Thottal Thodarum

Oct 15, 2009

நிதர்சன கதைகள்-12- நேற்று வரை

LIL013MB

எல்லோரும் இப்படித்தான் பார்ப்பார்களா..? என்ற கேள்வி என்னுள் எழுந்து கொண்டேயிருந்தது. அப்படி எழுந்தாலும் ரோட்டில் இறங்கியவுடன், கண்களும் மனதும் அதை தேடி அலையத்தான் செய்தது நேற்றுவரை.

நான் செய்யும் காரியஙக்ள் எனக்கு கேவலமானதாகவோ, அவமானகரமானதாகவோ தெரிந்ததில்லை நேற்றுவரை.

ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையாய், இறுக்கமாய், உள்ளங்கை அளவாய், அளவுக்கதிகமாய், அபரிமிதமாய், டென்னிஸ்பந்தாய், தளர்வாய், சரிந்து சாய்ந்தாய், இருக்கா இல்லையா என்று கண்ணாமூச்சி காட்டு சிலதுமாய், டென்னிஸ் கோர்ட்டாய், அவைகளை பார்த்ததும் கிடைக்கும் போதையின் கிறக்கத்தை வேறு ஏதாவது தந்திருக்குமா என்று கேட்டால் இல்லையென்றுதான் சொல்லியிருப்பேன் நேற்று வரை.

பல சமயங்களில் என்னுள் ஏற்படும் கிளர்ச்சிகளுக்கு வடிகாலாய் அவைகள் இருந்திருக்கிறது. ஒவ்வொரு முறையும் ஒன்று.. என்று பார்தவைகளை வரிசை படுத்தியிருக்கிறேன்.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிளர்ச்சியின் உ தரும் வித்யாச உச்சம். இவைகள் எல்லாமே எனக்கு அஃறிணைகளாகவே தேன்றியது  நேற்று வரை.

இரவுகளின் ஓட்டத்தில், அங்கும் இங்கும் அலையும் வெளிச்சத்தின் ஊடே தெரியும், அந்த வெளிச்சத்திலிருந்து தப்பிக்க வேகமாய் ஓடும் போது துரத்தி, துரத்தி பார்க்கும் போது, சில சமயம் கிடைக்கும் அழைப்பும், பல சமயம் கிடைக்கும் எரிப்பும், கொடுக்கும் த்ரில்லுக்கு இணையாய் ஒரு எக்ஸ்டெஸியை கிடைக்கவே கிடைக்காது என்று தோன்றியது  நேற்றுவரை.

”சுகுணா. புடவையை நல்லா ஏத்திவிட்டு போத்திக்க” என்றேன் இன்று என் புது மனைவி வண்டியின் பில்லியனில் உட்காரும் போது..

டிஸ்கி:

தண்டோரா எழுதிய கவிதையின் கதை வடிவமாய்தான் இதை எழுதியிருக்கிறேன். நன்றி தண்டோரா..உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

33 comments:

ஹாலிவுட் பாலா said...

நன்றாகத் தான் இருந்தார் கேபிள் சங்கர், நேற்று வரை! :) :) :)

கே.ரவிஷங்கர் said...

தல,

1980 குமுதம் டைப் கதை.எதனா புச்சா எழுது தல.

கே.ரவிஷங்கர் said...

போன பின்னூட்டத்தில் விட்டுப்போனது:-

கதையின் flow பாத்துட்டு ஏதோ பெரிசா இருக்குமுனு பாத்தா.....

”துறத்தி...துறத்தி” பிழை கவனிக்கவும்.

தண்டோரா ...... said...

http://vilambarakkaaran.blogspot.com/2009/08/140809.html

நல்லாத்தான் இருக்கு

நர்சிம் said...

தண்டோராவுக்கு வாழ்த்துக்கள்..கலக்கல் தண்டோரா..இருங்க அங்க வர்ரேன்.

தண்டோரா ...... said...

/தல,

1980 குமுதம் டைப் கதை.எதனா புச்சா எழுது தல//

குமுதம் இன்னும் 1980 லேயேதான் இருக்கு ரவி சார்

நையாண்டி நைனா said...

Present sir.

தராசு said...

போங்கண்ணே, ஆரம்பிக்கறதுக்குள்ளயே முடிச்சுட்டீங்க.
ஆணி அதிகமா????

பிரபாகர் said...

அண்ணா,

உங்களின் நிதர்சனக்கதைகளின் தீவிர ரசிகன் நான், இன்று படித்தவுடன் வெறுமனே இருந்தது. சுமார்தான்.

பிரபாகர்.

ஜெட்லி said...

கதையின் நாயகன் போல் தான் நாமெல்லாம்.....

முரளிகண்ணன் said...

ஆஹா இனிமே கவிதை ரீமிக்ஸ்ஸா

Sivakumar K said...

Super ........

"கிறக்கத்தை வேறு ஏதாவது
"தந்திருக்குமா
- என் புது மனைவி வண்டியின் பில்லியனில் உட்காரும் போது"

எவனோ ஒருவன் said...

