Thottal Thodarum

Aug 31, 2010

எ.வ.த.இ.மா.படம் -Peepli (Live)

Peepli02_330x123 எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க வைகிற படம் பீப்லி. வெகு சிம்பிளான மேக்கிங். ஆனால் மனதில் அறையும் கதை. மிகவும் கசப்பான விஷயத்தை சிரிப்பு என்கிற மருந்தோடு முழுங்க கொடுத்திருக்கிறார்கள். இவ்வளவு இயல்பாக ஒரு கதையை சொல்ல முடியுமா? மேக்கப்பில்லாத அழுக்கு முகங்களை வைத்து நம்மை வசீகரீக்க முடியுமா? கொஞ்சம் கூட கமர்ஷியல் இல்லாத ஒரு படத்தை அமீர்கான் தயாரிக்க முன்வந்ததை போல தமிழில் எந்த நிதிகளுக்காகவாவது தைரியம் இருக்கிறதா?. படத்தில் தான் கமர்ஷியல் விஷயம் இல்லையே தவிர படத்தை பொறுத்த வரை கமர்ஷியல் ஹிட் தான். ஏனென்றால் பிவிஆர், சத்யம், ஐநாக்ஸில் தொடர்ந்து வீக்கெண்டில் ஹவுஸ்புல்.
peepli விவசாயிகள் தற்கொலைதான் படத்தின் அடிநாதம், விவசாயம் நொடித்துப் போய், வறுமையிலும், பேங்க் லோன்கள் கட்ட முடியாமல் கடனிலும் நிலத்தை இழப்பது மானக்கேடு என்று நினைத்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளை பற்றிய படம்.  நத்தாவும் அவனுடய அண்ணன் புடியாவும் பேங்க் லோன் கட்ட முடியாமல் அவர்களது நிலத்தை பேங்கிடம் இழக்கும் நிலையில் இருக்கிறார்கள். அவர்களால் பணம் புரட்ட முடிய்வில்லை. எனவே லோக்கல் அரசியல் வாதியிடம் போய் ஏதாவது உதவி கேட்கலாம் என்று போன போது அங்கிருக்கும் ஒருவர் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அரசு அளிப்பதாய் சொல்ல, அதை நம்பி தங்களூள் ஒருவர் உயிர் துறக்க முடிவெடுக்கின்றனர். முடிவில் இளையவனான நத்தா உயிர் விட முடிவு செய்ய, இதை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது அங்குள்ள லோக்கல் பேப்பர் நிருபருக்கு தெரிய வர அவர் செய்தி தொலைக்காட்சிக்கு சொல்கிறார். சேனலுக்கு போன பின் தான் அமர்களமே.. எல்லா தொலைக்காட்சி சேனல்காரர்களும் நத்தாவின் வீட்டை ஆக்கிரமித்து, அவன் தற்கொலை செய்து கொள்வானா? இல்லையா? என்று ஆளாளுக்கு அவனுடய ஒவ்வொரு மூவ்மெண்டையும் கவர் செய்ய ஆரம்பிக்கிறது. இன்னொரு பக்கம் லோக்கல் அரசியல் வாதிகள் இதை வைத்து அரசியல் செய்ய நினைத்து, அவனுக்கு தேவையான பணத்தை கொடுக்காமல் ஒரு பெரிய கலர் டிவி செட்டை கொடுத்துவிட்டு போகிறார்கள். அரசோ.. ஒரு பெரிய ஆழ் துளை கிணற்று பைப்பை கொடுத்துவிட்டு பிட்டிங் சார்ஜ் கூட கொடுக்காமல் போகிறார்கள்.

