Thottal Thodarum

Aug 2, 2010

கொத்து பரோட்டா-2/08/10

கலைஞரின் மதுவிலக்கு அறிவிப்புக்கு பின் நிறைய அரசியல் இருப்பதாய் படுகிறது. ராமதாஸ் மதுவிலக்கை வைத்து ஆட்டம் ஆடுவதை தவிர்க்கவும், அடுத்த முறையும் ஆட்சியில் உட்கார, ஏற்கனவே 108, மருத்துவ காப்பீடு, மூலம் கிடைத்திருக்கும் நல்ல பெயரை, தாய் குலங்களிடம் தக்க வைத்துக் கொள்ளவும். டாஸ்மாக் ஊழியர் நடத்த இருக்கும் உரிமை கோரல் பிரச்சனைகளுக்கு அட்லீஸ்ட் எலக்‌ஷன் வ்ரைக்குமாவது புல்ஸ்டாப் வைக்கவும். டாஸ்மாக் தவிர வேறு விதத்தில் அரசுக்கு வருமானம் வர வைக்க புதிய வழி ஒன்று குறித்த ஆராய்ந்து கொண்டிருப்பதை பிரகடனபடுத்துவதற்கும் இருக்கும் என்று பல அனுமானங்கள் ஓடினாலும் ஒன்று மற்றும் நிச்சயம் சொல்லாம்.. மதுவிலக்கு வராதுன்னு..
**************************************************************************** இசையமைப்பாளர்களை குறை கூறியிருக்கும் RGV
ஏ.ஆர்.ரஹ்மான், மணிசர்மா,மரகதமணி, தேவி ஸ்ரீ பிரசாத் போன்றவர்கள் தான் சவுத் இந்தியாவின் இசையையே கொன்றுவிட்டாரக்ள் என்று சொல்லியிருக்கிறார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் ரானா இளையராஜாவின் பழைய சின்னக் கவுண்டர் தெலுங்கு பாடல்களை பற்றி பேசும்போது இளையராஜாவை குறிப்பிட்டு பேசியதற்கு ராம் கோபால் வர்மா இப்படி சொல்லியிருக்கிறார்.  இத்தனைக்கும் மரகதமணியை இவர் தன் முதல் படத்தில் அறிமுகப்படுத்துவதாக இருந்து பின்பு தன்னுடய ஷணம்,ஷணம் படத்தின் மூலமாய் அறிமுகப்படுத்தியவ்ரே இவர் தான். அதே போல ரஹ்மானை ரஹமானை ஹிந்திக்கு கூட்டி சென்றதே இவர்தான். இவர்கள் எல்லோரும் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கெடுத்து கொண்டிருக்கிறார்கள் என்றிருக்கிறார். இப்படியிருக்க வர்மாவின் குற்றச்சாட்டை இவர்கள் எப்படி எதிர் கொள்கிறார்கள் என்று பார்ப்போம். ஒரு காலத்தில் ராஜா பீக்கில் இருந்த போது ஒரு கும்பல் அவரை இதையே குற்றமாய் சொல்லி திட்டிக் கொண்டிருந்த்து.
**************************************************************************************
இந்த வார சந்தோஷம்
போனவாரம் மிகுந்த சர்சைக்குள்ளான நிதர்சன கதைகள் –21- முற்றுப்புள்ளி கதை விரைவில் எழுத்தாளர் வா.மு.கோமு தொகுக்கும், பல பிரபல எழுத்தாளர்கள் எழுதும் கதைகளூள் என்னுடய கதையையும் தேர்ந்தெடுத்திருப்பதாய் சொன்னது.
**************************************************************************************
ஆல்மோஸ்ட் நிச்சயமாகிவிட்டது சங்கரின் அடுத்த படம் 3 இடியட்ஸின் ரீமேக் தான் என்பதை. முதல் முறை ரீமேக் என்பதால் திரைக்கதையில் குறிப்பிடத்தகக வகையில் மேலும் வேலை செய்யப்போவதாக சொல்கிறார்கள். இம்முறை தமிழ், தெலுங்கு இரண்டுக்கும் இசை ஹாரிஸ் ஜெய்ராஜ். தமிழில் விஜயும், தெலுங்கில் மகேஷ்பாபுவும் நடிக்கிறார்கள். அநேகமாய் கதாநாயகி இலியானாவாக இருக்ககூடும். எது எப்படியோ விஜய்க்கு ஒரு நல்ல படம் வர வாய்ப்பிருக்கிறது.
*************************************************************************************
ஃபாலோ அப்
சென்ற மாதத்தில் டொமினோ பிஸாவில் 25 பைசா சில்லரைக்காக நடத்திய போராட்டத்தை பற்றி எழுதியிருந்தேன். அதில் கூட ஒருவர் நானாக இருந்தால் சண்டை போடும் நேரத்தில் ஆயிரம் ரூபாய் சம்பாதித்துவிடுவேன் என்று சொல்லியிருந்தார். எல்லோருக்கும் அவரளவு திறமையிருக்க வாய்ப்பில்லை. அதனால் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசை பெறுவது நம் உரிமை என்பதால் போராடி பெற்றேன். சரி அதை விடுங்கள். மீண்டும் அதே கடைக்கு போன போது இம்முறை எல்லா பில்களுக்கும் ரவுண்ட் ஆப் செய்து, பில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். நான் சொன்னேனில்லை.. நிச்சயம் கேட்டால் கிடைக்கும்