அந்த மூனாவது பாராவுலதாண்ணே நீங்க நிக்கிறீங்க...

யூத்து.

VISA said...

thala yemaathi puteengalea.
unga kitearunthu neraya ethirpaakkuroam.

சஹானா beautiful raga said...

நல்லாருக்கு, தீபாவளி வாழ்த்துக்கள்

ஷண்முகப்ரியன் said...

என்ன பின்னூட்டம் இடுவதென்றே தெரியாத உங்கள் முதல் நிதர்சனக் கதை,ஷங்கர்.

சுகுணாதிவாகர் said...

/சுகுணா. புடவையை நல்லா ஏத்திவிட்டு போத்திக்க” /

இதுல ஏதும் உள்குத்து இருக்கா?

D.R.Ashok said...

கடைசி வரிகளை செதுக்கியிருந்தால் நன்றாகயிருந்திருக்கும் மற்றபடி நிதர்ஸனமே.

ஆனாலும் கதையில் ஏதோ ஒன்னு குறையுது.

எமக்கு பிடித்தது இடையும் இடைசார்ந்த பகுதியும் ஹிஹி

D.R.Ashok said...

’தலைவரே’ விட்டு போச்சு சேத்துக்குங்க.

T.V.Radhakrishnan said...

நல்லாருக்கு

Siva said...

பாத்து ரசிக்கிறதுக்கு மட்டுமே பத்து வகையா.
நீங்க கேபிளா இல்ல ப்ளூ டூத்தா

sriram said...

யூத்து
உங்க கவிதைகள் உரைநடை மாதிரி இருக்கு, கதை கவிதை மாதிரி இருக்கு, எப்படி இப்படியெல்லாம்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Muthukumar said...

400க்கு வாழ்த்துக்கள் சங்கர்

Muthukumar said...

கவிதை to கதை ரீமிக்ஸ் நல்லாருக்கு...

அத்திரி said...

அண்ணே நீங்க கதை எழுதலைன்னு யாராவது கவலைப்பட்டாங்களா??? ஏன் ஏன் இப்படி...

உங்க கூட ஒரு நாள் சேர்ந்து சரக்கடிச்சாத்தான் நீங்க அடங்குவீங்க போல

Achilles/அக்கிலீஸ் said...

சூப்பர்.. :))

Cable Sankar said...

@ஹாலிவுட் பாலா
ஏன் கதை நல்லாயில்லையா..? :(

@ரவிஷஙகர்
:(
தவறை திருத்திவிட்டேன் தலைவரே


@தண்டோரா
மூலவர் நீங்களே சொல்லிட்டீங்க
@நர்சிம்

எதுக்கு..?:) சொல்ல வேண்டியதை இங்கனயே சொல்லுங்க

@தண்டோராஅ
அதுஎன்னவோ உண்மைதான் தண்டோரா

Cable Sankar said...

@நைனா

அட்டென்டெண்ஸ் போட்டாச்சு

@தராசு

அதுதான்ண்ணே இதுல ஸ்பெஷல்..

@பிரபாகர்
:(

@ஜெட்லி
உண்மை தான் நிதர்சனம்

@முரளிகண்ணன்
நல்லாருக்கா..?

@சிவகுமார்

நன்றி..

@எவனோ ஒருவன்

அலோவ் நான் எப்பவுமே யூத்துதான்..:(

Cable Sankar said...

@விசா
உங்க எக்ஸ்பெக்டேஷனை திருப்தி படுத்த முயற்சி செய்யுறேன்..

@சஹானா
நன்றி உங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகக்ள்

@ஷண்முகப்பிரியன்

அவ்வள்வு நல்லாவா இருக்கு..:(

@சுகுணா திவாகர்

அட இதுல இப்படி வேற இருக்கா..?

@அசோக்
அப்படியா சொல்கிறீர்கள்..

இடையும் இடைசார்ந்த பகுதியுமா..? மிதிச்சிருவோம்

@ராதாகிருஷ்ணன்

நன்றி சார்

Cable Sankar said...

@சிவா
நீஙக் ப்ளூ டூத்னுங்கிறது செல் போன்ல இருக்குமே அதானே..?

@ஸ்ரீராம்
அதானே நம்ம ஸ்பெஷாலிட்டியே..


@முத்துகுமார்
நன்றி

@முத்துகுமார்
மிக்க நன்றி

@அத்திரி

நீயே ராத்திரி போன் பண்ணி கதை நல்லாருக்குன்னு சொல்லிட்டு இப்ப இப்படி பின்னூடட்ம் போட்டா இந்த கதையின் நாயகனே நீதான் தெரியாதுன்னு நினைக்கிறியா..?

@அக்கிலீஸ்

நன்றி

pappu said...

யூத்து கதையா? எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேத்து இன்னும் சுவாரசியமா ஆக்கிருக்கலாம்?

Raj said...

ரைட்டு...!

மங்களூர் சிவா said...

:)))))))))