முதலமைச்சருக்கோ நத்தா சாகாமல் இருந்தால்தான் வெகு விரைவில் வரும் எலக்‌ஷனில் வெற்றி பெற முடியும். ந்த்தாவின் வீடு ஒரு டூரிஸ்ட் ஸ்பாட் போல மாறி, ரங்கராட்டினம், ஐஸ்க்ரீம் வண்டிகள், பாப்கார்ன் என்று மேளா நிலமைக்கு வந்துவிட, ஒரு நாள் நத்தா காணாமல் போய்விடுகிறான். நத்தா செத்தானா இல்லையா? என்பதுதான் கதை.
 peepli1 முதல் காட்சியில் நத்தா தலைதெறிக்க ஓடி வருவதை போன்ற ஒரு கற்பனை காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. அதற்கு அப்படியே நேர்மாரான ஒரு ஓட்டை டெம்போவில் அவன் பயணித்துக் கொண்டிருக்கும் காட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது படம். லோக்கல் அரசியல்வாதி செத்தால் பணம் என்று சொல்ல வீட்டிற்கு வரும் வழியில் ஒரு நான்கைந்து சாவு செய்திகள் தொடர்ந்து வருவது. என்னடா இது இப்படி தொடர்து சாவு செய்தி வருகிறதே என்று புலம்புவதும். நான் சாகிறேன்.. இல்லை நான் சாகிறேன் என்று ஆளாளுக்கு மாறி மாறி பேசிக் கொண்டு, தம்பி நத்தா நான்குமுறை சொன்னதும் ஏதோ பெரிதாய் விட்டுக் கொடுக்கிறார் போல அண்ணன் சரி நீயே செத்துக்கோ என்பது. வீட்டில் ஆட்கள் படுக்கவே இடமில்லாத போது அதற்கு நடுவில் டிவி பெட்டியும் பைப்பும் ஒரு பெரிய இடைஞ்சல் என்பதை நடு வீட்டில் டிவியையும், பைப்பையும் வைத்துவிட்டு, தூக்கத்திலிருக்கும் குழந்தைகளை இடம் அட்ஜெஸ்ட் செய்து படுக்க வைக்குமிடம். டிவி சேனல்களுக்கு வெறும் பரபரப்பும் டி.ஆர்.பி மட்டுமே முக்கியம் என்பதை விளக்கும் பல காட்சிகள். டி.ஆர்.பி என்பது மேனிபுலேட் செய்யப்பட்ட ஒரு விஷயம் என்பதும். டிவி சேனல் காரர்கள் செய்தி என்று நத்தா “ஆய்” போவதை கூட பாலோ செய்வதும், பின்பு அவன் அங்கிருந்து காணாமல் போனதும் அவன் பெய்த ஆய்யை கூட விடாமல் ஏதோ ஒரு பெரிய விஷயம்  என்று கவரேஜ் செய்வது. டிவி சேனல் இண்ட்ர்வியூக்கு வரும் மத்திய அமைச்சர் பேட்டிக்கு முன் காம்பேரரிடம் ஏன் அன்றைக்கு பார்டிக்கு வரவில்லை என்று கேட்பதும், விவசாயிகள் பிரச்சனைக்கு ஒரெ தீர்வு தொழிற்மயமாக்குவதுதான் என்பது போன்று  படம் முழுக்க சர்ரியலிஸ சர்காஸ அட்டகாசம். மும்பையோ, டெல்லியோ, எந்த ஒரு பெரிய மாநகரத்டிலும் முகம் தெரியாத, பெயர் இழந்த பல பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். 
peepli3 நத்தாவாக வரும் நாடக நடிகரான ஓம்கார், அவருடய அண்ணன், நத்தாவின் மனைவி ஷாலினி. படுக்கையிலேயே இருந்து கொண்டு கத்தி போன்ற நாக்கால் ஆளும் நத்தாவின் அம்மா, அந்த லோக்கல் பத்திரிக்கையாளன், சேனல் பெண், எதிர் சேனல் ஆள், அரசியல்வதிகள்  என்று ஒவ்வொரு கேரக்டரும் நடிக்கவிலலை வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு சில இடங்களில் ஓவர் டோஸாகவும், மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளாய் இருந்தாலும் இப்படிப்பட்ட  விஷயங்களை வலிக்காமல் ஊசி போட்டால்தான் ஏறும் என்று புரிந்து, அறிந்து கொடுத்திருக்கும் இயக்குனர் அனுஷாரிஸ்வியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இம்மாதிரி படஙக்ளை ஊக்குவித்து, வைட் ரிலீஸ் செய்ய தியேட்ட்ர்கள் கிடைக்க, தயாரிக்க அமீர்கான் போன்றோர் இல்லையென்றால் வெளிவந்தேயிருக்காது. அல்லது தெரியவந்திருக்காது. நன்றி அமீர்கான்.
PEEPLI (LIVE) – A MUST SEE MOVIE IN THEATRE
கேபிள் சங்கர்
Post a Comment

39 comments:

க ரா said...

PEEPLI (LIVE) – A MUST SEE MOVIE IN THEATRE
---
sure .. i will watch this movie soon...

க ரா said...

அது என்ன எ.வ.த.இ.மா.படம் ?

butterfly Surya said...

இன்னிக்கு பிரதமர் மன்மோகன்ஜி பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு சொன்னாராம்.. :( :(

ம.கொ.ப யின் விமர்சனம் படிக்கணும்... வெயிட்டிங்..

butterfly Surya said...

இன்னிக்கு பிரதமர் மன்மோகன்ஜி பார்த்துட்டு நல்லாயிருக்குன்னு சொன்னாராம்.. :( :(

ம.கொ.ப யின் விமர்சனம் படிக்கணும்... வெயிட்டிங்..

