Thottal Thodarum

Oct 19, 2009

கொத்து பரோட்டா –19/10/09

இந்த வருஷம் தீபாவளி அவ்வளவு சுரத்தாவே இல்லைன்னு தோணுது. ரிஸெஷன் கூட ஒரு காரண்ம்னு சொல்றாங்க. ரிலீஸான படங்களும் பெரிசா இல்லை. மக்கள் கையில காசு அவ்வளவா இல்லை. அதனால பட்டாசு, மற்றும் பல விற்பனைகள் கூட மந்தமாயிருந்த நிலையில. ஒரு இடத்தில மட்டும் மந்தமேயில்லாம, கொஞ்சம் கூட சுணக்கமில்லாம இருந்தது எதுன்னா அது டாஸ்மாக்ல மட்டும் தான் மப்பும் மத்தாப்புமா.. சாரி மந்தாரமா வியாபாரம் நல்லா நடந்திச்சி.. தமிழ் நாடு முழுக்க 240 கோடி வசூலாம்.  ஹாப்பி தீபாவளி. அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..?

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
Image0322 Image0323

விரைவில் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் போகிறது. மிக மட்டமான தியேட்டர் பராமரிப்பு, டி.டி.எஸ், க்யூப் டிஜிட்டல் புரொஷக்‌ஷன், நல்ல சீட்டுகள், முழு ஏசி  போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு கொடுக்காமல், அநியாய கொள்ளையாய் 100,80,70 என்று புதிய படங்களுக்கு டிக்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் திரையரங்குக்கு அந்த ஏரியாவை சுற்றியுள்ள, அண்ணாநகர், மதுரவாயல், அமிஞ்சிக்கரை போன்ற இடங்களில் உள்ளவர்கள் தான் வருவார்கள். விரைவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் திறக்கவிருக்கும் பி.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ் இவர்களின் கொட்டத்தை அடக்கும் என்றே தோன்றுகிறது. எந்த விதமான வசதிகளையும் பெறாமல் நூறும், நூற்றி இருபதும் கொடுத்து பார்க்கும் மக்களுக்கு ஒரு பெரிய ரிலீப்
Image0327Image0328 . $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
குறும்படம்
Mathieu Ratthe என்கிற கனடிய குறும்பட இயக்குனர், இயக்கியுள்ள இந்த ப்டத்தின் மேக்கிங்கை பார்த்து மிரண்டு விட்டேன். சினிமாடோகிறாபியாக இருக்கட்டும், எடிட்டிங்காய் இருக்கட்டும் மிரட்டியிருக்கிறார். LOVEFIELD. இவர் படமெடுப்பதற்காக ஸ்டீபன் கிங்சின் ஒரு கதையின் ஒரு சீனை மட்டும் படமாய் உருவாக்கி தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார். அவரின் குறும்படம் உங்கள் பார்வைக்காக.

#######################################################################
சாப்பாட்டுகடை
ஏற்கனவே சத்யமில் முதல் மாடியில் இருக்கும் இட்லி எனப்படும் 100% வெஜிடேரியன் புட் ஜாயிண்டை பற்றி எழுதியிருந்தேன். அங்கே சமீபத்தில் ஒரு கார்பரேட் லஞ்ச் ஆபர் போட்டிருந்தார்கள் நூறு ரூபாய்க்கு,  இரண்டு இட்லியோ, ஆப்பமோ, பொங்கலோ, தோசை, அல்லது அடை, அல்லது பெசரட்டு, மெதுவடை அல்லது மசால் வடை, அல்லது கீரைவடை, காபி/டீ/ ஜூஸ்/லஸ்ஸி. நிச்சயமாய் அந்த ரெஸ்டாரண்டுக்கு 100ரூபாய் ரொம்பவும் சீப். நான் கீரைவடையும், அடை அவியல், இரண்டு இட்லியும், ஒரு லஸ்ஸியும் சாப்பிட்டேன். டிவைன்.
#########################################################################

