தன் அம்மா கம்பெனி ஆடிட்டருடன் ஓடி போய், அப்பா இறந்து கம்பெனியில் சேர்ம்ன் போஸ்டுக்கு நிற்க, அதே நேரத்தில் காதலியும் பரத்தை விட்டு வேறு ஒருவனை திருமணம் செய்து கொள்ள, மனம் குழம்பி, டிப்ரஸ்டான நிலையில் எல்லாவற்றையும், விட்டு சாகலாம் என்று ஏதோ ஒரு ரயிலில் ஏறும் பரத், லொட,லொட ஓட்டை வாய் தமன்னாவை பார்க்க, அட காதல் வரப்போகிறது என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போது, தமன்னா தான் கெளதம் என்பவனை காதலிப்பதாகவும், ஓடிப் போய் கல்யாணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்ல, பரத்தினால் தமன்னாவும் ரயிலை விட, அந்த ஒரு நாள் டிராவலில் இருவருக்கும் ஒரு புரிதல் ஏற்பட்டு, நட்பாக , தமன்னா விட்டில் அவரை சந்தானத்துக்கு திருமணம் செய்ய முடிவு செய்ய, வேறு வழியில்லாமல் அவரும் பரத்தும் வீட்டிலிருந்து ஓடிவிடுகிறார்கள். தமன்னா அவரின் காதலரை பார்க்க, பரத் மீண்டும் தன் பாதைக்கு. பிறகு என்ன?
பரத் பெரிய கோடீஸ்வர பையன் என்பதை அவ்ர்கள் சொல்வதால் நம்ப வேண்டியிருக்கிறது. என்ன தான் மேக்கப், ஹேர்கட் என்று மெனக்கெட்டாலும் ஆறுமுகம் முகம் தான். அதிலும், மீண்டும் கம்பெனிக்கு வந்து அவர் பேசும் வசன காட்சி இருக்கிறதே. அய்யோ..
தமன்னா முடிந்தவரை கரீனா கபூரை பாலோ செய்திருக்கிறார். அப்போ இருந்த அவரின் உடல் அளவு உட்பட, பட் கரீனாவின் ஹிந்தி கேரக்டரில் அவர் ஒரு லொட, லொட, பெண் என்றளவில் தான் நம் மனதில் நிற்பார். இதில் தமன்னாவை பார்க்கும் போது லூசோ என்று கேள்வி எழுந்து, பரத் வேறு அதையே கேட்டு, உறுதிபடுத்துகிறார். அதனால் கொஞ்சம் தமன்னாவின் கேரக்டர் மேல் ஈடுபாடு குறைவது நிஜம்.
படத்தில் ஒருவர் வந்தால் மட்டும் தியேட்டரே குபீரென சிரிக்கிறது. அவர் வேறு யாருமில்லை சந்தானம் எண்ட்ரியில்தான். மனுஷன் இன்னொரு கவுண்டராகி கொண்டிருக்கிறார். படம் நெடுக அவரின் ராஜ்யம் தான். படத்தை பெரும்பாலும் கீழே விழும் போது இவர்தான் காப்பாற்றுகிறார்.
ஹிந்தியில் படத்திற்கு மிகப் பெரிய பலம் வசனங்கள், அதிலும் பரத்தும், தமன்னாவும் ஓட்டலில் பேசும் வசனங்கள், சின்ன சின்னதாய் இருந்தாலும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாய் இருக்கும், ப்ட்டுக்கோட்டை பிரபாகர், இந்த காட்சியில் நிறைய இடங்களீல் மொழிமாற்றம் செய்திருக்கிறார். பல இடங்களில் சவ, சவ வென்று பேசிக் கொண்டேயிருக்கிறார்கள். காரணம் மொழிமாற்றம்.
ஹிந்தியில் இப்ப்ட வெற்றிக்கு மிக உறுதுணையாய் இருந்தது பாடல்கள், ஏதோ கேட்க சுமாராய் இருக்கிற மாதிரியான பாடல்கள்தான். மெலடி கிங் வித்யாசாகர் என்று டைட்டிலில் போடுகிறார்கள். ஏமாற்றி விட்டார்.
முத்தையாவின் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருக்கிறது. வயல் வெளி, நடுவில் குடில் என்று பஞ்சாப் வயல் வெளியை மீட்டு எடுத்து வந்திருக்கிறார்கள்
ஹிந்தியில் ஷாகித்துக்கு, கரினாவின் வீட்டிற்கு போனதும் ஒரு கலாச்சார மாற்றத்தை அவரின் பஞ்சாபி பிண்ணனியில் இன்ரஸ்டாக சொல்லியிருப்பார்கள். இதில் அதில் மிஸ்ஸிங். திரைக்கதையில் தேனிக்கு வந்தும் எல்லோரும் ஒரு டீவி சீரியல் குடும்பம் போலவே இருப்பது ஒட்டவில்லை. கொஞ்சம் இயக்குனர் மெனக்கெட்டிருக்கலாம்.
