Thottal Thodarum

Aug 16, 2010

கொத்து பரோட்டா-16/08/10

நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எக்ஸ்பிரஸ் அவின்யூவில பதினைஞ்சு ரூபாய் பார்க்கிங் வாங்க ஆரம்பிச்சிட்டதினாலே இனிமே மத்த மால்லையும் அதிகப்படுத்திருவாங்கன்னு சொன்னேனில்லையா? அது போல இப்போ.. சனி ஞாயிறுல ஐநாக்ஸுல ஹவருக்கு பதினைந்து ரூபாயாம்.. இனிமே பாருங்க.. தியேட்டர்ல டிக்கெட் 120 ரூபாய். பார்க்கிங் டிக்கெட் விலை 60 ரூபா ஆகப்போவுது பாருங்க.. அது கூட கலைஞரோட இந்த ஆட்சி வரைக்கும் அடுத்த அட்சியில அவரு வந்தவுடனே ஏற்றப் போறதுல மல்டிப்ளெக்ஸ் டிக்கெட் விலையும் ஒண்ணு. ஏன்னா.. பேரப்புள்ளைங்க.. ரெண்டு மூணு இடம் வாங்கி போட்டு மல்டிப்ளெக்ஸ் கட்டுறதா கேள்வி..
***********************************************************************************
சென்ற வாரம்  நான், அப்துல்லா, கார்க்கி, வெண்பூ எல்லாம் ரம்சான் ஹைதராபாத் ஸ்பெஷலான ஹலீம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். டெக்கான் ஹெரால்ட் வருடா வருடம் ஹைதையில் எங்கு நல்ல குவாலிட்டி ஹலீம் தருகிறார்கள் என்று சாப்பிட்டு நல்ல ஓட்டல்களை ரெபர் கூடச் செய்தார்கள் நான் அங்கு போயிருக்கும் போது. அப்போது அப்துல்லா சொன்னார். சென்னையில் ஈகா தியேட்டர் அருகில் இருக்கு ஒரு ஹோட்டலில் ஹலீம் கிடைக்குதாம், ஹைதராபாத்தில கூட அவ்வ்ளவு டேஸ்டா இருக்காதாம் என்றதும் சனிகிழமை ப்ளான் போட்டு, அப்படியே இன்ஸெப்ஷன் பி.வி.ஆர்.ல ப்ரோக்ராம் போட்டு சாயங்காலம் போய் பரபரக்க போய் உக்காந்தோம் ஹலீம் சொன்னதும் ஒரு பெரிய பவுலில் கொண்டு வந்து வச்சாங்க. நான் ஏற்கனவே ஹைதராபாத்தில் ஹலீம் சாப்டிருக்கிறதினால அதன் ருசி நன்றாக தெரியும். ஆவலோடு ஒரு ஸ்பூனை எடுத்து வைக்க, ஹலீம்.. சுத்தமான நெய், மசாலா அயிட்டங்கள், நன்கு வேக வைக்கப்பட்ட மட்டன், கிட்டத்தட்ட கூழாய் இருக்கும் மட்டன் மற்றும் இத்யாதி, இத்யாதிகள் சேர்த்து செய்யப்படுகிற, நேன்பிருந்துவிட்டு வரும் மக்களுக்கு அன்று இழந்த ப்ரோட்டீன்கள், அடுத்த நாளுக்குமான ப்ரோட்டீன்களை தரும் ஹலீம் எனும் இந்த அயிட்டம் டால் மக்கானி போல இருந்தது. கேட்டால் இது லக்னோ ஹலீமாம்.. அடக் கொடுமையே.. லக்னோவில டால் மக்கானிக்கு பேரு ஹலீமா.? அப்புறம் படம் பார்த்த பி.வி.ஆரில் நல்ல பல சேட்டுப் பெண்களை பார்த்து மனதாற்றிக் கொண்டது.. வேறு விஷயம்.
************************************************************************************
அண்ணன் உ.த போல தொடர்ந்து பிட்டு படம் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் இலக்கணப்பிழை மட்டும் ஒரு மணி நேரம் பார்த்தேன். படம் பிட்டுபடமாய் இருந்தாலும், ஆங்காங்கே இயக்குனர் இளையராஜாவின் பழைய பாடல்களையே புத்திசாலித்தனமாய் பின்னணியிசையாய் உபயோகித்திருக்கும் முறையும், முடிந்த வரை ”டெம்ப்ட்”டாக படமெடுத்திருப்பதையும், பெரியதாய் ஆர்டிஸ்ட் இல்லாமல், நல்ல அழகிய பெண்ணை கதாநாயகியாக்கி, முக்கல் முனகலை தவிர பெரிய பிட் படத்தில் இல்லையென்றாலும் கருத்தில் பிட்டோ பிட்டு.. ஒரே அட்வைஸ் மழை.. என்ன படம் முழுக்க வந்த ஷாட்டுகளே திரும்ப திரும்ப வருகிறது. ஒரு முக்கிய விஷயம் இப்படத்தின் பட்ஜெட் வெறும் 15 லட்சம் ரூபாய்தானாம்.
************************************************************************************
செவிக்கினிமை
காதல் சொல்ல வந்தேன் படத்தில் யுவனின் பின்னணியிசையும் மூன்று பாடலக்ளும் நன்றாக இருக்கிறது. ஒரு வானவில்லின் பக்கத்திலே பாடலில் உத்தித்தின் குழந்தை குரலும், அன்புள்ள சந்தியா, ஆகிய பாடல்களில் டுயூனும், அதில் வரும் முத்துக்குமாரின் வரிகளும் இண்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. வானவில்லின் பக்கதிலே வாழ்ந்து பார்க்கிறேனே நானே.. என்ற வரிகள் எனக்கு பிடித்திருக்கிறது. பட் பாடலகளை எங்கோ கேட்ட பீல் வருவதை தவிர்க்க முடியவில்லை.
************************************************************************************
இந்த வார தத்துவம்
உலகிலேயே இனிமையான இசை எது தெரியுமா? நம் இதயத்தின் துடிப்புத்தான் ஏனென்றால் அது மட்டும்தான் உலகமே தனித்துவிட்டாலும் நமக்கு உறுதியான நம்பிக்கையை தருகிறது.

