நியூயார்க் நகரத்தின் முக்கியமான ரூஸ்வெல்ட் ஓட்டலின் உயர்ந்த மாடிகளைப் நிமிர்ந்து பார்த்தபடி ஒர் இளைஞன் அதற்குள் நுழைக்கிறான். பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாகவும், ஹெப்பாகவும் இருப்பவன்.தனக்கென ஒர் அறையை எடுத்துக் கொண்டு மிக சாவதானமாய் அந்த அறையின் கதவுகளை திறந்து எட்டிப்பார்க்கிறான். அறைக்குள் அவன் தொட்ட எல்லாவற்றையும் கைரேகைகளை அழித்துவிட்டு, ஒரு சின்ன பேப்பரில் “நான் ஒரு அப்பாவி. குற்றமற்றவன்” என்று எழுதிவிட்டு, ஜன்னல் கதவை திறந்து கொண்டு முப்பதாவது மாடியின் விளிம்பிலிருந்து கீழே குதிக்க தயாராகிறான். இது தான் படத்தின் முதல் காட்சி. அரைத்தூக்கத்தில் படத்தைப் பார்க்க ஆரம்பித்த நிமிடங்களில் தூக்கம் கலைக்க வைத்த ஓப்பனிங் சீன்.
அவன் யார்? அவன் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? எதற்காக தன்னுடன் பேச்சுவார்த்தைக்கு குறிப்பிட்ட பெண் போலீஸ் ஆபீஸரை அழைக்க வேண்டும்? நடுநடுவே வயர்லெஸில் எதிர் பில்டிங்கில் இருக்கும் இரண்டு இளம் ஜோடிகளுடன் ஏன் பேச வேண்டும்? என்று பல கேள்விகள் படம் ஆரம்பத்திலேயெ கிளப்பிவிட்டுவிடுகிறார்கள். ஒவ்வொரு முடிச்சாய் அவிழ, அவிழ டென்ஷன் எகிறத்தான் செய்கிறது. ரொம்பவே சிம்பிள் ஹீரோவின் மீது ஒரு உயர்ரக நாறபது மில்லியன் மதிப்புடைய வைரம் திருடியதாய் குற்றம் சாட்டப்பட்டு, ஜெயிலுக்குள் அடைக்கப்படுகிறார். ஆனால் அவரின் கூற்றுப் படி அந்த வைரம் அவரிடமே இருக்கிறது என்றும், தான் குற்றமற்றவன் என்பதையும் நிருபிக்க, ஜெயிலிருந்து தப்பித்து, கொஞ்சம் மனசாட்சியுடைய பெண் ஆபீஸ்ரை அழைத்து பேச்சு வார்த்தை என்று நேரத்தை கடத்துகிறான். இதன் நடுவில் அவனுடய தம்பி, தம்பியின் காதலியின் துணையுடன், அந்த ஓட்டலுக்கு எதிரே உள்ள வில்லனின் வால்ட்டை திறந்து அந்த வைரத்தை கொள்ளையடித்து உலகிற்கு நிருபிக்கத்தான் இவ்வளவு போராட்டமும்.
வழக்கமான நீதி வெல்லும் கதை தான் என்றாலும், அதை சொல்ல ஆரம்பித்த விதம் திடுக் வகை. அதன் பின் ஒவ்வொரு கட்டமாய் அவனின் ப்ளாஷ்பேக்கை சொல்ல ஆரம்பித்து தப்பிக்கும் வரை ஓகே.. அந்த பெண் நெகோஷியேட்டர் வந்து பேச ஆரம்பித்து நேரத்தை சத்தாய்க்கும் போது நமக்கு அது போலவே தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
சுவாரஸ்யத்திற்கு குறைவில்லாத பல காட்சிகள் இருக்கிறது. முக்கியமாய் ஆரம்பக் காட்சி, க்ளைமாக்ஸ் முப்பதாவது மாடி விளிம்பு சேஸிங் காட்சிகள். அண்ணனுக்காக கொள்ளையடிக்கும் தம்பி, தம்பியின் காதலிக்குமான நடு நடுவேயான ரொமான்ஸ் காட்சிகள் என்று பல விஷயங்கள் இருந்தாலும் கொஞ்சம் பெப் குறைவுதான். ஒளிப்பதிவு, போன்ற டெக்னிக்கல் விஷயங்களைப் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.
சாம் ஒர்த்திங்டென்னின் நடிப்பு பற்றி பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. பல இடங்களில் அவரின் உணர்விலலாத முகம் கதைக்கு பலமென்றாலும், வெளிப்படுத்த வேண்டிய இடங்களிலும் கல்லுளிமங்கனாய் இறுகிப் போன முகமாய் இருப்பது கொடுமை. பழைய வில்லன் எட் ஹாரிஸ் வருகிறார். விரைவில் இப்படத்தை தமிழில் சிற்சில மாறுதல்களுடன் பார்க்ககூடும். நானே கூட அதில் இருக்கக்கூடும். கம்பெனிக்கு மெயில் போடுகிறவர்கள் உடன் வேலையை ஆரம்பிக்கலாம்:))
கேபிள் சங்கர்
Comments
அண்ணே எங்கேயோ போயிட்டிங்க . . .
entha characterla vara poreenga?
கம்பெனிக்கு மெயில் போடுகிறவர்கள் உடன் வேலையை ஆரம்பிக்கலாம்
//
கருந்தேளை இங்கே இழுத்த தற்காக கண்டிக்கிறேன்