ஹிந்தியில் இப்படத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய காரணமாய் இருந்தது படத்திற்கும் அப்பாற்பட்ட, சாகித், கரீனா, காதல் முறிவு, சமயத்தில் வெளியான காதல் படம். அதுவே பெரிய ட்ராயிங் அட்டென்ஷனாய் படத்தில் அமைந்தது, அதே போல் அவர்களுக்குள் படத்தில் தெரிந்த கெமிஸ்ட்ரி. இதில் மிஸ்ஸிங்}
படத்தில் எனக்கு பிடித்த காட்சி.. தமன்னா தண்ணீர் பாட்டிலை அதிக விலைக்கு விற்கும் கடைக்காரனிடம், தண்ணி காசு கொடுத்து வாங்குறதே அநியாயம் இதில அதிக விலை வேறயா.. யாரும் கேட்காததினாலேயே நீங்க செய்யறது சரிங்கிற மாதிரி ஆயிருச்சு.. நான் கம்ப்ளெயிண்ட் பண்ணுவேன் என்று சண்டை போடும் காட்சி, இதில் ஒரு கருத்தை மக்களுக்கு வைப்பது மட்டுமில்லாமல், இவ்வாறு சண்டை போடும் நேரத்தில் மீண்டும் தமன்னா ரயிலை மிஸ் செய்கிறார். ஐ.லைக்.. இட்
கண்டேன் காதலை – கண்டாச்சு.. காதல் எங்கே..?
டிஸ்கி:
உ.பொ.ஒ.வில் நான் ஹிந்தி படத்தை கம்பேர் செய்ய வேண்டாம் என்றிருந்தேன். ஆனால் இந்த படம் பார்க்க, பார்க்க, அந்த படம் ஞாபக்ம் வ்ந்து தொலைக்கிறது. அதுதான் உ.பொ.ஒவில் கமலின் வெற்றி.
Comments
Dont compare JAB WE MET with this film.
100% correct ji
உண்மை...
உண்மை...
அனேகமா சன் டிவீ இத ஹிட் ஆக்கிடும் !!!
இவருதான் ஹீரோவா.........
அப்ப பாக்கலாம்!!
நச் விமர்சனம்
I don't understand one thing. Please explain with your larger wisdom in cine field.
Sun Pictures, advertises almost all pictures (ex. Ayan) saying 'Sun pictures presents', but when I watched Ayan movie in Singapore, there was no mention about Sun Pictures in title or anywhere. It was purely a AVM production.
How is the above possible?
Romba kozhapurangappa!! Onnume puriyale.
Jackie Sekar says cine field is very dangerous, Sankar says very good industry, vandhu panatha podunga. In between 'Sun Pictures' confusion. The way how Sun pictures presented pictures performed, Sun pictures would be bankrupt if they had produced. I have not seen even one successful entertaining Sun pictures presentation.
Where/how are they generating money? Room pottu okkanthu panam achi adipangangalo!!
Regards,
Bala.
9486457303
Hot Spot படத்த மாத்துங்கன்னு ஒவ்வொருதரம் கொடி புடிச்சு போராட வேண்டியிருக்கு.
கொடுமை..! இதையெல்லாம் கேட்பாரே இல்லையா..?
இது சூப்பர்.//
KaveriGanesh said...
கண்டேன் கேபிளை//
இது அதனினும் சூப்பர்.
இதில் யார்?
//சந்தானம் எண்ட்ரியில்தான். மனுஷன் இன்னொரு கவுண்டராகி கொண்டிருக்கிறார்.
அதே அதே.. :)))
கொடுமை செய்து விட்டார்கள்...
ஹிந்தியில் ஏற்கனவே படத்தை பார்த்தவர்களுக்கு சுத்தமாக பிடிக்காது.....
Ur reviews are very balanced. If u have time see Yeh Mera India (YMI) and write a review. A film worth watching by all Indians.
:)
@முத்துபாலகிருஷ்ணன்
முடியலையே..
@காவேரி கணேஷ்
நன்றி
@ஜெட்லி
சேம் பிஞ்ச்
@தமயந்தி
உங்களூக்கும் சேம்பிஞ்ச்
நன்றி
@முருகேஷ்
நிச்சயமாய்..
@குறை ஒன்றும் இல்லை
அப்படி சொல்லிவிட முடியாது..
@அகல் விளக்கு
நிச்சயம் சந்தானம் இல்லா விட்டால் பெரிசாய் உட்கார முடியாதிருந்திருக்கும்
@பட்டர்ப்ளை சூர்யா
ஹா..ஹா
என்ன ரைட்டு.. படம் பார்த்துட்டு சொல்லுஙக்:)
@அக்கீலீஸ்
பாருங்க..
@இராகவன் நைஜீரியா
நன்றிண்ணே
@அசோக்
ரசகுல்லாவை பால்கோவான்னு சொல்றீங்களோ..?
