உங்கள் பக்கம்

1)என் விரலிடுக்கில்
வழிந்தோடும் மழைத்துளி

மகரந்தங்களை வெறுக்கும்
புதுவகைப் பூக்கள்

இன்னும் தொடர்கின்றது
அடர்வனத்தின் ஆழத்தில்
கறைபடாத மணம்வீசும் 
மலருக்கான தேடல்

தொலைத்த ஆசைகள்
மழலை உடைத்த பொம்மைகளாய்

என் தவமோ

சபிக்கப்பட்ட காதலை
வரமாய்த் தந்த தேவதைகளைத் தேடி...


2)சும்மாத் தான் இருக்கிறேன்
கவிதை எழுதும் வேலையாவது
கொடேன்!

என்று கேட்டேன்

கொஞ்சம் முத்தமிட்டுப்போ 
என்றாய்

வேலைகேட்டால்
சம்பளம் தருகிறாயே!

3)சுற்றும் பூமி
உன் கால்களுக்குக் கீழ் 
என்றேன்

தலைதான் சுற்றுகிறது
என்று நீ
கண் சுழற்றியபோது

நிஜமாகவே 
சுற்றத் தொடங்கியது பூமி

4)ஆடை அணியாமை
பூக்களுக்கு அழகு என்றேன்

என்னை இழுத்து 
போர்த்திக் கொண்டாய்

5)கொஞ்சும் குழந்தையாய்
உன் தெத்துப்பல்

நாவினால்
தடவித் தரட்டுமா?


டிஸ்கி; இந்த கவிதைகளை எழுதியவர் பதிவர் திரு. விந்தை மனிதன் அவர்கள். மேலும் அவர் படைப்புகளை படிக்க...http://vinthaimanithan.blogspot.com/
உங்கள் படைப்புகள் இந்த பக்கத்தில் வர என்னுடய மின்னஞ்சலுக்கு உங்கள் படைப்புகளை அனுப்பவும்.. பரிசீலினைக்கு பிறகு பதிப்பிக்கப்படும்..

Comments

Unknown said…
விந்தை மனிதரே உங்கள் வழக்கமான கவிதைகளை இப்படி டீசண்டாக எழுதியிருப்பது.. எனக்கும், கேபிளுக்கும், மணிஜி அண்ணாச்சிக்கும் ரொம்ம்மம்ம்ப்ப வருத்தம் ...
Unknown said…
கவிதைகள் அருமை.....விந்தை மனிதருக்கு வாழ்த்துக்கள்
Ganesan said…
படிச்ச 2 வது கவிதையிலயே இது உங்க கவிதை இல்லை என உணர முடிந்தது.

hats off vindai manithan
Ganesan said…
வேலைகேட்டால்
சம்பளம் தருகிறாயே!

class
@kaveri ganesh
என்னளவுக்கு கவிதை எழுத விந்தை மனிதர் கொஞ்சம் முயற்சி செய்தால் தான் முடியும்..:)
வேலைகேட்டால்
சம்பளம் தருகிறாயே!
class//
repeatttt
vasu balaji said…
கவிதை அறிமுகம் நன்று. ஆனா இது எண்டர்கவிதையில வருமான்னு விளக்கியிருக்கலாம்:))
க ரா said…
கவிதைக(ல்)ள் :)
Thamizh said…
CableSankar, I am watching you now in the VIjay TV's Neeya Naana Program..!!
Tech Shankar said…
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் உங்கள் பங்களிப்பு குறித்து மிகுந்த மகிழ்வடைகிறேன்

Congratulations for participating Vijay TV's Neeya Naana program.

by
TS