Thottal Thodarum

Aug 11, 2010

டாக்டர்…

Drinving_on_by_did ”எனக்கு நாளை நடக்கப் போவது இப்போதே தெரிகிறது. சில சமயம் அடுத்த நிமிஷங்களில், ஏன் நொடிகளில் நடப்பது கூட தெரிகின்றது” என்று மிக,மிக பதட்டத்துடன் உட்காருவதற்கு முன்னமே படபடவென பேசியபடியிருந்தவனை பார்த்து “முதலில் நீங்கள் உட்காருங்கள்.. ரிலாக்ஸ்” என்று தண்ணீர் க்ளாஸை அவன் முன் நகர்த்தினேன். அவன் மிகுந்த ஆயாசத்துடன் தண்ணீரை எடுத்து ‘மடக்..மடக்’கென குடித்தான். சுமார் முப்பது வயதிருக்கும். கண்களின் கீழ்  கருவளையமாய் இருந்தது.

நான் ஒரு மனநல மருத்துவன். என் பெயர் ஆத்மாநாம். என் அப்பா ஆத்மாநாம் பைத்தியம். அதனால் அந்த பெயர். கடைசி பேஷண்டாக வந்திருக்கிறான். மெல்ல எதிர் சீட்டில் தண்ணீரை குடித்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தவனை ஆழ்ந்து பார்த்தேன். அவன் கருவளையங்களை வைத்தே சொல்லிவிட முடியும் அவன் ஒழுங்காய் தூங்கி பல நாட்களாகியிருக்கும் என்று. இக்கால இளைஞர்களுக்கு ஸ்டெரெஸ் லெவல் அதிகம். அவனுடய பைலை ஒரு பார்வை ஓட்டினேன். பெயர் நரேன். வேலை சாப்ட்வேர். எதிர்பார்த்தது. ம்..சொல் என்பது போல அவனை பார்த்தேன்.

“டாக்டர்..  நான் ஏற்கனவே சொன்னதுதான் நடக்கப் போவது தெரிகிறது. அதுவும் விபத்துக்கள். முதலில் நான் இதை கண்டு கொள்ளவேயில்லை. அதாவது அப்போது இதுதான் ப்ரச்சனை என்று புரியவில்லை. முதல் முறை என் அம்மா எனக்கு பை என்று சொல்லிவிட்டு அவளுடய கைனடிக்கை கிளப்பும் போது.. தோன்றியது  ஏதோ ஆயிடும் போல என்று என்னையறியாமல் ‘ஜாக்கிரதை’ என்று சொன்னேன். அம்மா சந்தோஷமாகி ”என் செல்லக்குட்டிக்கு எவ்வளவு அக்கறை பாருன்னு” வண்டியை நிறுத்தி என்னை தூக்கி முத்தமிட்டு போனாள். அடுத்த சில நிமிடங்களில் ரோடு முனையில் தண்ணி லாரி ஏறி கூழாய் கிடந்தாள். நான் சொல்லாமல் இருந்திருந்தால் அந்த சில நிமிடங்களில் தப்பித்திருக்கலாம். அதெல்லாம் எனக்கு அப்போது புரியாத வயது ஒரு ஆறு வயசிருக்கும்.

அதன் பிறகு என் திருமணத்திற்கு முன்பு.. ஒரு சப்வேயில் நுழையும் முன்பு பளிச்சென மின்னல் போல தோன்றியது. நான் விபத்துக்குள்ளாகப் போகிறேன் என்று. நினைத்து முடிப்பதற்குள் கருப்பாய் ஒரு உருவம் என் வண்டியின் முன் காற்றை விட வேகமாய் குறுக்கே கடக்க, சட்டென ப்ரேக் பிடித்ததில் வண்டி ஸ்கிட் ஆகி அப்படியே தரையில் தேய்த்து கொண்டே சில அடி தூரம் இழுத்துக் கொண்டு சென்றேன். பிராக்சர் இல்லாமல் பிழைத்தது பெரிய விஷயம். விழுந்து எழுந்த அடுத்த நொடி, என் பைக்கை ஒரு பஸ் தட்டிவிட்டு சென்றது.”

