Thottal Thodarum

Oct 11, 2009

சுந்தர், ரோசா, மற்றும் சில அனானிகளூம்

என்ன பிரச்சனை என்று தெரியாமல் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன், அதுவும் நமக்கு தெரிந்தவர் என்றது எவ்வளவு பதை பதைக்கும், அந்த பதைபதைப்போடு நானும் சுகுணாவும் ஓடினோம். புருனோவிற்கும் போன் செய்ய, அவருக்கு முன்பே சிவா சொல்லிவிட்டதால் அங்கே வார்டுக்குதான் போய் கொண்டிருப்பதாகவும், உடனே வாங்க என்றார்.



அங்கே சுந்தர் இருந்த நிலையை கண்டதும் கொஞ்சம் ஆடித்தான் போனேன். சட்டை, பேண்ட் எல்லாம் ரத்தம், ஒரு அரை கண் திறப்பு, ஒரு பக்கம் ஸ்லைன் ஏற்ற ஸ்டாண்ட் இல்லாததால் சுந்தரின் நண்பர் ஒருவர் தன் கையை ஸ்டாண்டாய் வைத்து  நிற்க, புருனோவிடம் தனியே அழைத்து என்னவென கேட்ட போது, ஓண்ணுமில்லை ஹி இஸ் ஓகே. என்றதும் தான் நிம்மதி அடைந்தேன்.



முடிந்தால் இவரை வெளியே கூட்டி போங்கள் என்ற ஒருவரை காட்டினார் அவரை சுகுணா வெளியே கூட்டி வர, தலையில் அடித்து கொண்டார், அழுதார், என்னோட கில்டி கான்சியஸ் என்னை கொன்றுவிடும் என்றார். நான் தான் அடித்தேன் என்றார். எனக்கு புரிந்தது அதுதான் ரோசா என்று. மேலும் அவரை அங்கே இருந்தாலும் நன்றாக இருக்காது என்று அவரை ஜி.எச்சுக்கு வெளியே கூட்டி போய் நிற்க வைத்து விட்டு, அவரை ஆசுவாச படுத்தி டீ சாப்பிட வைத்துவிட்டு, சுகுணாவிடம் விட்டு விட்டு, உள்ளே போய் மீண்டும் சுந்தரையும்,  புருனோவையும் பார்த்துவிட்டு ஒரு ஸ்கேன் எழுத்துவிட்டு அனுப்பிவிடுவதாய் சொன்னார். ஸ்கேன் முடிந்து கிளம்பியதும், நாங்கள் சுகுணாவும், ரோசாவும், ஒரு வண்டியில் வர, நான் என் தனியே கிளம்பினேன்.



வண்டியில் போகும் போது எனக்குள் ஒர் எண்ண ஓட்டம் ஓடத்தான் செய்தது. தன்னுடய் கருத்தை எதிராளியிடம் பேசியோ, அல்லது எதிர் பதிவு எழுதியோ, நிருபிக்க முடியாமல்  அந்த கோபத்தை நேரில் பேசும் போது, தனியாய் ஊற்றி கொடுத்துவிட்டு, வீட்டிற்கு போகும் போது அடிப்பது எவ்வள்வு ஈனமான செயல். தன் கருத்திற்கு எதிர் கருத்து இருக்கும் ஒரு நபரோடு சந்தித்து பேச அழைத்ததும், கருத்து வேறு, நட்பு வேறு என்ற பெருந்தன்மையில் வ்ந்திருக்கும் ஒருவரை அடித்ததை பற்றி, அடித்தற்கான காரணத்தை ரோசாவின் பக்கத்தை கேட்டுவிட்டுதான் சொல்வேன் என்பதும்,



சுந்தரின் பதிவில் ஆனானியாய் உனக்கு ஒரு குத்து தானா..? என்று கேட்டிருப்பதும், நீங்கள் குடித்துவிட்டு அடித்து கொண்டீர்கள், உங்களை பார்க்க வந்த ஆட்களும் குடித்துவிட்டு வந்தார்கள், குடிகார கூட்டம் என்றும் கிண்டலடிக்கும் அனானிகளுக்கும், பெயரோடு எழுதுபவர்களுக்கும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன். அடித்தவரே  நான் அப்படி செய்திருக்க கூடாது என்று ஒத்து கொண்டிருக்கும் போது நீங்கள் எல்லோரும் என்ன பெரிய பு..ங்கிகளா.? ஒருத்தனுக்கு பிரச்சனைன்னா போய் நிக்கிறதுதான் நட்புக்கு அழகு.



ஒருவரை அடிப்பது சரி தான் என்கிற எண்ணம் இருப்பதால் தானே இம்மாதிரியான பின்னூட்டகள். அடிப்பது வீரம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் . அதை போல மிக கேவலமான கோழைத்தனம் கிடையவே  கிடையாது..



சுந்தருக்கு ஏதாவது ஆகியிருந்தால் ரோசாவின் கதி.. சுந்தரின் பார்ட்னர் ஒருவர் வெளியே வ்ந்து டாக்டர் என்ன சொன்னார் என்று கேட்ட போது, நிலையை சொல்லிய பிறகு ரோசாவிடம் சொன்னார் “எங்களுக்கு எல்லாமே அவ்ர்தான் சார்” என்று



வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.


Post a Comment

77 comments:

மணிஜி said...

அந்த அநாதை...சாரி அனானிகள் யாருன்னு உங்களுக்கு தெரிந்தால் சொல்லு கேபிள்..(பார்ல கூப்பிட்டு ”ட்ரீட் ”கொடுப்போம்

மணிஜி said...

இன்னுமா மைனஸ் ஓட்டு விழலை..(இன்னிக்கு லீவு..ஓசில ஓட்ட முடியாது இல்ல)

மணிஜி said...

சொந்த பெயரில் வரத் துப்பில்லாத ஜென்மங்கள்..அனானியாய் ”அவதாரம்” எடுக்கிறது..

மணிஜி said...

/வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.//

அப்படியா?

Unknown said...

இதுல சுந்தர் யாரு ரோசா யாரு அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் வன்முறை தீர்வு இல்லைங்கறதால என் ஓட்டைக் குத்திட்டேன்.

Cable சங்கர் said...

/அந்த அநாதை...சாரி அனானிகள் யாருன்னு உங்களுக்கு தெரிந்தால் சொல்லு கேபிள்..(பார்ல கூப்பிட்டு ”ட்ரீட் ”கொடுப்போம்
//

பாரில் கூப்பிட்டு “ட்ரீட்”டா.. இன்னைக்கு இருக்கிற நிலைமையில யார் கூப்டாலும் எவனும் வரமாட்டான் போலருக்கே..?

butterfly Surya said...

சுந்தரின் பதிவிலும் நர்சிம் பதிவிலும் கேவலமான செயல் என்று சொன்னேன்.


கோழைத்தனமான செயலுக்கு அதை விட கேவலமாக கிண்டலடிங்கும் அனானிகளை என்ன செய்ய... ???

படு கேவலமான ஜெனமங்கள்...

Cable சங்கர் said...

/இன்னுமா மைனஸ் ஓட்டு விழலை..(இன்னிக்கு லீவு..ஓசில ஓட்ட முடியாது இல்ல)
//

ஹா.ஹா.ஹா..

Cable சங்கர் said...

/சொந்த பெயரில் வரத் துப்பில்லாத ஜென்மங்கள்..அனானியாய் ”அவதாரம்” எடுக்கிறது..
//

அதன் பேர் அவதாரம் இல்லை.. அல்பகோரம்.

Cable சங்கர் said...

/இதுல சுந்தர் யாரு ரோசா யாரு அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எல்லாம் எனக்கு தெரியாது. ஆனாலும் வன்முறை தீர்வு இல்லைங்கறதால என் ஓட்டைக் குத்திட்டேன்.//

எனக்கு அவர்களை தெரிந்தாலும் என் முடிவும் அதுதான். அதனால்தான் இந்த பதிவு.

Cable சங்கர் said...

/அப்படியா?
//

அப்படியாவா.? சரி வாங்க நாம் ரெண்டு பேரும் சாயங்காலம் மூக்கில குத்தி விளையாடுவோம்.

Cable சங்கர் said...

/சுந்தரின் பதிவிலும் நர்சிம் பதிவிலும் கேவலமான செயல் என்று சொன்னேன்.


கோழைத்தனமான செயலுக்கு அதை விட கேவலமாக கிண்டலடிங்கும் அனானிகளை என்ன செய்ய... ???

படு கேவலமான ஜெனமங்கள்...//

:(

வெண்பூ said...

//
வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.
//

அருமையான வரிகள் கேபிள்.. எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்.

வெண்ணிற இரவுகள்....! said...

//வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது
//
ஆம் சங்கர் வன்முறை தீர்வு ஆகாது ...................கருத்து மோதல் இருக்கலாம் ....நான் கூட "உன்னை போல் ஒருவனை" விமர்சனம் செய்தேன் அது கருத்து மோதல் இருக்க வேண்டுமே தவிர ........உடல் அளவில் வன்முறை தவறு

சென்ஷி said...

:-(((

என்ன சொல்லுறதுன்னே தெரியல கேபிள்..! அநியாய எரிச்சலும் கோபமும் மட்டும்தான் இப்ப மிச்சப்பட்டு இருக்குது.

Cable சங்கர் said...

/அருமையான வரிகள் கேபிள்.. எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன்//
ஆதரவுக்கு நன்றி வெண்பூ. மனதுக்கு மிகவும் கஷ்டமாயிருக்கிறது..

Cable சங்கர் said...

/ஆம் சங்கர் வன்முறை தீர்வு ஆகாது ...................கருத்து மோதல் இருக்கலாம் ....நான் கூட "உன்னை போல் ஒருவனை" விமர்சனம் செய்தேன் அது கருத்து மோதல் இருக்க வேண்டுமே தவிர ........உடல் அளவில் வன்முறை தவறு
//

ஏன் அப்படி பார்த்தால் எனக்கும் சுகுணாவிற்கும் கூடத்தான் உன்னைபோல் ஒருவன் படத்தை பற்றி மாற்று கருத்து இருக்கிறது.. அதற்காக நேரில் பார்க்கு போது வன்முறையிலா பேசினோம்.

Cable சங்கர் said...

/:-(((

என்ன சொல்லுறதுன்னே தெரியல கேபிள்..! அநியாய எரிச்சலும் கோபமும் மட்டும்தான் இப்ப மிச்சப்பட்டு இருக்குது.
//

:(((((

தராசு said...

கேபிள் அண்ணே,

//வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.//

வழி மொழிகிறேன்.

சுந்தர்ஜி இப்பொழுது எப்படி இருக்கிறார் ?????

Sabarinathan Arthanari said...

/வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.//
கண்டிப்பாக. வருத்தம் அளிக்கும் ஒரு விசயம் :(

/அப்படியா?
அப்படியாவா.? சரி வாங்க நாம் ரெண்டு பேரும் சாயங்காலம் மூக்கில குத்தி விளையாடுவோம்.
//
அண்ணே இரணகளத்திலும் ஒரு விளையாட்டா (உங்க குசும்பு வாய்ப்பே இல்லை:) )

பிரபாகர் said...
This comment has been removed by the author.
பிரபாகர் said...

எழுத்துப்பிழை.... சரி செய்து அதனையே திரும்பவும்....

அண்ணே, இது விஷயமாய் மிகத்தெளிவாய் கருத்துரைத்தது, நர்சிம்மும் நீங்களும்தான். சம்மந்தப்பட்ட நிகழ்வில் இருந்த நீங்கள் எழுதியது, பெரும் ஆறுதலையும், உண்மையை உணர்ந்து கொள்ளுவதற்கு ஏதுவாகவும் இருக்கிறது. அண்ணார் விரைவில் நலம் பெற வேண்டுவோம்....

பிரபாகர்.

முரளிகண்ணன் said...

தங்கள் பதிவை வழிமொழிகிறேன்

Starjan (ஸ்டார்ஜன்) said...

இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்

தங்கள் பதிவை வழிமொழிகிறேன்

எனது பதிவு

Starjan (ஸ்டார்ஜன்) said...

சுந்தர் சாரை கேட்டதாக சொல்லவும் ‌

kishore said...

எனக்கும் இந்த பதிவில் குறிப்பிட்டு உள்ள யாரையும் தெரியவில்லை..
தவறை உணர்ந்து இருக்கிறார்.. ஆனால் காலம் கடந்து..
நட்புடன் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு தளத்தை.. வன்முறை கொண்டு விளையாடியது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று..
நீங்கள் சொல்லியதை நானும் ஏற்று கொள்கிறேன்..
வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது
உண்மையான கூற்று..

Ashok D said...

//அடித்தவரே நான் அப்படி செய்திருக்க கூடாது என்று ஒத்து கொண்டிருக்கும் போது நீங்கள் எல்லோரும் என்ன பெரிய பு..ங்கிகளா.? ஒருத்தனுக்கு பிரச்சனைன்னா போய் நிக்கிறதுதான் நட்புக்கு அழகு.//

பிரமாதம்.. சரியா சொன்னீங்க



//வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது//

உண்மை
(directorial touch & பல விஷயங்களில் ;)

Unknown said...

சங்கர் சார், இன்னும் உங்க பதிவிலே மைனஸ் குத்து (ஓட்டு) விழாதது ஆச்சர்யம் தான். சுந்தரைப் பற்றி எழுதினால் அங்கே போய் ஒரு மைனஸ் குத்திடணும்ன்னு முடிவு பண்ணி குத்திக்கிட்டு இருக்காங்க.

சுந்தரின் பதிவில் சில மறுமொழிகள் அநாகரீகத்தின் உச்சம்.

இராகவன் நைஜிரியா said...

வன்முறை எதற்கும் தீர்ப்பாகாது. சரியாகச் சொன்னீர்கள் கேபிளாரே.

உண்மைத்தமிழன் said...

கேபிளு..

ஒரு மேட்டர் பேசணும்..! தி.நகர். பாருக்கு வர முடியுமா..?

ஊத்தறது என் செலவு..!

எப்ப வர்ற..?

Unknown said...

அடப்பாவிகளா, சொல்லிக்கிட்டே இருக்கிறப்போ ஒரு மைனஸைக் குத்திட்டாங்கப்பா!!!

மங்களூர் சிவா said...

தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்

மிக்க வருந்தமான விஷயம்.

சுந்தர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Jana said...

உன் கருத்துக்களில் எனக்கு உடன்பாடு இல்லை. இருந்தாலும் அதை சொல்வதற்கான உனது உரிமையினை என் உயிரைக்கொடுத்தாவது காப்பாற்றுவேன் என்ற வார்த்தைகள் எவ்ளவு ஆளமானவை என்பதை இதிலிருந்து உணர்ந்துபார்க்கின்றேன் நண்பா..

kanagu said...

சரியாக சொன்னீர்கள் அண்ணா.. வன்முறைக்கு வன்முறை தீர்வாகாது....

வோட்டும் குத்திவிட்டேன்...

அக்னி பார்வை said...

very touching blog

- யெஸ்.பாலபாரதி said...

+1 குத்தியாச்சு..

Anonymous said...

என்ன நடக்குது இங்க.???

Anonymous said...

சார் நல்லா இருக்கு சார்....

ஜெட்லி... said...

//சொந்த பெயரில் வரத் துப்பில்லாத ஜென்மங்கள்..அனானியாய் ”அவதாரம்” எடுக்கிறது..

//

repeatae

Cable சங்கர் said...

/வழி மொழிகிறேன்.

சுந்தர்ஜி இப்பொழுது எப்படி இருக்கிறார் ?????
//

ரெகவரிங் தராசண்ணே

Cable சங்கர் said...

@பிரபாகர்
நன்றி

@முரளிகண்ணன்
நன்றி

@

Cable சங்கர் said...

@கிஷோர்

நன்றி

@ஸ்டார்ஜான்
நன்றி

@

Cable சங்கர் said...

@அசோக்

நன்றி

அதென்ன டைரக்டோரியல் டச்

:)

Cable சங்கர் said...

/சங்கர் சார், இன்னும் உங்க பதிவிலே மைனஸ் குத்து (ஓட்டு) விழாதது ஆச்சர்யம் தான். சுந்தரைப் பற்றி எழுதினால் அங்கே போய் ஒரு மைனஸ் குத்திடணும்ன்னு முடிவு பண்ணி குத்திக்கிட்டு இருக்காங்க.

சுந்தரின் பதிவில் சில மறுமொழிகள் அநாகரீகத்தின் உச்சம்.
//

வழக்கமா போடுறவங்க இன்னைக்கு லீவோ..?

ஆமாம்

Cable சங்கர் said...

/கேபிளு..

ஒரு மேட்டர் பேசணும்..! தி.நகர். பாருக்கு வர முடியுமா..?

ஊத்தறது என் செலவு..!

எப்ப வர்ற..?
//

நான் ரெடி எப்ப போகலாம்.. ஆனா அன்னைக்கு வந்து அடிவாங்கிட்டு போனதை சொல்லிக்காட்ட கூடாது என்ன சரியா..?

Cable சங்கர் said...

/அடப்பாவிகளா, சொல்லிக்கிட்டே இருக்கிறப்போ ஒரு மைனஸைக் குத்திட்டாங்கப்பா!!!
//

பாத்தீங்களா..:(

Cable சங்கர் said...

/தமிழ்மணம் படிப்பதில்லை follow செய்யும் ப்ளாக் மட்டும் படிப்பதால் மிக தாமதமாக விஷயம் தெரிந்துகொண்டேன்

மிக்க வருந்தமான விஷயம்.

சுந்தர் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.
//

நன்றி.. நானும் வேண்டுகிறேன்.

Cable சங்கர் said...

@ஜனா
ஆமாம் ஜனா.. நன்றி

@அக்னிபார்வை
நேத்து வந்தீங்களா.. ஊருக்கு?

@பாலபாரதி

தல நீங்களா..? நன்றி வந்ததுக்கு

@ச்ண்முகம்
முக்கில குத்து

@சண்முகம்
எது?
@ஜெட்லி
ரிப்பீட்டுக்கு நன்றி

R.Gopi said...

//Cable Sankar 3:42 PM
/கேபிளு..

ஒரு மேட்டர் பேசணும்..! தி.நகர். பாருக்கு வர முடியுமா..?

ஊத்தறது என் செலவு..!

எப்ப வர்ற..?
//

நான் ரெடி எப்ப போகலாம்.. ஆனா அன்னைக்கு வந்து அடிவாங்கிட்டு போனதை சொல்லிக்காட்ட கூடாது என்ன சரியா..?//

கேபிள‌ண்ணே... அடுத்த‌ "டெர்ர‌ர் எபிசோட்" க‌தை, திரைக்கதை, வ‌ச‌ன‌ம், கேம‌ரா எல்லாம் நீங்க‌ளா... த‌யாரிப்பு அவ‌ருன்னு சொல்லிட்டாரு...

ச‌ரி ச‌ரி... சுந்த‌ர் உடல்நிலை தேறிட்டு வ‌ருகிற‌தா... கீடிய விரைவில் குணமடைய‌ என் வாழ்த்துக்க‌ளை சொல்ல‌வும்...

Unknown said...

தல நான் கூப்பிட்ட பாருக்கு வருவீங்களா?நான் அப்பாவிங்க.

Cable சங்கர் said...

/கேபிள‌ண்ணே... அடுத்த‌ "டெர்ர‌ர் எபிசோட்" க‌தை, திரைக்கதை, வ‌ச‌ன‌ம், கேம‌ரா எல்லாம் நீங்க‌ளா... த‌யாரிப்பு அவ‌ருன்னு சொல்லிட்டாரு...
//

ஏற்கனவே வாங்குனவரு தானே.. பழகியிருக்கும்:)

Cable சங்கர் said...

/தல நான் கூப்பிட்ட பாருக்கு வருவீங்களா?நான் அப்பாவிங்க.
//

பாருங்க மக்களே.. ஒருத்தரை கூப்பிட எவ்வளவு யோசிக்க வச்சிட்டாரு ராசா.. சே ரோசா..

உண்மைத்தமிழன் said...

[[[Cable Sankar 3:42 PM

/கேபிளு..

ஒரு மேட்டர் பேசணும்..! தி.நகர். பாருக்கு வர முடியுமா..?

ஊத்தறது என் செலவு..!

எப்ப வர்ற..?/

/நான் ரெடி எப்ப போகலாம்.. ஆனா அன்னைக்கு வந்து அடி வாங்கிட்டு போனதை சொல்லிக் காட்ட கூடாது என்ன சரியா..?//

அடப்பாவி.. அவனா நீயி..?

ஏதோ சுகுணா மாதிரி ஓடி வந்து உதவி செய்வன்னு பார்த்தா ரோசாவுக்கு தம்பி மாதிரி பேசுற..!!!

VISA said...

என்னுடைய கண்டனத்தை பதிவு செய்கிறேன். என்னால் நம்பவேமுடியவில்லை. பிளாகர்கள் இப்படி கோழைத்தனமாய் வன்முறையில் இறங்குவார்கள் என்று. குறிப்பாக

Unknown said...

//பாருங்க மக்களே.. ஒருத்தரை கூப்பிட எவ்வளவு யோசிக்க வச்சிட்டாரு ராசா.. சே ரோசா.//

நாமெல்லாம் “பொதுபுத்தி” ஜன்மங்கள்.
எந்த வித ”கட்”உடைப்பும் கிடையாது.
பின்நவீனத்துவமும் கிடையாது.அதானல
”......” எந்த உடைப்பும் இருக்காது.

ஆப்பு said...

ஐ எம் பேக்!! (*****ஆப்பு*****)
http://evandapirabalam.blogspot.com/2009/10/blog-post.html

பா.ராஜாராம் said...

நியாயமான பதிவு சங்கர்.அனானிகளுக்கு எப்படி முகம் இல்லையோ அப்படி குறியும் இருக்காது சங்கர்.குறி கண்டுபிடிக்க இயாலாத குறையில் வேறு என்ன செய்வார்கள்?இந்த மாதிரிதான்...

இம்சை அரசன் said...

ரோசா இன்னும் ரெண்டு வாரங்கள் கழித்து தன்னுடைய தரப்பு ”வாதம்” என்னவென்று சொல்ல போகிறாராம். இன்று ஆத்திரம் அனுதாபம் எல்லாம் கொண்டு அறச்சீறியவர்கள் அன்று அடிக்கும் பல்டியை பார்க்க வேடிக்கையாக இருக்கும் பாருங்கள்.

இம்சை அரசன் said...

// அனானிகளுக்கு எப்படி முகம் இல்லையோ அப்படி குறியும் இருக்காது சங்கர் //

அய்யய்யோ, அப்போ ரோசா ஆத்திரம் வந்தால் என்ன செய்வார் (ஒரு முறை ஆத்திரத்தில் சிம்புவின் குறியை அறுப்பேன் என்று எழுதி புகழ் பெற்றவர்தான் இந்த ரோசாவசந்து)

பழமைபேசி said...

//அடிப்பது வீரம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் . அதை போல மிக கேவலமான கோழைத்தனம் கிடையவே கிடையாது..//

நிச்சய்மாக! அதில் மாற்றுக் கருத்தே கிடையாது!!

ஆனால், அதற்கு துவக்கப்புள்ளியாய் இருக்கும் இழிவான எழுத்துகள், அதனினும் கோழைத்தனமானவையே!!

இம்சை அரசன் said...

போன உலக கால்பந்தாட்ட போட்டியின் போது zidane சம்பவம் பலருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். எதிர்பாராமல் திடீரென்று திரும்பி மெதராத்ஸியை தன் மண்டையால் முட்டி ‘மூக்குடைத்தார்’ ஜிதேன். அப்போது ரோசாவால் எழுதப்பட்ட பதிவு புரட்ச்சியாளன் ஜிதான்! (http://rozavasanth.blogspot.com/2006/07/blog-post_12.html)

அதில் எழுதப்பட்ட பின்னூட்டங்களில் ”புதுமைவிரும்பி” என்பவரை தவிர மற்றவர்கள் அனைவரும் ஜிதேன் வன்முறையை சரியென்றே சொல்கிறார்கள். அதில் கே.வி.ஆர் மற்றும் எ.அ.அ.பாலா இன்று அதே பாணியில் ரோசா செய்ததை கண்டிக்கிறார்கள். (அது உணர்ச்சி பூர்வமான தாக்குதல் இது திட்டமிட்ட தாக்குதல் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் ரோசா தரப்பு வாதம் சொல்லப்பட்டவுடன் நிலைமை மாறலாம்) இந்த இருவரின் கருத்தையும் இக்கணம் அறிய ஆவல்.

செ.சரவணக்குமார் said...

வன்முறை எதற்கு எதிராக இருந்தாலும் தேவையில்லாதது. தீர்வாகாது.//

அருமையான வரிகள் கேபிள் அண்ணா...

ᾋƈђἷłłἔṩ/அக்கில்லீஸ் said...

//ஒருவரை அடிப்பது சரி தான் என்கிற எண்ணம் இருப்பதால் தானே இம்மாதிரியான பின்னூட்டகள். அடிப்பது வீரம் என்று நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு ஒரு விஷயம் . அதை போல மிக கேவலமான கோழைத்தனம் கிடையவே கிடையாது..//

சரியாச் சொன்னீங்க கேபிள் அண்ணா..

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-((((((

நிகழ்காலத்தில்... said...

//தன் கருத்திற்கு எதிர் கருத்து இருக்கும் ஒரு நபரோடு சந்தித்து பேச அழைத்ததும், கருத்து வேறு, நட்பு வேறு என்ற பெருந்தன்மையில் வ்ந்திருக்கும் ஒருவரை//

வலையுலகில் நண்பர்களோடு எப்படி இருக்க வேண்டும் என்ற குணத்திற்கு இதுவே சாட்சி..

ஷண்முகப்ரியன் said...

உங்களைத் தவிர எனக்கு இதில் சம்பந்தப் பட்ட யாருடனும் பழக்கமில்லை,ஷங்கர்.
இருந்தாலும் படித்ததை வைத்துச் சொல்கிறேன்.
சென்னையில் எதனை வேண்டுமானாலும் விற்பதற்கு மனிதர்கள் கிடைப்பார்கள்.வாங்குவதற்கும் மனிதர்கள் கிடைப்பார்கள்.விமர்சனம் பண்ணுவதற்கும் கிடைப்பார்கள்.ஆனால் சமயத்திற்கு உதவி பண்ணுவதற்கு மட்டும் வரும் மனிதர்கள் அரிது.
ஒருவரின் குரல் கேட்டவுடன் ஓடோடிச் சென்று உதவி செய்தீர்களே,நீங்கள்,புருனோ,நர்சிம்,சுகுணா,உங்கள் அனைவரின் மனிதாபிமானத்திற்குத் தலை வணங்குகிறேன்.

குப்பன்.யாஹூ said...

இதுவே வன்முறை சார்ந்த கடைசி நிகழ்வாய் இருக்க வேண்டுகிறேன்.

Romeoboy said...

வன்முறை என்பது எங்கு நடந்தாலும் அது முற்றிலும் எதிர்க்க படவேண்டிய ஒன்று. ரோசாவின் இந்த செயலை நான் கண்டிக்கிறேன்.

ஆண்மை குறையேல்.... said...

ந‌ட‌ந்த‌து த‌வ‌று தான்...ஆனா அத‌ற்கான‌ கார‌ண‌மும் தெரிந்தால் ப‌ர‌வாயில்லை... நாளைக்கு த‌வ‌று அவ‌ர்(ரோசா) மீது இல்லைனு தெரிஞ்சா??? ஒன்னுமே தெரியாம‌ நான் யாரையும் குற்ற‌ம் சொல்ல‌ விரும்ப‌ல‌...

Cable சங்கர் said...

/அடப்பாவி.. அவனா நீயி..?

ஏதோ சுகுணா மாதிரி ஓடி வந்து உதவி செய்வன்னு பார்த்தா ரோசாவுக்கு தம்பி மாதிரி பேசுற..!!!
//

இல்லேண்ணே..வேற யாராவது இருந்தா நானும் ஓடி போய் உதவுவேன். நீங்க என் நெருங்கின நணபர் இல்லையா..?

Cable சங்கர் said...

@விசா
நன்றி

@பா.ராசாராம்
மிக்க நன்றி நண்பரே..உங்கள் ஆதரவுக்கும் ,பின்னூட்டத்திற்கும். என்ன உங்க முதல் பின்னூட்டம் இதில் தானா வரணும்

Cable சங்கர் said...

@இம்சை அரசன
அவர் என்ன வாதம் வைத்தாலும் அடித்தது தவறுதான்..

@பழமைபேசி
நிச்சயமாக

@இம்சைஅரசன்
இப்ப என்னாங்குறீங்க.. திரும்பவும் சொறேன் அந்த ரோசா என்ன சொன்னாலும் தப்பு தப்புதான்.. அதை அவரே ஒத்துகிட்டாரு..

Cable சங்கர் said...

@சரவணக்குமார்
நன்றி

@அக்கிலீஸ்
நன்றி

@ஸ்ரீ

:((((

@ஷண்முகப்பிரியன்
இப்படியும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் சார்.

Cable சங்கர் said...

@ஆப்பு

வெல்கம் ....
@குப்பன் யாஹூ

என் வேண்டுதலும் அதாகதத்தான் இருக்கிறது.

Cable சங்கர் said...

@ரோமிபாய்
நன்றி

@ஆண்மைகுறையேல்
எது தெரியாவிட்டாலும் கூடவே சும்மா இருந்துவிட்டு அசந்த நேரத்தில் கூப்பிட்டு முகத்தில் குத்துவது கவாலித்த்னம். தான்.

நையாண்டி நைனா said...

என்ன சொல்றது... அடிதடி தான் தீர்வென்றால்... இந்த உலகமே ரெத்தக்காடாகி விடும்.
தாக்குதல் கடும் கண்டனத்திற்கு உரியது.

Unknown said...

//அதில் கே.வி.ஆர் மற்றும் எ.அ.அ.பாலா இன்று அதே பாணியில் ரோசா செய்ததை கண்டிக்கிறார்கள். (அது உணர்ச்சி பூர்வமான தாக்குதல் இது திட்டமிட்ட தாக்குதல் என்று காரணம் சொல்வார்கள். ஆனால் ரோசா தரப்பு வாதம் சொல்லப்பட்டவுடன் நிலைமை மாறலாம்) இந்த இருவரின் கருத்தையும் இக்கணம் அறிய ஆவல்//

@இம்சை அரசன் - மூன்று வருடங்களுக்கு முன் எழுதிய பதிவுகளையும் மறுமொழிகளையும் திருப்பிப் பார்க்க வைத்தமைக்கு நன்றி.

ரோசாவசந்தின் பதிவில் என் பின்னூட்டத்தை நினைவோடு பார்த்த நீங்கள் அதே ஜிடான் குறித்த எனது பதிவையும் பார்த்திருக்கலாம். பார்த்தும் மறந்திருந்தால் நினைவுபடுத்த இதோ அதன் சுட்டி

http://kvraja.blogspot.com/2006/07/blog-post_10.html

என் பதிவிலும் சரி ரோசாவின் பதிவிலும் சரி, ஜிடானின் ஒரு வினாடி கோபத்தைப் பற்றியும் அதனால் அவர் இழந்த கோப்பையையும் பற்றி தான் குறிப்பிட்டுள்ளேன். மேலும், நீங்கள் சொன்னது போல ஜிடானின் கோபம் அந்தக் கணத்திலேயே கனன்று வெடித்த கோபம். அது மனித இயற்கை. ஆனால் ரோசா செய்தது திட்டமிட்டு செய்தது. வித்தியாசத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன். உணர மறுப்பீர்கள் என்றாலும் எனக்கு எந்த நஷ்டமும் இல்லை.

@சங்கர் - சார், ரோசாவின் பழைய பதிவின் சுட்டியும் கொடுத்து எனது பெயரையும் குறிப்பிட்டதால் இங்கே என் பதிவின் சுட்டியும் கொடுத்து பின்னூட்டம் இடவேண்டி வந்தது. சுயசொறிதலுக்கு மன்னிக்கவும்.