ஏஜோக்
ஒரு விமானம் க்ராஷ் ஆகும் நிலைமையில் இருக்க, விமானத்தில் இருந்த ஒரு பெண் தன் உடைகளை எல்லாம் களைந்துவிட்டு,”நான் சாகப்போறேன் அதுக்கு முன்னாடி இங்கே யாராவது ஆம்பளை இருந்தா வாங்க.. சாகறதுக்கு முன்னாடி என் பெண்மையை நான் உணரணும் என்று கூப்பிட. ஒரு ஆம்பளை எழுந்து தன் சட்டையை கழட்டி “ அப்படின்னா போய் இந்த ஷர்டை அயர்ன் பண்ணிட்டுவா” என்றான்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
ஒரு அழகான பெண் ஒருத்தி டாக்டரை பார்க்க வர, அவளின் அழகில் மயங்கிய டாக்டர் தன் தொழில் தர்மத்தை மீறி அவளை பேண்டை கழட்ட சொல்ல, “ எதுக்காக இப்படி சொல்கிறேன் தெரியுமா என்று டாக்டர் கேட்க, தொடைகளில் ஏதாவது தழும்பு இருக்கான்னு பார்க்க தானே என்றாள். அடுத்து அவளவு மேலுடை, ப்ரா எல்லாவற்றையும் கழட்டி விட சொல்லி, அவளது மார்பகத்தை பிசைய, “எதுக்காக இப்படி பண்றேன்னு தெரியுமா..? என்று கேட்க, அவள் தெரியுமே.. ப்ரெஸ்ட் கேன்ஸர் இருக்கான்னு பார்க்கத்தானே என்றாள். இப்போது டாக்டர் இன்னும் முன்னேறி அவளை மேட்ட்ர் செய்து கொண்டிருக்க,” இப்ப எதுக்காக இதை செய்யறேன்னு தெரியுமா..? என்று கேட்க, “தெரியுமே. எனக்கு வி.டி. அதுக்குத்தான் ட்ரீட்மெண்டுக்கு வந்தேன். அது உங்களுக்கு வரப்போவுது” என்றாள்.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
என் டிஜிட்டல் கேமராவில் எடுத்த முதல் படங்கள்
DSC00272 DSC00270 DSC00273 DSC00274 DSC00275 DSC00276ஆதவன் திரைவிமர்சனம் படிக்க இங்கே அழுத்தவும்
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment

41 comments:

Ganesan said...

மிக பிரண்டாமாய் பி.வி.ர் வர போகுது.

டிஜிட்டல் கேமரா படங்கள் அருமை.

சாப்பாட்டு கடை மேட்டர் இனிமேல் தனி டாபிக் போடவும். புத்தகமாய் போட மிக எளிது.

Ganesan said...

மீ த first , அப்பாடி வாழ் நாளில் முதல்முறையாக‌

butterfly Surya said...

நல்ல சுவை..

ஏன் மாஸ்டர் லேட்டு..?? காலையிலேயே எதிர்பார்த்தேன்...

எறும்பு said...

//தமிழ் நாடு முழுக்க 240 கோடி வசூலாம்//
அண்ணே இதுல உங்க contribution எவ்வளவு??
:-)))))

பிரேம்ஜி said...

மாத்தியு நிஜமாகவே மிரட்டியுள்ளார்.

இராகவன் நைஜிரியா said...

1. தமிழிஷ், தமிழ் மணம் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சு.

2. டிஜிட்டல் படங்கள் அருமை. நல்லா படம் காண்பிச்சு இருக்கீங்க.

3. ஏ ஜோக் - இரண்டாவது ஜோக்கை - நல்ல அறிவுரை. வேலை செய்யுமிடத்தில் வேலையை மட்டும் கவனிக்கனும்.

4. ஹாட் ஸ்பாட் - கிளாசிக் டச்.

5. சாப்பாட்டுக் கடை - அடுத்த தடவை இந்தியா வரும் போது அழைச்சிகிட்டு போங்க.

6.குறும் படம் - அருமை- மிரள வச்சு இருக்காருங்க.

பின்னோக்கி said...

5 வருஷத்துக்கு முன்னாடி அந்த தியேட்டர் போயிருக்கேன். இப்பவும் அப்படித்தான் இருக்கா. பிவிஆர் வரட்டும். திண்டுக்கல்ல பிக் தியேட்டர் சத்யம் அளவுக்கு கட்டியிருக்காங்க. இங்க இவங்களுக்கு என்ன பிரச்சினை. பேராசை.

பின்னோக்கி said...

நந்தனத்துல எடுத்ததா போட்டோ ? நல்லா இருக்கு.

ஆண்மை குறையேல்.... said...

//அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..?//

மந்தாரம்னா மெத‌ப்பு பாஸ்... நேத்து நைட் ச‌ர‌க்கு அடுச்சுட்டு ஒரு சிரிப்பு சிரிச்சீங்க‌ளே.. அதே..

