Thottal Thodarum

Aug 8, 2010

உங்கள் பக்கம்

ஒரு கவிதை எழுதியிருக்கேன், சிறுகதை எழுதியிருக்கிறேன். கட்டுரை எழுதியிருக்கிறேன் உன் பதிவில் போட முடியுமா? என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா? என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு நான் வலைப்பூ ஆரம்பித்து கொடுத்திருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில்  பதிவர்கள், எழுத்தாளர்கள் எழுதும் கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் எழுத விரும்புபவர்கள் அவர்களுடய கதை, கட்டுரை, கவிதைகளை  எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பிரசுரிக்கப்படும்.  கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி..
***************************************************************************
இக்கட்டுரையை எழுதியவர் திரு. தினேஷ்(எ) சாம்ராஜ்யப்ரியன். இப்போது இந்த தளத்தில் எழுதி வருகிறார்.http://www.ithutamil.com/post.aspx?user=samrajyapriyan@gmail.com

வாத்சாயனரும், சுழி பாகையும்
சுமார் இருநூற்று சொச்சம் வாரங்களுக்கு முன் என் வயது என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள். தலையில் இடி விழுந்தாலும் சிரிக்கிற வயது. ஏனென்றால் அப்ப கூடவே நண்பர்கள் ஒட்டிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் தலையிலும் சேர்ந்து தானே அது விழும். தனிமையில் நேரும் துன்பம் தான் மகா கொடுமை. நம்மோடு சேர்ந்து துக்கப்பட சக நண்பர்கள் இருந்தால், எல்லாமே சுகம் தான். நிழல் கூட வெளிச்சத்தில் மட்டுமே. ஆனா இவர்கள் பாசக்கார பயல்கள். நட்பு என்ற போர்வையில் இரவில் பேயாகவும், பகலில் மாறு வேட உளவாளி போலவும் உடனிருந்து கழுத்தறுப்பார்கள். சரி விடுங்க. நாம அவங்களை அறுக்கிறோம். பதிலுக்கு அவர்கள். இப்படி தான் வாழ்க்கை போல் என்று மகிழ்ந்திருக்கும் சமயத்தில் தான் மின்னலாக அந்த ஆசை எங்கள் மனதில் மின்னியது. ஆனால் மின்னல் போல் அந்த ஆசை மறைந்து தொலைய வில்லை.

அனைத்தும் தெரிந்த என் நண்பன் ஒருவனுக்கு, 'வாத்சாயனர்' அப்படி ஒன்றும் புதிதாக கண்டுபிடித்து எழுதி இருக்க மாட்டார் என்று கோபம். எங்களுக்கும் அதில் என்ன இருக்கும் என்று தெரியவில்லை. சரி கண்ட கருமத்தையும் படித்து, மனப்பாடம் செய்து தேர்வில் வாந்தி எடுக்கிறோமே, வாத்சாயனரின் புத்தகத்தை ஒருமுறை படித்தால் என்ன என்பது தான் எங்களது ஆசை.

வசதியாக எங்களுக்கு என்று நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி அப்பொழுது தொடங்கினார்கள். எங்கள் கல்லூரியின் மேல் தளத்தில் இருந்து பார்த்தால், நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் இருக்கும் பெரிய தொம்பை வடிவ வெண்ணிற குளிர்விக்கும் கோபுரங்கள், புகைப் போக்கிகள், அதில் இருந்து வெளியேறும் புகை என்று அனைத்தும் நீல நிற வானத்தின் கீழ் மெல்லிய சாயை போன்ற அற்புத பிம்பத்தை தோற்றுவித்திருக்கும். சரி நெய்வேலி அருகில் தானிருக்கும் போல் என்று முடிவுக்கு வந்தோம். ஒரே ஒரு புத்தகத்திற்காக அனைவரும் கூட்டமாகவா செல்வது? எப்பொழுதும் எங்கள் மீது படிந்துக் கொண்டிருக்கும் வரலாற்றின் மீது எங்களுக்கு ஒரு அலாதி பிரியம். ஒருவழியாக பேசி முடிவெடுது என் தலைமையில் மூவர் கூழு மட்டும் ஒரு ஞாயிற்றுக் கிழமையில் போவதாக தீர்மானித்தோம். பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு தனி தனியாக வந்து, அங்கிருந்து ஒன்றாக கிளம்புவதாக ஏற்பாடு.

