Thottal Thodarum

Aug 9, 2010

கொத்து பரோட்டா- 9/08/10

கடந்த இரண்டு மூன்று வாரமாக ப்ரொபைல் இல்லாத பெயரில் நான் இதை எழுத வேண்டும், அதை எழுத வேண்டும், இது ஆபாசம், அது இது என ஒரே ஆள் பல பெயர்களில் வந்து ஏதோ எனக்கு நல்லது செய்வதாய் நினைத்துக் கொண்டு,  அட்வைஸ் மழை பொழிந்து கொண்டிருக்கிறாரகள். அதிலும் சில பின்னூட்டங்கள் ஒரு படி மேலே போய் உங்கள் எதிர்காலத்துக்கு இதை எழுதினால் நல்லதல்ல. என்பது போன்ற பாசப்பிணைப்பான அட்வைஸ்கள் வேறு. அய்யா ப்ரொபைல் இலலாத நண்பரே.. நான் பதிவெழுத வந்த போது இதை தான் எழுத வேண்டுமென்று, முடிவெடுத்தோ, அல்லது எதை எதையெல்லாம் எழுதலாம் என்று மற்றவர்களை கேட்டுக் கொண்டோ எழுதவில்லை. எனக்கு தோன்றியதை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என் பதிவுகளை குறித்தான  உங்களின் தார்மீக ரீதியான  மாற்று கருத்துகளுக்கான விமர்சனங்களை நான் வரவேற்கிறேன், எதிர்பார்க்கிறேன். அதனால் தான் முகவரியில்லாத பின்னூட்டங்களை பதிவு பற்றிய விமர்சனமாய் இருந்தால் வெளியிடுகிறேன். ஆனால் தொடர்ந்து அதை எழுது, இதை எழுதாதே என்று Insist செய்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொல்வதால் நிச்சயம் நான் என் வழக்கத்தை மாற்ற போவதில்லை. எனக்காக தோன்றும் வரை.. ஸோ.. சாரி.. மன்னிக்கவும். அதனால் உங்களுடய பொன்னான நேரத்தை எனக்கு அட்வைஸ் செய்வதில் செலவிடாமல் வேறு உருப்படியான வேலைகளை செய்யலாம்.  I know My Worth!!!!!
*******************************************************************************
மதிமுக, மற்றும் ப.ம.கவுக்கான அரசியல் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்ய போகிறதாம் தேர்தல் ஆணையம். மதிமுகவின் கடந்த தேர்தல்களில் அவர்கள் பெற்ற வாக்கு சதவிகிதம் தேர்தல் ஆணையம் நிர்ணையிக்க பட்ட விகிதத்தைவிட குறைவாக இருந்தத்தினால் அவர்கள் கட்சியின் மாநில கட்சி அங்கீகாரத்தையும், ப.ம.கவுக்கு பாண்டிச்சேரி மாநில கட்சி அங்கீகாரத்தையும் நீக்க போவதாய் அறிவித்திருக்கிறது. இவர்கள் 2011ல் ஆட்சியை பிடிக்கப் போகிறவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது நாங்கள் இல்லாமல் தமிழ்நாட்டில் ஒரு கட்சியும் வெற்றி பெற முடியாது என்று மீண்டும் யார் சேர்த்துக் கொள்வார்கள் என்று தேடிக் கோண்டிருக்கிறது.  ம்ஹும்.
*******************************************************************************
செவிக்கினிமை
எல்லோரும் தமிழ் எந்திரன் பாடல்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்க, ஆந்திராவில் இரண்டு நாள் முன்னால் தான் தெலுங்கு எந்திரன் ஆடியோ ரிலீஸ். சிரஞ்சீவி சீப் கெஸ்டாக வந்திருந்து வெளியிட்டிருக்கிறார். ஆனால் ஆந்திராவில் அதற்கு முன்னரே ரஹ்மான் ஒரு கலக்கு, கலக்கியிருந்தார். எஸ்.ஜே.சூர்யாவின் இயக்கத்தில் பவர் ஸ்டார் பவன்கல்யாண் நடித்து வெளிவர இருக்கும் “கொம்மரம் புலி” பட பாடல்கள் ஒரு சில வாரங்களுக்கு முன் தான் வெளியிட்டிருக்கிறார்கள். அதில் வரும் ”Amma thalli” “Power Star” “Nammakame” என்று வித்யாசமான பாடலகளை தந்து அசத்தியிருக்கிறார். அதிலும் அம்மா தல்லி பாடலில் வரும் டங்க் டுவிஸ்டர் போன்று வரும் பாடல் வரிகளுக்கு படபட சுவேதாமேனனின் குரலும், நரேஷ் ஐயரின் இழையலும். சரியான கலவை. ரஹ்மானின் குரலில் வரும் மாராலண்டே கொஞ்சம் சுதந்திர நாட்டு பற்று வாசனை அடித்தாலும் நைஸ் காம்போஸிஷன். அதிலும் சித்ராவின் குரலில் வரும் நம்மகமே பாடல் Soothing melody.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&& 