க ரா said...

எ.வ.த.இ.மா. இத புரியல.. அதுக்குள்ள ம.கொ.ப... என்னவோ போங்க..

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
க ரா said...

RAMYA said...

இராமசாமி அங்கிள் உங்களுக்கு வேற வேலை இல்லையா ?
---
அங்கிள்... பிளாக் எழுதறவர சொல்ல வேண்டிய வார்த்த இது :)

shortfilmindia.com said...

அலோ மிஸ்டர் இராமசாமி.. பிரச்சனை உஙக்ளுக்கும் ரம்யாவுக்கும் தேவையில்லாம யூத்தான என்னை ஏன் இழுக்கிறீங்க?

Anandkrish said...

it is happy to see that still there are some people trying to make good movies.

Raj Chandra said...

>>எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்னு ஏங்க...

--Don't you know? Kamalhasan is going to act in this movie (he is going to act in all the roles). K.S. Ravikumar is the director ;)

என்னது நானு யாரா? said...

படத்தை பற்றிய விமர்சனம் அருமை. படத்தை பார்கக் தூண்டியது Very Good அண்ணா!

நண்பர்களே! மருந்தில்லா மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ள

http://uravukaaran.blogspot.com

வாருங்கள் படித்து பார்த்து பயன் அடையுங்கள்!!!

மேவி... said...

கேபிள்ஜி ஹிந்தி தெரியாத என்னை போன்ற ஆட்களுக்கெல்லாம் இந்த மாதிரியான நல்ல படங்களையெல்லாம் சப் டைட்டில் உடன் பார்த்தால் தான் புரியும்.

சரி குறைந்த பட்சம் ஒரிஜினல் சிடியில் பார்க்க முயற்சிக்கிறேன் .... இல்லாவிடில் யூ டுபில் பார்த்துவிட வேண்டியது தான்.


(நேத்து நீயா நானா பார்த்தேன் தல .... ரொம்ப மொக்கைய இருந்துச்சு)

Cable சங்கர் said...

@டம்பிமேவி
நீயா நானா பற்றிய உங்கள் கருத்துக்களை நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு அனுப்பி வைக்கிறோம்.

KUTTI said...

REVIEW IS VERY NICE.


MANO

பிரபல பதிவர் said...

//எ.வ.த.இ.மா.படம் //

என்று மற்ற மொழி படங்களை புகழ்ந்து விட்டு, விலை, அவளின் உணர்ச்சிகள், இலக்கணபிழை போன்ற தமிழ் காவியங்களை கண்டு கொள்ளாமல் விடும் உம்மை.....

ஈரோடு கதிர் said...

படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம்

நன்றி

ரமி said...

Sankar,

Is it possible to watch this movie with subtitle in any Chennai theatres.

Regards
Ramesh.P

அலைகள் பாலா said...

தமிழ்ல எடுத்தா தயாரிப்பாளர் தற்கொலை பண்ணிக்க வேண்டியது தான். ஆனா நிதி இருக்கவங்க எடுக்கலாம்.

Bharkavi said...

படத்தை பார்க்கத் தூண்டும் விமர்சனம்

Thenammai Lakshmanan said...

GOOD REVIEW SHANGKAR.. THX FOR SHARING..

Unknown said...

தமிழில் இப்ப இந்த படத்தை ரீ மேக்கினால், கலைஞரை விமர்சிக்க சரியான வாய்ப்பு, ஆனால் யாரும் தயாரிக்க மாட்டார்கள்...

rajasundararajan said...

நிதி இருக்குறவங்க எடுப்பாங்களாங்கிறீங்க; இலவச டி.வி. பெட்டிங்கிறீங்க...

நிதானமாத்தான் இருக்கிறீங்களா?

மாலைக் காட்சிகளில் ஓடுவதால், பகல் வெட்டியான எனக்கு, படத்தைப் பார்க்க வாய்க்கவில்லை. உங்கள் எழுத்தை வாசித்த பின் எப்படியாவது பார்த்தாக வேண்டுமே என்று உறுத்துகிறது.

VISA said...

mmmm.Good one.

Admin said...

எ.வ.த.இ.மா.படம் = எப்ப வரும் தமிழ்ல இந்த மாதிரியான படம்

sareeya

மார்கண்டேயன் said...

இந்த மாதிரி படத்த தமிழ்ழ யாரும் டப்பிங் கூட செய்ய மாட்டாங்களா ? உங்களுக்கு தெரிஞ்சவங்க யாரவது இருந்தா டப்பிங் செஞ்சு ரிலீஸ் செய்ய சொல்லலாமே . . . நல்ல நேர்த்தியான வசனத்த வச்சு

ருத்ர வீணை® said...