***************************************************************************
செவிக்கினிமை
 எந்திரன் பாடல்கள் கேட்டாகிவிட்டது. ரஹ்மான் பாடல்கள் கேட்க, கேட்கத்தான் ஹிட்டாகும் என்பதை மனதில் வைத்துக் கொண்டு கேட்க வேண்டும். இதுவரை கேட்டவரையில் “அரிமா..அரிமா”  எனக்கு பிடித்திருக்கிறது. எந்திரா பாடலில் வரும் எஸ்.பி.பி குரல் கேட்டதும் ஒரு கரண்ட் ஓடுவதை மறுக்க முடியாது. என்னா குரல்டா..  மற்றதை பற்றி இன்னும் கேட்டுவிட்டு சொல்கிறேன். ஆனால் கேட்டவுடன் யுவனின் நான் மகான் அல்ல படத்தில் “வா..வா.. நிலவ பிடிச்சிதரவா” பாட்டு பிடிச்சது. ரொம்ப சிம்பிளான ட்யூன். ஏற்கனவே வேல் படத்தில் போட்டதையே திரும்ப போட்டிருந்தாலும் நிச்சயம் ஹிட்.அதே படத்தில் இன்னும் ரெண்டு பாடல்கள் ஹிட் ஆகும். முக்கியமாய் யுவனின் பாடலும், ஒரு மாலை நேரம் பாடலும். இப்பாடலில் பழைய காலித்தின் ”தித்தீ..தீத்தி” பாடல் ட்யூன்கள் ஞாபகப்படுத்தினாலும் ஓகே. ஆனால் சமீபகாலமாய் திரும்ப திருமப் கேட்கத்தூண்டும் பாடும் ஜி.வி.ப்ரகாஷ்குமாரின் “பூக்கள் பூக்கும்” பாடல் தான். ஹாண்டிங் மெலடி.
*************************************************************************************
நேற்று மதியம் தெலுங்கு சேனலான மா டிவியில் அறுபதாவது முறையாக “ஹாப்பி டேஸ்” படத்தை பார்த்தேன். நிச்சயம் இந்த படம் இன்று போடுவார்கள் என்று மனதில் நினைத்திருந்தேன். ந்ண்பர்கள் தினம் வேறா.. என் எண்ணம் ஜெயித்தது. இவ்வளவு முறை பார்த்தும் எனக்கு அலுக்கவேயில்லை. ஒவ்வொரு முறையும் அவர்களூடேயே வாழ்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த படம். இப்படத்தை பிரகாஷ்ராஜ்தான் தெலுங்கில் இங்கு ரிலீஸ் செய்து வெற்றிப்பெற்றார். இப்போது அதே படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார். இனிது இனிது என்று தெலுங்கு படத்தின் வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த அதே இசையமைப்பாளரையே தேர்வு செய்து இன்று பாடல்களை ரிலீஸ் செய்திருக்கிறார்கள். ட்ரைலரும் அதே போல அருமையாய் இருக்கிறது. நிச்சயம் தமிழில் ஒரு அருமையான ஃபீல் குட் படத்தை எதிர்பாருங்கள்.
************************************************************************************* 
இந்த வார விளம்பரம்
**********************************************************************************
இந்த வார தத்துவம்
நம்பிக்கை தான் உலகிலேயே மிகவும் சுலபமாக இழக்கும் விஷயம். அதே போல திரும்ப பெறுவதற்கு மிகவும் கஷ்டமான விஷயமும் ஆகும். எனவே நம் மீது நம்பிக்கை வைப்பதை போல ஒரு சிறந்த விஷயம் வேறேதுமில்லை..
**************************************************************************************
நண்பர்கள் தின தத்துவம்
ஒரு நண்பன் தவறு செய்யும் போது அவனை ஆதரி, ஆம் ஆதரியுங்கள். உங்க நண்பனை மட்டும், அவனுடய தவறையல்ல..
**************************************************************************************
இந்த வார குறும்படம்
நளனின் இந்த குறும்படம் ஒரு அழகான சிறுகதை.  உறுத்தாமல் நீதி சொன்னாலும் அதை சொன்ன விதத்தில், திரைக்கதை அமைத்த விதத்தில் மனதில் நிற்கிறார்.
***************************************************************************************
ஏ ஜோக்

