Thottal Thodarum

Feb 16, 2010

My Name Is Khan – Hindi Film Review

my name khan ஏகப்பட்ட எத்ரிப்புகளோடு வெளிவந்திருக்கிறது. கரன் ஜோகர், ஷாருக், ரொம நாள் கழித்து கஜோல், என்று எதிர்பார்பை ஏற்றிவிட்டிருந்தபடம். மை நேம் இஸ் கான். அதேபோல் எல்லா நல்ல நடிகர்களூக்கும், இயக்குனர்களூக்கும் Tom Hank’sன் “Forrest Gump” மாதிரி ஒரு படத்தை கொடுக்க ஆவல் இருந்து கொண்டேயிருக்கும். கரண் இப்படத்தின் மூலம் நிறைவேற்றியிருக்கிறார்.

Asperger's Syndrome மில் பாதிக்கப்பட்ட கானின் தாய் இறந்தவுடன், தம்பி ஜிர்மி சேகலிடம் அடைக்கலம் புக அமெரிக்கா வருகிறார். அவனுக்கு ஆதரவாக தம்பி மனைவி உதவுகிறாள். தம்பியின் ஹெர்பல் ப்ராடக்டுகளை விற்க சொல்லுகிறான். ஒரு பியூட்டி பார்லரை நடத்தும், 12 வய்து பையனுக்கு தாயான சிங்கள் மதர் கஜோலை சந்திக்கிறான் கான்.  அவனது நேர்மையும், அவனது நடவடிக்கைகளையினால் ஈர்க்கப்பட்ட, கஜோல் அவனை மணக்கிறார். மிக சந்தோஷமாக காலம் ஓடிக் கொண்டிருக்கும் போது, செப்டம்பர் 9/11 சம்பவம் நடக்க, இஸ்லாமியர்களை வெறி கொண்டு தாக்கும், வன்மம் அமெரிக்கர்களுக்கு ஏற்பட்டதால் கானின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது. கஜோலின் பையன் அமெரிக்க சிறுவர்களால் அவனின் தந்தை ஒரு முஸ்லிம் என்பதால் தாக்கப்பட்டு இறந்து போக, கஜோலின் பியூட்டி பார்லரும் நொடித்து போக, ஆரம்பிக்க. கானை பிரிய முடிவெடுக்கிறாள். என்ன செய்தால் என்னை விட்டு பிரிய மாட்டாய் என்று கேட்கும் போது “என் பெயர் கான்.. நான் தீவிரவாதி இல்லை” என்று அமெரிக்க பிரஸிடெண்டிடம் போய் சொல்ல் என்று சொல்ல, அதை நோக்கி பயணப்படுகிறான் கான். அவன் ஜெயித்தானா? கஜோலுடன் இணைந்தானா என்பது கதை.

மிக அடர்த்தியான் சம்பவங்களால் கதையை பின்னியிருக்கிறார் திரைக்கதை ஆசிரியர். ஷிபானி பதிஜா. கொஞ்சம் ஆசுவாசமாய் போய்விட்டு வந்தால் நிறைய விஷயங்களை மிஸ் செய்ய வேண்டியிருக்கும். அருமையான திரைக்கதை, ஆழமான வசனங்கள் என்று முஸ்லிம் என்றாலே பொதுபுத்திதனமாய் தோன்றும் தீவிரவாதி முத்திரையினால் நல்ல மனிதனாய் இருக்கும் மற்றவர்களுக்கு ஏற்படும் காயத்தையும், மன அழுத்தத்தையும் மிக தெளிவாய் திரையில் கொணர்ந்திருக்கிறார்கள். இம்மாதிரியான கதைகளில் அடுத்தடுத்து வரும் காட்சிகள் சுவாரஸ்மில்லாமல் போய்விட்டால் பெரிய சொதப்பல் ஆகிவிடும். அதற்கு உதாரணம் கரன் ஜோகரின் “குர்பான்” திரைப்படம்தான்.
mykhan_482x10feb10 ரொம்ப நாளூக்கு பிறகு ஷாருக், கஜோல் திரையில் இன்னும் அந்த ஜோடி திரையில் தோன்றும் போது பழைய ப்ரெஷ்னஸ் அப்படியே இருக்கிறது. சோ.. க்யூட். ஷாருக்கின் வியாதின் தன்மை எப்படி என்று தெரியாததால் அவரின் சிண்ட்ரோம் பாடி லேங்குவேஜை பற்றி ஏதும் சொல்ல முடிய்வில்லை. ஆனால்  இந்த கேரக்டரில் இவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் இந்த அளவுக்கு செய்திருக்க முடியுமா என்ற கேள்வி மனதில் தோன்றுகிறது. அவ்வளவு அருமையான நடிப்பு. கஜோலின் பியூட்டி பார்லர் வாசலில் வந்து நின்று கொண்டே அவரின் மீதான் காதல் வளர்ப்பதாகட்டும். சட்டென்று காதலை ப்ரபோஸ் பண்ணாமலேயே “மேரிமீ.. மேரிமீ” என்று திரும்ப திரும்ப சொல்லுமிடமாகட்டும், அமெரிக்க பிரசிடெண்ட்டுடன் டின்னர் சாப்பிட பணம் கட்டும் இடத்தில் கம்போடியாவில் உள்ள ஏழைகளூக்கா பண வசூல் செய்ய, இவர் பணம் கட்ட போய் அவர் ஒரு முஸ்லிம் என்பதால், இது கிரிஸ்டியன்களூக்கான விழா என்று அவரை உதாசினம் செய்ய பணத்தை வைத்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு வரும் போது ஒரு அடிபட்ட பார்வையில் அவர பார்க்கும் இடம் என்று ஷாருக் கிடைத்த எல்லா இடங்களிலும் சிக்ஸர் அடித்திருக்கிறார்.