நீங்க ஒரு படம் இந்த மாதிரி எடுத்தா நல்லா இருக்கும் தல.. ;-)

சும்மா ஒரு கவிதை எழுதுனேன்..
http://rudhraveenai.blogspot.com/2010/08/blog-post_31.html

எப்படி இருக்குனு சொல்லுங்க..

Unknown said...

அருமையான படத்துக்கு அருமையான விமர்சனம்.

Kumky said...

கேபிள்,
உங்க விமர்சனத்தை படிச்சிட்டு ஸ்லோவாக்கியா படத்தினை கூட பார்க்கலாம் போல...

இந்திய விவசாயிகள் எல்லோருக்கும் பொருந்தும்...என்ன மொழியானால் என்ன...

Prathap Kumar S. said...

good review cable ji :)

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
பரிசல்காரன் said...

//Cable Sankar said...

@டம்பிமேவி
நீயா நானா பற்றிய உங்கள் கருத்துக்களை நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு அனுப்பி வைக்கிறோம்.//


நோ பால்-ல அடிச்ச சிக்ஸர்யா! ப்ந்து காணாமப்போய்டுச்சு போ!

பரிசல்காரன் said...

//Cable Sankar said...

@டம்பிமேவி
நீயா நானா பற்றிய உங்கள் கருத்துக்களை நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு அனுப்பி வைக்கிறோம்.//


நோ பால்-ல அடிச்ச சிக்ஸர்யா! பந்து காணாமப்போய்டுச்சு போ!

அன்பரசன் said...

//RAMYA said...
http://www.freeimagehosting.net/uploads/d871210078.jpg

SANKAR SIR MY SMALL GIFT.//

Super gift....

Annamalai Swamy said...

Hi Sankar!

பசிடிவ்வான விமர்சனம், படத்தை பார்க்கத் தூண்டுகிறது.

சிவராம்குமார் said...

சப்-டைட்டிலோட டிவிடி வர்ற வரைக்கும் ஒன்னும் பண்ண முடியாது.... காத்திருக்கிறேன்...

vinthaimanithan said...
This comment has been removed by the author.
vinthaimanithan said...

ம்ம்ம்.... சரி சரி ஏதாவது ஒரு மால்ல மேட்னி ஷோ பாத்துட்டு சின்ன்ன்னதா ஒரு பெருமூச்சு விட்டுட்டு... டிஃபனுக்கு சரவணபவன் போயிடலாம்...

நெய்வேலி பாரதிக்குமார் said...

எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம் பகுதியி பிப்லி பற்றி அருமையாக எழுதியுள்ளிர்கள். எனக்கும் உங்களைப்போன்ற ஏக்கம் உண்டு. நான் பார்த்த வரையில் உலகின் மிக சிறந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டவை என்பதுதான் முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்.தமிழின் முயற்சிகள் எல்லாம் ஓன்று தவறான கதை தேர்வு அல்லது தவறான இயக்குனர் கையில் சிக்கியதுதான். ( உதிரிப்பூக்கள் விதிவிலக்கு ). தமிழின் துரதிஷ்டம் தமிழ் இயக்குனர்கள் தங்களை சிறந்த கதாசிரியர்களாக நினைத்துக் கொள்வதுதான் இந்த போக்கு மாறினால் நிச்சயம் நம் கனவு நிறைவேறும்

நெய்வேலி பாரதிக்குமார் said...

எப்ப வரும் தமிழில் இந்த மாதிரி ஒரு படம் பகுதியி பிப்லி பற்றி அருமையாக எழுதியுள்ளிர்கள். எனக்கும் உங்களைப்போன்ற ஏக்கம் உண்டு. நான் பார்த்த வரையில் உலகின் மிக சிறந்த படங்கள் எல்லாம் ஏதேனும் ஒரு நாவலை அல்லது சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டவை என்பதுதான் முக்கியமான காரணம் என்று கருதுகிறேன்.தமிழின் முயற்சிகள் எல்லாம் ஓன்று தவறான கதை தேர்வு அல்லது தவறான இயக்குனர் கையில் சிக்கியதுதான். ( உதிரிப்பூக்கள் விதிவிலக்கு ). தமிழின் துரதிஷ்டம் தமிழ் இயக்குனர்கள் தங்களை சிறந்த கதாசிரியர்களாக நினைத்துக் கொள்வதுதான் இந்த போக்கு மாறினால் நிச்சயம் நம் கனவு நிறைவேறும்