இந்த வார சந்தோஷம் 
சென்ற வாரம் தினத்தந்தியில் சினிமா வியாபாரம் புத்தகத்தை பற்றிய சிலாகித்த பாராட்டும், இந்த  வார விகடனில் என்னையும் சேர்த்து, பரிசல், விக்னேஷ்வரி, தீபா, வழக்கறிஞ்சர் வரதராஜன், ஓசை செல்லா ஆகியோரின் வலைப்பூ குறித்த பேட்டிகள் விகடனில் வெளிவந்ததும், கல்கியில் என்னுடய சிறுகதை “எண்டார்ஸ்மெண்ட்” வெளிவந்ததும் தான். பேட்டி குறித்தான உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே.. எல்லாம் நீங்கள் கொடுக்கும் ஆதரவினால் தான்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இன்ஸெப்ஷன் படத்தை பற்றி ஏகப்பட்ட விமர்சனங்கள். கிரிஸ்டபர் நோலனின் வித்யாசமான் திரைக்கதை, ஒரு மனிதனின் மூளையில் இப்படியெல்லாம்கூட யோசிக்க முடியுமா என்ற ஆச்சர்யம் கலந்த எண்ணம் எழாமல் படம் பார்க்க முடியாது. படத்தை பார்த்து ஒவ்வொருவர் ஒருவிதமாய் புரிந்து கொண்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள். நானும் எழுத நினைத்து, இன்னொரு முறை பார்த்துவிட்டு எழுதுவோம் என்று இருக்கிறேன். பதிவுலகை பொறுத்தவரை ஜெய் எழுதிய விமர்சனம் அருமை. சமீபத்தில் சாருவின் இன்ஸெப்ஷன் பற்றிய பர்சப்ஷன்  அட்டகாசம்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கலைஞர் டிவியில் வந்து கொண்டிருந்த  ”எல்லாமே சிரிப்புத்தான்” என்கிற நிகழ்ச்சியில் பங்கு பெற்ற திண்டுக்கல் சரவணன் என்பவரின் வெர்சடைலிடி அருமையாய் இருக்கும். உதவி இயக்குனராக ஆசைப்பட்டு, பின்பு காதல் படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்து, எல்லாமே சிரிப்பு நிகழ்ச்சியின் மூலமாய் இன்று பிரபல மிமிக்கிரி  கலைஞராய புகழ் பெற்றிருக்கும் இவரின் ஆரம்ப கால மிமிக்கிரி ஸ்க்ரிப்டுகளை முதல் முதலில் கேட்ட நண்பன் என்கிற முறையில் அவரின் வளர்ச்சி சந்தோஷத்தை அளிக்கிறது. மேலும் அவர் பல உயரம் தொட வாழ்த்துகிறேன்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
நளனின் இந்த குறும்படம் செம நக்கலும், நையாண்டியுமானது. குறும்படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்படத்தை பார்த்தாலே தெரியும். புரியும். இப்படம் கூட ஒரு சேனலின் போட்டிக்காக  எடுத்து அதில் ஒளிபரப்பாமலே செலக்ட் ஆன  படம் என்று கேள்வி!!!!. எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது. செவி வழி செய்தி. பட்.. நிஜமாகவே ஒரு குறும்படம் எடுக்க இவ்வளவு கஷ்டப்பட்டுதான் ஆகவேண்டும் பார்க்கும் நமக்கு வேணுமானால் காமெடியாய் இருக்கும். இயக்குனருக்கு ரத்தக் கண்ணீர் வரும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கேப்டன் டிவியில் ஒரு வித்யாசமான ஷோ ஆரம்பிக்க இருக்கிறார்கள். நம்ம கேப்டன் வழக்கமாய் செய்யும் திரையில் செய்யும் வேலையை வேறு ஒருவரை வைத்து கான்செப்ட் செய்திருக்கிறார்கள். அநியாயத்தை எதிர்ப்பது, உரிமையை கேட்பதும், கோபப்படுவதையும் தான்.  இந்த நிகழ்ச்சியின் கதாநாயகன் யார் தெரியுமா? நம்ம டிராபிக் ராமசாமி. நிகழ்ச்சியை தயாரிப்பவர் என் இயக்குனர் நண்பர் என்.வி. நட்ராஜ் அவர்கள். அவருக்கு வாழ்த்துக்கள். 
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார தத்துவம்
ரிஸ்க் எடுப்பதற்கும், கடுமையாக உழைப்பதற்கும் தயங்காதீர்கள். கடலில் முத்தெடுக்க ஆழ்கடலில் மூச்சடக்கித்தான் ஆக வேண்டும் முத்து கடற்கரையில் கிடைக்காது.