2 ஆவ‌து ஜோக் ரொம்ப‌ ப‌ழைய‌ ச‌ர‌க்கு.. கொஞ்ச‌ம் எங்க‌ ஏஜ்க்கும் கும்னு ஏர்ற‌ மாதிரி சொல்லுங்க‌...

தராசு said...

உள்ளேன் ஐயா

வரதராஜலு .பூ said...

//இந்த வருஷம் தீபாவளி அவ்வளவு சுரத்தாவே இல்லைன்னு தோணுது.//

ஆம். ரொம்பவே டல் இந்த தீபாவளி. இனி வரும் வருடங்களும் இதுபோலதான் இருக்கும் என நினைக்கிறேன்.

ஓட்டு போட்டாச்சி தமிலிழ்ல

ஜெட்லி... said...

தல படங்கள் கலக்கல்..
பிவிஆர் நியூஸ் எனக்கு புதுசு

R.Gopi said...

//அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..?//

ச‌ரி...ச‌ரி... விடுங்க‌ "த‌ல‌" 240 கோடியில‌ ந‌ம்ம‌ ப‌ங்கு எவ்ளோ??

மந்தார‌ம்னா, ம‌ப்போட‌ த‌ங்க‌ச்சியா இருக்கும்...

//பி.வி.ஆர். மல்டிப்ளெக்ஸ் /

பட்டையை கிளப்பப்போகும் பி.வி.ஆர்.க்கு வாழ்த்துக்கள்... மக்கள் இன்னும் கொஞ்ச நாள்ல நல்ல தியேட்டர்ல படம் பார்க்க போறங்க...

//எனக்கு வி.டி. அதுக்குத்தான் ட்ரீட்மெண்டுக்கு வந்தேன். அது உங்களுக்கு வரப்போவுது” என்றாள். //

எய்ட்ஸ்னு போட்டு இருந்தா இன்னும் சுவார‌சியமா இருந்திருக்கும் த‌லீவா...

//என் டிஜிட்டல் கேமராவில் எடுத்த முதல் படங்கள் //

சரி... இதுல எது முதல் படம்?? ஓகே.. எல்லா படமும் நல்லா இருக்கு... குறிப்பா சொல்லணும்னா அந்த ஆயிரம் கால் மண்டபம் மற்றும் மயில்... வாவ்...

கலக்கல் கேபிள்....

மேவி... said...

pvr kku route map thantha nalla irukkum


tasmaac matter onnum puthusu illai valakkamaai nadapathu thane

செ.சரவணக்குமார் said...

குறும்படம் அருமை. ஐந்து நிமிடத்தில் எத்தனைவிதமான உணர்வுகள், பகிர்ந்ததற்கு நன்றி.

Ashok D said...

படங்கள் அல்ல.. ஓவியங்கள் அல்லது paintings என்றும் கூறலாம்.
ஒவிய படங்கள் என்று கூறி தப்பிக்கலாம்.

Ashok D said...

ண்ணா.. hotspot அருமைங்கன்னா.. ரஸகுல்லா...

Ashok D said...

குறும்படம்.. :))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

again super parottaa

பித்தன் said...

supper barotaa.....

க.பாலாசி said...

கொத்து புரோட்டா நல்லாருக்கு தலைவரே....கொஞ்சம் ஹாட்டாவும் இருக்கு....

படங்கள்லாம் நல்லாருக்கு....ஓவியங்கள் போல தெரியுது....

SAIANANDH said...

hai தல இன்று நான் நியூ ஆக இணைந்துள்ளேன் ஆகவே உங்கள் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்கிறேன் இதில் இணைய எனக்கு மிக உதவியாக இருந்த www.viveganblog.blogspot.com இக்கு நன்றி ..... நான் உங்கள் தீவிர ரசிகன் .....

நர்சிம் said...

குறும்படம் அருமை தல.

ஷண்முகப்ரியன் said...

ஒரு விறுவிறுப்பான திரைப் படத்தின் அத்தனை அம்சங்களும் உள்ள பதிவு.
சபாஷ்,ஷங்கர்.HATS OFF!

ஷண்முகப்ரியன் said...

ஒரு விறுவிறுப்பான திரைப் படத்தின் அத்தனை அம்சங்களும் உள்ள பதிவு.
சபாஷ்,ஷங்கர்.HATS OFF!

