Thottal Thodarum

Aug 13, 2010

Don Seenu

donseenu1
சின்ன வயதில் பழைய அமிதாப் படங்களை பார்த்து, தானும் பெரியவன் ஆனவுடன் டான் ஆக வேண்டும் என்ற ஆசையுடன் வளரும் ரவிதேஜா. ஒரு நாள் வீட்டை விட்டு ஓடி வருகிறான். எப்படியாவது டான் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஹைதராபாத்தின் பெரிய டான் ஆக வளைய வரும் சி  ஷிண்டேவிடம் போய் சேருகிறார். ஷாயாஜியின் பிரதம எதிரி நர்சிங்கம் என்கிற ஸ்ரீஹரி. மஹேஷ் மஞ்ரேகரின் மகனுக்கு நர்சிங்கத்தின் தங்கையை திருமணம் செய்ய முடிவெடுத்திருக்கும் வேளையில், ஷாயாஜி ரவியை அவளை எப்படியாவது காதலித்து, அந்த திருமணத்தை நிறுத்த சொல்கிறான். ஜெர்மனி போய் நர்சிங்கத்தின் தங்கையை காதலித்தாரா? திருமணம் நின்றதா? என்பது வெள்ளித்திரையில்.

அக்மார்க் ரவிதேஜா டெம்ப்ளேட் படம்.  நிறைய காமெடி, ஆக்‌ஷன், கொஞ்சம் டபுள் மீங்க் டயலாக்குள், கவர்சியான கதாநாயகிகள் என்று. இவையனைத்தும் சரியான விகிதத்தில் தூவினால் ரவிதேஜா படம் ரெடி. அந்த ரெஸிப்பியை கரெக்டாக செய்திருக்கிறார்கள். ரவிதேஜா வழக்கம போல காமெடி செய்கிறார், ஆடுகிறார்,பாடுகிறார், சண்டையிடுகிறார். நோ… கம்ப்ளெயிண்ட். ரவிக்கும் ஷ்ரேயாவுக்குமான காதல் காட்சிகள் நல்ல கேட் அண்ட் மவுஸ் கேம். ப்ரம்மானந்தத்திடம் டபுள் ஆக்ட் கொடுத்து ஊமையாய் கலாய்க்கும் இடம் அட்டகாசம்.
Don-Seenu-Movie-Photo-Gallery-131 ஷ்ரேயா ரொம்ப நாளுக்கு பிறகு நேரடியான தெலுங்கு ப்டத்தில், முடிந்தவரை உரித்து போட்டு வருகிறார். கண்களுக்கு நல்ல விருந்து. அவரது தோழியாக வரும் அஞ்சனா சுஹானியும் பார்ப்பதற்கு நல்ல லட்சணமாக இருக்கிறார். ஒரு பாடலில் தொடை தெரிய, கடலில் நனைந்து இழைகிறார்.
Don-Seenu-Movie-Photo-Gallery-50 அஞ்சனாவின் அண்ணன் ஸ்ரீஹரி.. பாதி நேரம் வெறும் குரலை வைத்துக் கொண்டு, உருட்டி, மிரட்டுகிறார். ஹீரோவை விட இவருக்கு பலமான, விதவிதமான ஷாட்டுகள். பெரிதாக ஏதும் செய்யவில்லை என்றாலும், ஷாயாஜி அளவுக்கு வெர்சடைலிட்டி இவ்ரிடம் இல்லை. முக்கியமாய் இண்டர்வெல் காட்சியில் ஸ்ரீஹரி ஜெர்மனியிலிருந்து வரும் ரவியை கொல்ல, ஏர்போர்ட்டில் ஆங்காங்கே ஆள் வைத்திருக்க, இன்னொரு பக்கம் அவனை அழைத்து வர ஷாயாஜி ஆட்களுடன் வந்திருக்க, ஷ்ரேயாவுடன் வருவதை பார்த்து ஸ்ரீஹரியின் ரியாக்‌ஷனும், அதே நேரத்தில் ஷாயாஜியின் ரியாக்‌ஷனுக்கு மார்க் போட்டால் ஷாயாஜி டிஸ்க்டிங்ஷன்.
Don-Seenu-Movie-Photo-Gallery-46 இருப்பதிலேயே படு காமெடி துபாய் வில்லன் மகேஷ் மஞ்ரேக்கர். காமெடியனை விட சுலபமாய் அடங்கிவிடுகிறார். செகண்ட் ஹாப்பில் விறுவிறுப்பு குறைந்து ப்ளாஷ் சொல்ல ஆரம்பிக்கும் போது கொட்டாவி அர ஆரம்பித்துவிடுகிறது நல்ல வேளை ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக காட்டியதால் தப்பினோம். நம்ம கஸ்தூரி வேறு இருகிறார்.
Don-Seenu-Movie-Photo-Gallery-58 சமீர் ரெட்டியின் ஒளிப்பதிவில் ஜெர்மனி நச். கோனா வெங்கட்டின் திரைக்கதை பழைய அரைத்த மாவுதான் என்றாலும் ஓகே.  மணி சர்மாவின் இசை பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை. இயக்கும் கோபிசந்துக்கு இது முதல் படம். பெரியதாய் ஏதும் முயற்சி செய்யவில்லை. ரவி தேஜாவை வைத்து ஒரு ஷ்யூர் ஷாட் அடிக்க ட்ரை பண்ணியிருக்கிறார். ஒரு ஐம்பது சத்விகிதம் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்ல வேண்டும்.
Don Seenu – அரைகுறை மசாலா..
கேபிள் சங்கர்
Post a Comment