எப்போது ஒரு மனிதனை அவன் தற்போது இருக்கும் நிலையில் மதிப்பு கொடுக்காதே. நேரம் வந்தால் சாதாரண நிலக்கரி வைரமாக மாறும் போது.. மனிதனுக்கு எம்மாத்திரம்.
*****************************************************
ஏ ஜோக்
மூன்று பெண்கள் ஒரு பெண் பாஸிடம் வேலை செய்து கொண்டிருந்தார்கள். தங்கள் பாஸ் தினமும் சீக்கிரமே கிளம்பிவிடுவதை பார்த்து, அவர் கிளம்பிய உடனேயே தாங்களும் கிளம்பி விட்டாள் பாஸுக்கு எப்படி தெரியும். என்று ப்ளான் செய்து பாஸ் கிளம்பியவுடன் அவர்களும் கிளம்பினார்கள். முதலாமவள் சீக்கிரமாய் வீட்டிற்குப் போய் தன் குழந்தைகளுடன் விளையாடி பொழுது போக்கி சீக்கிரமே தூங்கப் போனாள். இரண்டாமவள் தன் கணவனுடன் ஷாப்பிங் சென்று விட்டு ஹோட்டலில் உணவருந்திவிட்டு இரவு கொண்டாட்டமாய் பொழுதை கழித்தாள் மூன்றாமவள் வீட்டிற்கு போய் தன் கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சத்தமில்லாமல் கதவை திறந்து உள்ளே போனாள், உள்ளே கசமுசவென முக்கல் முனகல் சவுண்ட் கேட்க, ரகசியமாய் கதவை திறந்தவள் அங்கே தன் பாஸ் அவள் கணவனுடன் சல்லாபிப்பதைப் பார்த்து அதிர்ந்து போய் வெளியே வந்து விட்டாள். அடுத்த நாள் எல்லோரும் தங்கள் அனுபவத்தை கூறி இன்றும் நாம் அதே போல கிளம்பலாம் என்று சொல்ல, மூன்றாமவள் “அய்யோ.. நான் வரலைப்பா.. நேத்திக்கே நான் பாஸுகிட்ட மாட்ட இருந்தேன்” என்றாள்.
***************************************************************************************
கேபிள் சங்கர்
Post a Comment

63 comments:

தர்ஷன் said...

//சமீபத்தில் சாருவின் இன்ஸெப்ஷன் பற்றிய பர்சப்ஷன் அட்டகாசம்.//

:)

நேசமித்ரன் said...

விமர்சனம்- பெர்செப்ஷன் :)))


இந்த கொ.ப வீடியோ பகிர்வுகள் அருமை

இந்த வார சந்தோஷங்களுக்கு வாழ்த்துகள் தலைவரே

பரிசல்காரன் said...

பாருய்யா உன் நல்ல மனசுக்கும் எனக்கும் இருக்கற வித்தியாசத்தை! நான் என் பேர் வந்ததைப் பத்தி மட்டும்தான் அவியல்ல போட்டிருந்தேன். நீர் எல்லார் பேரையும் குறிப்பிட்டிருக்கீரு!

என்னையெல்லாம்....

பரிசல்காரன் said...

நானும் மாத்திடறேன்..

:-)

பாலா said...

//சமீபத்தில் சாருவின் இன்ஸெப்ஷன் பற்றிய பர்சப்ஷன் அட்டகாசம்.//

கஷ்டம்.

அது அட்டக் காப்பி சங்கர். ஏற்கனவே இது பத்தி ஒரு மேட்டர் போய்கிட்டு இருக்கு.

பிரச்சனையை பெரிசு பண்ண வேணாம்னு பார்க்கறேன்.

க ரா said...

ஆனந்த விகடனுக்கும், கல்கிக்கும் வாழ்த்துகள்ணா... கொத்துப் பரோட்டா நலம் :)

மேவி... said...
This comment has been removed by the author.
மேவி... said...

" I know My Worth!!!!! "

சமீபத்துல அடகு கடை பக்கம் போய் இருக்கீங்கன்னு தெரியுது ......இப்படி எல்லாம் சொன்ன சேட் உங்களை நம்பி காசு தர மாட்டாரு.

மேவி... said...

ஏ ஜோக் சுமார் ரகம்ண்ணே.... இப்படியெல்லாம் எழுதி சின்ன பசங்க சாபத்தை வாங்காதீங்க , நாங்க எல்லாம் பாவம் ஹி ஹி ஹி

விகடன் மற்றும் கல்கி விஷயத்துக்கு வாழ்த்துக்கள் .....