அவன் பேசும் போது முகத்தில் பல உணர்வுகள் தாண்டவமாடியது. இம்மாதிரியான ப்ரச்சனைகள் உள்ளவர்கள் எப்பவுமே அப்படித்தான். சாதாரண விஷயதுக்குக்கூட பெரிதாய் ரியாக்ட் செய்வார்கள்.

“அதற்கு பிறகு ஒரு பெரிய  விபத்து. பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு ஈ.சி.ஆரில் ஒரு திருமணம் முடித்து நண்பர்களுடன் வந்த போது, வண்டியில் எல்லோரும் சந்தோஷமாய் இருக்க, டிரைவர் வண்டியை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த போது எனக்குள் மீண்டும் அதே மாதிரியான அழுத்தம் தோன்ற, டிரைவர் ஜாக்கிரதை என்று கத்த நினைப்பதற்குள், வண்டியின் பின்னால் இடிக்கப்பட்டு நான்கைந்து முறை, 120 கிலோமீட்டர் ஸ்பீடில்  குட்டிக்கரணம் அடித்தது. ஒரு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அவ்வளவு பெரிய விபத்தில் யாருக்கும் பெரிய அடி ஏதுமில்லை ஆனால் எங்களை இடித்த வண்டியில் இருந்தவர்களுக்கு நல்ல அடி, ஒரு ஆள் போய்விட்டான். இதன் பிறகு பல விபத்துகள் சின்ன, சின்ன விபத்திலிருந்து பெரிய விபத்துக்கள் வரை எனக்கு முன்னமே தெரிகிறது. என் வரையில் தெரிந்து கொண்டிருந்த விஷயஙக்ள் இப்போது மற்றவர்கள் போகும் வண்டியை பார்த்தாலும் தோன்றுகிறது. அது நடக்கவும் நடக்கிறது.  சமீபத்தில் நடந்த மங்களூர் விமான விபத்தன்று என் பாஸை ரிசீவ் செய்வதற்காக ஏர்போர்ட்டில் இருந்தேன். அரைவல் அறிவிப்பு வந்தவுடன் விபத்தாகிவிடுமோ என்ற எண்ணம் என்னை அழுத்தியது.  அய்யோ.. கடவுளே இருக்கக்கூடாது.. என்று மனதுள் அலறி முடிப்பதற்குள் விமானம் விபத்துக்குள்ளாகி அவர் இறந்துபோனார்.”

கொஞ்சம் ஆச்சர்யமாக இருந்தது. இம்மாதிரியான பல கேஸ்களை நான் பார்த்திருக்கிறேன். கனவில் நடப்பது நிஜத்திலும் நடக்கிறது என்பவர்களை, காதுக்குள், மண்டைக்குள் குரல் கேட்கிறது, பேசிக் கொண்டே வேறு யாரோடோ பேசிக் கொள்வது போல தனியே பேசும் ஆனால் அதை ஒத்துக் கொள்ளாத ஆட்கள் என்று கேஸ்கள் பலவிதம். மனிதனின் மனதில் தான் எத்தனை குழப்பங்கள், படிமானங்கள், கற்பனைகள். அவற்றின் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.

“விபத்து நடக்கப் போகிறது என்று யாராவது உங்கள் காதுகளில் சொல்கிறார்களா?”

“இல்லை.. அப்படியெல்லாம் ஒன்றும் கேட்பதில்லை. நிச்சயமா ஹலூசினேஷன் கிடையாது டாக்டர்.”

தீஸ் யங்ஸ்டர்ஸ்.. எங்கிருந்தாவது நான்கைந்து வார்த்தைகளை தெரிந்து கொண்டு நம்மிடமே பந்தா காட்டுவது. “ஓகே.. பின் எப்படி தோன்றும்?’