இளைஞன் ஒருவன் பீச்சில் நிர்வாணமாய் தன் லுல்லாவை மட்டும்  ஒரு நியூஸ் பேப்பரினால் மறைத்துக் கொண்டு படுத்திருக்க, அங்கே வந்த ஒரு சிறு பெண், அவனிடம் “இந்த பேப்பரினுள் என்ன இருக்கிறது?” என்று கேட்க, இளைஞன் “அதன் உள்ளே ஒரு பறவை இருக்கிறது. அதை டிஸ்ட்ரப் செய்யக்கூடாது” என்று சொல்லிவிட்டு தூங்கி போய்விட்டான். திரும்ப அவன் விழித்தபோது தான் ஒரு ஹாஸ்ப்பிட்டலில் இருப்பதும், தன்னுடய லுல்லா பகுதி வலிமிகுந்ததாய் இருப்பதைஉணர்ந்த்வன் டாக்டரிடம் கேட்க, பக்கத்திலிருத பெண் “சாரி அங்கிள், நீங்க தூங்கிட்டீங்களா..? அந்த பறவையோட விளையாடினேனா.. அது திடீர்னு துப்பிருச்சு.. அதான் கோவத்துல பறவையை ரண்டா உடைச்சு, அதோட முட்டை ரெண்டையும் ஏறி மிதிச்சு, அந்த கூட்டை எறிச்சிட்டேன். என்றாள். கேட்ட இளைஞன் மீண்டும் மயக்கமானான்.
***************************************************************************************

இந்த வார நன்றி
என்னுடய பிறந்தநாளை முன்னிட்டு, போனிலும், நேரிலும், மின்னஞ்சலிலும், பதிவுகளிலும், பதிவு போட்டும் வாழ்த்திய நெஞ்சங்களுக்கு என் இதயம் கனிந்த நன்றி.
***************************************************************************************
கேபிள் சங்கர்
Post a Comment

49 comments:

ரிஷபன்Meena said...

திரும்ப திரும்ப கேட்பதால் தான் ரஹ்மானின் பாடல் பிடிக்கிறது என்று ஒரு பின்னூட்டத்தில் படித்தேன். ஓரளவுக்கு அது சரிதான் என்றே நான் நினைக்கிறேன்.
இளையராசாவின் பாடல்கள் முதல் முறை கேட்கும் போதே மனதில் தங்கக் கூடியவை.