இந்த கேரக்டருக்கு கஜோலை நச். கானின் சிண்ட்ரோம் பிரச்சனை தெரிந்து அவனின் இன்னொசென்ஸையும், நேர்மையினாலும் கவரப்பட்டு திருமணம் செய்து கொள்வதாகட்டும், பின்பு அவர் ஒரு முஸ்லிம் என்பதனால்  தொழில், மற்றும் தன் மகனை இழப்பையும் தாஙக் முடியாமல் வெடித்து கிளம் பும் காட்சி அருமை.

ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு அருமையோ அருமை. கரன் ஜோகரின் வழக்கமான் பார்முலா படமாய் இல்லாமல் சமுதாயக் கருத்தோடு ஒரு ஆழமான கதையை கொடுத்தமைக்காக பாராட்ட வேண்டும்.
பாரஸ்ட் கம்ப் திரைப்பட பாதிப்பு நிறைய இருக்கிறது. இருந்தாலும் அருமையான நேரேஷன். க்ளைமாக்ஸ் காட்சிகளின் பரபரப்பு, ஜார்ஜியா புயலான் பாதிக்கபட்ட ஒர் ஆப்பிரிக்க பெண்ணின் மீது உள்ள பாசம், அவருக்காக புயலில் போய் காப்பாற்றுவது எல்லாம் கொஞ்சம் படத்தை ஸ்லோ வாக்கினாலும் பெரிதாய் பாதிப்பில்லை. என்றே சொல்ல வேண்டும்

MY NAME IS KHAN – A WELL PACKED NEAT FILM

Technorati Tags:தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் குத்துங்க... எசமான்..குத்துங்க
Post a Comment

38 comments:

Ganesan said...

அருமையான, நேர்த்தியான விமர்சனம்

CS. Mohan Kumar said...

படம் அருமை என்று தெரிகிறது.. Times of India-ல் 5 ஸ்டார் ரேட்டிங் தந்தனர். எனக்கு வேறு படத்துக்கு எப்போ 5 ஸ்டார் ரேட்டிங் தந்தனர் என தெரியலை.

கஜோல் எனக்கு பிடித்த நடிகை. பார்க்கணும்.

சில spelling mistakes உள்ளன. திருத்தி விடவும்

அன்பேசிவம் said...

என்னுடைய நண்பரும் பெங்கலூரில் படம் பார்த்து விட்டு போன் போட்டு சொன்னார், படம் சூப்பர் என்று. இங்க முடியாதுபோல கோவைதான் போகனும். :-(

செந்தில் நாதன் Senthil Nathan said...

படம் எனக்கு ரெம்ப பிடிச்சது. பல எடத்துல அசந்து போய் பார்த்தேன். "இப்படி ஒரு படம் தமிழில் வருமான்னு" ஒரு லிஸ்ட் சொல்லுவிங்களே, அந்த லிஸ்ட்-ல சேர்க்க வேண்டிய படம். உங்க விமர்சனமும் சூப்பர்.

