Thottal Thodarum

Oct 3, 2009

மூணார் - திரை விமர்சனம்


மூணார் கொலை வழக்கில் பிரபலமான வித்யாவின் கதையை, ஒரு வேளை வித்யாவின் கணவன் இறக்காமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனையில் உருவாகியிருக்கும் திரைப்படம்.

ஒரு மழைநாளில் ட்ராபிக் சிக்னலில் முதலில் நிற்கும் ஒரு காரில் ஒரு மழைகோட்டு உருவம் உள்ளே புகுந்து காரிலிருந்தவனை கொலை செய்கிறது.. இதை பின்னால் இருக்கும் டான்ஸ் பார் ஆட்டக்காரி ரகஸியா பார்க்கிறார்.

ஹனிமூனுக்கு சென்ற தம்பியை காணவில்லை அவனை கண்டுபிடித்து தருமாறு ஹேபியஸ் கார்பஸ் மனு போட்டு கோர்ட்டில் காத்திருக்கிறார். சுந்தர்ராஜன். தம்பி மனைவி மனநலம் குன்றி மனநல மருத்துவமனையில் இருக்க, கோர்ட்டு லோக்கல் போலீஸை நம்பாமல், கேஸை சி.பி.ஐகு மாற்றுகிறது..

சிபிஜ ஆபீசர் ரஞ்சித் வேறு ஒரு கேஸில் இருக்க, வழக்கம்போய் அவர் ஆழைக்கப்பட்டு, இரண்டு அல்லக்கை ஆபீசர்களோடு விசாரணை புரிகிறார். அவர் ஒரிஜினல் குற்றவாளியை கண்டுபிடித்தாரா..? யார் அந்த கொலையாளி, மனநல மருத்துவமனையில் இருக்கும் கணவனை தொலைத்த மனைவியின் நிலமை? என்று ஏகத்துக்கு கதை சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்.

சிபிஐ டைரிகுறிப்பு போல எடுக்க வேண்டும் என்று மனதில் ஆசையிருக்கிறது.. ஆனால் அதை தாசில் செய்ய சரக்கு இல்லை. வையாபுரியை எல்லாம் சிபிஐ ஆபிசராய் போட்டு, காமெடி செய்கிறேன் பேர்வழி என்று சிபிஐயை அவமானபடுத்தியிருக்க வேண்டாம். சிபிஐ ஆபீசராய் ரஞ்சித்.. கேரக்டருக்கு பொருத்தமான தேர்வு.. ஆனால் திரைக்கதையில் அவர் கண்டுபிடிப்பதாய் வரும் காட்சிகள் எல்லாம் படு சொதப்பல்.. அதிலும் ரெண்டு மாதத்திற்கு முன்பு தள்ளி விடப்பட்ட சந்தியாவின் கணவன் கொண்டு போயிருந்த ப்ளாஸ்கிலிருந்து பில்டர் காபி தலையில் சொட்ட, அதை வைத்து க்ளூவை கண்டுபிடிப்பது போன்ற அபத்தங்களும், மட்டமான சேசிங் காட்சிகளும், மேலும் சொதப்புகிறது..

அந்த மழை கோட்டு கொலைகாரனுக்கு ரொம்பத்தான் பில்டப் கொடுக்கிறார்களே..? என்று பார்த்தால்.. காணாமல் போன தம்பியும், ரெயின் கோட் கொலைகாரனும் ஒருவனே என்பதும்.. (எவ்வள்வு கஷ்டம். கண்டே பிடிக்க முடியல..) அதில் நடித்திருப்பது இயக்குனர் தம்பிதுரை என்பதை ப்ளாஷ் பேக்கில் அம்மாஞ்சியாய் ஸ்கூட்டரில் வரும் போது வேறு காட்டுகிறார்கள்.. கொடுமைடா சாமி.. தானே தன் தலையில மண்ணை வாறி போட்டுகிட்டதுக்கு சமம் அவரோட நடிப்பு..
இன்னொரு ஸ்டெப்நீ..

யார் கொலையாளி என்று தெரிந்தவுடன் மீண்டும் ஒரு அரை மணி நேரம் ப்ளாஷ் பேக், டூயட் பாடல், ஸ்டாப் ப்ளாக்கில் காணாமல் போய் சிபிஐயை குழந்தைகள் பட காமெடி போலீஸ் போல ஆக்கியதும்.. ஒரே ரணகள காமெடி. ரகஸியாவை தவிர சிபிஐக்கு வேறு ஒரு உளவு சொல்பவர் இல்லாமல் அலைவதும்.
இன்னொரு காமெடி..