“ஏ” ஜோக் -உலகமஹா மொக்கை அதை பலானதுன்னும் சேர்க்கமுடியாது சிரித்தும் தொலைக்கமுடியாது.

Unknown said...

நண்பர்கள் தின தத்துவம் நச்...
“ஏ” ஜோக் - மொக்கை

ஜோதிஜி said...

எல்லாமே அடக்கத்தைக் காட்டுகிறது.

ராசராசசோழன் said...

நல்லா சாப்பிட்டேன்..

http://rkguru.blogspot.com/ said...

super thala....

இராகவன் நைஜிரியா said...

நண்பர்கள் பற்றிய தத்துவம் ரொம்ப பிடிச்சு இருக்குங்க...

காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது மாதிரி... இப்ப இசை அமைப்பாளர்களில் யார் உயர் நிலையில் இருக்கின்றார்களோ அவர்களைப் பற்றி பலரும் பல விதமாக பேசத்தான் செய்வார்கள்.

த்ரீ இடியட்ஸ் நல்ல படம்தான். விஜய் அப்பா சந்திரசேகர் நடுவில் புகுந்து குழப்பி விடாமல் இருக்கணும் என்று ஆண்டவனை வேண்டுவதை தவிர வேறு வழியில்லை.

jokkiri said...

கேபிள் ஜி மற்றும் நண்பர்களே...

என் கீழ்க்கண்ட பதிவை படித்து தயவுசெய்து ஏதேனும் உதவ முடியுமா என்று சொல்லுங்கள்....

ஜிமெயில் அக்கவுண்ட், ஜோக்கிரி ப்ளாக்ஸ்பாட் அப்பீட் ஆயிடுச்சி
http://edakumadaku.blogspot.com/2010/08/blog-post.html

தராசு said...

அண்ணே,

கலைஞர் மதுவிலக்கு கொண்டு வருவார்னு நினைக்கறீங்களா???? வாய்ப்பே இல்லை. வேற எந்த வழில அடிப்படை கடை ஊழியர்ல இருந்து, தலைமை வரை சம்பாதிக்க முடியும் சொல்லுங்க.

வேணா, தாய்மார்களை கவர்வதற்காக, இலவச கம்மல், கொலுசு இப்பிடி எதாவது திட்டம் வரலாம். அவ்வளவுதான்.

அப்புறம் அந்த “ஏ” ஜோக்..... உவ்வே.....,

ஜெட்லி... said...

3 idiots விஜய்க்கு செட் ஆகுமா??

shortfilmindia.com said...

@jetli
செட்டாகுதோ இல்லியோ.. வேட்டைக்காரன், குருவி, சுறாவுல பாக்குறதுக்கு இதில பாத்தா.. மத்த நல்ல நடிகருங்க நடிக்கிறப்ப எஸ்கேபாயிரும் இல்லியா.?

ஜெட்லி... said...

//நல்ல நடிகருங்க நடிக்கிறப்ப எஸ்கேபாயிரும் இல்லியா.?
//

அதான் மாதவனும் சிம்புவும் நோ சொல்லிட்டாங்கலே...
ஒரு வேளை விஜயே மூணு ரோலும் பண்ணாருணா??

a said...

ஏ-ஜோக் ஏற்கனவே கொத்து பகுதியில் படித்ததாய் ஞாபகம்...

shortfilmindia.com said...

@jetli
யோவ் பயமுறுத்தாதய்யா..

பித்தன் said...

madhuvilakku vara "No Chance" it is the one which runs the government.

Unknown said...

என் சிஸ்டம் இப்பதான் குறும்படத்தை காட்டியது BSNL .. நளனுக்கு.. பாராட்டுக்கள்..

அப்புறம் மதுவிலக்கு வரவே வராது.. உடன்பிறப்புகளின் கம்பெனியும், இலவசங்களும் எப்படி?

butterfly Surya said...

பாங்காங் பயணம் எப்போ..??

கார்க்கிபவா said...

மதுவிலக்கு வந்தால் என் வாக்கு அம்மாவுக்குத்தான் என்பதை பியர் மீது சத்தியம் செய்து சொல்லிக் கொள்கிறேன்

Cable சங்கர் said...

