பதிவெழுதி பின்னூட்டம் வாங்குறதுன்னு எப்படின்னு யோசிச்சி, யோசிச்சி நிறைய பேர் மண்டை காஞ்சி போய் அலையுறது தான் மிச்சம்.. ஏதோ நமக்கு தெரிஞ்ச விஷத்தை உங்களுக்கு சொல்லலாமேன்னு நான் ஓரு ஆராய்ச்சி போல செய்ய ஆரம்பிச்சேன் அப்பத்தான் ஓரு விஷயத்தை கண்டுபிடிச்சேன். தினமும் பதிவெழுதறவங்க, பின்னுட்டமிடறவங்க எல்லோரும் சனி, ஞாயிறு கிழமைகளில் ஆன்லைனில் வருவதில்லை.
ஏண்டான்னு யோசிச்ச போது பெரும்பாலும் பல பதிவர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்தே பதிவெழுதுகிறார்கள். கம்ப்யூட்டர் சம்மந்தபட்ட தொழிலில் இருப்பவர்கள் அத்னூடயே இருப்பதால் வேலைக்கு நடுவே (செஞ்சாத்தானே.. என்று கேட்கும் பதிவ்ர்கள் நினைப்பது எனக்கும் கேட்கிறது.) பின்னூட்டமிடுவது, பதிவு எழுதுவது என்று பிசியாய் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தேன்.எப்போதாவது பதிவெழுதுபவர்க்ள் சொந்தமாய் கணினியும், இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்ப்வர்கள் என்றும் தெரிகிற்து.
பதிவெழுதியே பெரிய பதிவர்கள் ஆனவர்களும் இருக்கிறார்கள், பின்னூட்டமிட்டே பெரிய பின்னூட்டமானவர்களும் இருக்கிறாரிகள்.. சமிபகாலமாய் சில பெரும் பெயர் பெற்ற பதிவர்கள் அவர்களுக்கு வந்த பின்னூட்டத்திற்கு பதிலப்பதே இல்லை. மற்ற பதிவர்களின் பதிவுகளுக்கு பின்னூட்டமிடுவதில்லை.
சரி அவங்க நாமளாவது பின்னூட்டமிடுவோம்னு அவங்க பதிவ படிச்சிட்டு ஏதோ நாம அப்ரண்டீஸாக இருப்பதினால்.. சூப்பர்.. நல்ல பதிவுன்னு போட்டா.. டெம்ப்ளேட் பின்னூட்டம்னு பதிவெழுதி நம்ம மானத்தை வாங்குறாங்க..
பதிவுகளில் பொதுவாக அதிகம் படிக்க படுவது சினிமா சம்மந்தபட்ட பதிவுகள் என்பதும் தெரிகிறது.பல பதிவர்கள் விமர்சனம் எழுதுவதற்காகவே முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிட்டு, லேப்டாப்பில் இண்டர்வெலிலேயே விமர்சனமெழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். சமீப காலமாய் ஏதோ கேபிள்,வயர் என்ற பெயரில் கிறுக்கி வரும் அவரின் விமர்சனங்களுக்கு வாசகர்களிடம் பெரிய வரவேற்ப்பை வைத்து ஹிட்ஸ் வர ஆரம்பித்திருப்பதே.. சாட்சி.
செக்ஸ் சம்மந்தமாய் எதாவது பதிவிட்டாலும் வெகுவாக மக்களிடம் போய் சேருகிறது.. ஆனால் பார்த்துவிட்டு பின்னூட்டம் தான் இடமாட்டார்கள். கிட்டத்தட்ட பிட் படம் பார்க்க போய்விட்டு உள்ளுக்குள் கிளுகிளுப்பதை போல், படித்துவிட்டு போய்விடுகிறார்கள்.. பின்னூட்டமிட்டால் வந்து படிச்சது தெரிஞ்சிருமோ..?
