Thottal Thodarum

Apr 24, 2013

Gunde Jaari Gallanthaindhe

 பார்த்த மாத்திரத்திலேயே நிதினுக்கு இஷா தல்வாரின் மேல் காதல் வருகிறது. நண்பன் ஆலியின் கல்யாணத்திற்கு வந்தவள் என்பதால் அவளின் நம்பரை மட்டும் வாங்கித் தரச் சொல்கிறார்.  அவர் சொல்லும் நம்பரை சொல்லும் போது நிதின் தவறாக ஸ்டோர் செய்துவிடுகிறார். அந்த நம்பர் நித்யா மேனனின் நம்பராய் இருக்க, எண்டமூரி வீரேந்திரநாத் நாவலில் வருவது போல போனில் மட்டுமே பேசிப்பழகி, பார்க்காமலே காதலிப்பதை விரும்புவர் நித்யா மேனன். இந்த கொள்கையினால் குழப்பத்தினோடு இருவரும் பார்க்காமலேயே காதலிக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தான் காதலித்த பெண்ணையே தன் நண்பனுக்கு காதலிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுத்து செட்டாக்கிவிட்டு விட, இருந்த காதலும் போய் நிஜ காதலி என்று நினைத்து காதலித்த நித்யாமேனின் காதலும் இழந்து நிற்கிறார். பின்பு என்ன ஆனது என்பதை சும்மா ஜாலியாய் சொல்லியிருக்கிறார்கள்.


படத்தின் முதல் ப்ள்ஸ் பாயிண்ட் நிதின், நித்யா மேனன் ஜோடி. ஏற்கனவே இவர்களது முந்தைய படமான இஷ்க் படத்தின் போது ஏற்பட்ட கெமிஸ்ட்ரி, இதில் மேலும் ஒர்க்கவுட் ஆகி, கலக்கியெடுக்கிறார்கள். படத்தின் வெற்றிக்கு முதல் காரணம் இவர்களின் கெமிஸ்ட்ரிதான். கதையென்று பார்த்தால் ரொம்ப வருஷமாய் பார்த்து சலித்த முக்கோணக் காதல், ஆள் மாறாட்டம் ஆகி அதனால் வரும் ப்ரச்சனைகள் தான் என்றாலும் சரியான விகிதத்தில் காமெடி, விறுவிறுப்பு, காதல் என்ற எல்லா மசாலா சமாச்சாரங்களையும் கலந்து கட்டி அடித்தியிருப்பதால் எண்டர்டெயின்மெண்ட்டுக்கு பஞ்சமில்லை.

நிதின் போன படத்திற்கு இந்த படத்தில் மேலும் மெருகேறியிருக்கிறார். கண்கள் பூராவும் குறும்போடு, நண்பனுக்கு காதல் ஐடியா சொல்லும் போதாகட்டும், பின்பு தன் காதலிதான் நண்பனுக்கு தாரை வார்த்திருக்கிறோம் என்று தெரிந்து அவர்களை பிரிக்க ட்ரை பண்ணும் போது மனுஷன் அனுபவிச்சு நடிச்சிருக்காரு. இஷா தல்வார் பார்க்க அழகாய் இருக்கிறார். மற்றபடி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. நிதினை விட, இஷா தல்வாரை விட நம் மனதை கொள்ளை கொள்பவர் நித்யா மேனன். என்னா ஒரு கண்ணுப்பா.. அதுலேயே பாதி நடிச்சி முடிச்சிடுது இந்த பொண்ணு.   ஆலி வழக்கம் போல கலக்கல்.
 ஆண்ட்ரூவின் ஒளிப்பதிவு இம்மாதிரியான ரோம்காமுக்கு ஏற்ற ஒளிப்பதிவு. ரூபனின் இசையில் பாடல்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றாலும் பின்னணியிசையில் இன்னும் கொஞ்சம் கவனமாயிருந்திருக்கலாம் இம்மாதிரியான படங்களுக்கு அது மேலும் பலத்தை தரும். படத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் ஹர்ஷாவின் வசனம். முதல் பாதி முழுவது விடாமல் சிரிக்க வைக்கிறார்கள்.

சிம்பிளான கதை, சுவாரஸ்யமான ஜோடி, விறுவிறு காமெடி,  சிறந்த நடிகர்கள் என இவர்களோடு தன் பரபர திரைக்கதையால் மிக அழகாய் ஹாண்டில் செய்திருக்கிறார். ஆலிக்கும் ஒரு “உஸ்” பார்ட்டிக்குமான காட்சி ஒன்று வருகிறது. அந்த காட்சியும் புதியது இல்லை என்றாலும் சிரித்து மாளவில்லை. இரண்டாவது பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு குறைந்தாலும்,  நித்தின் - நிதயாமேனன் இருவரிடையே ஓடும் கெமிஸ்ட்ரி சரி செய்துவிடுகிறது.
  கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

Anonymous said...

Thala, ithuvarikum no negative comments or lower opinion on any of you telegu movies. inna matter?

அமர பாரதி said...

நிதினை எனக்குப் பிடித்தது தெலுங்கு ஜெயம் படத்தில் தான். தமிழில் "ஜெயம்" ரவி சிறிது முதிர்ச்சியான முகம். ஆனால் தெலுங்கில் நிதினும் சதாவும் கலக்கியிருப்பார்கள்.