மைக்கேல் ஜாக்ஸன் இறப்பதற்கு முன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த This is it என்கிற கான்செர்ட்டுக்கான முன் நடந்த ஏற்பாடுகள், ரிகர்சல்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு டாகு- மியூசிகல படமாய் வெளிவந்திருக்கிறது.
வழக்கமாய் பேக் ஸ்டேஜ் விஷயங்களை பார்ப்பதற்கு எல்லோருக்குமே பிடிக்கும். அதிலும் பிரபலமான ஆட்களின் பேக் ஸ்டேஜ் விஷயஙக்ள் என்றால் நம்முடைய ஆர்வம் இன்னும் அதிகமாய் எகிறும். அப்படியிருக்க, எம்.ஜேவின் பேக் ஸ்டேஜ் ரிகர்சல்கள் என்றால் கேட்க வேண்டுமா..? அதிலும் அவருடய நடக்காத சோல்ட் அவுட் கான்செர்டுக்கான ரிகர்சல் என்றால் ..? உலகம் முழுக்க ரத்தத்தில் அட்ரிலின் எகிற ரசிகர்கள் கோடிக்கணக்கான பேர். அதில் நானும் ஒருவன்.
முதல் காட்சியில் அவருடன் பணியாற்றும் சிலருடய பேட்டியுடன் படம் ஆரம்பிக்கிறது. இளைஞர்கள், மிகவும் இளைஞர்கள், எம்.ஜேவுடன் பணியாற்றுவதே பெரிய பாக்கியமாய் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஓவராய் சிரித்து, பேச முடியாமல் கண்களில் கண்ணீருடன் ததும்ப, This is it என்று டைட்டில் ஆரம்பிக்க உலகின் ஈடு இணையில்லா எண்டர்டெயினரின் படம் ஆரம்பிக்கிறது. தியேட்டர் எங்கும் உற்சாக கூச்சல்கள் தியேட்டர் கூரைகளில் அதிர, எம்.ஜேவின் கான்செர்ட்டுக்கான பாடல்களின் ரிகர்சல்கள் வரிசையாய் அணிவகுக்க, எம்ஜே
எம்.ஜேவின் பாடல்களை பற்றி இதில் நான் சொல்லப்போவதில்லை. அது உலகம் அறிந்தது. ஆனால் எம்.ஜே. என்கிற ஒரு கலைஞனின் ஈடுபாடு, திறமை, முயற்சி, இன்வால்மெண்ட், தான் என்னை பிரம்மிக்க வைக்கிறது.
ஒரு காட்சியில் பியானோ நோட்களில் உள்ள சிறு நுணுக்கத்தையும், சொல்லி அதை வெளீ கொணரும் காட்சி, அதே போல் லீட் கிடாரிஸ்ட் பெண் பாடல் முடியும் போது தனி ஆவர்தனம் போல தனியே வாசித்து முடிக்கும் இடத்தில் ஒரு இடத்தில் நிறுத்த, எம்.ஜே. அதை இன்னும் ப்ரோலாங் செய்யச் சொல்லி “இங்கே உனக்கான பெயர் வாங்கும் இடம்” இன்னும், இன்னும் என்று சொல்லி சக் கலைஞரை ஊக்குவிக்கும் காட்சி, ஒரு இடத்தில் இசையும் அவரது நடன அசைவும் ஒருங்கே ஆரம்பிக்கும் இடத்தில் பிசிறடிக்க, மீண்டும் ஒரு முறை ரிகர்சல் என்று சொல்லிவிட்டு, இதுற்காகத்தான் இவர்கள் காத்து கொண்டிருக்கிறார்கள் என்று ஆடியன்ஸ் இருக்கும் சைடை காட்டி சொல்லும் காட்சியை பார்க்கும் போதும், உடலில் ஆயிரம் பிரச்சனைகளை வைத்து கொண்டு பாடல்களை பாடி ஆடி, அங்கேயிருக்கும் அனைவருக்குமான் எனர்ஜி லெவலை தன்னுடய பெர்மான்ஸின் மூலமாய் ஏற்றி கொண்டிருக்கும் எம்.ஜேவை ஏன் உலகின் சிறந்த கலைஞனாய் மக்கள் கொண்டாடினார்கள் என்பது புரியும்.