சரி எதையாவது எழுதி தொலைத்தோம்னு வச்சிக்க்கங்க.. அதுக்கு தலைப்பை பிடிக்கறதுக்குள்ளே அவனவன் படற அவஸ்தை இருக்கே.. ஸ்...அப்பா.. நினைச்சாலே கண்ணைகட்டும்.. பரங்கிமலை பத்தி எழுதணும்னா “பரங்கிமலை போல நிற்கும் ஜோதின்னு” தலைப்பை போட்டாதான் உள்ளேயே வராங்க..

அப்புறம் ஒரு முக்கிய விஷயம். புதுசு புதுசா வர்ற எல்லா திரட்டிகள்ளேயும் இணைச்சுட்டு, சகட்டு மேனிக்கு பதிவை விட பெருசா பக்கம் புல்லா ஓட்டுப் பெட்டியை மட்டுமே போட்டிருக்காங்க. அது அத்தனைக்கும் நீங்க ஒரு அக்கவுண்டை ஓப்பன் பண்ணி சிரத்தையா ஓட்டுப் போட்டா.. உங்களுக்கு வந்து ஓட்டு போடுவாங்க.
இப்படி கஷ்டப்பட்டு , வேதனைப்பட்டு பதிவெழுதறவங்களை பத்தி நான் என்னனு சொல்ல.. அதெல்லாம் ஓரு தவம்ன்னு தெரிய வருது.. அதனால நான் சொல்ல வரது என்ன்னனா..? நீங்க பாட்டுக்கு எழுதுங்க.. நல்லாயிருந்தா கண்டிப்பா பின்னூட்டம் வரும்னு ஐன்ஸ்டைன் ரேஞ்சுக்கு, சிந்தனையை சிதறவிட்ட்டா ஒண்ணும் பேராது. நிதம் குறைஞ்சது 30 பதிவுகள் படிச்சி, டெம்ப்ளேட் பின்னூட்டமாவது போட்டாத்தான் ஒரு பத்து பர்சண்ட் திரும்ப நமக்கு ஓட்டும் பின்னூட்டமும் கிடைக்கும். ஆமா ஞாபகம் வச்சிக்கங்க.
கொஞ்சம் பிரபலமவனும்னா ஒண்ணும் பெரிய விஷயமில்லை.. ஆணாதிக்கம், பதிவரசியல், போபால், என்று இந்திய பிரதமருக்கு கூட விளங்காத ஒரு சில விஷயங்களையெல்லாம் தினம் ஒரு கட்டுரை எழுதினா.. நாமளும் பிரபல பதிவராவது உறுதி. என்ன சீ..தூ.னுஎல்லாம் பதிவுல திட்டு வாஙக் வேண்டியிருக்கும்
அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி பாத்தப்போ.. தான் புரிஞ்சுது தினம் எதையாவது எழுதறது எவ்வளவு கஷ்டம்னு.. எதோ என்னோட இன்னைய கடமை முடிஞ்சது. ஓரு மொக்கை பதிவை ரி எடிட் பண்ணி பப்ளிஷ் பண்ணிட்டேன். எவ்வளவு கஷ்டம்டா சாமி...படிக்கிறவங்க எல்லோரும் தயவு செஞ்சு பின்னூட்டம் போட்டுறுங்க.. இல்லேன்னா தலைப்ப வச்சு உள்ளே வந்தவங்க நாக்க பிடிங்கிக்கிற மாதிரி பேசுவாங்க..
Comments
Officelaiyum தூக்கமா?
ஏன் அண்ணே,கேபிள்ஜி இவ்வளவு அறிவுரை சொல்றதுக்கு பதிலா ஒரு புனைவு எழுதினா கூட்டம் அப்படியே அம்மாது?!
//நேத்திக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்னா.. //
Officelaiyum தூக்கமா?