Beski said...

என்னது? இந்த தீபாவளி சரியில்லயா? வீட்ட விட்டு வெளிய வரவே முடியாம வெடியப் போட்டுட்டு இருந்தானுவளே!
அப்போ நல்ல தீபாவளின்னா வீட்டுக்குள்ள வெடி வந்து விழுமோ?
---
எனக்குப் பிடிக்காத தியேட்டர்களில் ரோகினியும் ஒன்று. உங்கள் வாய்ச்சொல் பலிக்கட்டும்.
---
குறும்படம் அருமை. இது போன முறை கொத்துபரோட்டா பார்த்தபின், youtube சென்று short film என்று தேடிப்பார்த்ததில், முதல் பக்கத்திலேயே வந்தது.
இது உங்கள் ஆக்ஸிடெண்ட் படத்தைக் கொஞ்சம் ஒத்திருக்கிறதல்லவா? (நா கான்சப்ட்ட சொன்னேன்)
---
அந்த சாப்பாட்டுக்கடை எல்லாம் நமக்கு ஒத்துவருமா என்று தெரியவில்லை.
---
ஏ ஜோக் ஓக்கே.
---
படங்கள்?! ஓவியங்களை எடுத்த படங்களா?

-ஏனாஓனா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//விரைவில் கோயம்பேடு ரோகிணி தியேட்டருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப் போகிறது. மிக மட்டமான தியேட்டர் பராமரிப்பு, டி.டி.எஸ், க்யூப் டிஜிட்டல் புரொஷக்‌ஷன், நல்ல சீட்டுகள், முழு ஏசி போன்ற எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் மக்களுக்கு கொடுக்காமல், அநியாய கொள்ளையாய் 100,80,70 என்று புதிய படங்களுக்கு டிக்கெட் கொடுத்து கொள்ளையடிக்கும் திரையரங்குக்கு //

ரொம்ப சந்தோசம். எங்க பேமிலியோட படத்துக்கு போகனும்னா மதுரவாயல்ல இருந்து ரோகினி மட்டும்தான் போக முடியும். அநியாய விலை. மிகவும் மட்டமான தியேட்டர். நானும் PVR cinema வுக்காதான் வெயிட் பண்றேன். யாராவது ரோகினி தியேட்டர்கு சங்கு ஊதுங்க. ப்ளீஸ்.

Kumky said...

குறும்படம் அசத்தல்...
படங்கள்....நந்தனம்...
ஏ” ரக ஜோக்...சங்கடம்..
டாஸ்மாக் பற்றிய தகவலில்லாத...பதிவுகள்...எதிர்பார்ப்பு.
சாப்பாடு...பெருமூச்சு...

VISA said...

80 marks for this kothu parota.
but A joke improve pannanum

அறிவிலி said...

குறும்படமும் படங்களின் படங்களும் அருமை.

Unknown said...

குறும்படம் சூப்பர்.ஆனால் நான் யூகித்து விட்டேன்.(கால் அகட்டல்/ரத்தம்)

//அது எல்லாம் சரி மப்புனா புரியுது.. மந்தாரம்னா..?//

ரெண்டுமே ஒரே மீனிங்கதான்.
மப்பு=கரிய முகில்
மந்தாரம் =மந்து(மேகம்) +ஆரம்(கூட்டம்) மேக கூட்டம்

மப்பும் மந்தாரமும் என்பது ”வளவள”ன்னு “சடசட”ன்னு
“புசுபுசு”ன்னு என்கிறமாதிரி.

Jana said...

குறும்படம் நெஞ்சில் நிற்கின்றது. அருமை நண்பரே..

Cable சங்கர் said...

@காவேரிகணேஷ்
ஆமாம் தலைவரே.. சாப்பாடு கடை மேட்டரை பற்றிய விஷயத்தை பற்றி யோசிக்கிறேன். உஙக்ள் பாராட்டுக்கு மிக்க் நன்றி

@சூர்யா
கொஞ்சம் லேட்டாய் எழுந்திட்டேன்
@எறும்பு
நிஜத்தை சொல்லப்போனா ஒன்னுமேயில்லை

@பிரேம்ஜி
ஆமாம்

@இராகவன் நைஜீரியா
1 நன்றி
2 அதுக்கு மிக்க நன்றி
3 கருத்து சொல்றோமில்ல
4 அப்படியா
5 நிச்சயமா
6 ஆமாம் தலைவரே

Cable சங்கர் said...