@பட்டர்ப்ளை சூர்யா
யாரு போறா?

@கார்க்கி
நானும்..

சோழவர்மன் said...

சிங்கத்தை சுரண்டிப்பார்க்க வேண்டாம் !

VISA said...

//சிங்கத்தை சுரண்டிப்பார்க்க வேண்டாம் !//

பெண் சிங்கத்தையா முரட்டு சிங்கத்தையா இல்லை சன் சிங்கத்தையா என்பதை தெளிவுபடுத்தவும்

THOPPITHOPPI said...
This comment has been removed by the author.
Jana said...

எனக்கும் இப்போதைக்கு எந்திரன் அரிமா..அரிமா பிடித்திருக்கின்றது. நண்பர்கள் தின மசேஜ் மிக மிக நட்புக்குத்தேவையானது.

vasan said...

ம‌துவில‌க்கு ப‌ற்றிய‌ ம‌துவில‌க்கை வில‌க்கிய‌வ‌ர்
(சுற்றி எரியும் நெருப்புக்கு ந‌டுவே கற்பூர‌மாய்)
பேச்சு, ஒரு முழு அர‌சிய‌ல் ம‌ட்டுமே.1 க‌ல்லில் 3 மா
1,ப ‌மா காவின் ஒரே வ‌லிமையான‌ அயுத‌த்தின் ச‌க்தியை குறைத்த‌ல்,
2,க‌ள்ளுக்க‌டை கேட்ப‌வ‌ர்க‌ளை சிறிது தள்ளிவைத்த‌ல்,
3,போராட‌த்துணிந்த‌ டாஸ்மாக் ஊழிய‌ர்க‌ளை குட்டுத‌ல் எல்லாம் அட‌க்க‌ம்.
டாஸ்மாக் வ‌ருமான‌ம், அர‌சுக்கு 'ம‌ட்டுமே' பெரிய‌
வ‌ருமான‌மில்லை. அதை அர‌சுக்கு வ‌ழ‌ங்கும் "அந்த‌"
உற்ப‌த்தியாள‌ர்க‌ளுக்குத்தான் மிக‌ப்பெரிய‌ வ‌ருமான‌ம்.
"அந்த‌"அவ‌ர்க‌ள் யார் யார் என்ப‌து 'குடி'ம‌க்க‌ள் அனைவ‌ரும் அறிவ‌ர்.

இன்னும் ந‌டு ந‌ம்ம‌ளை ந‌ம்புதுன்னு, ந‌ம்புற‌ அள‌வுக்கு
அர‌சிய‌ல்வாதிகள் அப்புராணிக‌ளா?
இது 'அரிசிக்கு உழும்' அர‌சாங்க‌ம்.

சசிகுமார் said...

நல்லாயிருக்குங்க சார் உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜில்தண்ணி said...

ட்ரைலர்,குறும்படம்,நண்பர்கள் தின தத்துவம் எல்லாமே கலக்கல்,செம செம :)

அந்த "ஏ" ஜோக்கை தவிற

Unknown said...

தமிழ் அமுதன் நிச்சயம் வேறு ஒரு உலகத்தில் தான் இருக்கிறார் என்று நினைக்கிறன். மதுவிலக்கு கொண்டு வரப்பட்டால் அடுத்த முறை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கலைஞருக்கு தெரியும்.
மது இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்வா? ஓவராக நான் குடிக்க சொல்லவில்லை. அளவோடு குடிக்கலாம்.

கொத்து பரோட்டா அருமை..

பரிசல்காரன் said...

நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!

அருண் said...

தத்துவம் சூப்பர்.

CS. Mohan Kumar said...

Nice compilation.

தனி காட்டு ராஜா said...

நான் படித்த எ-ஜோக்களிலே மகா மகா மொக்கையான ஜோக் ....

Cable சங்கர் said...

@meena
நீங்க இப்படி சொல்றீங்க.. கீழே வேற மாரி சொல்லுறாரு..