இனிமேல் பத்திரிகைகளுக்கு கொஞ்சம் யூத் ஆ தெரிற மாதிரி போட்டோ தாங்கண்ணே

சோழவர்மன் said...
This comment has been removed by the author.
Unknown said...

இந்த வார சந்தோஷங்களுக்கு வாழ்த்துகள்

a said...

//
கடலில் முத்தெடுக்க ஆழ்கடலில் மூச்சடக்கித்தான் ஆக வேண்டும் முத்து கடற்கரையில் கிடைக்காது
//
அருமை....

Ŝ₤Ω..™ said...

// I know My Worth!!!!!//

நெத்தியடிண்ணே..

iniyavan said...

//Incist //

Insist கொஞ்சம் மாத்திடுங்க கேபிள்.

R. Gopi said...

A joke ​​ரொம்ப சுமார்.

ஆர்​கோபி

Mohamed Faaique said...

அடுத்தவர் உபதேசம் எனக்கு தேவையில்லை என்கிறீர்கள். ஆனால் நீங்கள் நிறைய உபதேசம் செய்கிறீர்கள். இரண்டும் இடிக்கிறதே.. மனதில் பட்டதை சொன்னேன்.. விருப்பமில்லை என்றால் பிரசுரிக்க வேண்டாம்..

Cable சங்கர் said...

//கஷ்டம்.

அது அட்டக் காப்பி சங்கர். ஏற்கனவே இது பத்தி ஒரு மேட்டர் போய்கிட்டு இருக்கு.

பிரச்சனையை பெரிசு பண்ண வேணாம்னு பார்க்கறேன்//


appadiya பாலா.. நான் எவ்வளவு பச்ச புள்ள பாருங்க.. அது என்னன்னு சொன்னீங்கன்னா எனக்கும் புரியுமில்லை.

பிரபல பதிவர் said...

//அதை எழுது, இதை எழுதாதே என்று Insist செய்பவர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொல்வதால் நிச்சயம் நான் என் வழக்கத்தை மாற்ற போவதில்லை
//
இப்படி சவடால் உட்டுட்டு 'ஏ' ஜோக் போடாமல் உட்டுட்டீங்களே தல... உங்க தைரியம் அவ்ளோதானா????

Unknown said...

அண்ணே வாழ்த்துக்கள்...

குறும்படத்தில் நளன் சொல்லும் வலி..

உண்மையானது...

விளம்பரம் களேபரம்..

தராசு said...

தத்துவம் - கலக்கல்

பிரபல பதிவர் said...

//நான் எவ்வளவு பச்ச புள்ள பாருங்க//


பச்ச, மஞ்ச, கறுப்பு புள்ள நான்....

இதுதான் உங்க பட டைட்டில் சாங்கா தல???

R.Gopi said...

கொத்து பரோட்டா பலே...

ப்ரொஃபைல் இல்லாதவங்கள லூஸுல விடு தல...

பா.ம.க. இப்போது புதிதாக ஒன்று முழங்கி கொண்டிருக்கிறது... எங்கள் தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது... அப்படின்னா, இப்போ இவிங்க தயவு இல்லாம, ஆட்சி நடக்கலியா!! யப்பா...

எந்திரன் தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகிறது... தெலுங்கு ரைட்ஸ் 30 கோடிக்கு விற்பனையாகி உள்ளது... (இது தான் ரெகார்ட் விலையாமே.. ஷங்கர் ஜி... விளக்கவும்...)

தினத்தந்தி, விகடன், கல்கி மேட்டர்ஸ் கலக்கல்... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

இன்செப்ஷன் பற்றிய பர்செப்ஷன் அட்டகாசம்... அதற்கு ஹாலிவுட் பாலி சொல்ல வந்தது... நீங்களும் அவரை அது என்னவென்று சொல்ல சொல்லி கேட்டது... எனக்கும் அது என்னன்னு தெரிஞ்சுக்கணுமே...

திண்டுக்கல் சரவணனுக்கு வாழ்த்துக்கள்...

குறும்படம் படு ஜோர்....

விளம்பரம்.... ம்ம்ம்ம்ம்ம்......

கேப்டன் - ட்ராஃபிக் ராமசாமி (பட்டையை கிளப்பும் கூட்டணி)... ப்ரோக்ராம் வித்தியாசமாய் கலக்க வாழ்த்துக்கள்....

தத்துவமும்.... ஏ ஜோக்கும் நல்லா இருக்கு தல....

Cable சங்கர் said...