@தராசு
நன்றிண்ணே..உங்க ஆசைய தீத்திட்டேனில்ல

@வரதராஜுலு
நன்றி

@யோ
மிக்க நன்றி

@ஜெட்லி
இன்னும் பி.வி.ஆர்.திறக்கல

@கோபி

ஒண்ணுமே இல்லை
நிச்சயமா நலல் படம் பார்கக் கூடிய இடமாத்தான் இருக்கும்

@ நீங்க எது நல்லாருக்குன்னு நினைக்கிறீங்களோ அதுதான் முதல் படம்

எய்ட்சுன்னு போட்டா கொஞ்சம் டிரஜிடியாயிரும் அதனலதான்

Cable சங்கர் said...

@டம்பிமேவி
பழைய அமிஞ்சிக்கரை அருண் ஓட்டல்ன்னு கேளூங்க

@சரவணகுமார்
மிக்க நன்றி

@அசோக்
அது அப்படியே வச்சிக்கங்க.. போட்டோ நல்லாருகக இல்லையா

@அசோக்
என்னது ரசகுல்லாவா.. ஒவ்வொருத்ட்தனுக்கு ஒண்ணு தோணுது.

@ராதாகிருஷணன்
நன்றி

2பித்தன்
மிகக் நன்றி

Cable சங்கர் said...

@பாலாஜி
ஆமாம் மாநகராட்சி சென்னையில் சுவ்ர்களில் வரைந்த ஓவியம்டஹன் அது.

@சாய ஆனந்த்
பதிவுலகம் உங்களை வரவேற்கிறது

@நர்சிம்
நன்றி

@ஷண்முகப்பிரியன்
மிக்க நன்றி சார்

@எவனோ ஒருவன்
என்னது பட்டாசு வெடிச்சாங்களா..?

@நிச்சயம் பலிக்கும்
நன்றி

Cable சங்கர் said...

@ரமேஷ்
நிச்சயம் பிவிஆருகு போயிட்டு நீங்க வேற தியேட்ட்ருகு போக மாட்டீங்க

@கும்க்கி
நன்றி
ஆமா
அப்படியா
எழுதிடுவோம்
வேற வழி

@விசா
நன்றி

@அறிவிலி
நன்றி

கே.ரவிஷங்கர்
உங்களால் முடியாதது இருக்கா என்ன?
இருங்க் ஒரு கட்டிங் அடிச்சிட்டுவர்றேன்

@நன்றிஜனா

அக்னி பார்வை said...

digital photo super...

Venkatesh Kumaravel said...

காரசாரமா இல்ல.. பட் வெரைட்டியா இருக்கு!

அம்ப்பா மால் என்ற வணிகவளாகத்தின் ஒரு பகுதியே பி.வி.ஆர்! 7 அரங்குகளும் ஐந்நூறுக்கும் பேற்பட்ட கடைகளும் உள்ளடக்கியது. ஆர்க்கிடெக்ட்: சேரலாதன். கலர் ஸ்கீம் தவிர கட்டிடம் நல்லாவே இருக்கு!

குறும்படம்: டவுன்லோட் செய்திருக்கேன்.

புகைப்படங்கள் நல்லாயிருக்கு: சைதாப்பேட்டை!! என்ன மாடல்.. சேட்டில் வரவும்.

The EMPEROR said...

http://cablesankar.blogspot.com/2009/08/240809.html

இந்த பதிவில் வரும் சாப்பாட்டு கடை சூப்பர் பிரியாணி என்று நினைகிறேன். ஏனென்றால் ஸ்டார் பிரியாணி என்ற கடை சைதாப்பேட்டை கோடம்பாக்கம் ரோடில் இல்லை.அதுமட்டும் இல்லாமல் நீங்கள் சொன்ன ரெடிமேட் பாக்கெட் சைட் டிஷ், சிக்கன் ப்ரை, ஈரல், மட்டன் சுக்கா, முட்டை மசாலா இதில் இருந்தது.சரிபார்த்து சொல்லவும்.ஸ்டார் பிரியாணி இருந்தால் மருபடியும் ஒரு முறை சைதாப்பேட்டை பொய் வரலாம்.

நிகழ்காலத்தில்... said...

குறும்படம் அருமை

ஐந்து நிமிடத்தில் இவ்வளவா !!!