27 comments:

sivakasi maappillai said...

மீ த பர்ஸ்ட்...

பாலா, ராமசாமி,,, மும்பை லயும் ஒரு வெட்டியான் இருக்கேன்

sivakasi maappillai said...

யாருமே இல்லையா????
யாருமே இல்லாத டீகடைலயா டீ ஆத்தினேன்??? அவ்வ்வ்..........

King Viswa said...

கேபிளாரே,

//ஷ்ரேயா ரொம்ப நாளுக்கு பிறகு நேரடியான தெலுங்கு ப்டத்தில்// ஐந்து வருடங்கள் கழித்து நேரடி தெலுகு படத்தில் நடிக்கிறார் ஸ்ரேயா.

Muthukumar said...
This comment has been removed by the author.
Muthukumar said...

Me 4th...

Muthukumar said...

Is it the 2nd part of dubai seenu?

King Viswa said...

தல,

//முக்கியமாய் இண்டர்வெல் காட்சியில் ஸ்ரீஹரி ஜெர்மனியிலிருந்து வரும் ரவியை கொல்ல, ஏர்போர்ட்டில் ஆங்காங்கே ஆள் வைத்திருக்க, இன்னொரு பக்கம் அவனை அழைத்து வர ஷாயாஜி ஆட்களுடன் வந்திருக்க, ஷ்ரேயாவுடன் வருவதை பார்த்து ஸ்ரீஹரியின் ரியாக்‌ஷனும், அதே நேரத்தில் ஷாயாஜியின் ரியாக்‌ஷனுக்கு மார்க் போட்டால் ஷாயாஜி டிஸ்க்டிங்ஷன்//

ஷாயாஜி ஒரு சூப்பர் எக்டர்தான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால் நீங்கள் சொல்லும் அந்த இண்டர்வல் பிரேக்கில் அது ஒரு திருப்புமுனை காட்சியல்லவா? அதில் ஸ்ரீஹரியை விட ஷாயாஜி அல்லவா அதிர்ச்சி அடையவேண்டும்? அதனாலேயே அவரிடம் அந்த அதிர்வும், ஸ்ரீஹரி இடம் ஒரு புன்முறுவலும் வெளிப்படுகிறது.

சரிதானே?

Cable Sankar said...

ஆமா விஷ்வா.ஷாயாஜி.. ரவியுடன் வரும் ஸ்ரேயாவை பார்த்ததும்.. ஹேய்.. அதி நா செல்லலு ரா.. என்று பேசிக் கொண்டே காட்டும் ரியாக்‌ஷன்.. அருமை.

King Viswa said...

தல,

இவ்வளவு பெரிய விமர்சனந்த்தில் எங்கள் தானைத்தலைவர், ஆந்திரா கவுண்டமணி பிரம்மானந்தம் பற்றி எதுவுமே கூறாமல் விட்டதை கண்டித்தது இன்று முழுவதும் மறுபடியும் லட்டு சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.

நீங்க எந்த ஷோ சென்றீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் மதிய நேரம் சென்று பாருங்கள். பிரம்மானந்தம் என்ட்ரி கொடுக்கும்போதே தியேட்டரில் விசிலும், கிளாப்சும் பறக்கிறது. மனிதரை பார்த்தாலே இப்போதெல்லாம் சிரிக்க தோன்றுகிறது (இந்த படத்தில் அவர் செய்திருப்பது அவரது அக்மார்க் ரோல் - இதுவரை இந்த மாதிரி புத்திசாலி போல இருக்கும் முட்டாள் வேடங்களை அவர் குறைந்தது முப்பது படங்களிலாவது செய்திருப்பார்).

டம்பி மேவீ said...

ஸ்ரேயாவை பட போஸ்டர் ல பார்த்ததிலிருந்து இந்த படத்தை பார்க்க ஆவலாய் இருக்கேன் தல.

இப்படியே போனால் ...ஸ்ரேயா நடித்தால் எந்த படத்தை வேண்டுமானாலும் பார்த்துவிடுவேன் : அந்தளவுக்கு பைத்தியம்

sivakasi maappillai said...

