ஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகனாய் வலம் வந்தவர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக்கும் ஒரு படம் அவருடயது வெளியாகும். பின்னர் அவ்விடத்தை கொஞ்சம் ரவிச்சந்திரன் நிரப்பினார் என்று நினைக்கிறேன். ஆனால் இன்றைய டெபிசிட் விழுந்திருக்கும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெள்ளிக்கிழமை படம் வெளியாகும் அளவிற்கு படம் நடிக்கும் நடிகர்களே இல்லாத பட்சத்தில் அவ்விடத்தை நிரப்ப வந்துள்ளார் நம் விமல். கலகலப்பு வந்து ரெண்டு வாரத்திற்குள் அடுத்த படமான இஷ்டம் வெளிவந்திருக்கிறது.
விமலும், நிஷா அகர்வாலும் சாப்ட்வேர் இன்ஞினியர்கள். இருவருக்கும் வழக்கம் போல சண்டையில் காதல் அரும்பி, ப்ரீ மேரிட்டல் செக்ஸில் ப்ரொபோஸ் செய்து, குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு திருமணமாகி, பின்பு ப்ரச்சனை வந்து டைவர்ஸ் செய்து கொண்டு பிரிகிறார்கள். டெக்னிக்கலாய் பிரிந்து விட்டாலும், மெண்டலி இன்னும் அவரவர்கள் நினைவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இருவரும் தங்களது புதிய வாழ்க்கை துணையை தேடும் காட்சியில் படம் ஆரம்பிக்கிறது. அவர்களுக்கு புதிய வாழ்க்கை துணை கிடைத்தார்களா? கிடைத்து அவர்களுடன் சேர்ந்தார்களா? இல்லை இவர்கள் இணைந்தார்களா? என்பதுதான் கதை.
ஒரு படத்திற்கு காஸ்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை மீண்டும் ஒரு முறை இந்தப் படம் நிருபிக்கிறது. விமலை இப்படத்தின் ஹீரோவாக போட்டதன் மூலம். ஒரு ஹெப் சாப்ட்வேர் இளைஞனை எங்கே தேடினாலும் கிடைக்க மாட்டேன் என்கிறார். அதிலும் அவர் இங்கிலீஷ் பேசும் மாடுலேஷனும், பாடி லேங்குவேஜும் படு கொடுமை. மனப்பாடமாய் இங்கிலீஷ் பேசும் கிராமத்து இளைஞனை நினைவுப் படுத்துகிறார். தன் கேரக்டரை கொஞ்சமும் உணராத நடிப்பு. எத்தனை நாள் தான் இப்படி ப்ரேமுக்குள் வந்து போய் இங்கிட்டு மீனாட்சி அங்கிட்டு ஆரு? என்று கேட்டுக் கொண்டிருப்பது விமல் சார்?
நிஷா அகர்வால் தெலுங்கில் இவர் நடித்த கேரக்டர்தான் பட் ஜோடி சரியாய் செட் ஆகாததினால் கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகவில்லை. பெரும்பாலும் லிப் சிங் இல்லாத உணர்வில்லாத பார்வையுடனே அலைவதால் நத்திங் டூ ஸே..
சந்தானம் படத்தின் முதல் பாதி முழுவதும் வருகிறார். பட் பெரிதாய் யூஸ் இல்லை. சரக்கடிக்கிறார், பிகர் போடுகிறார், பெர்முடா டீ சர்ட்டோடு அலைகிறார். நாயின் பின்பக்கத்தை தூக்கிப் பார்த்துக் கொண்டே ட்யூப்லைட்டா, குண்டு பல்பா என்று டபுள் மீங்கில் கேட்கிறார். புரிந்தவர்கள் சிரித்தார்கள் லேட்டாய்.
தமனின் இசையில் இரண்டு பாடல்கள். நா.முத்துகுமாரின் வரிகளில். ஏற்கனவே தெலுங்கு படங்களில் கேட்ட பாடலாய் இருக்கிறது. முதலில் டெக்னோ சவுண்டில் என்றைக்கு பாடல் கம்போஸ் செய்யாமல் இருக்கிறாரோ அன்றைக்குத்தான் தமனிற்கு விடிமோட்சம் கிடைக்கும். சேகர்.வி.ஜோசப்பின் ஒளிப்பதிவு படு சுமார். நிறைய இடங்களில் கிரேடிங் வேறு சரியில்லை.
திரைக்கதை எழுதி இயக்கியவர் ப்ரேம் நிஸார். இயக்குனர் ராஜ்கபூரிடம் உதவியாளராய் இருந்தவர். மினிமம் கேரண்டியாய் ஒரு வெற்றிப் பெற்ற படத்தை ரீமேக்கினால் சக்சஸ் நிச்சயம் என்று நினைத்திருக்கலாம். பட் மோசமான காஸ்டிங்கினால் அதில் ஒரு டெண்ட் விழுந்து விட்டது. தெலுங்கில் வருண் சந்தேஷும், நிஷா அகர்வாலுக்குமிடையே இருக்கும் இளமை இதில் மிஸ்ஸிங். அதனால் படத்தில் பெரிதாய் ஒட்ட முடியாமல் போகிறது. இரண்டாவது பாதிதான் படத்தின் சுவாரஸ்யம் என்றே சொல்லலாம். ஆனால் அசுவாரஸ்யமான காஸ்டிங்கால் இன்வால்வ் ஆக முடியாமல் போய்விட்டதால் ஏதோ தூரத்திலிருந்து வேடிக்கை பார்ப்பது போல ஒரு ஃபீலில் பட்ம் முடிந்து வெளிவர வேண்டியிருக்கிறது.
கேபிள் சங்கர்
Comments