---
என்ன பண்ண சொல்றீங்க... ஆபிஸ்லதான் தூக்கம் வருது :)
என்னுடைய நெருங்கிய நபரும் யூத் பதிவருமாகிய அவரை நீங்கள் இப்படி எழுதி இருப்பதை கண்டித்து உடனடியாக கொய்யா சாப்பிடும் போராட்டத்தை ஆரம்பிக்கிறேன்.
நன்றி தலைவரே!
http://tamilpp.blogspot.com/2010/09/blog-post_16.html#
இப்ப என் பதிவுக்கு எல்லாம் பின்னூட்டம் போடுவீங்க தானே?
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_16.html
ஞே...
ஆமாம்பாபாபாபா.......ஆமா ......
Adress pls sir
அண்ணே ,
அது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு...,
அவ்வ்வ்வ்வ்வ் ஆவ்வ்வ்வ்வ்வ்
(சச்சின் படத்து காதல்....காதல்...காதல்....மாதிரி படிங்க)
நல்லா இருக்குய்யா ஐடியா!
கேபிள் இதுதான் அப்பு எங்க இருக்குன்னு தேடி போய் உட்காருவது.....
அண்ணே ,
அது நீ தான் அண்ணே ...,நான் ப்ளாக் ஆரம்பிச்சு எவ்ளோ நாள் ஆச்சு ..,ஒரு தரம் வந்து பார்த்துட்டு நல்லயில்லாடா இன்னும் நீ நிறைய கத்துக்கணும் சொன்னியா அண்ணே ...,அப்துல்லா அண்ணாச்சி எல்லாம் வந்து எப்படி பிளாக்கர் use பண்றதுன்னு எப்படின்னு பின்னூட்டம் போட்டாரு..., ///
நரி தம்பி.. சபையில இப்படியெல்லாம் உண்மைய போட்டு உடைக்ககூடாது சொல்லிபுட்டேன்...
அப்புறம்.. அவ்வளவுதாங்க.. என்னத்தை எழுதறதுன்னு யோசிச்சி, யோசிச்சி//
அதான் எல்லாத்தையும் சொல்லீட்டீங்களே...எவ்வளவு நாளானதுங்க இதையெல்லாம் கண்டுபிடிக்க....ஹ்ஹஹஹ்ஹா
Present sir..
அது குடும்பத்துக்கு உரிய நாள்னு ஒதுக்கி வச்சுருக்கு.
அன்னிக்கு மேட்டர் தேத்தினால்தான் வாரநாட்களில் எதாவது எழுதமுடியும் என்பது (பரம) ரகசியம்:-)))))
இது எனக்கு "குறுமுனி" அப்டிங்கற மொகமூடி ப்ளாகன் எழுதியது . இங்கே பொருத்தமாய் இருக்கும் என்று தோன்றுவதால்.... :))
நாங்களும் டெம்ப்ளேட் பின்னூட்டம் போடுவம்ல...
இதையும் டெம்ப்ளேட் பின்னூட்டம் என்றால் நா ஒண்ணும் பண்ண முடியாது.
2nd line in first paragraph :-)
Anna unga ella pathivukkum pinutam pottu prebalamanavanga palaper...
2nd line in first paragraph :-)
Anna unga ella pathivukkum pinutam pottu prebalamanavanga palaper...
அடுத்த புத்தகமா தலை! வெளியீடு எப்ப?
தமிழ் தவறில்லாமல் எப்படி எழுதுவது என்பதையும் உங்களிடம்தான் கற்க வேண்டும் கேபிள்.
:D
ஹி.ஹீ.ஹி....
endrum anbudan,
N.Parthiban
www.parthichezhian.com
wonderfull lines.sema comedy.(ennaiththaan nakkal adikkariingalo,irundhaalum paravaayillai.
மிக ரசித்தேன்.
ரொம்ப பயனுள்ளதா இருக்கு.
சரி சரி சீக்கிரமா என்னொட வலைப்பதிவுல பின்னூட்டமிடுங்க.