ஒரு சின்ன ஆசை. கமல் இத தமிழில் எடுப்பாரா? அவரோ மாதவனோ நடிச்சா நல்லா இருக்கும். அப்புறம் பதிவர்கள் கமல் மேல குறை சொல்றது கூட குறைய வாய்ப்பு இருக்கு. :)

Paleo God said...

மோகன் ஜி சொன்னதுதான்..:)

ஆனாலும் கையில தார் கரையோடு எப்படி படத்த பாக்கறது? :)

தமிழ்ல வரும்போதே பார்த்துக்கிறேன்.:)

maxo said...
This comment has been removed by the author.
maxo said...

Nice movie and Nice Review

Senthil said...

Decent Review

தினேஷ் ராம் said...

கண்டிப்பாக பார்க்கனுமே!!

சைவகொத்துப்பரோட்டா said...

அப்படின்னா
படம் பார்க்கலாம்.

Ashok D said...

படத்தோட tone உங்க விமர்சனத்தலையும் இருந்தது... well said... (குறும்புக்கார கேபிள் உள்ள வரவேயில்லை)

taaru said...

தல.உங்க விமர்சனத வச்சு தான் இங்க ஒரு பெரிய படமே காமிச்சுட்டு இருக்கேன்...

மிக அருமையான பார்வை தல... படம் கண்டிப்பா பாக்கணும்...

"இரண்டு ஷாட் டக்கீலாவுக்கு" நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..

taaru said...

hot spot - ரொம்ப நாளா அப்டியே இருக்கு..வேளை நெம்ப ஜாஸ்தியோ? கொஞ்சம் மாத்துறீன்களா? ஹி ஹி ஹி...

ஜெட்லி... said...

அடுத்த வாரம் தான் போகணும்...!!

Santhappanசாந்தப்பன் said...

நல்லாயிருக்குன்னு சொல்ரீங்க.... பார்த்துடுவோம்...

Prabu M said...

"My Name is Khan" Review - A WELL PACKED NEAT REVIEW :)

vanila said...

கேபிள்ஜி.. அருமையான, பார்க்கத்தூண்டும், விமர்சனம்..

\\@ Senthil natahan;

ஒரு சின்ன ஆசை. கமல் இத தமிழில் எடுப்பாரா? அவரோ மாதவனோ நடிச்சா நல்லா இருக்கும். அப்புறம் பதிவர்கள் கமல் மேல குறை சொல்றது கூட குறைய வாய்ப்பு இருக்கு. :) \\

பிரச்சினை என்னவென்றால் அந்த நடிகனின் Originality காணாமல் போய் விடும்.. கமல் எவ்வளவுதான் (Out of the nerves) நடித்தாலும்.. இங்கு நிறைய பேர்கள் அவரை கமலாகவே பார்க்க ஆசைப்படுகிறார்கள்.. (அல்) காணத்தள்ளப்படுகிறார்கள்.. (இது யாருடைய பிரச்சினை என்பதை இப்பொழுது விட்டு விடுவோம்).. ஒரு நல்ல உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் அது "A Wednesday.".. குருதிப்புனலின் இரண்டாம் பகுதி இதற்க்கு விதிவிலக்கு.

மணிஜி said...

/【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
மோகன் ஜி சொன்னதுதான்..:)

ஆனாலும் கையில தார் கரையோடு எப்படி படத்த பாக்கறது? :)

தமிழ்ல வரும்போதே பார்த்துக்கிறேன்.:)//

”நச்” கமெண்ட் ஷங்கர்!

VISA said...

//ஒரு சின்ன ஆசை. கமல் இத தமிழில் எடுப்பாரா? அவரோ மாதவனோ நடிச்சா நல்லா இருக்கும். அப்புறம் பதிவர்கள் கமல் மேல குறை சொல்றது கூட குறைய வாய்ப்பு இருக்கு. :)//

கடவுளே அது மட்டும் நடந்துட கூடாதுன்னு வேண்டிக்கிறேன்.
மை நேம் இஸ் ஹாசன்....
தமிழில பெயர் வைக்கணுமே....
என் பேரு ஹாஸன் அப்படின்னு வச்சு அவரே பாட்டு எழுதி அவரே பாட்டும் பாடி......டான்ஸ் ஆடி....வேண்டாமடா சாமி.

