Thottal Thodarum

Oct 17, 2011

கொத்து பரோட்டா - 17/10/11

தேர்தல் காலத்தில் மக்கள் நல பணிகள் எதையும் ஆளும் அரசு செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு. சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன் இம்முறை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. ஏன் மக்கள் நல பணிகளை செய்யக்கூடாது என்று சொல்கிறார்கள் என்றால்.. தேர்தல் சமயத்தில் ரோடு, குடிதண்ணீர் போன்ற வசதிகளை செய்து கொடுத்து அதன் மூலமாய் அரசு இயந்திரத்தின் மூலமாய் ஓட்டு வாங்கிவிடக் கூடாது என்பதற்காக்த்தான். ஆனால் சென்னையில் பல இடங்களில் புது ரோடுகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் தேர்தல் கமிஷன் அதை கண்டு கொண்டதாய் தெரியவில்லை. பணம், பொருள் போன்றவைகளை விநியோகம் செய்வதில் இம்முறை ஆளும் கட்சி தான் முன்னிலையில் இருப்பதாய் தகவல். ஆனால் அதையும் கேட்பதாய் இல்லை.உள்ளாட்சி தேர்தலுக்காக ஜனநாயக கடமையாற்றிவிட்டு வந்தவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஏண்டா ஓட்டுப் போட்டோம் என்று வருந்தப்படும் அளவிற்கு நிச்சயம் வரும் காலத்தில் நடக்கத்தான் போகிறார்கள். நாமும் மறுக்கா அடுத்த தேர்தலில் ஓட்டுப் போட வெய்யிலில் இருக்கத்தான் போகிறோம். என்னா கொடுமை சார் இது..
##########################################


சீனாவில் ஒரு பெண்ணை கட்டிப் பிடித்ததற்காக ஒருவரை 28 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்திருக்கிறார்கள். உடன் வேலை செய்த ஒரு பெண்ணை அந்த நபர் கட்டி அணைத்துவிட்டாராம். அந்தப் பெண் போலீஸ் கம்ப்ளெயிண்ட் கொடுத்திருக்கிறார். பிரச்சனை ஆகிப் போனதால் பார்ட்டி எஸ்கேப் ஆகிவிட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு அவரை தேடிப் பிடித்து கைது செய்திருக்கிறது சீனப் போலீஸ். இதில் உட்சபட்ச காமெடி என்னவென்றால். அன்றைக்கு கம்ப்ளெயிண்ட் கொடுத்தப் பெண் தான் தற்போது அவருடய மனைவி. நம்ம ஊர் போலீஸை விட ஸ்மார்ட் உலகம் பூராவும் இருக்காங்க போலருக்கு.
##########################################
அக்டோபர் 2 ஆம் தேதி நடக்கவிருந்த ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சி “மழையின் காரணமாய்” என்று சொல்லி தள்ளி வைக்கப்பட்டு கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது. சென்னையில் மழையே இல்லாத நேரத்தில் எதுடா மழை என்று யோசித்தவர்களுக்கு இதன் பின்னால் இருக்கும் விஷயம் கேட்டால் சுவாரஸயம். இதற்கு முன்னால் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பும் உரிமையை விஜய் தொலைக்காட்சிதான் வைத்திருந்தார்கள். சென்னை மட்டுமில்லாமல் தமிழ் நாடு முழுவதும் அவர்கள் அடித்திருந்த சிக்ஸ் ஷீட் போஸ்டர்கள் சும்மா அதிர செய்து கொண்டிருந்த நேரத்தில் , திடீரென நான்கு நாட்களுக்கு முன் நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமை ஜெயாடிவிக்கு மாறியது. வேறு வழியிலலாமல் கொடுக்கப்பட்டிருக்கும் நிகழ்ச்சி. அதனால்தான் ஆறு நாட்கள் தள்ளி நிகழ்ச்சியை நடத்த வேண்டியிருந்திருக்கிறது. திடீரென லோ ப்ரோபைல் ஆன பப்ளிசிட்டியால் நிகழ்ச்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லையாம். இம்முறை நிஜ மழையால் கோவை நிகழ்ச்சி தள்ளிப் போகிறது. அது சரி.. எல்லாரும் ராஜாவாகவோ, ரஹ்மானாகவோ முடியாது இல்லையா?
###########################################
டாக்டரு தெனம் அறிக்கை விட்டுக்கிட்டேயிருக்காரு. 2016ல பா.ம.க ஆட்சியாம்.  போன வாட்டி 2011ன்னு சொன்னதா ஞாபகம். என் குடும்பத்தில யாராவது அரசியலுக்கு வந்தா சாட்டையால அடிங்கன்னு சொன்னதாவும் ஞாபகம்.  பப்ளிக் மெமரி இஸ் ஷார்ட். அது மட்டுமில்லைன்னா..இந்த அரசியல் கட்சிககாரய்ங்க என்ன பண்ணுவாங்கன்னு தெரியலை. இரண்டு திராவிட கட்சிகளை விட்டு எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள் என்று இன்னொரு அறிக்கை. தலைவன் விஜயகாந்தின் அறிக்கையை காப்பியடித்தன் மூலமாய் தானே நின்ற தானைத் தலைவன் விஜய்காந்தின் புகழை இன்னும் ஓங்க செய்திருக்கிறார். சரக்கு கடைக்கு எல்லாம் பூட்டு போடப் போறேன்னு சொல்லிட்டேயிருக்கீங்களே எப்ப பண்ணுவீங்க..?
##########################################..
தத்துவம்
If You drink every Day you are an alcoholic.. Thank God we only drink every night.