நாங்கள் திட்டம் போட்டது போலவே சனிக்கிழமைக்கு பிறகு அந்த எங்களின் ஞாயிற்றுக் கிழமை பிறந்தது. 'நான் கண்காட்சிக்குப் போறேன்.. புத்தகம் எல்லாம் வாங்கப் போறேன்' என்று வீட்டிலிருந்த தாத்தா, பாட்டி போன்ற பெரியவர்களின் ஆசியோடு முதல் ஆளாக பண்ருட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று விட்டேன். மனது தாங்கா பெரும் ஆர்வத்தோடு ஒரு மணி நேரம் உற்சாகமாக நின்றுக் கொண்டிருந்தேன். திடீரென்று நடு மண்டையில் நண்பகல் வெயில் உறைத்தது. அந்த பொறுப்பில்லாத நண்பர்கள் என்னை நட்ட நடு பேருந்து நிலையத்தில் தனியா தவிக்க விட்டுட்டானுங்க. ச்சே.. என்ன உலகம் இது என்று கோபம் கோபமாய் வந்தது. சரி எவனையும் நம்பி நானில்லை என தீர்மானித்து, இனி ஒற்றை ஆளாக காரியத்தை முடிக்க வேண்டியது தான் என நெய்வேலிக்கு கிளம்பி விட்டேன்.

கையில் வெறும் ஆயிரம் ரூபாயோடு நெய்வேலியில் இறங்கி டாக்கு.. டீக்கு.. என்று நடந்து ஒரு வழியாக கண்காட்சி நடக்கும் இடத்தை தேடிக் கண்டுபிடித்து விட்டேன். நல்ல வெயில். நல்ல கூட்டம். எனக்கு இது முதல் முறை என்பதால்.. கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் என்னையே வினோதமாக பார்ப்பது போல் இருந்தது. சரி நாம வாத்சாயனரின் புத்தகம் தான் வாங்க வந்தோம் என்பதை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்பதற்காக அனைத்து அரங்கிலும், பெரும்பாலான புத்தகங்களை திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடைசியில் வாத்சாயனரின் புத்தகம் கண்ணில் பட்டது. நாசூக்காக அதை எடுத்து விலையை பார்த்தேன். சரி இன்னமும் என்னை யாராவது கவனிக்கிறார்களா என்று மெதுவாக ஓரக் கண்ணில் சுற்றி கவனித்தேன். எனக்கு தென் மேற்கு திசையில் ஜோல்னா பை சகிதமாக பைஜாமாவில் இருந்த நாற்பது வயதுக்காரர் என்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்தார். என்னை தான் என்பதில் சந்தேகம் இல்லை. முன்பை விட கூட்டம் அதிகமாகி இருந்தது. அதனால் உண்டான இறுக்கம், புழுக்கம், தாகம் என இவை அனைத்தும் ஒரு சேர உண்டாக்கிய எரிச்சல் காரணமாக புத்தகத்தை வைத்து விட்டு வெளியில் வந்து விட்டேன். கூட்டத்தில் நழுவி மறைந்து திரும்பி பார்த்தால், அந்த பைஜாமாவின் கையில் இருந்தது வாத்சாய்னரின் புத்தகம். சரி தான் வேறு அரங்கில் வாங்கிக் கொள்ளலாம் என நினைக்கும் பொழுது தான் அச்சம் தோன்றியது. வெள்ளிக்கிழமை தான் மீசை முழுவதுமாக மழித்திருந்தேன். என் உருவம், வடிவம், குரல், முகம் எல்லாம் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் பள்ளி பருவத்தினன் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி விடும். உடன் வரவிருந்த தடியன்களின் அவசியத்தை அப்பொழுது தான் உணர்ந்தேன். அதற்கு மேல் கால் நகரவில்லை. புத்தகக் கண்காட்சிகளில் எல்லாம் வாத்சாயனரின் புத்தகம் கிடைக்காது போல என நண்பர்களிடம் சொல்ல வேண்டியது தான் என முடிவெடுத்ததும் கால் நகர் ஆரம்பித்து விட்டது. சரி தாத்தா புத்தகம் வாங்க ஐந்நூறு ரூபாய் கொடுத்து அனுப்பினாரே, அவருக்காகவாது ஒரு புத்தகம் வாங்கனும் என்று தோன்றியது.