உன்னுடய எல்லா கனவுகளும் நிஜமாக முடியாது. ஆனால் அவைகள் உன்னுடய எதிர்காலத்தின் வெற்றிக்கு படிகளாய் அமையும்.
**********************************************************************************
இந்த வார கிளுகிளூப்பூ
லண்டனில் ஒரு பெண் ஒன்பது வருடங்களில் 5000 பேருடன் உறவு வைத்திருக்கிறாளாம். முதல் முறையிலிருந்து பார்க், ஹோட்டல், பப், நண்பரின் வீடு என்று கிடைத்த இடத்தில் எல்லாம் உறவு கொண்டிருக்கிறாளாம். ஒவ்வொரு உறவையும் தன்னுடய டைரியில் வேறு எழுதிவைத்திருக்கிறாளாம். சரியான மஜா மல்லிகாவா இருப்பா போலருக்கே.. மஜா மல்லிகா யாருன்னு கேட்குறவங்களுக்கு.. அடப் போங்கப்பா இது கூட தெரியலைன்னா.. என்ன ப்ளாக் எழுதி, இண்டெர்நெட் பாக்குறீங்களோ??
********************************************************************************** 
இந்த வார குறும்படம்
வெளிநாட்டு குறும்படம். ஆரம்ப காட்சிகள் கொஞ்சம் ஸ்லோவாக இழுவையாக இருந்தாலும், முடிவு மனதை கனக்க செய்யும்.
***********************************************************************************
இந்த வார விளம்பரம்
மிக அருமையான விளம்பரம்.. பல விஷயங்களை நமக்கு சொல்லிக் கொடுக்கும் விளம்பரம்.
************************************************************************************
இந்த வார கோரிக்கை
ஆட்டோகிராப் படம் என்றதும் எல்லாருக்குமே சிநேகா பாடும் “ஒவ்வொரு பூக்களுமே.. “பாடல் ஞாபகத்துக்கு வரும். அப்படி வரும் போது நிச்சயம் அந்த பாட்டின் பின்னணியில் வாத்தியங்கள் வாசிக்கும் டீமாய் பார்வை குறைபாடுடைய கோமகனின் இசைக்குழு இசைத்து நடித்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.  அந்த கோமகனின் இசைக்குழுவுக்கு சொந்தமாக இசை கருவிகளை  வாங்குவதற்காக வருகிற செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி, சனிக்கிழமை, மாலை: 6.30 மணிக்கு, சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. டிக்கெட்டுகளை வாங்கி அவர்களது குழுவை ஊக்குவிக்க விரும்புவர்கள்.. என் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
************************************************************************************
ஜோக்
வழக்கமாய் இரவு டியூட்டு முடித்து காலையில் போகும் இன்ஸ்பெக்டர் அன்று சீக்கிரமே வீட்டிற்கு போனார். மனைவியை எழுப்ப வேண்டாம் என்று உடைகளை கலைந்துவிட்டு, மெல்ல படுக்கையில் படுக்க போனவரை, மனைவி தூக்க கலக்கத்தில் டியர் எனக்கு தலைவலிக்குது 24ஹவர் மெடிக்கல் ஷாப்புல மாத்திரை வாங்கிட்டு வர்றீங்களா? என்று கெஞ்ச, சரி என்று மீண்டும் உடைகளை மாட்டிக் கொண்டு கடைக்கு போனார்.. கடைக்காரன் என்ன சார்.. நீஙக் இன்ஸ்பெக்டர் தானே? ஏன் கப்பல் கேப்டன் ட்ரஸ்சை போட்டிட்டு வந்திருக்கீங்கன்னு கேட்டான்.
************************************************************************************
ஏ ஜோக்
மூன்று மகள்களுக்கு கஷ்டப்பட்டு திருமணம் செய்து வைத்த ஒரு பெண் அவர்களது முதலிரவை தன் வீட்டிலேயே வைத்து கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால். மூவரும் தங்கள் வீட்டிலேயே சரி என்று சொல்ல… நடு ராத்திரியில் ஒவ்வொரு பெண்ணின் ரூம் பக்கமாய் நின்று கேட்டாள் அந்த தாய். முதல் பெண்ணின் அறையிலிருந்து ஒரே அலறலாக வந்த்து, அடுத்த பெண்ணின் ரூமிலிருந்து ஒரே சிரிப்பு சத்தமாக இருந்தது, மூன்றாவது பெண்ணின் அறையிலிருந்து எந்தவித சத்தமும் வரவில்லை. அடுத்த நாள் காலையில் முதலாமவளிடம் ஏன் அப்படி கத்தினாய்? என்றதும் ‘நீதானேம்மா சொல்லியிருக்க.. எதாவது  வலிச்சு கஷ்டமாயிருந்திச்சுன்னா கத்தணும்னு” என்றாள். இரண்டாமவள் “நீ தானேமா சொல்லியிருக்க, கிச்சு கிச்சு மூட்டுற மாதிரியிருந்த சிரிக்கணும்னு” என்றாள் மூன்றாம்வளை பார்த்து கேட்டதும் “வாய் மூழுதும் இருக்கும் போது எப்படி சத்தம் போடுறது? என்று கேட்டாள். 
**********************************************************************************
கேபிள் சங்கர்
Post a Comment