ஒவ்வொரு வெற்றிகரமான மனிதனுக்கும் பின்னால் கணக்கிலடங்கா வலியிருக்கும். அந்த வலி தான் அவனை வெற்றிகரமான மனிதனாக்குகிறது. - லால் பகதூர் சாஸ்திரி.

எப்போதும் உன் திறமையை மற்றவர்களுடன் சரி பார்த்துக் கொள்ளும் பழக்கத்தை விட்டொழி. அதற்கு பதிலாய் உன் திறமைகளை மேலும் வளர்த்துக் கொள்ளும் வழியில் கவனம் செலுத்து - கலாம்.

எவன் ஒருவன் தன் மீது வீசப்பட்ட கற்களிலிருந்து வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றிகரமான மனிதன். எனவே எதையும் உதாசீனப் படுத்தாதீர்கள். - நாந்தேன்..
#########################################
ப்ளாஷ்பேக்என் இனிய நண்பர் ஷண்முகப்ரியன் சார் இயக்கிய படம். கதை ஒரு பக்கம் இறுக்கமாய் கட்டிய மல்லிகை போலிருந்தால் இன்னொரு பக்கம் நம் இளையராஜா அற்புதமான பாடல்களை கொடுத்திருப்பார். இப்படத்தில் ஒவ்வொரு பாடலும் சுகானுபவம்.


#########################################
யுடான்ஸ் கார்னர்
இரண்டு வாரங்களுக்கு முன் சதுரங்கம் திரைப்பட ப்ரிவீயூவில் வந்திருந்த பதிவர்கள் யுடான்ஸ் குறித்து சொல்லிய கருத்துக்களை உங்கள் www.tv.udanz.com ல் காணலாம். உங்கள் கருத்துக்களையும் அதில் சொல்லுங்கள். மற்றுமொரு சந்தோஷ செய்தி. பதிவர்களால் பதிவர்களுக்காக நடத்தப்படும் www.udanz.com மிக குறுகிய காலத்தில் அலெக்ஸா ரேங்கிங்கில் ஒரு லட்சத்திற்கு கீழே வந்திருக்கிறது. இந்த வெற்றி பதிவர்கள், நண்பர்கள், வாசகர்களாகிய உங்களையே சாரும். நன்றி..நன்றி..நன்றி.
########################################
என்னுடய பிரியாணி கதையை நண்பர் செல்வகுமாரின் இயக்கத்தில் தயாரித்து வருவது பற்றி உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருந்தேன். கார்க்கி, மற்றும் நண்பர்களுடனான ரிஹஸ்சல் பற்றிய வீடியோவை பார்க்க.. http://adf.ly/3EfOd
############################################
இந்த வார வீடியோ
நம்ம ஊரில் ஹிட்டன் கேமராவை வைத்து எவ்வளவு மொக்கையாய் செய்ய முடியுமோ அத்துனை மொக்கையாய் செய்வார்கள். இவர்களும் ஒரு நிகழ்ச்சி செய்திருக்கிறார்கள் பாருங்கள். செம கிளுகிளுப்பு.. பப்ளிக்கா போடறதைவிட நீங்களே போய் பாத்துக்கங்க.. http://adf.ly/3Evie
##############################################
அடல்ட் கார்னர்ஒரு பெண்கள் காலேஜில் சிறுகதை போட்டி ஒன்று வைத்தார்கள்.  ஒரே கதையில் மர்மம், ஆன்மீகம், காமம் எல்லாம் சேர்ந்து ஒரு கதை எழுத வேண்டும் என்பதுதான் போட்டி. வெற்றிப் பெற்ற கதை “ஓ கடவுளே..!! நான் கர்பமாக இருக்கிறேன்!!! இதற்கு யார் காரணம்?.

சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

Post a Comment

17 comments:

sugi said...

Nice kothu as usual. and how many houses have u built so far, thala :-)?

Krubhakaran said...

எல்லாரும் ராஜாவாகவோ, ரஹ்மானாகவோ முடியாது இல்லையா?
Soooooooooper

Gujaal said...

//தேர்தல் காலத்தில் மக்கள் நல பணிகள் எதையும் ஆளும் அரசு செய்யக்கூடாது என்று தேர்தல் கமிஷனின் கட்டுப்பாடு. சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன் இம்முறை எதையும் கண்டு கொண்டதாய் தெரியவில்லை. //

சட்டமன்றத் தேர்தலை நடத்தியது நடுவண் தேர்தல் ஆணையம் - பிரவீண்குமார். உள்ளாட்சித் தேர்தலை நடத்துவது தமிழகத் தேர்தல் ஆணையம் - சோ அய்யர் ( சோவ திட்டலீங்க, இவரு பேரே அதுதான்). அம்மாவே நியமிச்ச தேர்தல் ஆணையர்.

கேப்டன் மாதிரியே மறந்திட்டீங்களோ?

Ravikumar Tirupur said...

எப்ப 'பிரியாணி' போட போறீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

sema koththu

SURYAJEEVA said...

//எவன் ஒருவன் தன் மீது வீசப்பட்ட கற்களிலிருந்து வீடு கட்டிக் கொள்கிறானோ அவனே வெற்றிகரமான மனிதன். எனவே எதையும் உதாசீனப் படுத்தாதீர்கள். - நாந்தேன்..//

நம்பிட்டோம்

aotspr said...

வழக்கம் போல சூப்பர் கொத்து......

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

தருமி said...

என்னுடைய ‘அடல்ட் கார்னரில்’.....

Cable சங்கர் said...

தருமி சார்.. நான் தான் லேட்டோ?அவ்வ்வ்வ்

'பரிவை' சே.குமார் said...

Nice kothu.

IlayaDhasan said...

பிரியாணிக்கு வாழ்துக்கள். உயிரே ,உயிரே உருகாதே...அருமையான பாட்டு.

தமிழ் இனி மணம் வீசுமா?

R. Jagannathan said...

பிரியாணி கதை ரிஹர்சல் லிங்கும், ஹிட்டன் காமரா லிங்கும் ஏதோ அட்வெர்டைஸ்மெண்டைத்தான் கன்னெக்ட் செய்கிறது. ஹெல்ப்பவும்.

கலாம், சாஸ்த்ரியைவிட நாந்தேன் தேன் நல்ல தத்துவம் சொல்லியிருக்கிறார்! அவர் எந்த நூற்றாண்டு அறிஞர்?!

ஹாரிஸ் - விஜய் டி வி - ஜெயா ட்வி பற்றி: இவங்களும் ஆரம்பிச்சுட்டாங்கையா ஆரம்பிச்சுட்டாங்கையா!

-ஜெ.

ஈரோடு கதிர் said...

//சென்ற சட்டமன்ற தேர்தலில் கண்கொத்திப் பாம்பாய் இருந்த தேர்தல் கமிஷன்//

மத்திய / மாநில தேர்தல் ஆணையம் வேறுவேறு!

shortfilmindia.com said...

மாநிலமானால் என்ன மத்திய ஆணையமாய் இருந்தால் என்ன அவர்கள் செய்ய வேண்டிய வேலை ஒன்றுதானே..?

Srikar said...

உங்க கொத்து பரோட்டா சுவையான பரோட்டா சார்

Videos too super sir,

சி. முருகேஷ் பாபு said...

அன்பு கேபிள்ஜி,
உங்கள் நாந்தேன் தத்துவத்தை போனவாரம் குங்குமம் இதழில் திருப்புமுனையில் பிரகாஷ்ராஜ் கட்டுரையில் படித்ததாக நினைவு...
என்மீது கல் எறியாதீர்கள்... அதை வைத்து நான் வீடு கட்டிக் கொள்வேன் என்று!

அதேபோல, டாக்டர் ராமதாஸ் அரசியலில்தான் இருக்கிறார். என் குடும்பத்தில் இருந்து யாரேனும் அதிகாரத்துக்கு வந்தால் நடுரோட்டில் சவுக்கால் அடியுங்கள் என்றார். அன்புமணியை அடிக்காமல் விட்டுவிட்டோம்... என்ன செய்வது!

R. Vijay said...

ஹாரிஸ் ஜெயராஜ் விஷயத்தில் வரலாறு தொடருகிறது. கொடுமை கொடுமை என கோவிலுக்கு போனா அங்க ஒரு கொடுமை திங்கு திங்குனு ஆடித்தான் !!!