Thottal Thodarum

May 16, 2012

Transit (2012)

தமிழ் வலையுலகில் முதன் முதலாய் 50 லட்சம் ஹிட்ஸுகளை பெற்ற தளமாக்கிய வாசக அன்பர்களுக்கும், பதிவுகலக நண்பர்களுக்கும் என் நன்றி.. நன்றி.. நன்றி..
220px-Transit_(2011_film)_poster சமயங்களில் எந்த விதமான எதிர்பார்ப்பும் இல்லாத சில ஆவரேஜ் படங்கள் நம்மை கவர்ந்துவிடும். ஒரு நாள் இரவு தூக்கம் வராமல் ஹெச்.டியில் பார்க்க ஏதாவது படமிருக்கிறதா என்று ஹார்டிஸ்கில் தேடிக் கொண்டிருந்த போது இந்த படம் கிடைத்தது.ரொம்பவும் சிம்பிளான கதை. ஒரு பேங்க் கொள்ளையில் ஈடுபட்ட நான்கு பேர் பணத்துடன் தப்பிக்க ஹைவேயில் பறக்கிறார்கள். அதே நேரத்தில் எல்லா இடத்திலும் போலீஸ் செக் போஸ்ட் போட்டு கிடுக்கிப்பிடி போட, அந்நேரம் பார்த்து அங்கு வரும் ஒரு குடும்பஸ்தனின் வண்டியை செலக்ட் செய்து அதில் பணப் பையை வைத்து விடுகிறார்கள்.  குடும்பமாய் வருகிறவர்களை செக் செய்ய மாட்டார்கள் என்ற  அவர்களது எண்ணம் நிஜமாகிறது. ஆனால் இவர்களிடம் போலீஸ் என்கொயரி செய்து லேட்டாகிவிட, அடித்து பிடித்து அந்த வண்டியை தேடுகிறார்கள். ஒரு வழியாய் அந்த வண்டியை அவர்கள் கண்டுபிடித்துவிட, வேகமாய் அவர்களை பிடிக்க துரத்துகிறார்கள். குடும்பஸ்தனோ தன்னை ஒரு வண்டி துரத்துவதை பார்த்து பயந்து போய் வேகமெடுக்கிறான். அவர்கள் துரத்த, இவன் வேகமெடுக்க, என்று துரத்தல் படு ஸ்பீடில் இருக்க, ஹைஸ்பீடில் வண்டி ஓட்டியதற்காக குடும்பஸ்தன் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்படுகிறான். அவன் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், போலீஸ் கேட்க மாட்டேன் என்கிறது. அதற்கு காரணம். அவன் அப்போதுதான் ஒரு ரியல் எஸ்டேட் போர்ஜரி குற்றத்துக்காக 18 மாத தண்டனையை அனுபவித்து விட்டு வந்தவன். அன்றிரவே பணத்தை தேடி அவனின் மனைவி குழந்தைகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்து அதகளம் செய்கிறார்கள் திருடர்கள். இவர்கள் மேல் தப்பில்லை என்று போலீஸும் அவர்களை விடுவிக்க, வழியில் குடும்பஸ்தனின் மனைவி தன் கணவன் மீண்டும் ஏதோ தவறான வழியில் போகிறானோ என்ற சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது.  அப்போது பார்த்து பொருட்களை கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துவிழ, அந்தபையில் இருக்கும் பணத்தைப் பார்த்ததும் மனைவி அவனை அம்போவென விட்டுவிட்டு, காரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுகிறாள். தவறே செய்யாத தன்னை மனைவி சந்தேகப்படுகிறாளே என்ற ஆதங்கம் ஒரு புறம், கை நிறைய பணம், இன்னொரு பக்கம் துரத்தும் கொள்ளையர்கள்.. அப்புறம் என்ன ஆனது என்பது தான் கதை.

முழுக்க, முழுக்க, ஹைவேயிலும், ஆள் அரவமற்ற காட்டு ரோட்டிலும், எடுத்திருக்கிறார்கள்.  முதல் பத்து நிமிடங்கள் சரி.. வழக்கமான சேஸிங் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது ஹீரோ போலீஸில் மாட்டிய பின் நடக்கும் நிகழ்வுகள் படு சுறுசுறுப்பாக, வேகம் பிடிக்க ஆரம்பிக்கிறது.

டெக்னிக்கலாய் சொல்லப் போனால் நல்ல ஒளிப்பதிவு. நடிப்பு என்று யாரையும் பெரிதாய் குறிப்பிட்டு  பாராட்ட முடியவில்லை. பணத்தை ஒளித்து வைத்துவிட்டு பின்பு அங்கு பணமில்லாமல் தேடியலையும் போது திடுக் திருப்பம். அதே போல் க்ளைமாக்ஸில் குடும்பம் மொத்தமாய் ஒன்று சேர்ந்து போராடுவதும். அவர்கள் எடுக்கும் முடிவும் டச்சிங். ஒரு டைம் பாஸ் படமாய் நிச்சயம் பார்க்கலாம்.

Post a Comment

5 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்........

Anonymous said...

Sankar Ji,
Thangalathu sirantha panikaga enudaiya vazhthukal.
Neram kidaithal enudaiya valaipoovaiyum sirithy alasi, thangalathu melana karuthinai enaku anupungal.
Website: www.eraivan.blogspot.com
Name: Magesh
M.No: 9176481984
E-Mail: mageshcomplete@gmail.com

'பரிவை' சே.குமார் said...

ஹிட்ஸ்க்கு வாழ்த்துக்கள்...
விமர்சனம் நல்லாயிருக்கு...

Ananth said...

Thats an nice mvi..

வெங்கி said...

இன்னமுமா நம்ம டைரக்டர் கள் பாக்கலை இந்த படத்தை.. அப்படியே உல்டா பண்ணி எடுத்துடுவான்களே?