பிண்ணணியில் உள்ள டெக்னாலஜியில் ஆரம்பித்து தன்னுடய கம்பேக் கான்செர்டாக வர அவரின் உழைப்பும், அதற்கு உறுதுணையாய் இருந்த டெக்னீஷியன்களின் உழைப்பு, அவர்களின் பேட்டி என்று அருமையாய் எடிட் செய்து, தேவையில்லாமல் அவரின் கடைசி காலஙக்ளை காட்டி பச்சாதாபத்தை ஏற்படுத்தாமல், எம்.ஜேவின் இசை எப்படி இசையுள்ள வரை வாழுமோ, அது போல நம்மிடையே இன்றும் இசையால் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மூழு நீள மீயூசிகல் டாகுமெண்டரியாய் கொடுத்திருக்கும் இயக்குனர் கென்னி ஒரட்டேகா வுக்கு இசை ரசிகர்கள் தலையில் வைத்து கொண்டாடத்தான் போகிறார்கள்.
இசையெனும் உற்சாக போதையை, அது தரும் எக்ஸ்டஸியை உணர துடிப்பவர்களூக்கு This Is It
டிஸ்கி: இன்னும் எழுத வேண்டும் போல் தான் இருக்கிறது, படம் பார்க்கும் போது கிடைக்கும் உணர்வை படிப்பவர்கள் மிஸ் செய்ய வேண்டாம் என்று தான் எழுதவில்லை. Long Live MJ
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
இப்பதான் பார்த்துட்டு வந்தோம். உணர்ச்சிவசப் பட்ட நிலையில்.. உங்களை மாதிரி தெளிவா எழுத வரலை.
எனக்கும்.. இன்னும் என்னென்னவோ எழுதிகிட்டே இருக்கனும்னுதான் தோணுச்சி!
எல்லோருக்குமே.. அந்த ஃபீலிங்தான் இருந்திருக்கும்னு நினைக்கிறேன்.
-----
முதன்முதலா... எழுத்தின்.. கடைசி வரி.. வர்ற வரைக்கும்.. யாரும்.. எழுதிருக்காம.. இருந்த ஒரே படம் இதுவாதான் இருக்கும்.
Long Live MJ!!!!!!!!!!!!
தலையை நினைச்சாலே புல்லரிக்கும் எனக்கு.. Beat it......
THANK YOU SHANKAR.
உச்சஸ்தாயில் கிட்டாரும் டிரமஸ்களும் அதுரும் ஓசையை இப்பதிவு படிக்கும்போது உணர்ந்தேன்.
(gf கிடைச்சதனால இருக்குமோ?)
MJ எப்போ நினைச்சாலும் புல்லரிக்க வைக்கிற மனுசன், ம்ச் :-(
தம்பி..ஊர்லேர்ந்து வந்திட்டியா..? அப்ப போய் ஒரு வாட்டி படம் பார்த்துட்டு வந்திரு.
@ஜெரி ஈசானந்தா
மிஸ் பண்ணாதீர்கள்..
@குறை ஒன்றும் இல்லை
நன்றி
நன்றி ஜனா. முடிந்தால் படத்தை தியேட்டரில் பாருங்கள் அங்கு உங்களுக்கு ஏற்படும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது..
@பித்தன்
நன்றி
நிஜமாகவே படம் ஆரம்பித்த போது உணர்ச்சி வசப்படக்கூடாது என்றிருந்த என்னை ஒரு வித மான எக்ஸ்டஸியில் கண் கலஙக வைத்து விட்டார். எம்.ஜே.
ஒரு காட்சியில் கடைசியில் ஒரு புல்டோசர் மேடைக்கு வரும் ரிகர்சலில் அவர் டைரக்டரிடம் சொல்வார். இன்னும் என் கிட்டே வந்து அப்படியே பிளந்தபடி வந்திரங்கட்டும் என்று.. கலங்கிவிட்டேன். எவ்வளவு டெடிகேஷன்..
நான் தியேட்டர்காரன் வெளீயே துரத்தும் வரை இருந்தேன்.
நன்றி..
@அகல்விளக்கு
நன்றி
@கார்க்கி
நிஜமாகவே உனக்கு போன் செய்து சொல்லணுமின்னு நினைத்து கொண்டிருந்தேன்.
@ஷண்முகப்பிரியன்
நன்றி.. முடிந்தால் பாருங்கள்
@அசோக்
இரண்டு வாரத்தில் முடிந்தால் இன்னொரு முறை நான் பார்கக்லாம் என்ரிருக்கிறேன். என்னுடன் வாருங்க..
@கார்த்திக்
மிஸ் பண்ணாதிங்க
மதுரையிலேயே வந்திருக்கிறது..அநேகமாய் கோவையில் ரிலீஸ் ஆகியிருக்கும் தியேட்டரில் பாருங்க.. மிஸ் பண்ணாதீங்க..
படம் பார்த்து விட்டு உங்கள் உணர்வை சொல்லுங்க
That's it :)
எங்க பார்க்குறது நாம.? டிவிடிதானா.?