32 comments:

Raja said...

Nice...

ம.தி.சுதா said...

அப்பாடி... ஆரம்பத்தில் படு சீரியசாக கொண்டுவந்து கடைசியில் வயிறு குலுங்க வச்சிட்டிங்களே. என் தளம் வந்து வழிகாட்டிப் போனமைக்கு மிக்க நன்றி

vinthaimanithan said...

வெதவெதமா தின்னுட்டு வந்து வவுத்தெரிச்சல கெளப்புறீரே! உம்ம நாக்க அறுத்து காக்காய்க்கு போடணூம் ஓய்!

vinthaimanithan said...

வெதவெதமா 'ஏ' ஜோக் கலெக்ட் பண்ணிட்டு வந்து வில்லங்கத்த கெளப்புறீரே! உம்ம ..... அறுத்து.......ஓய்!

vasu balaji said...

கம்முன்னு இருங்கப்பா. அதுக்கும் ஒரு வில்லங்க ஜோக் போடுவாரு:))

Ŝ₤Ω..™ said...

அண்ணா.. விளம்பரம் அருமை.. இதையேன் தடை செஞ்சாங்க???

R. Gopi said...

//நான் ஏற்கனவே சொன்ன மாதிரி எக்ஸ்பிரஸ் அவின்யூவில பதினைஞ்சு ரூபாய் பார்க்கிங் வாங்க ஆரம்பிச்சிட்டதினாலே இனிமே மத்த மால்லையும் அதிகப்படுத்திருவாங்கன்னு சொன்னேனில்லையா?/

நீங்க தீர்க்க தரிசி சார். இது அப்படியே பெங்களூர் வரைக்கும் பரவாம இருக்க நீங்கதான் ஏதாவது ஐடியா கொடுக்கணும்.

