Thottal Thodarum

Oct 9, 2009

தாய்- மகன் - தந்தை ஒரு போராட்டம்

வழக்கமாக மகன் அல்லது மகளை தன் விவாகரத்து ஆன கணவனிடமிருந்து காப்பாற்ற நினைப்பது வழக்கம். ஆனால் இங்கே ஓரு கணவன் தன் மகனை அவனுடய மனநலம் குன்றிய மனைவியிடமிருந்து காப்பாற்ற கடந்த 435 நாட்களாக அமெரிக்கவிலிருந்தும், இந்தியாவிலிருந்தும்,சென்னையிலுருந்தும் போலீஸ், கோர்ட், அன்பு, மிரட்டல் என்று எல்லாவிதமான சாம, பேத,தண்ட களையெல்லாம் கையிலெடுத்துக் கொண்டு போராடுகிறார்.

அமெரிக்க சிட்டிசனான விஜயஸ்ரீ ஆரோரா என்பவருக்கும், பிறந்தவந்தான் அதித்யா, அவர்கள் இருவரும் விவாகரதானவுடன் அமெரிக்க கோர்ட் அதித்யா குழந்தையாய் இருப்பதால், தாயிடம் வளரவேண்டும் என்றும், வாரம் ஓரு முறை தந்தையிடம் விட வேண்டும் என்று கூறியது. அதன் பேரில் அவர்கள் இருவரும் நடந்து கொள்ள ஆரம்பிக்க, சிறிது நாட்களில் விஜயஸ்ரீ தன் கணவன் தன் மகனை தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்வதாய் பிரச்சனை ஏற்படுத்த, அதன் பிறகு அவரின் கணவர் கோர்டுக்கு போய் தன் முன்னாள் மனைவிதான் அப்படி செய்வதாக புகார் கூற, அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் புகார் கூறுகிறார். அந்த குற்றசாட்டுப்படி விஜயஸ்ரீயை மனநிலை மருத்துவத்துக்கு உட்படுத்த தானே பணம் கொடுத்து கோர்டு மூலமாய் சென்றிருக்கிறார். அவரின் மனநிலை சரியில்லை என்று கோர்டு மூலம் பரிசோதித்த மனநிலை மருத்துவர் சர்டிபிகேட் அளிக்க, சிறிது நாட்களில் விஜயஸ்ரீ தன் மகன் அதித்யாவுடன் அமெரிக்கவை விட்டே தப்பித்து விட்டார்

அவரின் மீது அமெரிக்க அரசாங்கம் குழந்தை கடத்தல் வழ்க்கில் சம்பந்தபட்டுள்ளதால் அவரை கைது செய்ய உத்தரவிட்டுறுக்கிறது. காணாமல் போன மகனையும், மனைவியையும், அமெரிக்கா முழுவதும் தேடிய கணவர் ரவி கடைசியில் தன் மனைவி தன் மகன் அதித்யாவை இந்தியாவிற்கு கடத்திவிட்டதாக கண்டுபிடித்து சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்திருக்கிறார். ஆனால் விஜயஸ்ரீ அங்கில்லை. அவர்களுக்கு அவரை பற்றி எந்த விஷயமும் தெரியாது என்று கூறியுள்ளார்கள்.

விஜயஸ்ரீ தன் மகன் அதித்யாவுடன் இந்தியா முழுவதும் டெல்லி, டெஹ்ராடூன் போன்ற இடங்களில் இருக்கும் மிகச் சிறிய மோட்டல்களீலும் சிறிய வீட்களிலும் வசித்தாகவும், அவரின் பேங்க அக்கவுண்டிலிருந்து பணம் நிறைய எடுத்து அதை கேஷாகவும், நகைகளாகவும் மாற்றி, ஓவ்வோரு ஊராய் அலைவ்தாகவும்,டாக்ஸி கேப்பில் அலைவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. அவரை ஓவ்வொரு இடத்திலும் மயிரிழையில் தவற விட்டுருக்கிறார்கள் போலீசூம், அவரது கணவர் ரவியும்.

மனைவி விஜயஸ்ரீ மீது அமெரிக்க கோர்ட், சுப்ரீம் கோர்ட் இந்தியா, ஹைகோர்ட் சென்னை, மற்றும் பல இடங்களில் குழந்தை கடத்தல் வழக்கும், அவரை கைது செய்ய உத்தரவும் உள்ள்து.

விஜயஸ்ரீயின் நடவடிக்கைகளை அவ்வப்போது ஓரு தொண்டு நிறுவன இணையதளத்தை தொடங்கி www.rescueaditya.org அதன் மூலம் ஓரு டெய்லி அப்டேட் செய்யபடுகிறது.இந்த பிரச்சனையின் முழு விளக்கதையும் அந்த இணையதளத்தின் மூலம் பார்ககலாம்

தன் மகனுக்காக,கணவனே இல்லாவிட்டாலும் போராடும் தாயை பார்திருகிறோம். ஆனால் மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் இவர் ஓரு வித்யாசமான தந்தையே.