@நிலாரசிகன்
நன்றி
@மூவி போஸ்டர்
நன்றி
I don't understand one thing. Please explain with your larger wisdom in cine field.
Sun Pictures, advertises almost all pictures (ex. Ayan) saying 'Sun pictures presents', but when I watched Ayan movie in Singapore, there was no mention about Sun Pictures in title or anywhere. It was purely a AVM production.
How is the above possible?
Romba kozhapurangappa!! Onnume puriyale.
Jackie Sekar says cine field is very dangerous, Sankar says very good industry, vandhu panatha podunga. In between 'Sun Pictures' confusion. The way how Sun pictures presented pictures performed, Sun pictures would be bankrupt if they had produced. I have not seen even one successful entertaining Sun pictures presentation.
Where/how are they generating money? Room pottu okkanthu panam achi adipangangalo!!
Regards,
Bala.
9486457303//
அது ஒரு மாதிரி அக்ரிமெண்ட்.. அதை பத்தி நாம நேர்லயோ, அல்லதுபோன்ல யோ பேசுவோம்.. ஜாக்கி நிச்சயமா சினிமாவை பத்தி பயமுறுத்தியிருக்க மாட்டார். அதில் உள்ள கஷடஙக்ளை சொல்லியிருப்பார்.. நாம் பேசுவோம் தலைவரே..
மாத்திரலாம்ணே
@ஸ்ரீகிருஷ்னா
ஒன் டைம்
@உண்மைதமிழன்
கலைஞர் சிறந்த வசனகர்தா ஆன போதே யாரும் கேட்கலையாம்..?
@ஷண்முகப்பிரியன்
நன்றிசார்
@நொந்தகுமாரன்
இதில் ஒரு மொக்கை புதுமுகம்
@
ஆமாமுங்கோ...
@ஆதி
:)
@பப்பு
தமன்னா, சந்தானம் பிடிக்கும்னா பார்க்கலாம்
@அத்திரி
அதை சொல்ல நான் யாருங்க்ணணே
@பித்தன்
நன்றி
@ரமேஷ் வைத்யா
அண்ணனுக்கு என் ஞாபகம் வந்திருச்சு
@சரவணக்குமார்
நான் முடிந்த வரை பார்க்க மாட்டேன். ஆனால் இந்த படம் அதை கிளப்பி விட்டுவிட்டது.
@சுகுமார் சுவாமிநாதன்
பாருங்க.. இப்ப எந்தபடம் பார்த்தாலும் நல்லாத்தான் இருக்கும்
@வண்டிக்காரன்
ஆனாலும் நீங்க திரிகாலம் அறிஞ்ச ஞானியாயிட்டீங்க..
@
அவ்வளவு பயமா இருந்தா வேணாம்
@கார்த்திக்
நன்றி
@குரு
:(
@ரோமிபாய்
யார் சொன்னது தமிழ் பட விமர்சனம் தான். ஹிந்திலேர்ந்து..:)
@எவனோ ஒருவன்
பாத்துருங்க
@எஸ்.
இங்கே சென்னையில் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. பார்த்தவுடன் நிச்ச்யம் எழுதுகிறேன்.
இரண்டு ரூபாய்க்கு தினகரன் பேப்பர் வாங்கலாம் நு இதுல விளம்பரம் வேற.
படம் ஓகே. சந்தானம் வெளுத்து வாங்கிருக்கார்.
படம் ஓகே. சந்தானம் வெளுத்து வாங்கிருக்கார்.//
சிவா மனசுல சக்தி படத்தில எங்க பார்த்தாலும் எல்லாரும் விகடன் படிக்கிறா மாதிரி எடுத்ததை விட இதில் ஒண்றும் ஜாஸ்தி இல்லை.
ரமேஷ்
நான் வர புதன்கிழமை தான் போய் பாக்க போறேன்...
Cable Sankar said...
@மங்க்ளூர் சிவா
என்ன ரைட்டு.. படம் பார்த்துட்டு சொல்லுஙக்:)
/
ரைட்டு சின்னத்திரைல பாத்திடறேன்.
:)))
என்னமோ போங்க.. வரவர நம்ம ஆளுங்களோட character selection பத்தி நெனச்சாலே ஈரக் கொலையெல்லாம் நடுங்குது...
Bharat wasted his opportunity.. Ex His Sim Card launch speech utter waste.. it looks like selling Idly.. Yes you right he is still arumugam mood.
Santhanam Simply Superbbbb...
தேனியே மிகவும் அழகான பகுதி.. வட நாட்டில் படப்பிடிப்பு நடத்தியதற்கு கொஞ்சம் தேனியை சுற்றி பார்த்திருக்கலாம்.. இன்னும் நிறைய இடங்கள் இருக்கு பாஸ்..
அதிலும் கிளைமேக்ஸ் ரொம்ப இழுவை