//கொத்து பரோட்டா பலே...//

நன்றி

//ப்ரொஃபைல் இல்லாதவங்கள லூஸுல விடு தல...//

லூஸுல விட்டுறதாலதான் பின்னூட்டம் போடுறாங்க.. பாவம் அவங்க டைம் வேஸ்டாவ வேணாமேன்னுதான். சொல் பேச்சு கேட்குற பிள்ளைக்கு சொல்லலாமில்ல

//பா.ம.க. இப்போது புதிதாக ஒன்று முழங்கி கொண்டிருக்கிறது... எங்கள் தயவில்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது... அப்படின்னா, இப்போ இவிங்க தயவு இல்லாம, ஆட்சி நடக்கலியா!! யப்பா...//
அட விடுங்க.. கொஞ்சமாவது ரிலாக்சேஷன் வேணாமா?


//எந்திரன் தெலுங்கில் ரோபோ என்ற பெயரில் வெளியாகிறது... தெலுங்கு ரைட்ஸ் 30 கோடிக்கு விற்பனையாகி உள்ளது... (இது தான் ரெகார்ட் விலையாமே.. ஷங்கர் ஜி... விளக்கவும்...)//

இதுவரைஇன்னும் விற்கப்படவில்லை என்று கேள்வி.. 30 கோடிக்கு விலைபேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

//தினத்தந்தி, விகடன், கல்கி மேட்டர்ஸ் கலக்கல்... உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...//
நன்றி


//இன்செப்ஷன் பற்றிய பர்செப்ஷன் அட்டகாசம்... அதற்கு ஹாலிவுட் பாலி சொல்ல வந்தது... நீங்களும் அவரை அது என்னவென்று சொல்ல சொல்லி கேட்டது... எனக்கும் அது என்னன்னு தெரிஞ்சுக்கணுமே...//
தெரிஞ்சவுடன் சொல்றேன்.

//திண்டுக்கல் சரவணனுக்கு வாழ்த்துக்கள்...

குறும்படம் படு ஜோர்....

விளம்பரம்.... ம்ம்ம்ம்ம்ம்......

கேப்டன் - ட்ராஃபிக் ராமசாமி (பட்டையை கிளப்பும் கூட்டணி)... ப்ரோக்ராம் வித்தியாசமாய் கலக்க வாழ்த்துக்கள்....
//
நன்றி
தத்துவமும்.... ஏ ஜோக்கும் நல்லா இருக்கு தல...//
நன்றி.

ஜெய் said...

நன்றி கேபிள்ஜி... :)

// பிரச்சனையை பெரிசு பண்ண வேணாம்னு பார்க்கறேன் //
ஐ லைக் இட்... அந்த பிரச்சினையை விட்டுத்தள்ளுவோம்... ஆனா, வாசக பெருமக்களின் வேண்டுகோளுக்கிணங்க, ”இன்செப்ஷன்-விளக்கவுரை” விரைவில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்...

Ashok D said...

ரெண்டாது.. தத்துவம்.. டக்கரு

CS. Mohan Kumar said...

விகடன்.. கல்கி.. வாழ்த்துக்கள்

அருண் said...

//நீங்கள் சொல்வதால் நிச்சயம் நான் என் வழக்கத்தை மாற்ற போவதில்லை. எனக்காக தோன்றும் வரை..//
I Like it sir.
தத்துவம் நல்லா இருக்கு,

சிவகுமார் said...

I know My Worth. That's TRUE. Kothu Super Boss.

R.Gopi said...

//இதுவரைஇன்னும் விற்கப்படவில்லை என்று கேள்வி.. 30 கோடிக்கு விலைபேசிக் கொண்டிருக்கிறார்களாம்.//

Shankar ji... Please see this...

http://www.telugucinema.com/c/publish/movietrade/robot_aug082010.php

‘Robot’ bought for Rs 30 Cr

Sun Pictures that is producing Rajnikant - Shankar’s magnum opus, Robot, has finally sold off its theatrical rights in Andhra Pradesh. While several top producers from Tollywood tried to bag the film, Sun Pictures didn’t step down from its asking price Rs 30Cr. Chadalavada Brothers who produced several films in Telugu and bought distribution rights of several other Telugu and Hollywood films in the past paid this whopping amount. They clinched the deal by paying highest ever price for a Tamil film’s rights.

Although Sun Pictures is saying the movie is made in Tamil and Telugu, it is essentially a Tamil movie. And buying dubbing rights at a cost of Rs 30 Crores is unheard of before. But Chadalavada Brothers believe the brand Shankar (who has huge following as all his films are blockbusters in Telugu) and Rajnikant and Aishwarya’s pairing would fetch the film collections like a big budgeted Telugu film. It is a huge risk, if it really clicks, the dividends would be equally good.

க.பாலாசி said...

நிறைவா இருக்கு தலைவரே...

pichaikaaran said...

சாரு படத்தையே புரிந்து கொள்ளாமல் அவர் இஷ்டத்திற்கு கற்பனை செய்து எழுதி விட்டார் . நீங்களும் பாராட்டுகிறீர்கள் . அட ஆண்டவா .
உண்மையில் என் விமர்சனத்தைதான் உலகமே பாராட்டுகிறது .

pichaikaaran said...