இது ஓன் சைட் விளக்கம்தான். இருந்தாலும் ஓருவர் தனிமனிதாய் போராடுவதை பார்க்கும்போது...

என்ன தளத்தில் விளம்பரம் வருவ்து கொஞ்சம் உறுத்துகிறது.

anyway let pray for Aditya..www.rescueaditya.org
Post a Comment

35 comments:

மணிஜி said...

கேபிள்..புவனேஸ்வரி மேட்டரை எழுதுப்பா..

வரதராஜலு .பூ said...

நீங்கள் கூறியிருக்கும் விஷயம் பற்றி சில மாதங்களுக்கு முன் படித்திருக்கிறேன். இன்னுமுமா தேடுகிறார்கள்?

ஆனால் நீஙகள் சொல்வது போல இது ஒரு ஒருபக்க நியாயம்தான். மற்றொரு மக்கம் என்னவென்று தெரியவில்லை.

அகநாழிகை said...

// தண்டோரா ...... said...
கேபிள்..புவனேஸ்வரி மேட்டரை எழுதுப்பா..//

ரொம்ப முக்கியமான விஷயம்தான். கேபிள் எழுதுங்க.
பிரபல (பிராப்ள) பதிவர் கைது.
பதிவர்கள் கண்டனம். ஆர்ப்பாட்டம்.
அப்படின்னு பதிவு போட்டுடலாம்.

வரதராஜலு .பூ said...

//// தண்டோரா ...... said...
கேபிள்..புவனேஸ்வரி மேட்டரை எழுதுப்பா..//

ரொம்ப முக்கியமான விஷயம்தான். கேபிள் எழுதுங்க.
பிரபல (பிராப்ள) பதிவர் கைது.
பதிவர்கள் கண்டனம். ஆர்ப்பாட்டம்.
அப்படின்னு பதிவு போட்டுடலாம்.//
:)
:)
:)

இ.பி.கோ 498A said...

//மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் //

உணமை நிலை தெரியாமலும் பொறுப்பில்லாமலும் இதுபோல் பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ஆண்களையுமே இதுபோல் மட்டம் தட்டிப் பேசுவது ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

இன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.

Ashok D said...

என்னது பிரபல பதிவர் கைதா???????

iniyavan said...

படிக்கவே பாவமா இருக்கு கேபிள்.

Ashok D said...

தாயை விட தந்தைக்கு தான் பிள்ளைகளின் மீது பேரன்பு இருக்கும். என்ன பண்றது சில சமயம் ராட்சஸிகள் பொண்டாடிய அமைந்துவிடுவது சோகம்.

ஏழு வயசு குழந்தையை ஊர் ஊரா சுத்தவிடுவது அந்த குழந்தைக்கு மன உளச்சலை தரும். மேலும் அப்பனின் ஏக்கமும் சேர்ந்து தாக்கும் :(

Ashok D said...

//இன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.//

உண்மைதான் இபிகோ..
பத்திரிக்கைகளில் வ்ர்றது கொஞ்சம்தான், வெளிவராததுதன் அதிகம் :(

Suresh Ram said...

கேபிள்
பெண்களால் பாதிக்கப்படும் ஆண்கள் பற்றி அறிந்து
http://www.saveindianfamily.org/
http://www.498a.org/
http://tamil498a.blogspot.com/

உங்கள் கருதுகள்ளை பதிவிடுகளேன்

பின்னோக்கி said...

வித்தியாசமான பிரச்சினை தான். என் பதிவு

http://pinnokki.blogspot.com/2009/10/blog-post_03.html

ஆண்களுக்கு நேரும் பிரச்சினைகள் மெதுவாக அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. பத்திரிக்கைகளும் இந்த சமூகமும் அதை கவனிக்க தவறுகிறது. சில வருடங்களில் இது முக்கிய பிரச்சினையாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.

தராசு said...

இந்த பெண்ணுரிமை வாதிகளால் குடும்பம் என்ற அமைப்பு கெடுவது உறுதி.

அப்புறம், அடுத்த நிதர்சன கதைக்கு மேட்டர் கிடைச்சுட்டாப்புல இருக்குதே.

ஜெட்லி... said...

தாங்காதும்மா தாங்காது
சம்சாரம் தாங்காது............ஆண்கள்
பாவப்பட்ட ஜென்மங்கள்

Raju said...

//என்ன தளத்தில் விளம்பரம் வருவ்து கொஞ்சம் உறுத்துகிறது.//

ஆதித்யாவை கண்டுப்பிடிக்க எங்கிருந்து வருகிறது பணம்? தவறில்லையே?

