Thottal Thodarum

Aug 25, 2010

சாப்பாட்டுக்கடை

vadakari ”ஜாம்பஜார் ஜக்கு... நான் சைதாப்பேட்டை கொக்கு” என்கிற பாடலில் சைதாப்பேட்டை வடகறி என்று எழுதும் அளவிற்கு பிரபலம் வடகறி எனும் ஒரு சைட் டிஷ். சின்ன வயதில் நான் என் மாமனும் ஓட்டலுக்குப் போய் வடகறி என்பது ஒரு மெயின் டிஷ் என்று நினைத்துக் கொண்டு, ஆளுக்கு ஒரு வடகறி கேட்க, சர்வ் செய்பவன் எங்களை ஏற இறங்க பார்த்தவனை “அது சரி.. அதுக்கு சைட் டிஷ் என்ன தருவீங்கன்னு” கேட்டு விழிக்க வைத்தவர்கள் நாங்கள்.

அப்படிபட்ட வடகறி என்கிற பிரபல அயிட்டத்துக்கு பேர் போன கடை தான் சைதாப்பேட்டை வி.எஸ்.முதலி தெருவில் இருக்கும் மாரி ஓட்டல். ஒரு காலத்தில் சின்ன டீக்கடை ஓட்டு வீடாய் இருந்த ஹோட்டல் இப்போது கட்டிடமாய் மாறியிருக்கிறது.

இவர்களின் ஸ்பெஷாலிட்டி வடகறி, காலையிலிருந்து இரவு வரை வடகறி மட்டும் சின்ன டம்ளர்களிலும், தூக்கு சட்டியிலும், ப்ளாஸ்டிக்கவர்களிலும், இப்போது ஹோட்டல் காரர்களே  ப்ளாஸ்டிக் டப்பாவில் பேக் செய்து  தர, போய் கொண்டேயிருக்கும், அவ்வளவு சுவை. இது இட்லி, தோசை, பரோட்டா, செட் தோசை என்று எல்லா விதமான அயிட்டங்களுக்கும் சேரும்.

வடகறி என்கிற அயிட்டம் மீந்து போன வடை வகைகளை வைத்து செய்யப்பட்ட ஒரு சைட் டிஷ் என்று சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவர்கள் தினமும் இதற்காகவே வடை மாவு வகைகளை செய்து  தயார் செய்கிறார்கள். முக்கியமாய் இவர்கள் தயாரிக்கும் சுவை. சூடான தோசையின் மேல் வடகறியை போட்டு, ஊற வைத்து,  சைடில் இருக்கும் நல்ல ரோஸ்டான தோசையை  வடகறியோடு சாப்பிட்டு பாருங்கள். ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.  கடைசியாய்  வடகறியில் ஊறியிருக்கும்  தோசையை சாப்பிட்டுப் பாருங்கள். ம்.. அது அதை விட அட்டகாசமாய் இருக்கும். 
Photo0075 இதை தவிர, மாலை நேரங்களில் இப்போது சோளா பட்டூரா, அடை, ப்ரைட் ரைஸ் போன்ற் அயிட்டங்களும்  நன்றாக இருக்கும் முக்கியமாய் குருமா.. அது வழக்கமாய் எல்லா ஓட்டல்களீல் இருப்பது போல காரமாகவோ, நீர் போல இல்லாமல் நல்ல கெட்டியாய் வித்யாசமான சுவையோடு, இருக்கும்  காலையில் நான்கு  இட்லி சாப்பிட நினைத்து ஹோட்டலுக்கு போகிறவர்கள். வடகறியோடு சாப்பிட்டால் இன்னும் ரெண்டு உள்ளே இறங்காமல் இருக்காது.

வடைகறி செய்முறை
தேவையானவை:
கடலைபருப்பு 1 கப்
துவரம்பருப்பு 2 டேபிள்ஸ்பூன்
தக்காளி 3
வெங்காயம் 2
பூண்டு 4 பல்
இஞ்சி 1 துண்டு
மசலாபொடி 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது
கொத்தமல்லித்தழை அரை கப் (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
கடலைபருப்பையும்,துவரம்பருப்பையும் ஒரு மணி நேரம் ஊறவைத்து இஞ்சி பூண்டுடன்
தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.
அரைத்த மாவை சிறிது எண்ணைய் விட்டு வேகவைக்கவேண்டும்.
ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு சிறிது எண்ணைய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாய்
மூன்றையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும்.அதனுடன் மசாலாபொடி,உப்பு,இரண்டு கப் தண்ணீர் கலந்து வேகவைக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வேகவைத்த மாவை கலந்து மீண்டும் பத்து நிமிடம் வேகவைக்கவேண்டும்.
இறக்கிய பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழையை தூவவேண்டும்.
வடைகறியை இட்லி தோசைக்கு side dish ஆக உபயோகித்தால் மேலும் அதிகமாக இரண்டு உள்ளே இறங்கும்.
ச்மையல் குறிப்பு:  Kanchana Radhakrishnan
கேபிள் சங்கர்
Post a Comment

37 comments:

இராமசாமி கண்ணண் said...