சீரியஸா ஒண்ணு சொல்ல விரும்புறேன் . சக பதிவர் ஒருவரை எழுத்தாளர் ஒருவர் ஆபாசமாக கிண்டல் அடிக்கிறார் . மூத்த பதிவரான நீங்கள் எதுவும் செய்யவில்லை . இப்படி இருந்தால் சங்கம் என்பதெற்கு என்ன அர்த்தம்

'பரிவை' சே.குமார் said...

விகடன் மற்றும் கல்கி விஷயத்துக்கு வாழ்த்துக்கள் .....

பிரபல பதிவர் said...

ந‌ளன் குறும்படம் முதலில் பார்த்த போது குறும்படம் எடுப்பது கஷ்டம் என நினைத்தேன்.. ஆனால் ஆதி மேக்கிங்கில் கம் மார்க்கெட்டிங்கில் மிரட்டிய இரவின் நிறம் பார்த்த பிறகு நளன் சும்மா பில்டப் கொடுக்கிறார் என்று தோன்றுகிறது

பிரபல பதிவர் said...

ந‌ளன் குறும்படம் முதலில் பார்த்த போது குறும்படம் எடுப்பது கஷ்டம் என நினைத்தேன்.. ஆனால் ஆதி மேக்கிங்கில் கம் மார்க்கெட்டிங்கில் மிரட்டிய இரவின் நிறம் பார்த்த பிறகு நளன் சும்மா பில்டப் கொடுக்கிறார் என்று தோன்றுகிறது

பிரபல பதிவர் said...

ந‌ளன் குறும்படம் முதலில் பார்த்த போது குறும்படம் எடுப்பது கஷ்டம் என நினைத்தேன்.. ஆனால் ஆதி மேக்கிங்கில் கம் மார்க்கெட்டிங்கில் மிரட்டிய இரவின் நிறம் பார்த்த பிறகு நளன் சும்மா பில்டப் கொடுக்கிறார் என்று தோன்றுகிறது

சி.பி.செந்தில்குமார் said...

இன்று காலை 11 மணீக்கு வேறொரு ஃபோன் நெம்பரிலிருந்து ஃபோன் செய்தேன் .நீங்கள் எடுக்கவில்லை.கல்கியில் வந்த கதையை பார்த்துத்தான் ஃபோன் போட்டேன்.கதை அருமை.ஏற்கனவே எஸ்.சங்கரநாராயணன் என ஒருவர் இருக்கிறார்.எனவே உங்கள் பெயரை இனிஷியலோடு குறிப்பிடவும்.அல்லது கேபிள் சங்கர் என குறிப்பிடவும்.அப்பதான் வாசகர்களுக்கு குழப்பம் வராது.கொத்து புரோட்டா அஸ் யூசுவல் கலக்கல்.எஸ் ஜே சூரயா பட பாட்டு பற்றிய கமெண்ட்டில் SMOOTHING என டைப் அடிப்பதற்குப்பதில் அந்த வார்த்தையில் எம் விட்டுப்போய் விட்டது

pichaikaaran said...

" இன்று காலை 11 மணீக்கு வேறொரு ஃபோன் நெம்பரிலிருந்து ஃபோன் செய்தேன் .நீங்கள் எடுக்கவில்லை."

நானும் போன் போட்டேன்,,,,,.. நீங்கள் எடுக்கவில்லை.. பாராட்டுவதற்காக அல்ல... திட்டுவதற்காக... சக பதிவருக்காக குரல் கொடுக்காததற்காக...

உங்கள் தலைமை பண்பை நிரூபிக்க வேண்டிய தருணம் இது...'

Unknown said...

பேட்டிகளுக்கு வாழ்த்துக்கள், கேபிள்.

Jackiesekar said...

greetings cable

http://rkguru.blogspot.com/ said...

பதிவு அருமை.........வாழ்த்துகள்

Cable சங்கர் said...

//
படத்தை பார்த்து ஒவ்வொருவர் ஒருவிதமாய் புரிந்து கொண்டு விமர்சனம் எழுதியிருந்தார்கள்.//

மேலே உள்ளது நான் பதிவில் எழுதியிருப்பது.. பார்வையாளன் இது உங்களுக்காக்த்தான். புரியுதா..?

Cable சங்கர் said...

@சி.பி.செந்தில்குமார்
மன்னிக்கவும் காலையில் நான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன் பிறகு கூப்பிடபோது நீஙக்ள் எடுக்கவில்லை. உங்கள்பாராட்டுக்கு நன்றி..

அது smoothing இல்லை.. soothing தான்.

R.Gopi said...

