Thottal Thodarum

Oct 14, 2009

Acid Factory - Film Review


ஒருவன் திடீரென கண்முழித்து பார்க்கிறான். தான் ஒரு பாழடைந்த பேக்டரியில் இருப்பதை உணர்கிறான். தன்னை பற்றி ஏதும் அவனுக்கு தெரியவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தால் ஒருவன் கைவிலங்கிட்டு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, இன்னொருவன் ஒரு சேரில் கட்டப்பட்டு, மயக்கமாக இருக்க, இன்னொருவன் தரையில் மயங்கி இருக்கிறான். ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்து எழுந்திருக்கையில் யாருக்கும் அவர்களை பற்றிய ஞாபகங்கள் இல்லை. தாங்கள் யார் எதற்காக வந்தோம், தங்களது பெயர் என்ன என்பது கூட தெரியாமல் இருக்க, அப்போது ஒரு போன் வருகிறது அங்கிருக்கும் ஒருவனை கொல்ல வேண்டும் என்று நான்கு ஐந்து பேர்களின் பெயரை ஒருவன் குறிப்பிட, குத்துமதிப்பாக அவனுடன் பேசி, இவர்களுள் யார், யாரை கொல்ல போகிறார்கள் என்று பயத்தினூடே, அலைய, திடீரென இன்னொருவன் வர, அவனை தொடர்ந்து ஒரு பெண்ணும் அங்கே தோன்ற, அவளுக்கும் அதே பிரச்சனை தான் யார் என்பதுதான். அவர்களூடய ஞாபக மறதிக்கு காரணம் அவர்கள் இருக்கும் ஆசிட் பாக்டரியில் உள்ள பெண்டேன் என்கிற ஆசிட்டினால் என்பதை அறிகிறார்கள்.

இதற்கு நடுவில் கதையின் போக்கில் முன்னும் பின்னும் ஓடுகிறது அதில் படத்தில் காட்டப்படும் கதாபாத்திரங்கள் எல்லோருமே ஒன்றாக இருக்கிறார்கள். கொள்ளையடிக்கிறார்கள். ஐந்துவாரஙக்ளுக்கு முன்பு என்று ஆரம்பித்து, சொல்லப்படும் கதையில், இங்கே ஆசிட் பாக்டரியில் மாட்டியிருக்கும் ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு வார கழித்து நிகழும் நிகழ்வுகளில் வர, கதையின் முடிச்சு மேலும் இறுகுகிறது. இவர்களுக்கெல்லாம் தலைவனாய் ஒருவன் வெளியே வேறு ஒரு பெண்ணிடமிருந்து அவளது கணவனை கடத்தி வைத்துள்ளதாய் தெரிவித்து, பணத்தை கொண்டுவர சொல்ல, அவளின் உதவியுடன் போலீஸ் தலைவனை பிடிக்க முயல, பணத்தை மிக திறமையாய் கடத்துகிறான் தலைவன்.

நேரம் போகப் போக ஒவ்வொருவருக்காய் ஞாபகம் வர ஆரம்பிக்க, பிரச்சனை வலுக்கிறது. ஒரு வழியாய் தலைவன் அங்கே வர, கடத்தி வரப்பட்ட பணத்தை பங்கு பிரிக்க பிரசச்னை வருகிறது. ஏனென்றால் அந்த கும்பலில் ஒருவன் போலீஸ் ஆள் என்பதால் அது யார் என்ற ப்ரச்சனை வர.. மேலும் சண்டைகளும் சச்சரவுகளும் வெடிகக், க்ளைமாக்ஸ்

கொஞ்சம் அசந்தால் கூட அடுத்த சீன் புரியாமல் போவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் மிகவும் கவனமாய் பார்க்க வேண்டும் அவ்வளவு நுணுக்கமான திரைக்கதை.
அதுமட்டுமிலலாமல் சரியான நடிகர்களை தேர்வு செய்திருப்பதை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பழைய் வில்லன் நடிகர் டேனி, தியாமிர்ஸா, இர்பான்கான், மனோஜ்பாஜ்பாய், என்று ஒரே நடிகர்கள் அணிவகுப்புத்தான்.