வில்லனாய் பிரேம்.. அவரின் கேரியரில் ஒரு மூழு நீள படத்தில் வில்லனாய் வந்திருக்கிறார்.. சண்டை போடுகிறார்.. அழுத்தமில்லாத ஒரு கேரக்டர். தேவையில்லாமல் மூணாறு கொலைவழக்கில் வித்யா தன் காதலனை அழைத்ததை.. நிருபிப்பதுபோல் டயலாக் எல்லாம் பேசுகிறார்.. என்னத்தை சொல்ல.

மூணார் – சுருக்கு கயிறு..

டிஸ்கி:

படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்டை ஒருவர் லாஸ்ட் சீட்டில் உட்கார்ந்த படி போனில் சொல்லி கொண்டிருந்தார்.. படத்தின் இயக்குனர் நடிக்க ஆரம்பித்த சீன்கள் வந்ததும்., மக்கள் அடித்த கமெண்டுகளை பார்த்து நெளிந்தவர்.. ஒரு கட்டத்தில் படம் முடிவதற்கு முன்பே ஓடி விட்டார்..

உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

33 comments:

krishna said...

Kalakkal thala --lost 3 line excellent

butterfly Surya said...

டிஸ்கி சூப்பர்.

butterfly Surya said...

கேபிள் .. இந்த படம் எப்ப வந்தது.??

♠ ராஜு ♠ said...

உங்க கடமை உணர்ச்சியப் பாத்து கண்ணுல தண்ணி வருது அண்ணே..!

Cable Sankar said...

நன்றி கிருஷ்ணா.. அந்த பக்கம் போயிராதீங்க.. பெரிய பள்ளம்..:)

Cable Sankar said...

நன்றி சூர்யா.. நேத்துதான் வந்தது..

Cable Sankar said...

என்ன பண்றது..நன்றிங்கோ....

KaveriGanesh said...

மூணார் – சுருக்கு கயிறு..


முதல்ல உமக்கு ஓரு மூக்கணாங்கயிறு போட்டா தேவல,அர்த்த ராத்திரியில படம் பாத்து காத்து,கருப்பு உமக்கு அண்டிருமோ பயமாகீது.

Muthukumar said...

எதையும் தாங்கும் இதயம் கேபிள் சங்கர் வாழ்க !!!

தண்டோரா ...... said...

கேபிள்..வித்யா என் வீட்டிற்கு பக்கத்தில்தான் இருந்தாள்..

பிரபாகர் said...

படம் பேஜாரா இருக்கும் போலிருக்கே? அண்ணே நீங்கதான் படம் எடுத்து இந்த தமிழ் சினிமாவ கொஞ்சம் தூக்கி நிறுத்தனும்...

பிரபாகர்.

எவனோ ஒருவன் said...

//இன்னொரு ஸ்டெப்நீ.. //
அவ்வ்வ்வ்வ்.....

//மூணார் – சுருக்கு கயிறு..//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..............

டம்பி மேவீ said...

கேபிள் அண்ணே ..... நேத்து நீங்க RECOMMEND பண்ணின படங்களில் இதுவும் ஓன்று ....

டம்பி மேவீ said...

"பிரபாகர் said...
படம் பேஜாரா இருக்கும் போலிருக்கே? அண்ணே நீங்கதான் படம் எடுத்து இந்த தமிழ் சினிமாவ கொஞ்சம் தூக்கி நிறுத்தனும்..."


ஆமாங்க .... நானும் அவர் படத்திற்கு தான் காத்து இருக்கிறேன்......

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தேறுமா ... படம் பாக்கலாமா ....

ஜெட்லி said...

//படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்டை ஒருவர் லாஸ்ட் சீட்டில் உட்கார்ந்த படி போனில் சொல்லி கொண்டிருந்தார்.. படத்தின் இயக்குனர் நடிக்க ஆரம்பித்த சீன்கள் வந்ததும்., மக்கள் அடித்த கமெண்டுகளை பார்த்து நெளிந்தவர்.. ஒரு கட்டத்தில் படம் முடிவதற்கு முன்பே ஓடி விட்டார்..
//

அது எப்படி அண்ணே மொக்கை படம்னு
தெரிஞ்சும் கலெக்‌ஷன் எல்லாம் பாக்குறாங்க.....

Kolipaiyan said...

மூணார் – சுருக்கு கயிறு

:) :) :)

talkboy said...