@கலாநேசன்.
ஏ ஜோக்கை அடுத்த முறை இம்ப்ரூவ் பண்ணிருவோம்

@ஜோதிஜி
நீங்க திட்டுறீங்களா? பாராட்டுறீங்களான்னு புரியலை..

@ராசராசசொழன்
நன்றி.. திருப்தியானால் சரி.. சந்தோசம்.

Cable சங்கர் said...

@rkguru
wanRi

@இராகவன் நைஜிரியா
விஜய் குறித்த உங்கள் கவலை எனக்கு கவலையாய் இருக்கிறது..:)

@ஜொக்கிரி
ஜிமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்புங்க தலைவரே..

Cable சங்கர் said...

@தராசு
சரிண்ணே..

@வழிப்போக்கன் யோகேஷ்
அப்படியா..?????

@பித்தன்
பார்ப்போம்

@

Cable சங்கர் said...

@கே.ஆர்.பி.செந்தில்
உங்களுக்கு தெரியிறது.. அவருக்கு தெரியாதா?

@

Cable சங்கர் said...

//மதுவிலக்கு வராதுன்னு சொல்ல நீங்கள் யாரு? //
வரும்னு சொல்ற நீங்க எப்படியோ அப்படித்தான்..

//உங்களை போன்ற ஆட்களால் தான் இன்னும் முன்னேற்றம் காணப்படவில்லை. //
இருந்த காலத்தில் என்ன முன்னேற்றம் இருந்து இப்ப கெட்டு போச்சி..
//நீங்கள் சினிம்மாவை பற்றி விமர்சனம் செய்பவர்ராக இருந்தால் அதோடு நிறுத்திக்கொள்ளவும்.//
இதை சொல்ல நீங்கள் யாரு என்று நான் கேட்டேனா?

// இப்படி மக்களிடையே முட்டுக்கட்டை போடும் வகையில் கருத்து கூறுவதை நிறுத்தி கொள்ளவும்.//
அப்ப நீங்க கருத்து கூற மாட்டீங்களா..? இனிமே.. அப்படின்னா சரி..


// மதுவிலக்கு என்று அறிவித்து இருப்பது அரசில்ளாகவே இருக்கட்டும் ஆனால் விதை விதைக்கப்பட்டு விட்டது, உங்களை போன்ற ஆட்கள் இதை வரவேற்று கருத்து தெரிவிக்க வேண்டும், தமிழன்னை உயர்த்தி கருத்து தெரிவித்து குடிமகனையும்(தண்ணீர்) சிந்திக்கும் வகையில், திருந்தும் வகையில் கருத்து தெரிவிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஏதோ பரம்பரை குடிக்காரன் போன்று உங்களை நீங்களே ஆறுதல் படுத்தி கொள்ளவும், வந்துவிடும்மோ என்ற பயத்திலும் இப்படி கருத்து தெரிவிப்பதை நிறுத்திக்கொள்ளவும். வராதுன்னு நினச்சா உடம்புல்ள இருந்து விந்து கூட வெளிய வராது.
குடிக்கிறத நிருத்துனால் மதுவிலக்கு தானா வரும்.//
முதல்ல யாரு ஆதரிச்சு பேசினாங்க.. இதன் பின்னால் இருக்கும் அரசியலை பற்றித்தான் பேசினேன்.

// முதல்ல குடிக்கும் நாய்கள் திருந்தும் வகையில் ஒரு கட்டுரையை வெளியிடுங்கள், அதை விட்டுட்டு உற்சாகப்படுத்த முயல்லாதீர்கள்.//

மற்றவர்களை விமர்சனம் செய்யவே கூடாது எனும் உங்களுக்கு யார் மற்றவர்களைநாய் என்று விளிக்க உரிமை கொடுத்தார்கள்.//மது விளக்கு கண்டிப்பாக வரும் இப்போது வேண்டும்மானால் இது அரசியல்லாக இருக்கலாம் ஆனால் இது உண்மையில் நிறைவேறும்.
தமிழன் சரித்திரம் படைக்க பிறந்தவன் நிச்சயம் சரித்திரம் படைப்பான்.நீங்கள் வேண்டும்மானால் பாருங்கள் இது இந்தியாவிற்கே ஒரு முன் உதாரனம்மாக இருக்கும். //

இருக்காதுன்னா சொன்னேன். இருந்தா நல்லாருக்குன்னுதானே சொன்னேன்..