“அம்மாதிரியான நேரங்களில் உள்ளிருந்து ஒரு அலறல் எழும்பும் ஆனால் குரல் வெளியே வராது. யாரோ வந்து என் குரல்வளையை அழுத்துவது போல இருக்கும். வியர்த்து வழியும். அதற்குள் விபத்து நடந்துவிடுகிறது. அட்லீஸ்ட் என் குரல் வந்தாலாவது மற்றவர்களை கத்தி காப்பாற்றியிருக்கலாமோ என்ற ஆதங்கம், துக்கம், ஒரு குற்ற உணர்ச்சி என்னை தூங்க விடாமல் படுத்துகிறது. நான் தூங்கி பல நாட்கள் ஆகிறது. ரோடில் நடக்கவே பயமாயிருக்கிறது. யார் வண்டியோட்டினாலும் பின்னால் உக்கார பயமாயிருக்கிறது. எத்தனை முறை இரவு நேரத்தில் பயணம் செய்யும் போது டிரைவர் தூங்கிவிடுவானோ, வண்டி ஆக்சிடெண்ட் ஆகிவிடுமோ என்று தூங்காமல் வந்திருக்கிறேன். முடியலை டாக்டர்.. எனக்கு ஏதாவது செய்யுங்கள். இல்லை என்றால் பயத்திலும், குற்ற உணர்ச்சியிலும் செத்துவிடுவேன்.”

அவனுக்கு பெரிதாய் மூச்சிரைத்தது. வேர்த்து கொட்டியது. கண்டிப்பாய் பி.பி. ஷூட்டப் ஆகியிருக்கும். நிச்சயம் இவனுக்கு ட்ரீட்மெண்டும் , கவுன்சிலிங்கும் தேவை. மணியை பார்த்தேன். பதினொன்னு ஆகியிருந்தது. கிளம்ப வேண்டும். சென்னையின் உச்சபட்ச் சத்ததிலிருந்து விடுபடுவதற்காகவே ஊருக்கு வெளியே ஒரு தனி பங்களா.. அரை மணி நேர பயணம்.

“நரேன். ஓக்கே.. நீங்கள் நாளை மாலை ஆறு மணிக்கு மீண்டும் வாருங்கள் சில டெஸ்டுகள் எடுப்போம். உங்களுடன் பேச வேண்டும். நிறைய பேச வேண்டும். நீங்கள் குற்ற உணர்ச்சியடைய வேண்டிய அவசியமேயில்லை. சில விஷயங்களை யாராலும் தடுக்க முடியாது. யூ ஆர் நாட் ரெஸ்பான்சிபிள் யு.நோ.. இட் ஹாப்பன்ஸ்..உங்களுக்கு சில ட்ராங்க்வலைசர் தருகிறேன் நிம்மதியாக தூங்குங்கள். ஒரு வாரம் ஆபீஸுக்கு லீவு போடுங்கள். ஆராம் சே. ரெஸ்ட் எடுங்கள்.. உங்களது பயம் சில போபியா வகைகளுக்குள் வரக்கூடியதுதான். சரி செய்துவிடலாம். நத்திங் டூ  ஒர்ரி.. சிம்பிள்.. ஓகே..ஸீ.யூ டுமாரோ.” என்று அனுப்பி வைத்துவிட்டு, என் ப்ரீப்கேஸை எடுத்துக் கொண்டு, அன்றைய மொத்த கணக்கையும் பார்த்துவிட்டு கிளம்பி காரெடுக்க வந்த போது, நரேன் வாசலிலேயே நின்றிருந்தான்.

“என்ன நரேன் போகலையா.?’

‘இல்லை டாக்டர்.. பயமாயிருக்கிறது.. ஆட்டோவும் கிடைகக்வில்லை.”

அவன் கண்களில் பயம் தெரிந்த்து. இப்படியே தனியே விட்டுப் போனால் காலைவரை இங்கிருந்து கிளம்ப மாட்டான் போலிருந்த்து. இமமாதிரியான ஆட்களுக்கு வெளிச்சம் தைரியத்தை கொடுக்கும். ‘சரி உங்க வீடு எங்க..?” என்றதும் சொன்னான். நான் வீட்டிற்கு போகும் வழிதான். “என் மீது நம்பிக்கையிருக்கிறதல்லவா..என்னுடன் வருகிறாயா.?”பலமாய் தலையாட்டினான்.

