சாப்பாட்டுக்கடை - ID@ Sathyam


நல்ல தியேட்டரில் சினிமா பார்க்க வேண்டுமென்றால் சென்னைவாசிகளின் முதல் ஆப்ஷன் சத்யமாய்த் தான் இருக்கும். சென்னையின் முக்கிய டெஸ்டினேஷன்களில் ஒன்றாக விளங்கும் இந்த மல்ட்டிப்ளெக்ஸில் முதல் மாடியில் ஒரு வெஜிட்டேரியன் ரெஸ்டாரண்ட் இருக்கிறது. பெயர் ஐடி.  நிர்வாகத்தினர் பெயருக்கான பாண்ட் டிசைனிலேயே நம்மை கவர்ந்து விடுவார்கள். உள்ளே சென்றதும் அருமையான ஆம்பியன்ஸ். நடுவே சமையல் இடம். அதை சுற்றி பாரில் உள்ளது போல ஒரு சீட்டிங் அரேஞ்ச்மெண்ட். அவசர அடியாய் தனியாய் என்னைப் போன்றவர்களுக்காக அமைத்திருப்பார்கள் போலும். தோசைக்கல்லுக்கு முன்னாடியே உட்கார்ந்து சுடசுட சாப்பிடலாம்.


பூப்போன்ற சூடான இட்லி, முறுகலாகவோ, அல்லது பதமாகவோ, நாம் கேட்கும் வகையில் தோசை, மசாலா தோசை, ரவா தோசை, பெசரட் உப்புமாவோடு, அடை அவியல், மெதுவடை, கீரைவடை, மசால் வடை, பொங்கல், ஆப்பம், என்ற மெனுவுடன், சைட்டிஷ்ஷாக, மூன்று வகை சட்னிகள், நல்ல திக்கான சின்ன வெங்காய சாம்பார், ஆப்பத்திற்கான உள்ளித்தீயல் என்று வரிசைப் படுத்தியிருக்கிறார்கள். என் பேவரிட் எப்போதும் இட்லி, வடைகளில் ஏதாவது ஒன்று, ஆப்பம் உள்ளித்தீயல். முருங்கைக்காயையும், சின்ன வெங்காயத்தையும் போட்டு நம்ம ஊரு காரக்குழம்பு போலவும் இல்லாமல் கொஞ்சம் லேசான புளிப்போடு சர்வ் செய்வார்கள். ம்ம்ம்ம்..சூப்பர்ப். சில சமயம் உப்புமா பெசரட். கூடவே ஒரு காப்பி. ஒரு 150 ரூபாய்க்குள் வரும். அவர்கள் சர்வ் செய்யும் சுறுசுறுப்பும், உணவின் தரமும் இது வரை குறையவேயில்லை. சரவண பவனைவிட கொஞ்சம் விலை குறைவே. கடைசியாய் காப்பி,டீக்கு பதிலாய் ஜூஸ், லஸ்ஸி என்று விரும்புகிறவர்களூக்கு லஸ்ஸி ஒரு டிவைன் ஃபினிஷிங் டச்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Comments

தகவலுக்கு நன்றி - சுவைத்து பார்த்துடுவோம்
பூப்போன்ற சூடான இட்லி, முறுகலாகவோ, அல்லது பதமாகவோ, நாம் கேட்கும் வகையில்..
Is it possible Cableji? IDLY in MURUGAL? Created an urge to eat there. Superb.
சாப்பாட்டுக்கடை தங்களின் தனித்தன்மையை காட்டுகிறது..

நீங்கள் பெற்ற இன்பம் பரவட்டும் இவ்வையகம்...

திரையரங்கு வளாகத்தில் இதுபோன்ற நல்ல உணவு விடுதிகள் இருப்பது அபூர்வம்தான்...
Dwarak R said…
Shankarji,

its only 'ID'. not 'Idli'. ID stands for Idly Dosa.
rajamelaiyur said…
நன்றி .. தகவல்களுக்கு
நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.
பில்டர் காபி சூப்பராக இருந்தது.
விலை மிகக்குறைவே!
என்னுடைய பேவரைட் ஸ்வீட்...
கேசரி சுமாராகத்தான் இருந்தது.
pichaikaaran said…
உள்ளித்தீயல் என்றால் என்ன?
kumar said…
நம் தேசம் ரொம்பத்தான் முன்னேறிடுச்சு.
பின்னே!150 க்குள் தான் வருமென்றால்?
திரையரங்கு வளாகத்தில் இதுபோன்ற நல்ல உணவு விடுதிகள் இருப்பது அபூர்வம்தான்...
dear cable
ennai pondra pongal piriyargalukku tharamana suvaiyana pongal iravu 8 manikku kooda angu kidaikkirathu overall it is a nice place to eat and enjoy good ambience and delicious though slightly costly and they always have the fixed menu only.
anbudan
sundar g ( rasanai )
suvaiyana pongal iravu 8 manikku kooda angu kidaikkum. they have fixed menu only
nice ambience and good place for a delicious food and enjoy
anbudan
sundar g ( rasanai )Download: eType1.com/f.php?FQpY8Y
நான் எங்கப்பா அங்கெல்லாம் வேற போறேன்... பதிவுல படிக்க மட்டும் தான் முடியும்.
தகவலுக்கு மிக்க நன்றி. அடுத்த முறை கண்டிப்பாக சுவைப்பேன்