Cable சங்கர் said...

@jana
பார்ப்போம்

@வாசன்
நீங்கள் விலக்கியவர் என்று போட்டதில் ஏதும் உள்குத்து இல்லையே..:)

@சசிகுமார்
நீங்களூம் பாராட்டுறீங்களா? திட்டுறீங்களான்னு தெரியலை..

@ஜில்தண்ணி யோகேஷ்
நன்றி

@வி
நன்றி..

Cable சங்கர் said...

@பரிசல்காரன்
நன்றி

@ச.அருண்பிரசாத்
நன்றி

@மோகன்குமார்
நன்றி

@தனிக்காட்டு ராஜா..
அவ்வ்வ்வ்வ்வ்.

பாலா said...

சிங்கம் உடனடியா நம் ஏரியாவில் Lions & Lioness பதிவை பார்த்து பயனடையவும்.

Cable சங்கர் said...

அவரை விடுங்க பாலா.. இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல ?

Sukumar said...

எந்திரன் பாடல்கள் சூப்பர் தல.... ஃபர்ஸ்ட் ஷோவுக்கு ரெண்டு டிக்கெட் கிடைக்குமா?

Thamira said...

நல்லா இருக்குங்க சங்கர்ஜீ!

பாலா said...

//இன்னொருத்தரை பாருங்க தமிழ்ல //

படிக்கும் போதே.. தேனாறு பாயுது போங்க. :)

Cable சங்கர் said...

ok right புரிஞ்சிருச்சா..:)

tsekar said...

மது விலக்கு யார் கொண்டுவந்தாலூம் -அவர்கள் ஆட்சியை இழபார்கள் !!!

யார் இப்போது குடிக்காமல் இருகிறார்கல் ?-குடிமகன்கள் எல்லோரும் மது விலக்குக்கு எதிராக வோட்டு போட்டால்- மது விலக்கு யார் கொண்டுவந்தாலூம் -அவர்கள் ஆட்சியை இழபார்கள் !!!

ஸ்டார் ஹோட்டல் "பாரை" உங்களால் மூட முடியூமா?.பணக்காரன் குடிக்கலாம் -ஏழை தொழிலாளி -குடிக்க கூடாதா?.சுதந்தர நாட்டில் -எல்லோரும் சமம் -அவன் விருப்படி குடிக்க அவனுக்கு உரிமை உள்ளது !!!

கள்ள சாராயம் சாவு அதிகரிக்கும் !
போலீஸ் -பணக்காரர்கள் ஆவார்கள் !!
குடிப்பதை தடுப்பது -தனி மனித சுதந்தரதில் -மண் அள்ளி போடுவது ஆகும் !!!

வேறு எந்த நாட்டில் ஆவது மது விலக்கு இருகிறதா ? கடுமையான சட்டம் உள்ள முஸ்லிம் நாட்டில் கூட மது விலக்கு இல்லை !!!!

த சேகர்

பெசொவி said...

Belated Greetings for your Happy Birthday, Thala!

வேங்கை said...

நண்பரே !!!!!!!!!!!!!!!!!! பின்றீங்க சினிமால

can i have ur personal mail id plz

R.Gopi said...

//@ஜொக்கிரி
ஜிமெயிலுக்கு ஒரு மெயில் அனுப்புங்க தலைவரே.//

Thanks a lot Shankar ji... I will send a mail to you....

VijayaRaghavan said...

A ஜோக் மிகவும் கேவல்மாக உள்ளது. உங்களுடைய மரியாதையை குறைப்பதாக உள்ளது

Unknown said...

டாஸ்மாக் அதிக வருமானம் கொடுத்தாலும் கொட்டிகொடுக்கிறது பெட்ரோல் தானே!!!
என்ன ஒன்னு பெட்ரோல் வாங்குறவனுக்கு அது உபோயகமாக இருக்கும்.