//சி.பி.செந்தில்குமார் said...
இன்று காலை 11 மணீக்கு வேறொரு ஃபோன் நெம்பரிலிருந்து ஃபோன் செய்தேன் .நீங்கள் எடுக்கவில்லை.கல்கியில் வந்த கதையை பார்த்துத்தான் ஃபோன் போட்டேன்.கதை அருமை.ஏற்கனவே எஸ்.சங்கரநாராயணன் என ஒருவர் இருக்கிறார்.எனவே உங்கள் பெயரை இனிஷியலோடு குறிப்பிடவும்.அல்லது கேபிள் சங்கர் என குறிப்பிடவும்.அப்பதான் வாசகர்களுக்கு குழப்பம் வராது.கொத்து புரோட்டா அஸ் யூசுவல் கலக்கல்.எஸ் ஜே சூரயா பட பாட்டு பற்றிய கமெண்ட்டில் SMOOTHING என டைப் அடிப்பதற்குப்பதில் அந்த வார்த்தையில் எம் விட்டுப்போய் விட்டது//

Dear Senthil Kumar....

நீங்கள் இந்த கமெண்டில் குறிப்பிட்டுள்ளபடி M என்ற வார்த்தை அங்கு விடுபடவில்லை.... சங்கர் ஜி சொன்ன அந்த ஆங்கில வார்த்தை சரியானது தான்...

R.Gopi said...

//சி.பி.செந்தில்குமார் said...
இன்று காலை 11 மணீக்கு வேறொரு ஃபோன் நெம்பரிலிருந்து ஃபோன் செய்தேன் .நீங்கள் எடுக்கவில்லை.கல்கியில் வந்த கதையை பார்த்துத்தான் ஃபோன் போட்டேன்.கதை அருமை.ஏற்கனவே எஸ்.சங்கரநாராயணன் என ஒருவர் இருக்கிறார்.எனவே உங்கள் பெயரை இனிஷியலோடு குறிப்பிடவும்.அல்லது கேபிள் சங்கர் என குறிப்பிடவும்.அப்பதான் வாசகர்களுக்கு குழப்பம் வராது.கொத்து புரோட்டா அஸ் யூசுவல் கலக்கல்.எஸ் ஜே சூரயா பட பாட்டு பற்றிய கமெண்ட்டில் SMOOTHING என டைப் அடிப்பதற்குப்பதில் அந்த வார்த்தையில் எம் விட்டுப்போய் விட்டது//

Dear Senthil Kumar....

நீங்கள் இந்த கமெண்டில் குறிப்பிட்டுள்ளபடி M என்ற வார்த்தை அங்கு விடுபடவில்லை.... சங்கர் ஜி சொன்ன அந்த ஆங்கில வார்த்தை சரியானது தான்...

R.Gopi said...

//சி.பி.செந்தில்குமார் said...
இன்று காலை 11 மணீக்கு வேறொரு ஃபோன் நெம்பரிலிருந்து ஃபோன் செய்தேன் .நீங்கள் எடுக்கவில்லை.கல்கியில் வந்த கதையை பார்த்துத்தான் ஃபோன் போட்டேன்.கதை அருமை.ஏற்கனவே எஸ்.சங்கரநாராயணன் என ஒருவர் இருக்கிறார்.எனவே உங்கள் பெயரை இனிஷியலோடு குறிப்பிடவும்.அல்லது கேபிள் சங்கர் என குறிப்பிடவும்.அப்பதான் வாசகர்களுக்கு குழப்பம் வராது.கொத்து புரோட்டா அஸ் யூசுவல் கலக்கல்.எஸ் ஜே சூரயா பட பாட்டு பற்றிய கமெண்ட்டில் SMOOTHING என டைப் அடிப்பதற்குப்பதில் அந்த வார்த்தையில் எம் விட்டுப்போய் விட்டது//

************

Dear Senthil Kumar....

நீங்கள் இந்த கமெண்டில் குறிப்பிட்டுள்ளபடி M என்ற வார்த்தை அங்கு விடுபடவில்லை.... சங்கர் ஜி சொன்ன அந்த ஆங்கில வார்த்தை சரியானது தான்...

செ.சரவணக்குமார் said...

விகடன் பேட்டி, கல்கி சிறுகதை..

மனமார்ந்த வாழ்த்துகள் தலைவரே.

Sukumar said...

நைஸ் கொத்து பாஸ்...

பாலா said...

குறிப்பெழுதும் உஜிலாதேவி-க்கு இந்த வாரம் ஒரு கவித எழுதலாம்னு இருக்கேன்.

அத நீங்கதான்.. ‘உங்கள் பக்கம்’ ஏரியாவில் பப்ளிஷ் பண்ணனும். இதுக்கு எம்புட்டு செலவானாலும் சரி!!