தன சொந்த விருப்பு வெறுப்பு விஷயத்தை வெளியில் எழுதும் ப்ளாகர்கள், அதனை வைத்து, பார்க்க வருகிறவர்களிடம் விளம்பரம் செய்து பைசா பண்ணுவது ( உங்கள் தளத்திலும் தான் ) கூட தான் உறுத்துகிறது!

நான் ப்ளாக் ஆரம்பித்து பத்து மாதம் ஆகியும் - சில்லறை சேரவில்லை! :-(

அமுதா கிருஷ்ணா said...

ஹிந்துவில் ரொம்ப நாட்கள் தாய்,மகன் போட்டோவுடன் விளம்பரம் வந்தது. அந்த சைட்டில் அந்த தந்தை இங்கிலிஷ்,தமிழ்,தெலுங்கு என பாட்டுகள் பாடி இன்னும் தேடிக் கொண்டு இருக்கிறார். இன்னுமா போலீசால் தேட முடியவில்லை. பாவம் அந்த குழந்தை.மறைந்து வாழ வேண்டும் என்று அந்த குழந்தையினை தாய் என்ன பாடு செய்கிறாளோ. இவர் கொஞ்ச நாள் தேடுவதை நிறுத்தினால் அவள் மாட்டுவார் என தோன்றுகிறது.

க.பாலாசி said...

//மனைவியை விவாகரத்தானவுடன் தன் குடும்பத்தை பற்றி கவலைப்படாமல் வேறு ஓரு குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் கணவர்கள் மத்தியில் இவர் ஓரு வித்யாசமான தந்தையே.//

உண்மைதான்....கவலை தரும் செய்தி....

Romeoboy said...

இவருக்கு மனநலம் பாதிக்க படுவதற்குள் குழந்தை கிடைத்தால் சரி.

பாவம் அந்த குழந்தைதான்

Ashok D said...

@ suresh ram
நானும் அதிர்ச்சி அடைந்தேன்

Official Statistics (Source: NCRB)
Males Females
Suicide of MARRIED
persons (2005-2007) 1,65,528 88,121
SUICIDE Rate (Married) 65.25% 34.75%
One SUICIDE in Every 9.52 Mins 18 Mins
Number of MURDERS 26467 7952
One Murder in Every 19Mins 66Mins
No of 498a cases in 2006-2007 by N/A 1,39,058


Wonder, who's in more danger & who needs protection here?

creativemani said...

என்ன கொடுமை சார் இது?? அந்த அபலைத் தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!

மங்களூர் சிவா said...

அந்த அபலைத் தந்தைக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
:((

Prabhu said...

இது பேப்பர்ல பல மாசம் முன்ன படிச்சது. இன்னுமா கண்டு பிடிக்கல?

பாலா said...

சங்கர் உங்க போன் “this call could not be completed"-ன்னே.. ரொம்ப நேரமா வருது!

ஊர்ல இருக்கீங்களா?

பாலா said...

ஒரு மிஸ்ட் கால் கொடுங்க.

Beski said...

// தண்டோரா ...... said...
கேபிள்..புவனேஸ்வரி மேட்டரை எழுதுப்பா..//

ஏன் இன்னும் எழுதல? களப்பணி நடக்குதா?

Cable சங்கர் said...

கேபிள்..புவனேஸ்வரி மேட்டரை எழுதுப்பா..
//

அதை பத்தி தான் தோண்டி துருவி விசாரணை பண்ணிட்டிருக்கேன்.:)

Cable சங்கர் said...

@வரதராஜுலு
கண்டிப்பாய் அந்த் அம்மாவின் சைடை கேட்டே ஆகவேண்டும்..
இன்னும் கிடைக்கவில்லைன் என்றுதான் சொல்கிறார்கள்.

Cable சங்கர் said...

@அகநாழிகை.

என்னா ஒரு நல்லெண்ணம்.

@வரதராஜுலு

நீங்களுமா..:(

Cable சங்கர் said...

/உணமை நிலை தெரியாமலும் பொறுப்பில்லாமலும் இதுபோல் பொத்தாம் பொதுவாக ஒட்டுமொத்த ஆண்களையுமே இதுபோல் மட்டம் தட்டிப் பேசுவது ஒரு ஃபேஷனாகப் போய்விட்டது.