மீண்டும் பராக்கு பார்ப்பது தொடங்கியது. ஒரு அரங்கில் ராசலீலா- சாரு நிவேதிதா என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இவரின் பேட்டியை ஆனந்த விகடனில் படித்திருந்தேன். அந்த பேட்டியில் வந்த புகைப்படத்தில்.. மேல் சட்டை இல்லாமல் கையில் பெரிய ஆங்கில புத்தகத்தோடு கழுத்தில் தடிமான தங்க சங்கிலி சகிதமாக கடற்கரை மணலில் பந்தாவாக அவர் காட்சி அளித்தது ஞாபகம் வந்தது. 'நான் எழுத்தாளர் என்று தமிழ்நாட்டுல யாருக்காவது தெரியுமா? இதுவே மலையாளத்துல... ' என்ற ரீதியில் இருந்த அவரது சமூக கோபம் கொண்ட ஆவேசப் பேட்டியை கண்டு நான் அசந்திருந்தேன். ஆனால் புத்தகம் பெரிதாக இருந்தது. சரி பெரிய எழுத்தாளர்ன்னா பெருசா தான் எழுதுவாங்க என வாங்கி விட்டேன். அவருடைய 'ஜீரோ டிகிரி படிச்சுட்டீங்களா?' என்று புத்தகத்திற்கு பில் போட்டவர் கேட்டார். நான் படித்தது இல்லை எனத் தெரிந்ததும்.. 'சாருவோட சிறந்த புத்தகம்னா அது.. இது தான். இதை கண்டிப்பா படிக்கனும்' என்று இலவசமாக தருவது போல் மிரட்டி அதற்கும் சேர்த்து பணம் பிடுங்கிக் கொண்டார்.

எல்லாம் சுபம் என்பதால் மனதில் பெரும் நிறைவு சூழ்ந்தது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு யோசிக்கும் என் திறனை வானளாவிய அளவில் சுயமாக புகழ்ந்துக் கொண்டே வீடு திரும்பினேன். வீட்டுக்கு போய் அனைவரிடமும் சாருவின் பெரிய புத்தகத்தை காட்டினேன். ராசலீலா என்றால் கிருஷ்ணர், கோபியர்கள் அல்லது அதன் அடைப்படையில் ஏதாவது புனைந்து எழுதியிருப்பார் என்று நம்பியது தான் அதற்கு காரனம். பண்டித பெருமிதத்துடன் முகத்தை வைத்துக் கொண்டு 'ஜீரோ டிகிரி'யை திறந்தேன். அந்த புத்தகத்தின் முதல் இரண்டு பக்கங்கள் படித்ததும் நான் செய்த முதல் வேலை, அந்த இரண்டு புத்தகங்களும் எவர் கண்ணுக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தது தான். தேள் கொட்டிய திருடன் போல்.. அடிக்கடி அந்த புத்தகம் அங்கே தான் இருக்கிறதா என பார்ப்பது வேறு வழக்கம் ஆகி விட்டது. நடு நடுவில் எவரும் இல்லாத சமயத்தில்.. 'போக போக நல்லா இருக்குமோ?' என்ற சபலத்தில் ஏதாவது ஒரு பக்கத்தில் தலையை விடுவேன். ம்ஹூம்.. தெனாலிராமன் வளர்த்த பூனையின் நிலை தான் எனக்கும். எங்கள் கல்லூரியில் இந்த புத்தகத்தை படிக்க யாருமே முன் வரவில்லை. நான் அந்தப் புத்தகத்தின் அருமை பெருமைகளை முடிந்த வரை தூக்கிப் பார்த்து விட்டேன். ஆனால் வாத்சாயனரின் புத்தகத்தை வாங்க முடியாத இயலாமையை மறைக்க நினைப்பதாக நினைத்து சாருவின் புத்தகங்களை படிக்க மறுத்து விட்டனர். பயப்புள்ளைங்க துளி படித்திருந்தால் கூட கசக்கி பிழிந்திருப்பார்கள்.. புத்தகத்தை அல்லது என்னை. இணையத்தில் மட்டுமே விளம்பரம் பண்ணினால் இப்படி தான்.. பலருக்கு பலது தெரியாமல் போகும் போல. 