//அப்புறம் படம் பார்த்த பி.வி.ஆரில் நல்ல பல சேட்டுப் பெண்களை பார்த்து மனதாற்றிக் கொண்டது.. வேறு விஷயம். //

ஒரு வாசல் மூடி மறு வாசல் தெரக்குறதுன்னா இதானா?

//அண்ணன் உ.த போல தொடர்ந்து பிட்டு படம் பார்க்கும் மன தைரியம் இல்லாததால் இலக்கணப்பிழை மட்டும் ஒரு மணி நேரம் பார்த்தேன்.//

நீங்க பாதி உண்மையைத்தான் சொல்றீங்க. அவர் அதுக்கும் விமர்சனம் போடுவார்.

சாதா ஜோக்கும் A ஜோக் மாதிரிதான் இருக்கு. இன்ஸ்பெக்டர் வரதுக்கு முன்னாடி கேப்டன் வந்துட்டுப் போயிருப்பாரோ? எது எப்படியோ போன வார மொக்க எ ஜோக்குக்கு இந்த வாரம் ஈடு கட்டிட்டீங்க.

Sukumar said...

இந்த பார்க்கிங் தொல்லை பெரும் தொல்லையாக இருக்கிறது.. இதுக்கு ஒண்ணுமே பண்ண முடியாதா....

Unknown said...

ஹாலிம் மொரிசியசில் எப்போதும் ரோட்டோர உணவாக கிடைக்கும்.. குறைந்த விலையில் நிறைந்த சுவை.. அங்கிருந்த நாட்களில் நான் நாளைக்கு மூன்று முறையாவது சாப்பிட்டு இருக்கிறேன்..

கோமகனின் இசைக் குழுவிற்கு நிச்ச்சயம் ஆதரவளிப்போம்.

அடுத்தமுறையும் கலைஞர் ஆட்சி என்பது கனவுதான், திருச்சில் ஜெ க்கு வந்த கூட்டம் நீங்கள் பார்க்கவில்லை யென நினைக்கிறேன் ..

குறும்படம் இவாரம் சுமார்தான், விளம்பரம் அருமையோ அருமை..

வர வர ஏ ஜோக் அரதபழசுகளை போடுறீங்க... நான் வேணுன்னா புத்தம் புதுசா அனுப்பி வைக்கவா ?

Cable சங்கர் said...

///ஹாலிம் மொரிசியசில் எப்போதும் ரோட்டோர உணவாக கிடைக்கும்.. குறைந்த விலையில் நிறைந்த சுவை.. அங்கிருந்த நாட்களில் நான் நாளைக்கு மூன்று முறையாவது சாப்பிட்டு இருக்கிறேன்..//

அடுத்த முறை போகும் போது கூட்டிப் போங்கள்.

//கோமகனின் இசைக் குழுவிற்கு நிச்ச்சயம் ஆதரவளிப்போம்.//
நன்றி

//அடுத்தமுறையும் கலைஞர் ஆட்சி என்பது கனவுதான், திருச்சில் ஜெ க்கு வந்த கூட்டம் நீங்கள் பார்க்கவில்லை யென நினைக்கிறேன் ..//

தலைவரே.. இதே போல எம்.ஜி.ஆர்.ஆட்சி காலத்தில் கலைஞருக்கு கூட்டம் வந்து கலைஞர் தோற்ற காலமிருக்குது. கூட்டட்தையெல்லாம் நம்பாதீங்க..

//குறும்படம் இவாரம் சுமார்தான், விளம்பரம் அருமையோ அருமை..//
நன்றி

//வர வர ஏ ஜோக் அரதபழசுகளை போடுறீங்க... நான் வேணுன்னா புத்தம் புதுசா அனுப்பி வைக்கவா ?//
இதையெல்லாம் பப்ளீக்காவா எழுதறது. தனியே பேசி கொடுக்கிறத விட்டுட்டு..

சுரேகா.. said...

அசந்த நேரத்துல ஒரு ப்ளான் போட்டு போய்ட்டு வந்தாச்சா? ஊரில் இருந்தா நானும் வந்திருப்பேன். :)
ஆனா..ஹலீம் சாப்பிட்டிருக்கமுடியாது!! :(

பிரபல பதிவர் said...

//இலக்கணப்பிழை மட்டும் ஒரு மணி நேரம் பார்த்தேன்
//
நம்புறேன்...

