Thottal Thodarum

Oct 12, 2011

சாப்பாட்டுக்கடை- O. S.S CHATS


சாட் அயிட்டங்கள் எல்லாருக்குமே மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா போன்ற அயிட்டங்கள் மேல், பல பேருக்கு தனியாத மோகம் இருக்கவே செய்கிறது. முக்கியமாய் பானிபூரி. அதனால் தான் தெரு முனையில் எல்லாம் ரோட்டில் பானி பூரி விற்பனையாகிறது.  அப்படிப்பட்ட இடங்களில் சுகாதாரம், தரம் பற்றி யோசனையினால் நிறைய பேர் சாப்பிடாமல் போய்விடுவார்கள். அப்படி தரம், சுகாதாரம் பற்றி யோசித்தால் கங்கோத்ரி மாதிரியான இடங்களில்தான் கிடைக்கும். விலையும் அதை போலவே இருக்கும்.


ஆனால் குறைந்த செலவில் நல்ல சாட் மற்றும், சப்பாத்தி, ஆலு பரோட்டா, ப்ரைட் ரைஸ் போன்ற அயிட்டங்களை தரமான, தகுதியான விலையில்ல் சாப்பிட இந்த ஓ.எஸ்.எஸ் சாட்டுக்கு நிச்சயம் போகலாம்.மேற்கு மாம்பலம் லேக் வியூ ரோடில் ஹெல்த் செண்டருக்கு கொஞ்சம், முன்னால் அமைந்திருக்கிறது இந்தக் கடை. சில வருடங்களுக்கு முன் சின்ன சாட் கடையாய் ஆரம்பிக்கப்பட்டது. மிக குறுகிய காலத்தில் கிட்டத்தட்ட ஒரு மினி பாஸ்புட் அளவிற்கு பக்கத்துக் கடை, பின்பக்கத்துக் கடை எல்லாவற்றையும் சேர்த்து விரிவாக்கிவிட்டார்கள் இந்த வட இந்திய சகோதரர்கள்.

நன்றாக மசிக்கப்பட்ட ஆலு மசாலாவை (உருளைகிழங்கு) சப்பாத்தி மாவின் நடுவே வைத்து அதில் கொஞ்சமே கொஞ்சம் முன்னும் பின்னும் நெய் ஊற்றி வாட்டி எடுத்து, அதற்கு தொட்டுக் கொள்ள ஏதாவது ஒரு சப்ஜி தருவார்கள். இரண்டு ஆலு பரோட்டா சைட் டிஷ்.. வெறும் முப்பது ரூபாய்தான். தனியாய் சைட் டிஷ் வேண்டுமானல் அதையும் தருகிறார்கள். அதே போல இவர்களின் பானிப்பூரிக்கென்று தனி கூட்டமிருக்கிறது. அதற்கு சாட்சி கடையின் முன்னால்  கையில் பானிப்பூரி கப்புடன் நிற்கும் கூட்டமே சாட்சி.  அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள். 
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

14 comments:

வெண்பூ said...
This comment has been removed by the author.
வெண்பூ said...
This comment has been removed by the author.
sivakasi maappillai said...

தல‌

அங்க கிடைக்கிறதெல்லாம் சும்மா...

இந்தபக்கம் வாங்க... ரியல் டேஸ்ட் என்னான்னு காட்டுறோம்...

அப்புறம் மாடரேஷனுக்கு நீங்க சொன்ன காரணம் சரியே

sivakasi maappillai said...

//வடநாட்டு பானிபூரி, தய்பூரி, வடாபாவ், பானிபூரி, ஆலு டிக்கா, சமோசா //

பானிபூரி, தய்பூரி என்று சொன்னாலே தமிழர்கள் புரிந்து கொள்ளும் திறமைசாலிகள்....

வட நாட்டு பானிபூரி.... என்று எழுதி தமிழர்கள் பானிபூரி என்றால் தெரியாதவர்கள்/அறிவில்லாதவர்கள் என்று நினைக்கும் உங்கள் அறியாமையை வன்மையாக கண்டிக்கிறேன்...

தமிழ் வாழ்க... தமிழன் வாழ்க...

வட நாட்டு என்ற வார்த்தையை எடுக்கும் வரை கண்டனங்கள் வந்து கொண்டிருக்கும்

Vinodh S said...

Sir, Chat items especially these pani pooris, Vada Pav and masala pooris are famous in Cbe since here many north indians reside. When you come to Coimbatore Visit any chat shop, especially RS Puram Agarwals, Calcutta chat..etc

Kannan said...

"அதே தெருவின் வெகு அருகில் இவர்களைப் போலவே சப்பாத்தியும், பானிப்பூரியும் கொடுக்கும் வட இந்தியக்கடை இருக்கத்தான் செய்தாலும் இங்கு நடக்கும் வியாபாரம் அங்கில்லை.. எதற்கும் ஒரு முறை சென்று வாருங்கள். "

தகவலுக்கு நன்றி........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.co

N.H.பிரசாத் said...

சாப்பாட்டுக் கடை தகவலுக்கு நன்றி அண்ணே.

"என் ராஜபாட்டை"- ராஜா said...

போடோவ பாத்ததும் நாக்கு ஊருது

"என் ராஜபாட்டை"- ராஜா said...

இன்று என் வலையில்


கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா

சே.குமார் said...

நல்ல கடை அறிமுகம்.

ஆரூர் முனா செந்திலு said...

அண்ணே உங்க பேரைப் போட்டு ஒரு பதிவை ஒட்டி விட்டேன். சிரமத்திற்கு பொருத்தருள்க. நான் திருவாரூர்க்காரன். சில நாட்களாகத்தான் எழுதுகிறேன். நீங்களும் படித்திருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். இந்த பதிவிற்கு காரணம் என்னவெனில் ஒரு பதிவர் அப்படியே உங்கள் பதிவின் முதல் நாலுவரியைப் போட்டு ஒட்டி விட்டார். அதான் கடுப்பில் நானும் தலைப்பை மட்டும் வைத்து விட்டு ஒரு பதிவு போட்டேன். கடுப்புக்கு கடுப்பு மைனஸ்.

IlayaDhasan said...

கேபிள் அவர்களே ,அவரின் நண்பர்களே, என்னுடைய "மூணாம் கத",
பயப்படாம படிங்க, பி(ரீ)திக்கு நான் காரன்டீ

கண்கள் இரெண்டால்,உன் கண்கள் இரெண்டால்(சவால் சிறுகதைப் போட்டி -2011)

Nataraj said...

ராய்த்தா கிடையாதா ஆலு புரோட்டாவுக்கு? தொண்டை காறுமே..

Anonymous said...

divine a ?