படத்தின் மிக சிறப்பான விஷயங்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், ஒலி, மற்றும் ஆக்‌ஷன் காட்சிகள், ஒலிப்பதிவுக்கு ரசூல் பூக்குட்டி,

எவ்வளவுதான் இண்ட்ரஸ்டான திரைக்கதையாக இருந்தாலும் சில காட்சிகளில் இருக்கும் வேகம், வேறு சில காட்சிகளில் இல்லாமல் தொய்யத்தான் செய்கிறது. அது மட்டுமில்லாமல் போலீஸ் ஆபிஸராய் வரும் குல்ஷன்குரோவர் அவ்வப்போது வில்லனை திட்டிவதும், திட்டியே பாராட்டுவதும் என்று இருந்தாலும் பெரிதாய் ஒன்றும் செய்யாமல் வெறும் வெத்து வேட்டாய் இருப்பது ஒரே காமெடி.


இர்பான் கானுக்கு இதெல்லாம் ஜுஜுபி கேரகடர் ஊதி விட்டு கொண்டே போகிறார். வழக்கமான சஞ்செய்குப்தா ஸ்டைல் த்ரில்லர் படம்தான். இயக்குனர் சுபான் வர்மா அதை ஸ்டைலிஷாக கொடுத்திருக்கிறார்.

Acid Factory – வித்யாசமான த்ரில்லர் விரும்பிகளுக்கு

டிஸ்கி:
இந்த விமர்சனத்தை படித்ததும், ஹாலிவுட் சைக்கலாஜிகல் த்ரில்லரான “Unknown” மற்றும் “Saw” ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது..
Post a Comment

29 comments:

Beski said...

விமர்சனம் படிச்சாலே பயங்கரமா இருக்கே....
கண்டிப்பா பாக்கனும்.

செ.சரவணக்குமார் said...

அருமையான விமர்சனம். நன்றி கேபிள் சார்..

ARV Loshan said...

நல்லா இருக்கும் போலிருக்கே.. :)

Romeoboy said...

ஓகே பாஸ் பார்த்துடலாம் ..

யோ வொய்ஸ் (யோகா) said...

இலங்கைல ஹிந்தி படம் பார்க்க இயலாது தல

Truth said...

விமர்சனம் இன்னும் படிக்கல. கடைசி வரி மட்டும் தான் படிச்சேன்.
இந்த வீக்கெண்ட் படத்தை பாத்துட்டு அப்புறமா படிக்கிறேன்.

btw, உங்களுக்கு எப்படி டைம் கிடைக்குது week daysல படம் பாக்க.

வினோத் கெளதம் said...

Unknown..??

க.பாலாசி said...

ஆமாம் தாங்கள் சொல்வதுபோல் நான் இதேபோன்றதொரு ஹாலிவுட் படம் பார்த்திருக்கிறேன். படம் பெயர் ஞாபகம் வரலை.

விமர்சனம் நன்று...

நையாண்டி நைனா said...

paarthu vidukiren thala.

வால்பையன் said...

SAW படத்தை உல்டா பண்ணியிருக்கானுங்க!

Ashok D said...

சில பல ஆங்கில படங்கள், saw நாலு பார்ட்டும் நியாபகம்.. வந்து போகிறது.

கார்ல்ஸ்பெர்க் said...

Saw VI'க்கு wait பண்ணிட்டு இருக்குற நேரத்துல இப்படி ஒரு படமா??

Unknown said...

SAW seriesல சுட்ட மாதிரி இருக்கே!! ஆனாலும் நம்ம ஊர்ல இந்த மாதிரி படம் எடுக்குறாங்கன்னா கண்டிப்பா பார்த்துட வேண்டியது தான்.

butterfly Surya said...

நன்றி..

Prabhu said...

கனடா நாட்டுப் படக் காப்பியாமே?அங்கயே சுமாரு.. இதக் காப்பி அடிச்ச கொடுமயான்னு ஒரு சைட்டுல போட்டிருந்தாங்க?

பாலா said...

Reservoir Dogs -ஐ விட்டுட்டீங்களே?! :) :) :)

முரளிகண்ணன் said...

ஒரு அட்டன்டெண்ட்ஸ் போட்டுக்குறேன்

ஷண்முகப்ரியன் said...

காபி அடிக்க அட்லீஸ்ட் இதை விட நல்ல படத்தைத் தேர்ந்தெடுதிருக்கலாம் என்று நினைக்கிறேன்,ஷங்கர்.

VISA said...

ACID BEAUTIES.
தமிழில ஏன் இன்னும் குத்து பாட்டுக்கு ஆடிட்டு இருக்காங்க

அறிவிலி said...

