Thottal Thodarum

Oct 7, 2011

சதுரங்கம்

sadhurangam சில படங்கள் எப்போது வந்தாலும் காலத்தினால் அழியாமல் இருக்கும். சில படங்கள் காலத்தே பின் தங்கி வந்திருந்தால் நன்றாகயிருந்திருக்குமோ? என்று தோன்றும். இன்னும் சில படங்கள் காலத்தே வந்திந்திருந்தால் அதன் சிறப்பை பெற்றிருக்குமோ? என்று கேள்வியோடு இருக்கும். சதுரங்கம் மூன்றாவது வகை.
திசைகள் எனும் இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிசம் பத்திரிகையில் வேலை செய்யும் ஸ்ரீகாந்த்தை சுற்றி கதை ஓடுகிறது. இவர் கவர் செய்யும் விஷயங்களினால் ஒரு அமைச்சர், ஒரு மாபியா பிஸினெஸ்மேன், ஒரு ஐ.ஏ.எஸ் ஆபிசர் என்று பல பேர் பாதிக்கப்பட,  அதற்கு பழிவாங்க அவரின் காதலியை கடத்திப் போகிறார்கள். ஸ்ரீகாந்த தன் காதலியை யார் கடத்தினார்கள் என்று கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் கதை.
s_02 பையில் பத்து காசில்லாமல் பஸ் டிக்கெட் வாங்காமல் டிக்கெட் செக்கரிடம் மோதல், பின்பு, நடமாடும் நீதி மன்ற ஜட்சிடம் வாக்குவாதம் என்று ஆரம்பித்து 15 நாள் சிறைச்சேதம் செய்யப்பட்டு சிறைக்குள் வரும் போது அட வித்யாசமான ஹீரோ அறிமுகமாய் இருக்கிறதே என்று கைத்தட்ட தோன்றுகிறது. அதன் பிறகு நடக்கும் காட்சிகள் ஒரு பத்திரிக்கையாளனின் பார்வையாய் வெளியாகி அதனால் நடக்கும் தொடர் பிரச்சனைகள் சுவாரஸ்யம். பத்திரிக்கையாளன் கேரக்டரில் ஸ்ரீகாந்த் நன்றாக செய்திருக்கிறார். தன் கட்டுரைக்கான மிரட்டலை அவர் எதிர் கொள்ளும் விதம், டாமினெண்டான ஒரு பத்திரிக்கையாளனின் திமிர் எல்லாம் ரசிக்க வைக்கிறது. 
s_06சோனியா அகர்வால் இளமையாய். தேடித் தேடி காதலிக்கிறார். கடத்தப்படுகிறார். பார்த்த மாத்திரத்தில் காதல் என்றில்லாமல் சின்னச் சின்ன நிகழ்வுகளின் மூலமாய் காதல் வருவதும், காதலை சொல்ல வீட்டிற்கே போய் வழிந்து கொண்டு நிற்பதும், பின்பு காதலனிடமே ஒரு முத்தம் கொடுக்க மாட்டாயா? என்று கேட்பதும் கொஞ்சம் செயற்கையாய் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது.

திவாகரின் ஒளிப்பதிவு படத்திற்கு கொடுக்க வேண்டிய இம்பாக்டை சரியாக கொடுத்திருக்கிறது. வித்யாசாகரின் இசையில் பின்னணியிசையும், விழியில் பாடலும் சுகம்.
s1 எழுதி இயக்கியிருப்பவர் கரு.பழனியப்பன். அச்சு அசலான ஒரு பத்திரிக்கை ஆபீஸை காட்டியிருக்கிறார். இவரே ஒரு பத்திரிக்கையாளர் என்பதால் ஸ்ரீகாந்தை அக்கேரக்டரில் இயல்பாய் உலவ விட்டிருக்கிறார். படம் நெடுக கைத்தட்டல் பெறுகிற வசனங்கள் நிறைய. “எங்கள மாதிரி தப்பானவங்க ஜெயிப்போம்னு நம்புறோம். உங்களை மாதிரியான நல்லவங்க தோத்துடுவோம்னு நம்புறீங்க. முதல்ல ஜெயிப்போம்னு நம்புங்க..”  முக்கியமாய் பத்திரிக்கையாளர்களை உயர்த்துவது மட்டுமில்லாமல், அதே நேரத்தில் அவர்களைப் பற்றிய விமர்சனமும் வைத்தது இண்ட்ரஸ்டிங். வில்லன் தான் யார் என்று கண்டுபிடி என்று சொல்லி ஹீரோவை அலைய வைப்பது, விபசார நெட்வொர்க், என்பது போன்ற விஷயங்கள் எல்லாம் ஆறு வருஷ்ங்களுக்கு முன் வந்திருந்தால் அதிர்ச்சியாக இருந்திருக்கும் இப்போதைய காலகட்டத்தில் இதைவிட பரப்ரப்பான படங்களை பார்த்துவிட்டதினால் கொஞ்சம் சுவாரஸ்யம் குறைவாக தெரிவதை தவிர்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் கொஞ்சம் நிறைவாய் இருந்திருக்கும்.
சதுரங்கம்- காரம் கொஞ்சம் குறைந்த ஆட்டம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

10 comments:

rajamelaiyur said...

நல்ல விமர்சனம் ..

rajamelaiyur said...

இன்று என் வலையில் ...

இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

அஞ்சா சிங்கம் said...

விமர்சனமும் கொஞ்சம் காரம் கம்மிதான் .............
சோனியா அகர்வால் சிரிக்கும் போதும் . அழும் போதும் ஒரே மாதிரி இருக்கிறார் ....
இறைவன் படைப்பில் இப்படி ஒரு அதிசயம் ....................

aotspr said...

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி....

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Jenbond said...

15 நாள் சிறைச்சேதம் செய்யப்பட்டு?

அருண் said...

இது அப்பவே வந்திருந்தா ஸ்ரீகாந்த் இன்னைக்கு எங்கேயோ இருந்திருப்பார்னு தோணுது.
-அருண்-

Sivakumar said...

விழியும் விழியும்... பாடலை எவ்வாறு எடுப்பார்கள் என்று கடந்த 6 வருடங்களாக காத்திருந்தேன். ஏமாற்றம்?!

IlayaDhasan said...

அப்பா ஒரு தடவ பாக்கலாம் போல.


அன்பு நண்பர்களே , நம்ம டைரக்டர்கள் சொல்ற மாதிரி , வித்யாசமாக யோசித்து ,என் இரண்டாவது கதையை
யுடான்ஸ் கு அனுப்பி உள்ளேன். படித்து ,பிடித்திருந்தால் , ஓட்டை போடவும்: அவள் வருவாளா?

BalHanuman said...

குரங்கு கையில் பூமாலை...
செல்வராகவன் கையில் சோனியா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice review