Thottal Thodarum

Oct 23, 2009

All The Best- Hindi Film Review

all the best

பர்தீனும், அஜெயும், நண்பர்கள், பர்தீனின் பணக்கார அண்ணன் சஞ்செய் தத் மாதம் தரும் லட்ச ரூபாய் பாக்கெட் மணியை வைத்து காலத்தை ஓட்டுபவன். அஜெயும், அவனது மனைவி பிபாஷாவும் ஒரு நொடித்து போன ஸ்டாப் பட்டனை அழுத்தினால் நிற்காத டிரெட்மில்லை வைத்து ஜிம் நடத்தி நொந்து போனவர்கள்.

பர்தீனும் அவனது காதலியும் கல்யாணம் செய்து கொண்டுவிட்டதாய் அவனது அண்ணனிடம் சொல்லியிருக்க, அதே நேரத்தில் செலவுக்காக லோக்கல தாதா ஜானிலீவரிடம் கடன் வாங்கியிருக்க, அந்த கடனை அடைக்க, பங்களா வீட்டை வாடகைக்கு விட லாட்டரியில் விழுந்த காசினால் பணக்காரனான ஒருவனுக்கு வாடகைக்கு விட அட்வான்ஸ் வாங்கி அந்த பணததை தாதாவிடம் கொடுத்துவிட, அந்நேரத்தில் பர்தினின் அண்ணன், ப்ளைட் கேன்ச்லாகி வெளிநாட்டிலிருந்து வந்து கோவா எர்போர்டிலிருந்து பேச, குழப்பத்துடன் அவரை வீட்டுக்கு கூட்டி வர, வீட்டில் இருக்கும் அஜயின் மனைவி பிபாஷாவை பர்தீனின் மனைவி என்று சஞ்செய் நினைப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது குழப்பம், ஒரே கலாட்டா தான்

படம் நெடுக டயலாக் காமெடிதான். பர்தீனை விட அஜய் தூள் பரத்தியிருக்கிறார். க்ளாஸ் டம்பளரில் ஸ்பூனினால் அடித்து சங்கேதமாய் பேசும் தாதா ஜானி லீவர், பர்தீனின் காதலி வித்யாவின் அப்பா அஸ்ரானி,  கடித்து, கடித்து ஹிந்தி பேசும் சமைல்காரி, ஜானிலீவரின் அல்லக்கைகள், வீட்டை வாட்கைக்கு எடுத்து, சாமான்களுடன், வீட்டு வாசலில் காத்திருக்கும் புது பணக்காரன்,  அவனுடன் நிறைமாத கர்பிணி மனைவியை ஹாஸ்பிடலில் போய் சேர்க்க காத்திருக்கும் டிரைவர், இவர்கள் சொல்வதையெல்லாம், நம்பியும், நம்பாமலும், அரைகுறையாய் குழம்பி போய், பார்பவனையெல்லாம் அடித்து துவம்சம் செய்யும் சஞ்செய்தத். க்ளைமாக்ஸில் வரும் டபுள் ஆக்‌ஷன் பிபாஷா. என்று எல்லோருமே தங்கள் பாத்திரஙக்ளை உணர்ந்து ஜாமாய்த்திருக்கிறார்கள்.

allthe best

காமெடி படமென்பதால் பெரிசாய் லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது. படம் முழுவதும் நகைச்சுவைக்கான இயல்பான ஒன்லைனர்களும், பரபரப்பான திரைக்கதையும், படத்திற்கு பெரிய பலம்.

ஜானி லீவர் ஒரு ஹிந்தி மயில்சாமி. மனுஷன் படம் முழுக்க பேசாமலேயே கலக்க, க்ளைமாக்ஸில் சஞ்செய் அடித்த அடியில் அவருக்கு பேச்சு வந்து சஞ்செய்யும், நீக்ரோ ஆட்களும் பேசும் பாஷையை இவர் மொழி பெயர்த்து சொல்லும் காட்சியில் சிரிக்காமல் இருக்க முடியாது மனுஷன் பின்னி பெடலெடுக்கிறார். அதே போல் சஞ்செயும், அஜய்யும் ஒருத்தரை ஒருத்தர் ஏமாற்றி தூங்க போகும் இடமும் அதகளம்.

All The Best – Laugh Riot



சினிமா வியாபாரம்-9 படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

22 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

என்னது ?காதலா!!! காதலா!!! வாடை இருக்கே..

குறை ஒன்றும் இல்லை !!! said...

ஆமாண்ணே .. படிக்கிர எனக்கே இவ்வளவு குழப்பமா இருக்கே ... ஹீம்... நிறைய பாச தெரிஞ்சவர் போல!!!

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//என்னது ?காதலா!!! காதலா!!! வாடை இருக்கே..//

repeat..

creativemani said...

நமக்கு ஹிந்தி நஹி மாலும்..! ஆனா இங்க வந்து விமர்சனம் படிச்சா, ஹிந்தி படம் பார்த்தது போன்ற ஒரு குருட்டு சந்தோஷம்... :)

Prabhu said...

சமீபத்துல தினமும் ஒரு படம் பாக்குறீங்களோ! தியேட்டருக்கே தனி பட்ஜெட் போடனும் போலயே!

VISA said...

//All The Best – Laugh Riot //

All The Best.

thiyaa said...

பாசக்காரப் பயலுக

பிரபாகர் said...

ஹிந்தி கொஞ்சம் தெரிஞ்சாலும், சப் டைட்டிலோட இங்க பாக்கிறதால பிரச்சினை இல்ல... அண்ணன் சொன்னா பாத்துட வேண்டியதுதான்...

அருமையான விமர்சனம்... நன்றி அண்ணா.

பிரபாகர்.

ஷண்முகப்ரியன் said...

:):):)

ungalrasigan.blogspot.com said...

ஜானி லீவரை எந்தக் காலத்திலோ பார்த்த ஞாபகம். இன்னமுமா நடிச்சுக்கிட்டிருக்காரு? அவரை மயில்சாமிக்கு ஒப்பாகச் சொன்னது சரி. நினைவில் ஜானியை நிறுத்திப் பார்க்கும்போது இந்த உவமை மிகச் சரியாகவே இருக்கிறது.

மேவி... said...

பாஸ் எனக்கு ஹிந்தி அவ்வளவாக தெரியாது அதனால் டயலாக் காமெடி யை புரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான் ......

Murugesh said...

தல இந்த படம் பார்த்து நொந்து போய்டேன் ... செம மொக்கை ..காதலா!!! காதலா!!-ஐ அப்படியே எடுத்திருந்தா கூட பரவாஇல்லை ... செம சொதபல்!..டோடல்-அ படம் பார்குறவன் கேனயன்-நே நினச்சுட்டு எடுதிருகாங்க!லாஜிக் வேணம் காமெடி-அவது இருக்கனும்...

Ashok D said...

தலைவரே கதை புரிஞ்சிடிச்சு...
(என்னவோ படம் பார்க்க நேரமில்லாம ஜாஸ்தி உழைக்கும் என்னை போன்ற அன்றாட காய்ச்சிகளுக்கு ஒரு வித திருப்தி கொடுக்கீறீங்க. அதுவும் ஹிந்தி படமெல்லாம் காட்றிங்க)
ரசகுல்லான்னு சொன்னது அந்த பெண்னொட முகத்த வச்சிதான்..தலைவரே.. நம்புங்க..

ஜெட்லி... said...

எப்போது ஜெகன்மோகினி பார்க்க போவதாக உத்தேசம்??

Jana said...

ஐயோ..இனிமேல் ஹிந்தி படங்கள் பர்க்கப்போவதில்லை என தீர்மானம் போட்டாச்சு. தங்கள் விமர்சனங்களைப்பார்த்தாலே படம் பார்த்த திருப்தி கிடைத்துவிடுமே..பிறகென்ன??

Raj said...

ok dvd வாங்கிடரேன்

பித்தன் said...

காமடி படம். நமக்கு ஹிந்தி லோடா லோடா மாலும் இத்னா நதி மாலும்...... இருந்தாலும் விமர்சனம் பகோத் அச்சா....

Karthik said...

இன்னும் பார்க்கலைங்ணா.. ட்ரை பண்றேன்.. :)

Cable சங்கர் said...

@குறையொன்றும் இல்லை
காமெடி, ஆள் மாறாட்டம் என்றால் அதில் நம்ம ஆட்கள் பழம் தின்று கொட்டை போடும் அளவிற்கு.. எடுத்திருக்கிறார்கள்.

கிந்தி எனக்கு புரியும்.

@ஸ்ரீ
மேலே உள்ள பதில் ரிப்பீட்டு

@அன்புடன் மணிகண்டன்
ரொம்ப குஷ் ஹுவா..

@பப்பு
அதான் யார் கிட்டேயாவது ஸ்பான்சர் வாஙக்லாமான்னு யோசிட்டு இருக்கேன்..

@விசா

நன்றி

@தியாவின் பேனா
யாரு..?

Cable சங்கர் said...

@பிரபாகர்
பரவாயில்லை உங்களுக்கு அந்த குடுப்பினை இருக்கு..

@ஷண்முகப்பிரியன்
நன்றி சார்.

2ரவிபிரகாஷ்

இந்தபடத்தில் பல பழைய நடிகர்களை ந்டிக்க வைத்திருக்கிறார்கள்.. நிச்சயம் ஜானியை பார்த்தால் நம்ம மயில்சாமியை நினைக்காமல் இருக்கமுடியாது..

@டம்பிமேவி

ட்ரைபண்ணுங்க

@முருகேஷ்
அப்படியே.. சரி என்ன பண்றது.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு டேஸ்ட்

@அசோக்
நம்புறேன்

Cable சங்கர் said...

@ஜெட்லி
இப்போதைக்கு இல்லை..

2ஜனா
ஏன்..?

@ராஜ்
அது சரி அதுவாவது வாங்க உங்களுக்கு டைம் கிடைக்குதே..?

Cable சங்கர் said...

@பித்தன்
இவ்வ்வளவு தப்பு தப்பா கிந்தி பேசறீங்களே.. நீஙக் தான் கண்டிப்பா படம் அபக்கணும்..

@கார்த்திக்
பாருங்க பார்த்திட்டு சொல்லுங்க..