அன்பே சிவம் மனநிலையில் எடுத்தால் ஓ.கே.
தசாவதாரம் அல்லது உ.போ.ஒ. மனநிலையில் எடுத்துவிட போகிறார் பயமாக இருக்கிறது. கமல் என்ற கலைஞனை இன்னும் இன்னும் வெறுக்க நேரிடுமோ என்று.

manjoorraja said...

கச்சிதமான விமர்சனம். இசையை பற்றி ஒன்றும் சொல்லவில்லையே ஏன்?

pudugaithendral said...

சரி டிக்கெட் புக் செஞ்சிட வேண்டியதுதான். படம் பாக்கத்தான்.

M Arunachalam said...

My Name is (a BIG) YAWN.

SIV said...

Nowadays 95% movies are about NRIs. Why?

புலவன் புலிகேசி said...

பாத்துற வேண்டியதுதான்...

Thenammai Lakshmanan said...

//ரொம்ப நாளூக்கு பிறகு ஷாருக், கஜோல் திரையில் இன்னும் அந்த ஜோடி திரையில் தோன்றும் போது பழைய ப்ரெஷ்னஸ் அப்படியே இருக்கிறது.//

அப்ப கட்டாயம் பார்த்துடலாம் கேபிள் ஜீ பாசிகரிலிருந்து ஷாருக் மற்றும் கஜோலின் ரசிகை நான்

தர்ஷன் said...

எனக்கும் படத்தின் trailer பார்த்த போது forrest gump ஞாபகம் வந்தது. அதை பதிவொன்றிலும் பதிவு செய்தேன். அதை நீங்களும் உறுதி செய்திருக்கீர்கள்.
இங்கு இலங்கையில் படம் சக்கைப் போடு போடுகிறது. படம் சொல்லும் கருத்துக்களை உள்வாங்குகிறார்களோ இல்லையோ வெறுமனே ஷாருக்குக்காக

ஷண்முகப்ரியன் said...

/Asperger's Syndrome''/

இந்த நோயைப் பற்றித் தெரிய வேண்டுமானால் Nicholas Sparks ன் DEAR JOHN நாவலைப் படியுங்கள் அல்லது படத்தைப் பாருங்கள்.நான் இன்னும் படம் பார்க்கவில்லை,ஆனால் நாவல் சூபர்ப்.

Romeoboy said...

நான் ரொம்ப எதிர்பார்த்த படங்களில் இதுவும் ஒன்று தலைவரே. இந்த வாரம் பார்த்தடனும்.

Bibiliobibuli said...

//ஷாருக்கின் வியாதின் தன்மை எப்படி என்று தெரியாததால் அவரின் சிண்ட்ரோம் பாடி லேங்குவேஜை பற்றி ஏதும் சொல்ல முடிய்வில்லை.//

Adam என்ற ஆங்கிலத்திரைப்படம் (2009) பார்த்தால் புரியும். மிக அழகான கதை. Autism-Asperger’s Syndrome உள்ள ஒருவரின் அன்றாட வாழ்வின் சவால்கள் பற்றியது. நான் My name is Khan திரைப்படம் பார்க்கவில்லை. ஆனால், ஷாருக்கானின் பாத்திரப்படைப்பு Adam என்ற பாத்திரத்தின் குணாம்சங்களை கொடுள்ளதோ என்று விமர்சனங்கள் எண்ண வைக்கின்றன.அந்த திரைப்படத்தில் அரசியல் கிடையாது.

THE UFO said...
This comment has been removed by the author.
Dr.Sintok said...

இந்திப் படம் இந்தியாவில் எடுக்க மாட்டாங்களா....??
இப்படிதான் உலகதறத்தை நோக்கி சொல்லதோ......................??

THE UFO said...
This comment has been removed by the author.
THE UFO said...

நல்ல விமர்சனம் கேபிள்....... படம் பார்க்கும் ஆவலை தூண்டி விட்டீர்கள்.....

//கமல் இத தமிழில் எடுப்பாரா?//

எடுத்தால் ...என்னாகும்...? கதை காபூலில் நடக்கும். டிசம்பர்-6-க்காக தாலிபான்கள் கஜோலின் மகனை கொள்வார்கள். உடனே கமல் முல்லா ஒமரிடம் போய் சொல்வார்..... My name is Raam ... I'm not a terrorist ...! (1992 -ல் ஏதப்பா தலிபான் என்றெல்லாம் கேட்கக்கூடாது... இது கமல் படம்... கொஞ்சம் முன்னே பின்னே இருக்கும்.... வரலாறு முக்கியமல்ல அமைச்சரே...)