ஆஹா சமையல்குறிப்புமா.. அண்ணே கலக்கறீங்க...

கே.ஆர்.பி.செந்தில் said...

சமையல் குறிப்போடு சொல்வது அருமை ..

அண்ணே அது எங்க சொந்தகாரங்க ஓட்டல்ன்னு ஏன் சொல்லல?

Mohamed said...

அடடே சமையல் குறிப்பு வேறயா. சூப்ப்ர் பதிவு.. போன வாரம்தான் நண்பர்க்ளோடு போய் சாப்பிட்டு வந்தோம்.

Cable Sankar said...

oru போன் அடிச்சிருக்கலாமே மொகமட்..?:(

வானம்பாடிகள் said...

அடுத்த முறை எதாவது லேண்ட்மார்க், அல்லது பஸ்ஸ்டாப்பில இருந்து எப்படி போணும்னு வழியும் சொல்லிட்டா வசதி தலைவா:)

செ.சரவணக்குமார் said...

சமையல் குறிப்போட அசத்துறீங்க தலைவரே.

ராம்ஜி_யாஹூ said...

அருமை, தகவலுக்கு நன்றிகள்.

பல உணவகங்களில் வடை கறிக்கு, புதிதாகவே வடை செய்து தான் பண்ணுகிறார்கள். மீதம் உள்ள வடைகள் அல்ல.

இந்த வடைகறி, செங்கல்பட்டை தாண்டினால் தமிழகத்தில் அத்தனை பிரபலம் இல்லை.

DrPKandaswamyPhD said...

ஏனுங்க, இதுக்காக என்னை சென்னைக்கு வரவழைக்கிறீங்களே, எப்படி வரதுங்க?

Thamizh said...

வடைகறி - அந்த போட்டோவில் இருந்த தோசை வடைகறி மற்றும் பரோட்டா வடைகறி யை பார்த்த உடனேயே நாக்கில் எச்சில் ஊருது ..!

வழிப்போக்கன் - யோகேஷ் said...

அண்ணே : சமயல் குறிப்பு அட்டகாசம்...

காவேரி கணேஷ் said...

உங்கள மாதிரி சைதாபேட்டை காரங்க யோகம் செய்தவர்கள்.

தமிழ் நாடன் said...

என்ன அநியாயம் இது? இப்படியா வெளியூரில் இருக்கும் எங்களின் வயித்தெரிச்ச்லை கொட்டிக்கிறது.

sivakasi maappillai said...

//வானம்பாடிகள் said...
அடுத்த முறை எதாவது லேண்ட்மார்க், அல்லது பஸ்ஸ்டாப்பில இருந்து எப்படி போணும்னு வழியும் சொல்லிட்டா வசதி தலைவா:)

//

அடுத்த முறை சென்னை மற்றும் சுற்றுபுற பதிவர்களை குடும்பத்தோடு அழைத்து வாங்கி கொடுத்து அவர்களின் கருத்துக்களையும் சேர்த்து எழுதினால் சாப்பாட்டு கடை இன்னும் சிறப்பான பதிவாக வரும்....


வெளி மாவட்ட, மாநில வாசகர்களை மட்டும் ட்ரெய்ன், பிளைட் டிக்கெட் எடுத்து கொடுத்து அழைத்தால் உங்களுக்கு கோயில் கட்ட பரிந்துரைப்பேன்

sivakasi maappillai said...
This comment has been removed by the author.
sivakasi maappillai said...

தல... சைதாப்பேட்டை வடகறியை உங்கள் சமையல் குறிப்புப்படி மும்பையில் செய்தால் அதே ருசி கிடைக்குமா??

sivakasi maappillai said...

//ராம்ஜி_யாஹூ said...
இந்த வடைகறி, செங்கல்பட்டை தாண்டினால் தமிழகத்தில் அத்தனை பிரபலம் இல்லை//

தம்பி இது சைதாப்பேட்டை வடகறி... எப்படி செங்கல்பட்டு தாண்டி பிரபலம் ஆக முடியும்....

sivakasi maappillai said...

//வழிப்போக்கன் - யோகேஷ் said...
அண்ணே : சமயல் குறிப்பு அட்டகாசம்...//


குறிப்புப்படி செஞ்சி பாத்துட்டு சொல்லு

sivakasi maappillai said...

// காவேரி கணேஷ் said...
உங்கள மாதிரி சைதாபேட்டை காரங்க யோகம் செய்தவர்கள்.
//

அப்ப‌ கிண்டிலேர்ந்து பார்ச‌ல் வாங்கிட்டு போற‌வ‌ங்க‌ யோக‌ம் இல்லாத‌வ‌ர்க‌ளா????

Mohan said...

காலையில சாப்பிட போவதற்கு முன் உங்கள் 'சாப்பாட்டுக்கடை' பதிவைப் படித்தால், இரு மடங்கு சாப்பிட நேரிடுகிறது!

ராம்ஜி_யாஹூ said...

sivakasi mappillai- lol

Sivaramkumar said...