எவ்ளவோ பார்த்துடோம் இதை பார்க்க மாட்டோமா...டிவி ல தான்

நல்ல விமர்சனம்....காப்பாதீடிங்க

Jawarlal said...

இதே கதையைக் கூட நல்ல திரைக்கதை இருந்தால் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்க முடியும். சரியா?

http://kgjawarlal.wordpress.com

Jana said...

அருமையான விமர்சனம் நண்பரே...

pappu said...

படத்தின் கலெக்‌ஷன் ரிப்போர்டை ஒருவர் லாஸ்ட் சீட்டில் உட்கார்ந்த படி போனில் சொல்லி கொண்டிருந்தார்.. படத்தின் இயக்குனர் நடிக்க ஆரம்பித்த சீன்கள் வந்ததும்., மக்கள் அடித்த கமெண்டுகளை பார்த்து நெளிந்தவர்.. ஒரு கட்டத்தில் படம் முடிவதற்கு முன்பே ஓடி விட்டார்../////


கண்டுபிடிச்சுட்டேன். அது டேரடக்கர் தான?

D.R.Ashok said...

ஒரு மொக்க படத்த... சுவையா விமர்சனம் பண்ணியிருக்கீங்க. கை குடுங்க.

T.V.Radhakrishnan said...

படம் நல்லாயிருக்கா..என்று கேட்பதைவிட..இப்படிப்பட்ட படங்களைப் பார்க்கும் உங்க பொறுமையை பாராட்டுகிறேன் சங்கர்

மங்களூர் சிவா said...

/
மூணார் – சுருக்கு கயிறு..
/

டைரக்கடருக்கா?
தயாரிப்பாளருக்கா?

:)))))

ghost said...

anna neenga romba nallavaru

சிம்பா said...

எவ்வளவு அடிய தான் தாங்குகிறது... அதிகமா மழை வர, சட்டுன்னு இந்த படத்துக்கு போனேன். அந்த கொடுமைய சொல்லி மாளாது அண்ணா.

எவளோ தடவ தான் பாதிலயே ஓடியாந்து பதிவு போடுறதுன்னு விட்டுட்டேன்..

சிம்பா said...

//மங்களூர் சிவா said...

/
மூணார் – சுருக்கு கயிறு..
/

டைரக்கடருக்கா?
தயாரிப்பாளருக்கா?

:)))))///

காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்க்கிற நமக்கும் சேர்த்து தான்..

ஆதிமூலகிருஷ்ணன் said...

சூப்பர் கேபிள். அப்புறம் விகடன் மாதிரி நீங்களும் படத்துக்கு ஏன் மார்க் போடக்கூடாது. சிம்பிளா, கிளாஸா இருக்கும்ல.. (ஹிஹி நீண்ட விமர்சனத்தை படிக்காம மார்க்கை மட்டும் பார்த்துட்டு ஓடிப்போயிர்றதுக்குதான் இப்பிடி ஐடியா குடுக்குறேன்னு நினைச்சுக்காதீங்க.. ஹிஹி)

அப்புறம்.. //ஆழைக்கப்பட்டு//
இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லைன்னு நினைக்கிறேன். குறைஞ்சது ஒரு பத்து வலைப்பூக்களுக்காவது இன்னிக்கு போயிருப்பேன். பழைய, புதிய, பிரபல, பிரமில்லாத என்று கணக்கு வழக்கில்லாமல் எல்லாருமே ஸ்பெல்லிங் மிஸ்டேக் போட்டுத் தாளிச்சிட்டாங்க.. அவ்வ்வ்வ்வ்வ்..

kanagu said...

சொதப்பல் ஆயிடுச்சா... :)))

நல்ல த்ரில்லரா எடுத்து இருக்கலாம்..

எந்த தியேட்டர்-ல படம் பாத்தீங்க???

செந்தில் நாதன் said...

காப்பாத்திட்ட தலைவா!!!! நன்றி!!!

இரா.சுரேஷ் பாபு said...

ஆஹா.... ஆஹா ... இந்த மாதிரி படமெல்லாம் எங்க ஊர்ல ரிலீஸ் ஆகாது.....

Shan said...

Hi Cable Shankar,

I am from Australia. I usually read your blog every week after I read times of India and Dinamalar. Very interesting blog. Keep up your good work.

Cheers, Shan

கிறுக்கல் கிறுக்கன் said...

என்ன இருந்தாலும் நீங்கள் பொறுமையின் சிகரம்தான்