KARTHIK said...

// ரொம்ப நாளூக்கு பிறகு ஷாருக், கஜோல் திரையில் இன்னும் அந்த ஜோடி திரையில் தோன்றும் போது பழைய ப்ரெஷ்னஸ் அப்படியே இருக்கிறது.//

இதுக்காகவே பாக்கனும் ஈரோட்ல வாய்ப்பே இல்ல
கோவைலதான் பாக்கனும் போல :-))

mraja1961 said...

அருமையான படம். அருமையான விமர்சனம். நெட்டில் டவுன்லோட் செய்து படம் பார்த்தேன்.

நன்றி
மகாராஜா

Cable சங்கர் said...

@kaveri ganesh
நன்றி

@மோகன்குமார்
மாத்திட்டேன் தலைவரே

@முரளிகுமார் பத்மநாபன்
நிச்சயம்பாருங்க. பாரஸ்ட் கம்ப் ஞாபகம் நிச்சயம் வரும்

@செந்தில்நாதன்
எனக்கு தோணலை தலைவரே.. ஏன்னா.. இப்படி வருவது கஷ்டம்.. தமிழ் படங்களை பொறுத்த வரை, காதல், கல்யாணம், மதுர பாசை, த்ரில்லர், அருவா, எல்லாம் வேலைக்காகும், இம்மாதிரியான படங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். :(

@ஷங்கர்
சூப்பர் கமெண்ட்

@மாக்சோ
நன்றி

@செந்தில்
நன்றி

@சாம்ராஜ்யபிரியன்
நிச்சயம் பாரு..

@சைவகொத்துபரோட்டாஅ
பாருங்க

@அசோக்
எப்பபார்த்தாலும் வரமாட்டாரு..

@தாரு..
நன்ரி

@பிள்ளையாண்டான்
நன்றி

@பிரபு.எம்
நன்றி

@வனிலா
கமலை கமலாய் பார்க பழகுகிற மனநிலை இங்கு வரும் வரை.. நம்ம ஆட்கள் கமல், சுஜாதா, மணிரத்னம் போன்றவர்கள் எடுத்தால் மட்டும் ஒன் சைட் ரிவ்வூயூ சொல்வது நிறுத்தும் வரை நிச்சயம் நடக்காது..

@விசா
:(

@மஞ்சூர் ராசா
:)

@புதுகை தென்றல்
நிச்சயம்

@அருணாச்சலம்
டேஸ்ட் டிபர்ஸ் அருணாசலம்

@சிவ்
அங்க இருக்கிற மார்கெட்டை பிடிக்கத்தான்

@தேனம்மை லஷ்மணன்
அப்ப நீங்களூம் யூத்தா..?:))

@தர்ஷன்
நிச்சயம் இது ஒரு பாரஸ்ட்கம்பின் பாதிப்பில் எடுக்கப்பட்ட பட்ம் தான் அதில் சந்தேகமில்லை. கண்டண்ட் மட்டும் வேறு..

@ஷண்முகப்பிரியன்

நிச்சயம் பார்க்கிறேன்..சார்

@ரோமியோ
நல்லாருக்கு

@ரதி
நிச்சயம் பார்க்கிறேன்

@சிண்டாக்
ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
அது விதமான மார்கெட் தலைவரே

@யுஎப் ஓ
நோ கமெண்ட்ஸ்:)

@கார்த்திக்
ஆமாகோவையில் தான் பாக்க முடியும்

@எம்ராஜா1961
ஏங்க தியேட்டர்ல போய் பாருங்க.. தலைவரே..

சீனி மோகன் said...

good review Shankarji,
I am planning to see today itself.
But I have to travel to Kovai from Udumalpet.( You have left out the important part of music )
Seeni Mohan.

Hussain Muthalif said...

நண்பர் சங்கர்,

விமர்சனம் மிக அருமை.

இப்படத்தில் வசனங்கள் எனக்கு மிகவும் பிடித்தது.
இப்படத்தைபற்றி நான் எழுதிய விமர்சனத்தை படிக்க அழைக்கிறேன்.

http://hussainmuthalif.blogspot.com/

மோதிரக் கையால குட்டு வாங்க எனக்கும் ஆசை.