நான் வண்டியை ரிவர்ஸ் எடுத்து இடதுபக்க கதவை திற்ந்து விட்டு நிறுத்தினேன். வண்டியில் ஏறியவுடன் பரபரவென சீட்பெல்டை எடுத்து மாட்டிக் கொண்டு, “ம்..போலாம் சார்..” என்றான். வண்டியை சீரான வேகத்தில் ஓட்டினேன்.  வழக்கமாய் நான் நல்ல வேகத்தில் ஓட்டுவேன். சிட்டி பார்டரை தாண்டி ஹைவேயில் வண்டி ஏறியவுடன், வேகத்தை கூட்ட, நரேன் ஏதோ சொல்ல வாயெடுக்க, அவனின் கண்கள் விரித்து.. “டாக்டர்.. ஜாக்கிரதை அந்த திருப்பதில ஒரு க்ராஸிங்ல ஒரு உருவம் வரும் பார்த்து என்றான்.  அவன் சொனனதை கேட்டு திருமப் ரோட்டுக்கு பார்வை திருப்பி கவனிப்பதற்குள் ஒரு கறுத்த உருவம் க்ராஸ் செய்தது.
கேபிள் சங்கர்

Post a Comment

42 comments:

க ரா said...

மீ த பர்ஸ்ட்.

பாலா said...

ராம்சாமி.. ராம்சாமி..

பாலா said...

ஹ்ஹாஆஆஆ..

க ரா said...

ஹா ஹா. பாலி பாலி...கவித என்னாச்சு .. உங்கள் பக்கதுல போடனும்ல :)

க ரா said...
This comment has been removed by the author.
பாலா said...

நான் கஜினி முகமது மாதிரி. அடுத்த பதிவுல பார்த்துக்கறேன்.

இப்ப ஒரு டெக்னிகல் மேட்டரு போய்கிட்டு இருக்கு. நமக்கும் அதுக்கும்தான் ஒத்துக்காதே. இல்லாத மூளையை கசக்கிட்டு இருக்கேன்.

சீ யு டுமோ.

Unknown said...

அண்ணே அடுத்து என்ன நடந்திருக்கும் என இதயத்தை தடதடக்க வைக்கிறீர்கள்... அசத்தல் கதை ....

சாஷீ said...

கலக்கல் ,,கதை அசாத்தியம் அந்த பேஷன்ட் {அழகிய தமிழ்மகன்} என்ன ஆனார் ??

ப்ரியமுடன் வசந்த் said...

டாக்டர்ன்னு கூட டபுள்மீனிங்லதான் பேர் வைக்கிறாய்ங்கய்யா அவ்வ்வ்வ்...

vinu said...

nighttu oru mannikku ellunthu okkanthu unga blog paarthuttu konjam relaxtta thoonga pollaaamunnu paarthaa ippudi panneettingalea.............


innakku sivaratthrithaan ponga....

when we like a sory, when it gave some impression in our mind on a story we may say this "feels good"

but for this sory at this midnight makes me "feel bad" romba bayama irrukkunga thaniya roomla thoongapporatha ninaichaa

and one more i want to point, before i reach the last line i think some what at the middle itself i felt this story made the readers to guess the climax, the expectaion which i have on yor writting style might not deserves this.

sorry naan eathaavathu overa peasi irrunthaaa

vasu balaji said...

superb:)

ராம்ஜி_யாஹூ said...

முதல் இரண்டு வரிகள் படித்ததும் அய்யர் தி கிரேட் சினிமா ஞாபகம் வந்து விட்டது. உடனே அந்த சினிமா காட்சிகளை யூடுபில் பார்க்க வேறு ஜன்னலை தெரிந்து விட்டேன்.

sriram said...

நல்லாயிருந்தது கேபிள், கடைசி பத்தி வரும் போது முடிவை யூகிக்க முடிந்தது.
அப்படியில்லாமல், டாக்டர் தனியே பயணிக்கும் போது அவனிடமிருந்து செல்போனில் கால் வரும்படி வைத்திருந்தால், சஸ்பென்ஸை இன்னும் நீடித்திருக்கலாம்..

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

//செல்போனில் கால் வரும்படி வைத்திருந்தால், சஸ்பென்ஸை இன்னும் நீடித்திருக்கலாம்..//

யாருப்பா கருத்து சொல்லுறது?

பாலா said...

சங்கர்.. நான் வேணும்னா.. நம்ம ஸ்ரீராம் கிட்ட சொல்லி.. மாசம் 100-200 டாலர் அவர் கணக்குல அனுப்பச் சொல்லுறேன்.