//இப்படத்தின் பட்ஜெட் வெறும் 15 லட்சம் ரூபாய்தானாம்//

என்னமோ திட்டம் இருக்கு....

//சனி ஞாயிறுல ஐநாக்ஸுல ஹவருக்கு பதினைந்து ரூபாயாம்.. //

மால் தியேட்டர்களை புறக்கணியுங்கள்... சிம்பிள்... தன்னால இறங்கி வருவார்கள்.....


//ரெண்டு மூணு இடம் வாங்கி போட்டு மல்டிப்ளெக்ஸ் கட்டுறதா கேள்வி...//

இடமா... மாவட்டங்களா??? விளக்கம் தேவை..


//கேப்டன் ட்ரஸ்சை //

விஜயகாந்த்தை வைத்து எழுதிய ஜோக்கா????

Jackiesekar said...

கம்முன்னு இருங்கப்பா. அதுக்கும் ஒரு வில்லங்க ஜோக் போடுவாரு:)) இதுதான் வானம்பாடிகள் பஞ்ச்

ஜில்தண்ணி said...

பரோட்டா செம டேஸ்டுதான் :) கலக்கல்

அப்பரம் expendables படம் விமர்சனம் எப்ப தல :)

நாடோடி said...

அண்ணே ஹைதிராப‌த்தில் ஹ‌லீம் சாப்பிட‌ன‌னுன்னா "பிஸ்தா ஹ‌வுஸ்" ட்ரை ப‌ண்ணி பாருங்க‌ள். அதுதான் அங்கு பிர‌ப‌ல‌ம். இத‌ற்கு ப‌ல‌ கிளைக‌ள் இருக்கின்ற‌து. நானும் சாப்பிட்டு இருக்கிறேன்.

ரமேஷ் வைத்யா said...

vayiththerichal

a said...

Sappata pathi thani pathiva podama intha thadava kothula serthutteenga?

Wanderer said...

எக்மோர் டான் பாஸ்கோ பள்ளி அருகிலுள்ள ஃபிஷர்மேன்ஸ் ஃபேர் உணவகத்தில் ரம்லான் மாதம் முழுதும் வெளியே தந்தூரி போன்ற அடுப்பு வைத்து ஹைதராபாதிலிருந்து வரவழைத்த மாஸ்டர்கள் செய்த ஹலீம் விற்பார்கள். மதியம் 2 மணி முதலே விற்பனை ஆரம்பித்து 6 மணிக்குள் விற்று தீர்ந்து விடும். நான் ஹைதராபாத் ஹலீம் சாப்பிடாததால் ஒப்பிட முடியாது. ஆனால், இந்த ஹலீம் 1/4 கிலோ வாங்கி நீங்கள் மதியம் சாப்பிட்டால், மறுநாள் காலை வரை நாக்கை விட்டு ருசியும் போகாது, பசியும் எடுக்காது. சுவைத்து பார்த்து சொல்லுங்கள்!

பித்தன் said...

aduththa muraiyum kalainjar aatchithaan athai yaaraalum matra mudiyaathu.....

Thamizhaga makkalin vithi athu. Already City Centre kai maariduchchinnu sollak kelvi

butterfly Surya said...

விளம்பரம் அருமை..

அபி அப்பா said...

அலீம் சாப்பிடனும்னா அது துபாய் கராச்சி தர்பார்ல சாப்பிடனும். நீங்க சொல்வது மாதிரி மட்டன் அரைத்து செய்யப்படுவது இல்லை. அது அங்கே சிக்கன் அரைத்து கூழாக்கி கேசரி கலர்ல ஒரு பவுல்ல இருக்கும். அதுக்கு தந்து ரொட்டி தான் காம்பினேஷன். (இங்க இருப்பது போல தந்தூரி இல்லை. ட்ரடிஷனல் முறையில் பானையை புதைத்து வைத்து வெளிப்பக்கம் கங்கு நெருப்பு போட்டு உள்பக்கம் வழியா எண்ணை இல்லாம சுடும் தந்து ரொட்டி. அளவும் பெரியதாக இருக்கும். சூடாக இருக்கும் போது சாப்பிட்டா தான் இறங்கும்)

அந்த அலீம் உள்ளே போட்டிருக்கும் மசாலா என்ன என்பது கண்டுபிடிப்பது சிரமம். ஆனா அது போல ஒரு டேஸ்ட் நான் எங்கயும் அனுபவிச்சது இல்லை.