புதையலை காக்கும் பூதம் போல கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் அப்புத்தகத்தை பிறர் கண்ணிலிருந்து காத்து வந்தேன். சமீபத்தில் தான் என்னைப் போல் ஒருவரும் ஏமாந்து, அப்புத்தகத்தை வாங்க இருந்தார். இது தான் சமயம் என்று புதையலை தள்ளி விட்டு விட்டேன். பின்னாளில் வம்பாகி விடப் போகிறதென, பேச்சுக்கு எச்சரிக்கையும் செய்து விட்டேன்.

ஒருவழியாக நிம்மதி அடைந்தாலும் ஆசை யாரை விட்டது. சாருவை பற்றி தெரியாமல் வாங்கியதால் தான் அந்த நிலைமை போல என்று சமாதானம் ஆகி அவரின் 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' என்ற புத்தகம் மேல் ஆவல் பிறந்து விட்டது. இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியில் அவரின் கையெழெத்தோடு அப்புத்தகத்தை வாங்கினேன். கையெழுத்து போடும் பொழுது, நான் உண்மையாக அந்த புத்தகத்தை படிக்க தான் வாங்குகிறேனா என்ற சந்தேகம் அவர் கண்ணில் தோன்றியது போல் ஒரு பிரமை. சட்டென்று வேகமாக கையெழுத்து போட்டு விட்டு, எனக்கு பின்னால் அவரது புத்தகத்தை கையிலும் புன்னகையை வாயிலும் வைத்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சென்று விட்டார். இப்ப எனக்கு சந்தேகம்.. இந்த பொண்ணு நிஜமாலுமே இவர் புத்தகத்தை படிக்க தான் வாங்கி இருப்பாங்களா என!! பெண் பார்க்க சுமார் தான் (இவரை ஒப்பிடும் பொழுது).

நல்லவேளை.. இந்த முறை என் எதிர்பார்ப்பு வீண் போகவில்லை. 'எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்' கொஞ்சம் புரியாத மாதிரி இருந்தாலும், படிக்க நன்றாக தான் இருந்தது. முன்பெல்லாம் சாரு என்றால் அந்த ஆனந்த விகடன் பேட்டி ஞாபகம் வரும். இப்பொழுதெல்லாம் இருபத்திரண்டாம் நூற்றாண்டில் பிறக்கப் போகும் 'நித்ய மூளை' சொன்னது தான் ஞாபகத்திற்கு வருகிறது.
சாரு வீட்டு
வாசற் கதவும்
வசை பாடுமே!!
டிஸ்கி: நேருக்கு நேர் கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்கும் தொலைவில் அவரை இருமுறை பார்த்த இதுவில் இதை சொல்கிறேன். ஒரு மாதிரி எழுதினாலும், பேசினாலும்.. ஆளு நேர்ல பார்க்க பெரிய மீசை வச்ச பாப்பாவாட்டும் தான் இருக்கிறார்.
***************************************************************************************** Zero degree என்பதை "சுழி பாகை" என்று மொழிபெயர்த்துள்ளேன். எந்த அளவுக்கு சரி என தெரியவில்லை.
தினேஷ் (எ) சாம்ராஜ்யப்ரியன்
டிஸ்கி: இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..

Post a Comment

34 comments:

தினேஷ் ராம் said...

:-)

க ரா said...