பாலா said...

// சக பதிவர் ஒருவரை எழுத்தாளர் ஒருவர் ஆபாசமாக கிண்டல் அடிக்கிறார்//

அது நிக்கிற மாதிரி தெரியலை. இன்னும் இன்னும் வந்துகிட்டே இருக்கு.

சங்கர்.. உங்க கிட்ட இந்த கஷ்டமான கேள்வியை கேட்கிறேன்.

எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிஞ்சவனெல்லாம் எழுத்தாளனா??

பாலா said...

//எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிஞ்சவனெல்லாம் எழுத்தாளனா?//

இப்படி மாத்தி கேட்டுப் பார்ப்போம்...!!

குண்டூசி விக்கறவனெல்லாம் தொழிலதிபரா??

ஜீவன்பென்னி said...

புலி படத்தோட பாடல்கள் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் ஆகும். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு வகை. அந்த கடைசி பாடல் சித்ரா குரல்களில் ஒரு அமைதியக் கொடுக்குது. பஜனைப்பாடலின் சாயல் இருக்கு அதுல.

மரா said...

வாழ்த்துக்கள் கேபிளார்.

////எழுத்துக்கூட்டி படிக்கத் தெரிஞ்சவனெல்லாம் எழுத்தாளனா?//

இப்படி மாத்தி கேட்டுப் பார்ப்போம்...!!//

பதில் சொல்லவும் தலைவரே.

Cable சங்கர் said...

@ஜெய்
நான் ஒருத்தன் தான் பாக்கி..:)

@டி.ஆர்.அசோக்
நன்றி அசோக்

@மோகன்குமார்
நன்றி

@ச.அருண்பிரசாத
நன்றி

@சிவகுமார்
நன்றி

Cable சங்கர் said...

@கோபி
நானும் இப்போதுதன்பார்த்தேன்

@க.பாலாசி
நன்றி

Cable சங்கர் said...

@சே.குமார்
நன்றி

@சிவகாசி மாப்பிள்ளை
அப்படியா.?:)

@தஞ்சாவூரான்
நன்றி

@ஜாக்கிசேகர்
நன்றி

@ஆர்.கேகுரு
நன்றி

Cable சங்கர் said...

@செ.சரவணக்குமார்
நன்றி

@சுகுமார் சுவாமிநாதன்
நன்றி

@ஹாலிவுட்பாலா
யோவ் வேணும்னா நான் அந்த பக்கத்தை மூடிடட்டுமா.. நானே உஜ்ஜாலா குஜாலா இருக்கும்னு நினைச்சிட்டு போயி பேயறைஞ்சு போயிருக்கேன்.:)

Cable சங்கர் said...

#ஹாலிவுட்பாலா
அப்ப இல்லையா..?

@ஜீவன் பென்னி
ஆமா ஜி.

#மயில் ராவணன்
நன்றி வேறென்ன சொல்ல?

Cable சங்கர் said...

@பழனி
நீங்கள் என்ன தான் ப்ரொபைல் போட்டாலும் இவ்வளவு சொல்லியும் மரியாதையில்லாமல் கண்ட மேனிக்கு எழுதுவது நாகரீகமல்ல.. நானெல்லாம் விளம்பரத்துகு போட்டேன் என்றே வைத்துக் கொள்ளூங்கள். எனக்கு யாராக இருந்தாலும் பேச தைரியம் இருக்கிறது. அதனால் தான் என் நம்பரை பொதுவில் போட்டிருக்கிறேன். மெயில் ஐடியும் இருக்கிறது. இனியும் யாரையும் மரியாதை குறைவாக பின்னூட்டமிட்டால் நிச்சயம் அத் அனுமதிக்க படாது.. என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இன்ற்ளவில் நான் என்றுமே உங்களை மரியாதை குறைவாக எழுதியதில்லை.. அதைஞாபகத்தில் வைத்துக் கொள்ளூங்கள். நன்றி.. உங்கள் வருகைக்கு.

பாலா said...

//யோவ் வேணும்னா நான் அந்த பக்கத்தை மூடிடட்டுமா.. நானே உஜ்ஜாலா குஜாலா இருக்கும்னு நினைச்சிட்டு போயி பேயறைஞ்சு போயிருக்கேன்.:) //

ஹா.. ஹா.. ஹா....!!! :)

---

Thamira said...

அட்வைஸ்ட்தானே கேட்டுதான் வையுங்களேன், என்ன கொறஞ்சுடப்போவுது? ஹிஹி..

Ravichandran Somu said...

தலைவரே,

வாழ்த்துகள் for விகடன் & கல்கி!

Tamil said...

Nice post. Thanks For Sharing The Amazing content. I Will also share with my
friends. Great Content thanks a lot.

history and meaning in tamil