சும்மா இருந்தவனை உசுப்பேற்றிவிட்டு எட்டி உதைத்து வெளீயே மழையில் அனுப்புவதை போல ஒரு கிராதக செயல் வேறேதும் இருக்க முடியாது.. சாரி.. “ என்றாள்.

அவள் குரலில் ஒரு நெகிழ்வு இருந்தது. அழுகிறாளா.? கண்ணாடி வழியாக பார்த்த போது தெரியவில்லை.  வண்டி இப்போது அவளின் ப்ளாட்டின் வாசலில் நிற்க, இறங்காமல் வண்டியின் பின்னாடியே உட்கார்ந்திருந்தாள். இறங்கலையா? என்பது போல அவளை திரும்பி பார்த்தேன்.

ஏதும் சொல்லாமல் வண்டியை விட்டு விறு விறுவென படியேறினாள் அவள் ப்ளாட்டை நோக்கி, மாடி பால்கனியிலிருந்து மேலே வா என்றழைத்தாள். கதவு திறந்தேயிருந்த்து. உள்ளே சென்றதும் சட்டென கதவு சாத்தப்பட, பின்பக்கத்திலிருந்து வெளியே வந்த ஷ்ரத்தா மெல்ல என்னருகில் வந்து கதவோடு என்னை அழுத்தி ”உனக்காகதான் நான்.. கமான் டேக் மி” என்றாள்.

அவளின் உடல் முழுவதும் என்னுடய மார்பில் அழுந்தியிருக்க, சூடான மூச்சு என் கழுத்தில் சுட, அவளை இறுக்க அணைத்து, மோவாயை தூக்கி எனக்கு வசதியாய் வைத்து, தலைசாய்த்து மெல்ல, மிருதுவாய் அவளுடய உதடுகளை கவ்வி, உறிஞ்சி முத்தமிட்டு, அவளை விலக்கி, “எனக்கு இது போதும்” என்று கதவை திறந்து கடகடவென படியிறங்கி வண்டியை கிளப்பினேன். மேலேருந்து அவள் மாடியிலிருந்து என்னை பார்ப்பது என் முதுகில் தெரிந்தது.

அதற்கு பிறகு வந்த நாட்கள் எல்லாம் ஏறக்குறைய சொர்கம் என்றே சொல்லலாம். அவளின் அண்ணன் இந்தியா வந்து எங்கள் இருவரையும் பார்க்கும் வரை.
***************
கேபிள் சங்கர்

Post a Comment

No comments: