சாப்பாட்டுக்கடை - ஒரு சோறு

இப்போது சென்னையில் எந்த மூலையில் திரும்பினாலும், செட்டிநாடு ரெஸ்ட்ராண்ட்,  கேரள ரெஸ்ட்டாரண்ட், ஆந்திர ரெஸ்ட்டாரண்ட் என்று மாநில வகையாய் உணவகங்கள் இருக்க, மதுரையின் மணம் கமழும் உணவகம் என்று தனியாய் ஏதுமில்லாதது ஒரு மைனஸாகவே இருந்து வந்த வேளையில் கடந்த நான்கைந்து வருடங்களாய் சக்கை போடு போட்டு வரும் இந்த உணவகத்தைப் பற்றி சொல்லாவிட்டால் நிச்சயம் நல்ல சோறு கிடைக்காது.



”ஒரு சோறு” மஹாலிங்கபுரம் மேம்பாலத்துக்கு கீழே, தி நகரிலிருந்து போகும் போது வலது பக்கம் வரும். சச்சின் கா தாபாவிற்கு முன்னால்.  இந்த பாலம் கட்டும் காலத்தில் மிகுந்த சிரமத்திற்கிடையே இந்த உணவகத்தை நடத்தி வந்தார்கள். 
மதுரையின் அத்தெண்டிக்கான டேஸ்டில் சும்மா பின்னி எடுக்கிறார்கள். இவ்வளவு தெளிவான ஒரு மெனுகார்டை சமீபகாலங்களில் நான் பார்த்ததேயில்லை. மதிய நேரத்தில் பிரியாணியும், சாப்பாடும் இருக்கிறது. ப்ளையின் பிரியாணியும், மட்டன் சுக்காவும் ஆர்டர் செய்திருந்தேன். டிபிக்கல் சவுத் சைட் சீரக சம்பா அரிசியில் பிரியாணியுடன், சின்னச்சின்ன பீஸாய்  துண்டாக்கப்பட்ட மட்டனை நன்றாக மசாலாவில் பிரட்டி, அதிக எண்ணையில்லாமல் காரம் மணத்தோடு செம் க்ரிஸ்பாய் கொடுத்தார்கள் . பிரியாணியோடு அந்த பீஸ்களை கலந்தடித்து சாப்பிட்டுப் பாருங்கள். நான் சொல்ல மாட்டேன் அந்த வார்த்தையை.. நீங்களே சொல்வீர்கள்.அதே போல சாப்பாட்டிற்கு அவர்கள் கொடுக்கும் குழம்பு வகைகள் கூட நன்றாகவேயிருக்கிறது. நிச்சயம் ஊருக்குப் போய் சாப்பிட்டு வந்த திருப்தியை நீங்கள் அடைவது நிச்சயம்.

கேபிள் சங்கர்






Comments

Avana Godumai parotta sema taste
மதுரை மைந்தர்கள் சந்தோசப்பட்டுக்கொள்ள ஒரு நல்ல பதிவு...!
இங்கே ஆரம்பத்தில் நல்ல டேஸ்ட் இருந்தது. சர்வீஸும் பிரமாதம்.

இப்போ டேஸ்ட் சுமார். சர்வீஸ் படுமோசம் :-(
அப்படியா தகவலுக்கு நன்றி
my all time favourite shop..
Unknown said…
Had their kothu parotta once, it was very awesome...
Unknown said…
நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்
Unknown said…
நண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்
மணிஜி said…
//யுவகிருஷ்ணா said...
இங்கே ஆரம்பத்தில் நல்ல டேஸ்ட் இருந்தது. சர்வீஸும் பிரமாதம்.

இப்போ டேஸ்ட் சுமார். சர்வீஸ் படுமோசம் :-(//

இதுவும் அப்ப எழுதினதுதான்:-)
கேபிள்ஜி,

//மதுரையின் மணம் கமழும் உணவகம் என்று தனியாய் ஏதுமில்லாதது ஒரு மைனஸாகவே இருந்து //

கடைக்கடையா போய் சாப்பிடுறிங்க இப்படி சொல்லுறிங்களே, சென்னையில் இருக்கும் முனியாண்டி விலாஸ் எல்லாமே மதுரை உணவகம் தான். மேலும் பாண்டியன் என்ற பெயரில் இருப்பதெல்லாம் மதுரை உணவகம் தான், கமலா தியேட்டர் எதிரில் எஸ்.எஸ்.ஐ கட்டிடம் அடியில் ஒரு பாண்டியன் ஹோட்டல் உண்டு, அஷோக் நகரில் இருக்கும் சங்கம் ஹோட்டலும் மதுரை உணவகம் தான்.

வட சென்னை வந்துப்பாருங்க ஏகப்பட்ட மதுரை உணவகம் இருக்கு.மதுரை உணவகம்னா மலிவா இருக்கும்னு பேரு உண்டு,ஆனால் சுவை நல்லாவே இருக்கும்.

செட்டிநாடு உணவு எல்லாமே சைவம் தான், அப்படி சொல்லி விற்பது எல்லாம் மதுரை உணவே. செட்டி நாட்டு உணவில் அசைவமே கிடையாது :-))

நம்பிக்கை இல்லைனா நீயா நானா கோபிநாத்திடம் கேளுங்க :-))

அப்புறம் அஷோக் நகரிலேயே மாப்பிள்ளை விருந்துனு ஒரு ஹோட்டல் இருக்கு அது மதுரையா என தெரியவில்லை பேரைப்பார்த்தா அப்படி தெரியுது.

வளசரவாக்கம் கேசவர்த்தினி அருகில் மதுரை அப்பு என்றே ஒரு உணவகம் இருக்கு.அப்புறம் பொன்னுசாமி ஹோட்டல் மதுரையா என தெரியவில்லை(பேரு முன்ன மதுரைப்பொன்னுசாமினே பார்த்த நினைவு)

பரவாயில்லை நானே பல இடத்தில சாப்பிட்டு இருக்கேன் போல, பேசாம இதை வச்சு ஒரு பதிவ போடலாமா :-))