நல்ல ஊக்குவிப்பு..

Rajkumar said...

நான் பார்த்த சில ஆங்கில தளங்களில், இதுபோல மற்றவர் பதிவினை வெளியிடுவார்கள்.
நமக்கே அனைத்தும் தெரியும் என்று இல்லையே! அடுத்தவருக்கு வாய்ப்பு தருவது நல்ல விஷயம்.

Unknown said...

புது முயற்சி. வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

புது முயற்சி. வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//நல்ல ஊக்குவிப்பு..//

எலேய் ராமசாமி என்னது கேபிள் அண்ணா ஊக்கு விக்கிறாரா? என்ன விலை?

வாழ்த்துக்கள் புதிய முயற்சி..

vinthaimanithan said...

ம்ம்ம்.... ஞாயித்துக்கெழமை "உங்கள் பக்கம்", திங்க கெழமை "கொத்துபரோட்டா" இப்படியே கேபிள் பக்கம் வார இதழா மாறிட்டு இருக்கு! வாழ்த்துக்கள் தல. அப்படியே நம்மளயும் கொஞ்சம் கண்டுகிடுங்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

புது முயற்சி. வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

உங்கள் நோக்கம் சிற்பபானது. கும்றவுங்க இப்ப எதுவும் குத்த மாட்டுறாங்க? ஏன்?

Unknown said...

//இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..//

இது சாருக்காக போடப்பட்ட டிஸ்கி ...

Vijayashankar said...

nice!

here too...

http://classroom2007.blogspot.com/2010/08/blog-post_08.html

பித்தன் said...

புது முயற்சி. வாழ்த்துக்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Vikatan la unkalai paththi sollirukaanga. vazhthukkal

'பரிவை' சே.குமார் said...

புது முயற்சி. வாழ்த்துகள்.

R.Gopi said...

ஊக்குவித்தால்
ஊக்கு விற்பவனும்
தேக்கு விற்பான்

கவிஞர் வாலியின் வரிகள் நினைவுக்கு வந்தது...

சங்கர்ஜி... உங்களின் புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்....

Paleo God said...

வாழ்த்துகள் தல!

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்த்துகள்.

பாரதி said...

நல்ல ஊக்குவிப்பு....
என்னை போன்ற புதியவர்களுக்கு உதவியாய்
இருக்கும்....

www.bharathikavidhai.blogspot.com

vinu said...

ippudi oobi adichiteengaleaaaaaaaaaai meant, i came to read yur posts and word and thoughts ..............but you you you..............

made me NEA

cheena (சீனா) said...

அன்பின் சாம்ராஜ்ய ப்ரியன்

அருமை அருமை - புத்தக்க் கண்காட்சிக்குச் சென்று புத்தகம் வாங்கியதைப் பற்றிய இடுகை அருமை.

நல்வாழ்த்துகள் சா.பி

இடம் கொடுத்து உதவிய கேபிள் சங்கர் - நன்றி

கல்கியில் கதை வெளிவந்ததற்கும் நல்வாழ்த்துகள் ஷங்கர்

நட்புடன் சீனா

THOPPITHOPPI said...

ORU ANUBAVAM ULLA EZUTHTHAALARIN MUDIVU(TISKI) POL ULLADHU VAALTHTHUKKAL SHANKAR SIR.

டிஸ்கி: இக்கட்டுரையின் கருத்துக்கள் என் கருத்துக்கள் அல்ல..

பரிசல்காரன் said...

Idea!

Swengnr said...

நன்றாக இல்லை! மன்னிக்கவும்! உண்மையிலே சகிக்க வில்லை.

பிரபல பதிவர் said...

தல உங்கள் எழுத்துக்காகத்தான் உங்கள் வலை பக்கம் வர்றோம்.. இது நல்லா இல்ல... வேணும்னா லிங்க் குடுங்க.... அது பெட்டர்.... என் தனிப்பட்ட கருத்து....

Sri said...