இந்த வெளம்பரத்தை கொஞ்சம் குறைங்களேன். 16Mbps லைன்லயே மூச்சு வாங்குதே. இந்தியாவுல எப்படிங்க லோட் ஆகுது?

ஒருவேளை நீங்க மட்டும், டெக்ஸ்ட் ப்ரவுஸரை யூஸ் பண்ணுறீங்களா?

பாலா said...

ராம்சாமி.. ராம்சாமி...

உஜிலாதேவியோட ப்லாக்ல குறிப்புகளை பகிர்ந்துக்கலாம் வர்றீங்களா??

http://ujiladevi.blogspot.com/2010/08/blog-post_10.html

sriram said...

//ஹாலிவுட் பாலா said...
யாருப்பா கருத்து சொல்லுறது?//

யோவ் பாலா, voice mail விட்டு மாசம் ஒண்ணாகுது, போன் பண்ற வழியக் காணோம், இங்க என்ன கேள்வி??

//ஹாலிவுட் பாலா said...
சங்கர்.. நான் வேணும்னா.. நம்ம ஸ்ரீராம் கிட்ட சொல்லி.. மாசம் 100-200 டாலர் அவர் கணக்குல அனுப்பச் சொல்லுறேன்//

எத்தினி பேரு கெளம்பி இருக்கீங்க இது மாதிரி??

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

பாலா said...

//யோவ் பாலா, voice mail விட்டு மாசம் ஒண்ணாகுது, போன் பண்ற வழியக் காணோம், இங்க என்ன கேள்வி??//

நீங்கதான் இப்ப நம்ம ஏரியாவுக்கு வர்றதேயில்ல. வந்தாதானே... நான் எவ்ளோ பிஸின்னு தெரியும்.

அது இல்லாம.. இப்ப உஜிலாவுக்கு குறிப்பு எழுதுறேன்.

நான் அன்னிக்கே கால் பண்ணினேனே உங்க ஆபீஸ் நம்பருக்கு. தோ.. காலிங்.. காலிங்

தராசு said...

ஓப்பனிங் சூப்பர் அண்ணே,

முடிவை பாதியிலேயே யூகிக்க முடிந்தது.

பிரபல பதிவர் said...

//ஆராம் சே. ரெஸ்ட் எடுங்கள்//

वअन्स ऒपन् अ टाईम इन् मुबई
SALT
பாணா காத்தாடி


---- பாதிப்பு

அடுத்த நிதர்சன கதை ‍

முதல்வரி

எனக்கு ஒரு வரி பேசும் போது எல்லா மொழியும் கலந்து வருது மருத்துவரே....

vinthaimanithan said...

//நான் விபத்துக்குள்ளாகப் போகிறேன் என்று. நினைத்து முடிப்பதற்குள் கருப்பாய் ஒரு உருவம் என் வண்டியின் முன் காற்றை விட வேகமாய் குறுக்கே கடக்க,//
..........................
...........................
..........................

//டாக்டர்.. ஜாக்கிரதை அந்த திருப்பதில ஒரு க்ராஸிங்ல ஒரு உருவம் வரும் பார்த்து என்றான். அவன் சொனனதை கேட்டு திருமப் ரோட்டுக்கு பார்வை திருப்பி கவனிப்பதற்குள் ஒரு கறுத்த உருவம் க்ராஸ் செய்தது.//

என்னமோ சொல்ல வர்றீங்க.... ஏதும் இன்செப்ஷன், மேட்ரிக்ஸ் பாதிப்பா?!

T.V.ராதாகிருஷ்ணன் said...

கலக்கல்

vinthaimanithan said...

//தீஸ் யங்ஸ்டர்ஸ்.. //

ரைட்டு... வாத்தியார் நல்லா கதை சொல்றதில தேறிட்டாரு

என்னை மாதிரி நொண்ணைகளா இருந்தா

"இந்த காலத்து இளைஞர்கள் எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்".... இத்யாதி இத்யாதி போட்டு இன்னும் அரைப்பக்கத்துக்கு சாவடிச்சிருப்போம்

vinthaimanithan said...

என்ன தல... எண்டர் பட்டன இப்பல்லாம் தட்றதே இல்லையா?