ஷோக்கா கீது! இன்னா தலை சமையல் குறிப்பு கூட... கலக்கிறீங்க ;-)

vanila said...

pasikkudhu..

sivakasi maappillai said...

//Mohan said...
காலையில சாப்பிட போவதற்கு முன் உங்கள் 'சாப்பாட்டுக்கடை' பதிவைப் படித்தால், இரு மடங்கு சாப்பிட நேரிடுகிறது!

//

நைட்டு படுக்க‌ போறதுக்கு முன் எண்டர் கவிதை படிச்சிராதீங்க...

அருண் பிரசாத் said...

yummy

பார்வையாளன் said...

சாப்பாடுகடை பகுதி மெருகேறிக்கொண்டே செல்கிறது. சூப்பர் . அடுத்தமுறை மேப் , வரைபடம் இணைக்குமாறு கேட்டுகொள்கிறேன்

அமுதா கிருஷ்ணா said...

பிரியாணி செய்முறையும் வேண்டும் ...

மறத்தமிழன் said...

கேபிள்ஜி,

பேச்சலரா இருந்த்தப்ப பெரும்பாலும் மாரி ஹோட்டலிலோ கலைசெட்டிநாடுலயோ(டி நகர் ரேணுகாவோட சைதை கிளை) சாப்பிடுவதுண்டு...!
வீட்டு சாப்பாடு மாதிரி நல்லாயிருக்கும்...

வானம்பாடிகள் ஐயா...பஸ்ல போறதுனா 18 கே...ட்ரெயிலனா சைதாப்பேட்டை ஸ்டேசனுக்கு அருகில்...

கேஆர்பி.செந்தில்..ஹோட்டல் காரங்க தஞ்சாவூர்னு தெரியும்...சொந்த்தக்காரங்கனு தெரியாம போச்சே:))

அன்புடன்,
மறத்தமிழன்.

Mamathi said...

சாப்பாடுகடை பகுதி மெருகேறிக்கொண்டே செல்கிறது. சூப்பர்
இன்னா தலை சமையல் குறிப்பு கூட... கலக்கிறீங்க

Kanchana Radhakrishnan said...

என் சமையல் குறிப்பை உங்கள் வலைப்பூவில் குறிப்பிட்டதற்கு நன்றி கேபிள்ஜி.

Cable Sankar said...

@காஞ்சனா ராதாகிருஷ்ணன்
எதுக்குங்க மேடம்.. நன்றியெல்லாம் நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும்.. உங்களால் இன்று என் சாப்பாட்டுக்கடை மணத்தது..

சே.குமார் said...

சமையல் குறிப்போடு... அருமை..!

Cable Sankar said...

@இராமசாமி கண்ணன்
நன்றி

2கே.ஆர்.பி.செந்தில்
அதுசரி..

@வானம்பாடிகள்
நிச்சயம் தலைவரே

@செ.சரவணக்குமார்
நன்றி

@ராம்ஜியாஹு
வடைபுதிதாய் செய்கிறார்கள் என்றுதானே சொல்லியிருக்கிறேன்.

Cable Sankar said...

கந்தசாமிசார்.. சென்னைக்கு வந்ததும் ஒரு போன் பண்ணுங்க.. உங்களை நான் கூட்டிட்டு போறேன்.

@தமிழ்
ஓகே கிளம்புங்க.. சாப்பிட

@வழிப்போக்கன்
நன்றி
@காவெரிகணேஷ்
உங்களுக்கும் யோகத்தை பாஸ் செய்யறேன் தலைவரே..

@

Cable Sankar said...

@சிவகாசி மாப்பிள்ளை
என்னை உங்க ஊருக்கு ப்ளைட் டிக்கெட் போட்டு அழைத்து போனால் கிடைக்கும். ரெடியா.?

@சிவராம்குமார்
சமையல்குறிப்பு வேறொருத்தரோடது.. அதான் போட்டிருக்கேனே..

Cable Sankar said...

@அருண்பிரசாத்
நன்றி

2பார்வையாளன்
போட்டுட்டா போச்சு.. எங்க ரொமப நாளா ஆளையே காணம்..?

@அமுதாகிருஷ்ணா
அஹா.. திருநெல்வேலிக்கே அல்வாவா..?

@மறத்தமிழன்
நீங்க சைதாப்பேட்டையா..?

@மமதி
ஓகே ரைட்ட்

!@சே.குமார்
நன்றி

muthukumar said...

என்ன அநியாயம் இது? இப்படியா வெளியூரில் இருக்கும் எங்களின் வயித்என்ன அநியாயம் இது? இப்படியா வெளியூரில் இருக்கும் எங்களின் வயித்தெரிச்ச்லை கொட்டிக்கிறது.தெரிச்ச்லை கொட்டிக்கிறது.

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆகா வடைகறி சூப்பரா இருக்கும் போல இருக்கே.......அதோட கொஞ்சம் தேங்காய்ப்பால் சேர்த்துப் பாருங்க இன்னும் சூப்பரோ சூப்பர்....