உங்கள் பின்னூட்டம்....
ஒரு கவிதைக்கு பின்னூட்டம், ஒரு சிறுகதைக்கு பின்னூட்டம் எழுதி இருக்கிறேன், உன் ID வழியாக போட முடியுமா என்று பல நண்பர்கள், இணையம் தொடர்பு இல்லாதவர்கள், வலைப்பூ ஆரம்பிக்க ஆர்வமில்லாதவர்கள், வலைப்பூ வைத்துக் கொண்டும் ஒரு பதிவு உங்கள் வலைப்பூவில் போட முடியுமா? என்று கேட்டவர்கள் நிறைய பேர். அப்படி கேட்டவர்களுக்கு ID ஆரம்பித்து கொடுத்து இருக்கிறேன். சில பேர் அதை ஆரம்பித்ததோடு சரி.. வேறேதும் செய்யாமல் மீண்டும் என்னிடம் வந்து அதுக்கெல்லாம் டைமில்லை நீயே போட்டுறு என்று கேட்டுக் கொண்டார்கள். ஸோ.. ஒரு சின்ன முயற்சி இனி ஒவ்வொரு ஞாயிறும் இந்த தளத்தில் உங்கள் பக்கம் பகுதியில் பின்னூட்டம் எழுத இடமளிக்கலாம் என்றிருக்கிறேன். என்ன சொல்கிறீர்கள். இந்த பகுதியில் பின்னூட்டம் இட விரும்புபவர்கள் அவர்களுடய பின்னூட்டம் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் படித்து தெரிந்தெடுத்து பின்னூட்டம் இடப்படும். கொஞ்சம் லேட்டானாலும் முடியும்னு நம்புறேன். நன்றி..

Srini

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல திங்கிங் உங்களுக்கு.சுஜாதா இது போல் மற்றவரை ஊக்குவிக்கும் பழக்கத்தை வளர்த்து தானும் புகழ் பெற்று .மற்றவரையும் புகழ் பெற செய்தார்.நீங்களும் அது போல் புகழ் பெற வாழ்த்துக்கள்

Cable சங்கர் said...

@samrajyapriyan
:)

@இராமசாமி கண்ணன்
நன்றி

@மு.இரா
நன்றி

@கலாநேசன்
நன்றி

@வெறும்பய
நன்றி

Cable சங்கர் said...

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி

2விந்தைமனிதன்
கண்டுகிட்டா போச்சு

@டி.வி.ராதாகிருஷ்ணன்
நன்றி

@ஜோதிஜி
அதுக்கெல்லாம் பயந்தா முடியுமா?

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி.செந்தில்
ஓகே.ரைட்ட்.. அப்புறம்..

@விஜயசங்கர்
நிச்சயம் வந்து பார்க்கிறேன்

@பித்தன்
நன்றி

@சே.குமார்
நன்றி

@ஆர்.கோபி
நன்றி

@ஷங்கர்
நன்றி

@ஸ்டார்ஜான்
நன்றி

Cable சங்கர் said...

@#உஜ்ஜாலாதேவி
நனரி

@பாரதி
நன்றி

@வினு
மத்தவஙக்ளையும் அறிமுகப்படுத்தலாமே..

@சீனா
நன்றி

Cable சங்கர் said...

@ரம்யா
நன்றி

@மழைகாலநண்பன்
நன்றி

@பரிசல்காரன்
நன்றி

@ராஜ்கண்ணா..
ஓகே நன்றி

@சிவகாசி மாப்பிள்ளை

ரைட்டு தலைவரே

@ஸ்ரீ
நல்ல ஐடியா..:)

Cable சங்கர் said...

@சி.பி.செந்தில்குமார்
நன்றி

Cable சங்கர் said...

@சி.பி.செந்தில்குமார்
நன்றி

Radhakrishnan said...

நல்ல முயற்சி, இருப்பினும் எழுத நினைப்பவர்கள் இங்கு நாம் பின்னூட்டம் இட்டதை பற்றி என்ன கருத்து சொல்வார்கள் என்பதையும் அறியத் தந்தால் இன்னும் சிறப்பே.:) கட்டுரைதனை படித்துவிட்டு பின்னர் கருத்துரை எழுதுகிறேன்.