அருண் பிரசாத் said...

சுவாரசியமான கதை!

இந்த முடிவை எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் நடை வித்தியாசமாக சென்றது அண்ணா

KUTTI said...

சிறப்பான எழுத்து நடை.

மனோ

சிவகுமார் said...

Super
"ஒரு கறுத்த உருவம் க்ராஸ் செய்தது" Doctor Out !

ரமி said...

This might be copy of Writer Rajeshkumar story.

May be similar thought.

DREAMER said...

கேபிள்ஜி,
நல்ல நரேஷன்...

-
DREAMER

Anonymous said...

கதை விறுவிறுப்பாக இருந்தது.. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

மேலும் சென்ற வார ஆனந்த விகடனில் வலையுலகம் பற்றிய தலையங்கம் படித்தேன். அதில் உங்கள் (கேபிள் சங்கர்) பெயரையும் படித்தேன்.. அது நீங்கள் தானே??

R.Gopi said...

சங்கர் ஜி....

ஆசான் சுஜாதா அவர்களின் கதையை படிப்பது போலிருந்தது....

CrazyBugger said...

Inna thala final destination series paatha pathippa?

'பரிவை' சே.குமார் said...

அசத்தல் கதை.

THOPPITHOPPI said...

link within 3links mattume ulladhu 5 aaga maatravum idam dhaan dhaaraalammaga ulladhe

KarthikeyanManickam said...

Thalaiva,

Kadhai soooper.
Maintained the thrill from start to end.
I think this is called ESP (Thanks to ATM-Vijay).

Kalakureenga.

a said...

Nice narration Cableji.

வண்ணான் said...

“அம்மாதிரியான நேரங்களில் உள்ளிருந்து ஒரு அலறல் எழும்பும் ஆனால் குரல் வெளியே வராது.


“டாக்டர்.. ஜாக்கிரதை அந்த திருப்பதில ஒரு க்ராஸிங்ல ஒரு உருவம் வரும் பார்த்து என்றான்.
//


விம் # டவுட்டு :)

சி. முருகேஷ் பாபு said...

கொஞ்சம் ஃபார்மேட் கதை. ஆக்ஸிடெண்ட் பற்றி நரேனுக்கு முன்பே தெரிகிறது என்றதுமே முடிவில் டாக்டருக்கு ஆக்ஸிடெண்ட் நேரப்போவதை யூகிக்க முடிகிறது. யூ டூ கேபிள்?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மீ த பர்ஸ்ட்.//

எலேய் ராமசாமி உனக்கு வேலை வெட்டி ஏதும் கிடையாதா. ஜாக்சன் வில்ல்லுல என்ன பண்ற...

Paleo God said...

//அதற்கு பிறகு ஒரு பெரிய விபத்து. பாண்டிச்சேரியிலிருந்து சென்னைக்கு ஈ.சி.ஆரில் ஒரு திருமணம் முடித்து நண்பர்களுடன் வந்த போது, வண்டியில் எல்லோரும் சந்தோஷமாய் இருக்க, டிரைவர் வண்டியை ஓவர்டேக் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்த போது எனக்குள் மீண்டும் அதே மாதிரியான அழுத்தம் தோன்ற, டிரைவர் ஜாக்கிரதை என்று கத்த நினைப்பதற்குள், வண்டியின் பின்னால் இடிக்கப்பட்டு நான்கைந்து முறை, 120 கிலோமீட்டர் ஸ்பீடில் குட்டிக்கரணம் அடித்தது. ஒரு பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் அவ்வளவு பெரிய விபத்தில் யாருக்கும் பெரிய அடி ஏதுமில்லை ஆனால் எங்களை இடித்த வண்டியில் இருந்தவர்களுக்கு நல்ல அடி, ஒரு ஆள் போய்விட்டான்.//

ஹி ஹி இந்த மேட்டர் எனக்குத் தெரியுமே! :)

அருண் said...

நல்லாயிருக்கு சார்,எதிர்பார்த்த முடிவைக்கூட விறு விறுப்பா சொல்றிங்க.

மணிவண்ணன் வெங்கடசுப்பு said...

nalla iruku sir! Sujatha kathai padicha mathiri oru feeling! :)