கொஞ்சம் அடுத்த வாரிசு, கொஞ்சம் தேவர்மகன், இன்னும் கொஞ்சம் பழைய தெலுங்கு படங்களின் வரிசை என்று எல்லாவற்றையும் உள்ளே போட்டு கலக்கி ஒரு அரை அரைத்தால் தம்மு ரெடி. அப்புறம் இருக்கவே இருக்கிறது அம்மா செண்டிமெண்ட், தங்கச்சி செண்டிமெண்ட், அக்கா செண்டிமெண்ட், இரண்டு ஹீரோயின்கள், ஊரைக் காப்பாற்றும் தலைவன் என்று எல்லாவிதமான கேரக்டரும் கொண்ட கதாநாயகன். ஆளுக்கு ரெண்டு என்று ரெண்டு ஹீரோயினோடு பாட்டு. கூடவே எக்ஸ்ட்ராவாக ஒரு குஜிலியோடு வேறு ஆட்டம். வேறென்ன வேண்டும் ஒரு படத்தில்?
கலெக்டரே தன் குடும்பத்தை காப்பாற்றும் படியாய் வந்து கெஞ்சி வில்லன் மேல் கொடுத்த கம்ப்ளெயிண்டை வாபஸ் வாங்க சொல்லும் அளவிற்கான வில்லன், தன் சொந்த பையன் தோற்றுவிட்டான் என்று அவனை மூச்சுக் குழாயை அறுத்துவிடும் அளவிற்கான வன்மம் உள்ள வில்லனான நாசர் கடைசி காட்சியில் பிம்பிலிக்கி பிலாப்பி என்று ஹீரோவுக்கு ஜே கொட்டுவது செம காமெடி. ஆலி, பிரம்மானந்தம் என்று காமெடியன்கள் இருந்து பரிதாபமாய் இருக்கிறது. வழக்கம் போல ஜூனியர் என்.டி.ஆர் படம் முழுக்க பேசிக் கொண்டேயிருக்கிறார். சண்டை போடுகிறார். சுமன் 25 வருடம் பூட்டிய அறைக்குள் இருந்தார் என்பதெல்லாம் மசாலா படத்தின் தகுதிக்கு மீறிய பூச்சுற்றல்.
திரிஷாவிற்கு முகம் கிழடு தட்டிவிட்டது. கார்த்திகா ஓங்கு தாங்கான சிலுக்கு போல இருக்கிறார். ஆர்தர் வில்சனின் ஒளிப்பதிவு பெரிய பட்ஜெட் படங்களுக்கு எப்படி இருக்குமோ அப்படியே இருக்கிறது. மகதீரா போல ஒரு சிஜியில் ஆரம்பிக்கும் ஒரு பாடலில் சிஜி ஒரளவுக்கு ஓகே. சண்டைக் காட்சிகளில் படு புதுமையாய் எடுத்திருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பத்து பேரை ஒருத்தர் ஒருத்தராய் அடிப்பது. அதனால் இப்படத்தில் ரெண்டு ரெண்டு பேராய் சேர்த்து சேர்த்து அடிக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர். அப்படியே அடித்து கீழே விழுந்தால் ரப்பர் பந்து போல ஆட்கள் எம்பி அந்தரத்தில் மோதிக் கொண்டு விழுகிறார்கள். ராம் லஷ்மண் சகோதரர்களின் கற்பனைக்கு ஒர் அளவேயில்லை என்று சொல்ல வேண்டும்.
தம்மு- முடியலை.
கேபிள் சங்கர்
Comments
அண்ணே முடியல . .
நல்ல நகைச்சுவை வர்ணிப்பு . .
இதுக்காகவே இதுமாறியான
படங்கள் வரட்டுமே . .
நன்றி
நீ அப்டியே கல்வெட்டு செதுக்கி வச்சிருக்க.. ஒழுங்கா பதில்கூட சொல்ல தைரியம் இல்ல உனக்கு, அப்புறம் என்ன மயித்துக்கு பதிவு போட்ற
கண்றாவி கவுண்டவுன் – சிரிப்புக்கு நான் கேரண்டி
இதோ இன்னொரு காமெடி பீஸு.. பூனைக்குட்டி வெளிய வருது.. அவரு என்னா கேள்வி கேட்டுட்டாரு.. மயிரையெல்லாம் எடுத்துக்கட்டிட்டு பதில் சொல்லணும். இதுவும் ஒழுங்கா படிக்காதது போலருக்கு.
ப்ளாக்கையே ஒழுங்கா படிக்க தெரியாதது எல்லாம் கல்வெட்டு படிக்கிறத பத்தி பேசுதுங்க.. போப்பா.. போய் பசங்கள சே.. முதல்ல நீ ஒழுங்க படிக்கிற வழிய பாரு.. உன்னையெல்லாம் யார் கூப்ட்டா.. மயிறு மட்டைன்னு பேசிறதுலேர்ந்து தெரியுது எம்பூட்டு படி.. சரி விடுங்க..
இந்த டம்மி பீசு கிருக்குறதுக்கு பேரு ப்ளாக்ஆம்.... எழவுன்னு எழுதிட்டு படிக்க சொல்லி ஊருக்கு உபதேசம் பண்ணுது. இது எழவுன்னு எழுதுறதுல இருந்து எம்புட்டுன்னு கிழிசிருகுதுன்னு தெரிஞ்சுதான் மைருனு மட்டைன்னு கமெண்ட்ல வருது.
அரவேக்காட்டு தனமா பதிவு எழுதிட்டு அத வேற முழுசா படிக்கலைன்னு எல்லார்கிட்டயும் சப்பகட்டு கட்டுது.
எந்த கேள்விக்கும் ஒழுங்க பதில் எழுத தெரியாம இந்த மாதிரி லூசு தனமா பதில் கமெண்ட் எழுதிட்டு எஸ்கேப் ஆகிடலாம்னு நெனைக்குது இந்த டுபுக்கு. இது ஒரு வெத்து கொடம் அதான் ஓவரா சவுண்ட் போடுது
இன்டர்நெட் என்பது பொது, யார் வேண்டுமாலும் ப்ளாக் பேஜ் ஓபன் பண்ணலாம், யார் வேண்டுமானாலும் படிக்கலாம், கமெண்ட் எழுதலாம். சம உரிமை இருக்கு. இது உங்களுக்கு தெரிந்த விசியம். உங்களுக்கு அஜித் பிடிக்கும் என்பதால் நீங்கள் எப்படி சுயநலமாய் அவனை பத்தி ஆஹா ஓஓஹோ என தூக்கி எழுதறிங்க. மத்த ஹீரோ முக்கியமா விஜய் ஓட்டி எழுதறிங்க, அவனுடைய பான்ஸ் கடுப்பா reply பண்ணுறாங்க.
உங்களுக்கு தெரியாதா? அஜித் பான்ஸ் equala ஏன் அதற்கும் மேல விஜய் பான்ஸ் இருகாங்க. உங்களுக்கு அஜித்துக்கு சோம்பு அடிக்கறவன் மட்டும் உங்க ப்ளோக படிச்சா / கமெண்ட் பண்ணா போதும் நெனசிங்கனா. உங்க ப்ளோக privacy மதிகொங்க, user name /password போட்டு உங்க அஜித் பான்ஸ் மட்டும் access கொடுங்க. சும்மா அசிங்கமா பேசாதிங்க.