அமீரக எல்லா கராச்சி தர்பாரிலும் கிடைக்கும் எனினும் கராமா கராச்சிதர்பாரும், ரஷீதியா கராச்சி தர்பாரும் தனி ருசி.

நான் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் ஒரு அயிட்டம் இதான்.

Anonymous said...

மஜா மல்லிகா யாருன்னு கேட்குறவங்களுக்கு.. அடப் போங்கப்பா இது கூட தெரியலைன்னா.. என்ன ப்ளாக் எழுதி, இண்டெர்நெட் பாக்குறீங்களோ??

மஜா மல்லிகாவ இண்டர்நெட் பார்க்குற எல்லாருக்கும் நல்லா தெரியும் அண்ணா. நீங்க மட்டும்தான் இதை வெளிப்படையா சொல்லியிருக்கிங்க. மத்தவங்க “ஜொல்லு” விடறதோட சரி....

R.Gopi said...

மல்டிப்ளெக்ஸ் எல்லாம், வாசல்ல இருந்து எட்டி பார்த்துட்டு வந்துடணும் போல இருக்கு...

ஆனாலும், அவர்களின் ஒளி, ஒலியமைப்பிற்க்காகவும், ஏமாத்தாம ஏசி போடறதுக்காகவும் நல்ல படங்களை அங்க தானே பார்க்க வேணும்...

சுவையான ஹலீம்.... சுவையில் ஏமாற்றினாலும் அதை காம்பன்சேட் பண்ணிய சேட்டு பெண்கள் வாழ்க...

அதிகமில்லை ஜெண்டில்மேன்... ஜஸ்ட் 15 லட்சம் ரூவாய்ல ஒரு இலக்கண பிழையான பிட்டு படம்... ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

காதல் சொல்ல வந்தேன் இசை... அட போங்க தல... இன்னும் கொஞ்ச நாளைக்கு எந்திரன், எந்திரன், எந்திரன் தான்... மத்தது எல்லாம், அப்புறம் பார்ப்போம்... சாரி...கேப்போம்....

//உன்னுடய எல்லா கனவுகளும் நிஜமாக முடியாது. ஆனால் அவைகள் உன்னுடய எதிர்காலத்தின் வெற்றிக்கு படிகளாய் அமையும்.//

சூப்பர் தத்துவம்... உண்மையும் கூட...

மஜா மல்லிகா -- !!!???? நாக்கு தெல்லீதுபா.....

குறும்படம், விளம்பரம்.... நல்லா இருந்தது...

தோழர்களே.... கோமகனை ஆதரித்து ஊக்குவிக்க வேண்டுகிறேன்... நல்ல முயற்சி சங்கர் ஜி... பாராட்டுக்கள்...

யாரு!!?? கப்பல் கேப்டனா... அப்ப சரி... மக்கள் ரொம்ப குழம்பி போய் வேற யாரோன்னு நெனச்சி கேட்டு இருந்தாய்ங்களேன்னு பார்த்தேன்...

வழக்கம் போலவே கொத்து பரோட்டா பலே..

Thamira said...

ஹலீம்.. ஏமாற்றமா? நல்லவேளை, இல்லைன்னா வரமுடியாம போன எனக்கு வயித்தெரிச்சலா போயிருக்கும்.

கண்டிப்பாக சென்னையின் எந்த மூலையிலாவது நல்ல ஹலீம் கிடைக்கலாம். சீக்கிரம் கண்டுபிடியுங்கள். போவோம்.

JDK said...

//உத்தித்தின் குழந்தை குரலும்//

வாயில வசும்ப வச்சி தேய்க்க !!!

கார்க்கிபவா said...

தல, அபப்டியே அந்த பெப்சி, வாட்டர் பாட்டில் மேட்டர்.. ஹிஹிஹிஹி

ஆ.ஞானசேகரன் said...

நல்லாயிருக்கு அண்ணே

'பரிவை' சே.குமார் said...

பரோட்டா செம கலக்கல்.

'பரிவை' சே.குமார் said...

பரோட்டா செம கலக்கல்.

Unknown said...

30...

Unknown said...

பரோட்டா--ATHAVATHU

nama suryakadai koothuporatavai vida nagaiswaiyaga eruntchu....

Cable சங்கர் said...

@raaja
நன்றி
@ம.தி.சுதா
நன்றி

2விந்தைமனிதன்
ம்