வித்தியாசமான கதையா இருக்கே...

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

//இந்த விமர்சனத்தை படித்ததும், ஹாலிவுட் சைக்கலாஜிகல் த்ரில்லரான “Unknown” மற்றும் “Saw” ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது..//

தவறாமல் வந்தது.

Sampath said...

அண்ணே இது Unknow'னோட அப்பட்டமான காப்பி ... போன வாரம் தான் ரெண்டு படமும் பாத்தேன் ...

Cable சங்கர் said...

@எவனோ ஒருவன்
ஓரு வாட்டி பாக்கலாம்

@சரவணகுமார்
நன்றி

@லோஷன்
ஓகே

@ரோமிபாய்
பாருங்க

Cable சங்கர் said...

@yoo
இருக்கவே இருக்கு டிவிடி..அது கூடவாஅ இல்லை

@ட்ரூத்
படம் பார்த்துட்டு சொல்லுங்க.. நம்ம வேலையே படம் பாக்குறதுதானே

@வினோத் கெளதம்
ஆமாம்

@.க.பாலாஜி
இருந்தாலும் இவர்கள் கொஞ்சம் ஹிந்திபடுத்தியிருக்கிறார்கள்

@நைனா
பாருங்க

@வால்பையன்
இல்ல ஸ்கிரிப்ட் கொஞ்சம் அப்படி இருக்கு ஆனா அன்நோன் அதிகம்

Cable சங்கர் said...

@அசோக்
இதெல்லாம் ரொமப் சில பேருக்கு தான் தெரியும் அதனால் பெரிய பிரச்சனையெல்லாம் கிடையாது

2கார்ல்ஸ்பெர்க்
சா மூணாவதுக்கு அப்புற்ம் தொங்கிருச்சு

@ராஜா
ஆமா அதுனாலதான் எனக்கு கூட பிடிச்சிது

@சூர்யா
நன்றி

@பப்பு
அப்படியா லிங்க் கொடுங்க

@ஹாலிவுட்பாலா
அதுல கொஞ்சம்தான் ஏன்னா ஏற்கனவே அந்த படத்தை அமிதாப், சஞ்செய்ய வச்சு சஞ்செய் குப்தா பெரிய ஹிட் படத்தை பானாவிஷன்ல சூட் பண்ணி கொடுத்திட்டாரு..

Cable சங்கர் said...

@முரளீகண்ணன்
போட்டாச்சு

@ஷண்முகப்பிரியன்
:(
@விசா

வர்ரும் வரும் நிச்சயமா வரும்

@ஆறிவிலி
ஆமா ஹிந்திக்கு

@ஸ்ரீ
வந்தாலும் பரவாயில்லை

@சம்பத்
இருக்கட்டுமே. யாருக்குமே நோன் இல்லை இல்லையா..?:)

Jana said...

இர்ஃபான் ஹானின் நடிப்பாற்றலை இரசிப்பவன் நான்..கண்டிப்பாக இந்தப்படம் பார்க்கவேண்டும்
நன்றி நண்பர் கேபிள் சங்கர் அவர்களே..

R.Gopi said...

//இந்த விமர்சனத்தை படித்ததும், ஹாலிவுட் சைக்கலாஜிகல் த்ரில்லரான “Unknown” மற்றும் “Saw” ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பேற்காது..//

கண்டிப்பா வருது "தல".....

அதுவும் சா 4 பாகங்கள்.... எல்லாமே இதே இஷ்டைலுதான்...

"ஆதவன்" ப்ரிவியூ பார்த்துட்டு விமர்சனம் நைட்டே வந்துடுமா??

தீபாவளி வாழ்த்துக்கள்... இங்க வந்து பார்த்தால், தீபாவளி ஸ்பெஷல் கிஃப்ட் இருக்கு... மறக்காமல் / மறுக்காமல் வந்து பெற்று செல்லவும்....

ந‌ண்ப‌ர்க‌ள் மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய‌ தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ள்... http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

அன்பேசிவம் said...

கேபிள் ஜீ, கரெக்டு. ‘SAW' வேதான்.

நாலு பாகத்திலும் வறுமையின் நிறம் அதிகமாக இருந்தாலும் (பரிசல் கவனிக்கவும்) புத்திசாலித்தனமான திரைக்கதை.ஒவ்வொரு பாகத்திற்கும் இடையே போடப்படும் முடிச்சு, சுவாரஸ்யம். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.