இன்றைக்கு 99% ஆண்கள் குடும்பத்திற்காகவும் தங்கள் குழந்தைகளுக்காகவும் சொந்த நலன்களைத் தியாகம் செய்து கொண்டு பொதி சுமக்கிறார்கள். பெண்களில் பலர்தான் தங்கள் சதை சுகத்திற்காக கள்ளக் காதலில் ஈடுபட்டுக்கொண்டு அதற்கு இடைஞ்சலாக இருந்தால் பெற்ற குழந்தைகளையே போட்டு தள்ளவும் தயங்காதவர்களாக இருக்கிறார்கள்.//

உங்களுடய முதல் வருகைக்கு மிக்க நன்றி தலைவரே.. நான் பொத்தாம் பொதுவாய் பேசவில்லை. இந்த கட்டுரையை முடிக்கையில் இன்னொரு பக்க விஷயத்தை கேட்டால்தான் தெரியும் என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

நீங்க சொல்லி இருப்பது போல் நிறைய பெண்களை, பெண்களை பற்றிய விச்யங்களை நானும் பார்த்திருக்கிறேன். நான் எங்கேயும் எப்போதும் முடிந்த வரை நடுநிலையுடன் தான் சொல்லி வந்திருக்கிறேன். இனியும் அதையேத்தான் சொல்வேன்.

Cable சங்கர் said...

@அசோக்

உனக்குமா அந்த ஆசை?

@உலகநாதன்

இப்படியும் ஒரு ப்ரச்சனை தலைவரே.. என்ன பண்ண.. சென்னை வந்தா நிச்சயம் மீட் பண்ணுவோம்

Cable சங்கர் said...

@அசோக்

நீங்கள் சொல்வதும் ஒர் பாயிண்ட் தான் அசோக்

@அசோக்

இது மாதிரி பெண்களை உயர்த்தி பேசி பில்டப் கொடுத்ததே நம் இனம்தான். இப்போ அவளுங்க ரிவர்ஸ் ஆயிட்டாங்க... :(

Cable சங்கர் said...

@சுரேஷ் ராம்

நிச்சயம் பார்க்கிறேன் சுரேஷ்.

@பின்னோக்கி
ஆமாம் இன்றைக்கு ஆண்களூக்கு இருக்கும் பிரச்சனைகளீல் பெண்களால் ஏற்படும் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சம்மாய் முதலிடத்துக்கு வ்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

Cable சங்கர் said...

@தராசு..

நீங்க சொல்லிட்டீங்க அப்புறம்..?

@ஜெட்லி
நீ பேச வேண்டிய விஷ்யம் இல்லியே இது..? :)

Cable சங்கர் said...

/ஆதித்யாவை கண்டுப்பிடிக்க எங்கிருந்து வருகிறது பணம்? தவறில்லையே?//

தலைவரே. அவர்கள் கூற்று படி அமெரிக்காவில் பெரிய வச்தி படைத்த குடும்பம்.. அதனால் உறுத்துகிறது என்றிருக்கிறேன்.

//தன சொந்த விருப்பு வெறுப்பு விஷயத்தை வெளியில் எழுதும் ப்ளாகர்கள், அதனை வைத்து, பார்க்க வருகிறவர்களிடம் விளம்பரம் செய்து பைசா பண்ணுவது ( உங்கள் தளத்திலும் தான் ) கூட தான் உறுத்துகிறது!//

என்னை பொருத்த வரை.. எனக்கு தவறாய் தோன்ற வில்லை.. நான் என் சொந்த விருப்பு வெறுப்புகளை மட்டுமே எழுதுவதற்கு இதை உபயோக படுத்தவில்லை. அப்படி பார்த்தால் ஒவ்வொரு பத்திரிக்கையும், எழுத்தாளனும் அவனின் சொந்த வெறுப்பு விறுப்புகளை தான் கதையாக வோ, கட்டுரையாகவே படைக்கிறான். நான் விளம்பரம் போட்டு காசு பண்ணுவது.. பற்றி போட்டிருப்பது உங்கள் பொறாமையை காட்டுகிறது..

//நான் ப்ளாக் ஆரம்பித்து பத்து மாதம் ஆகியும் - சில்லறை சேரவில்லை! :-(//

அப்படியென்றால் நீங்கள் இன்னும் உழைக்க வேண்டுமெ என்று தோன்றுகிறது..
//

Cable சங்கர் said...

@அமுதா கிருஷ்ணா
அதன் பிண்ணனியில் ஒரு பெரிய கதை இரண்டு வர்ஷனில் இருக்கிறது.. தந்தையின் வெப் சைட்டில் ஒரு வர்ஷனும், எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்துக்கு நெருங்கயவர்கள் சொல்வது இன்னொரு வர்ஷனாகவும் இருக்கிறது.. மேடம்.

Cable சங்கர் said...

@பாலாஜி

:(

@ரோமிபாய்

நிச்சயம்பாவ்ம்தான் குழந்தை..

@அசோக்

சரி.. சரி.. டென்ஷன் ஆகாதீங்க..

@அன்புடன் மணிகண்டன்

வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி

@மங்களூர் சிவா

:(

@பப்பு

ஆமாம்

@ஹாலிவுட் பாலா
ஊர்லதான் இருக்கேன்

@எவனோ ஒருவன்.

என்னை புரிஞ்சிட்டவன் நீதான்..”களப்பணி’ய சொன்னேன்