//ஸ்ரேயா நடித்தால் எந்த படத்தை வேண்டுமானாலும் பார்த்துவிடுவேன் : அந்தளவுக்கு பைத்தியம்
//

அவனா நீயி???

கே.ஆர்.பி.செந்தில் said...

டான் ...?

shortfilmindia.com said...

@விஸ்வா..
ஆமா விஸ்வா.. நான் பிரம்மானந்தத்தின் பரம ரசிகன். எதையோ எழுத விட்டுட்டேன்னு நினைச்சுட்டே இருந்தேன்.. மத்யான ஷோ இல்ல எந்த ஷோவாக இருந்தாலும் ப்ரம்மானந்தத்ம் ஏர்பொர்ட்ல எண்ட்ரி ஆனா அடுத்த செகண்ட் ரவி தேஜாவுக்கு கூட இவ்வளவு விசில் கிடைச்சிருக்காது.

அவர் முகத்தில இருக்கிற ஒரு இன்னொசென்ஸ்.. எப்ப இருந்தாலும் இம்மாதிரி கேரக்டருக்கு எடுபடும்.. என்னா ரியாக்‌ஷன் தலைவரே..அ வரு..

King Viswa said...

தல,

//நான் பிரம்மானந்தத்தின் பரம ரசிகன்.//சூப்பர். அப்படின்னா நான் சாப்பிடும் லட்டுல பாதி உங்களுக்கே தந்துடறேன். ஒக்கே?

Jawahar said...

//அஞ்சனா சுஹானியும் பார்ப்பதற்கு நல்ல லட்சணமாக இருக்கிறார். ஒரு பாடலில் தொடை தெரிய, கடலில் நனைந்து இழைகிறார்.//

தமிழ்நாட்டுக்கு இதனால் எத்தனை பெரிய புரடக்ட்டிவிட்டி லாஸோ! பின்னே.... இப்படி எழுதினால் அவனவன் ஒருநாள் சிஎல் போட்டுவிட்டு தியேட்டருக்கு ஓட மாட்டானா?

http://kgjawarlal.wordpress.com

MANO said...

படம் பார்க்கும் ஆவலை தூண்டும் விமர்சனம்.

மனோ

KarthikeyanManickam said...

Thala,

Padam Pathacha.. neenga roommba late.. Ikkada ADIRIDHI Theatre-u.
KOMARAM PULI-kosam wait chesthunnanu.

ம.தி.சுதா said...

அப்ப சகோதரா எல்லாரும் இப்படி வேறு உலகம் ஓடினால் இன்னும் கொஞ்ச காலம் தமன்ன தான் கொடிகட்டி பறப்பார் போல கிடக்குது

ம.தி.சுதா said...

சகோதரங்களா நானும் தமன்னாவின் நடிப்பிற்கு மட்டும் ரசிகன்

பார்வையாளன் said...

அண்ணே . இதெல்லாம் வேண்டாம் . தைரியம் இருந்தா இன்சப்சன் விமர்சனம் எழுதுங்க

Jana said...

ம்ம்ம்...ஸ்ரேயா.....!!! சரி..The Expendables பார்த்திட்டீங்களா தல?

பிரபா said...

நாங்களும் கஷ்டபட்டு ஏதாவது மொக்கை போட்டுட்டு இருக்கமுல்ல, அடிக்கடி வந்து ஏதாவது சொல்லிட்டு போனால் தானே ஒரு பிடிப்பு இருக்கும், இல்லன்ன பதிவுலக நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்ல வில்லை என்பதற்காக இந்த அப்பாவி பிள்ளை பதிவுகளை இடாமல் போயிடுவான், ஏன் இந்த பாவம் உங்களுக்கு ,, வாங்க உடனே வந்து பாருங்க என்னாத்த கிழிக்கிறான் எண்டு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

pakkanum

இராமசாமி கண்ணண் said...

ஆகா.. கொஞ்சம் காப்பி அடிச்சு, கொஞ்சம் மாத்தி எடுத்துட்டானுங்களா, தெலுங்க்குல.. இப்ப விஜய் என்ன பன்னுவாரு.. பாவம் :)

இராமசாமி கண்ணண் said...

Blogger sivakasi maappillai said...

மீ த பர்ஸ்ட்...

பாலா, ராமசாமி,,, மும்பை லயும் ஒரு வெட்டியான் இருக்கேன்
---
வாழ்த்துகள் மாப்பிள்ள.. நைட்டு நான் தூங்குற டைம் பாத்து பதிவ போட்ட கேபிள் அண்ணண சொல்லனும் :)

R Gopi said...

//Don Seenu – அரைகுறை மசாலா..//

ஆனா காரம் (hot) ஜாஸ்தி. நான் ஸ்ரேயாவோட ஸ்டில்ல சொன்னேன்

சி.பி.செந்தில்குமார் said...

அதென்ன நம்ம கஸ்தூரி?