மும்பையின் கல்லியில் சின்ன சின்ன சில்லுண்டி வேலைகள் செய்து அலையும் சந்து கொஞ்சம் கொஞ்சமாய் மாலிக் பாயிடம் சேர்ந்து அவனது வலது கையாய் மாறி மிகப்பெரிய உயரத்துக்கு போகும் நேரத்தில் ஒரு சின்ன தவறான புரிதலால் இருவரும் எதிரியாகிறார்கள். மும்பையே அல்லோலகல்லோல படுகிறது. ஒரு கட்டத்தில் சந்து போலிஸிடம் சரணடைய, மாலிக் பாயும் கொல்லப்படுகிறான். அண்டர் வேர்ல்ட் கேங்குகளின் தாதாக்களை பற்றிய கதை. நிறைய தெரிந்த கேங்ஸ்டர்கள் பற்றிய விஷயஙக்ள் எல்லாம் புகுத்தி சும்மா தட்டி விட்ட குதிரை போல பரபரக்கும் திரைக்கதையில் அட்டகாசமான கம்பெனி.
கதையாய் சொன்னால் ஏற்கனவே பல படங்களில் பார்த்த கதையாய் தெரிந்தாலும் மனுஷன் ஸ்கிரீன் ப்ளேயில் பின்னி பெடலெடுத்திருப்பார். அதில் படத்தில் வரும் டயலாக்குகள்.. மிக ஷார்ப். முக்கியமாய் ஒரு இடத்தில் மோகன் லால், சந்துவிடம் “எதுக்காக இந்த தொழில்? பணத்துக்காகவா? அப்படி பணத்துக்காகன்னா.. நீ செலவு செய்யறதுக்குள்ளே நீ செத்துருவே..?” “நம் வியாபாரத்தில் ஒரு வாட்டி தப்பு பண்ணிட்டான்னு மன்னிக்கிறது பெரிய தப்பு” அதே போல் போட்டியாளரை தவறுசெய்யும் வரை காத்திருந்து தனியா அவனை கொலை செய்ய முடிவு செய்து அவனது காரில் நுழைய சம்பந்தப்பட்டவன் ‘என்னை வேணுமின்னா கொன்னுடு.. என் தம்பியை விட்டுரு.. குடும்பத்தை பாக்குறதுக்கு ஒருத்தனாவது வேணும் என்று கெஞ்ச சரி என்று இதயத்தின் நேர் பின்பக்கம் சத்தமில்லாமல் சுட்டுவிட்டு, தம்பி கதறி அழும் போது அவனையும் கொல்லும் போது சந்து ஏன் கொன்றீர்கள் என்று கேட்பான். மாலிக் “அவன் சாகும் போது சந்தோஷமா செத்திருப்பான். தம்பியை கொல்ல மாட்டோம்னுதான் நினைச்சிட்டு செத்திருப்பான். ஆனா தம்பி உயிரோட இருந்தா பழிவாங்க காத்திருப்பான். எப்பவுமே மிச்சம் விட்டு வைக்க கூடாது.” இப்படி படம் பூராவும் நச் நச் வசனங்கள்.
சின்ன சின்ன கேரக்டர்கள் ஆர்ஜிவியின் படங்களில் ஆக்கிரமித்து கொள்ளும் அளவுக்கு டெம்ப்தாக இருக்கும். மாலிக்கின் கன்சல்டண்ட் பண்டிட்ஜி, அவனது இன்னொரு அல்லக்கை, டிரைவர் கேரக்டர், மனைவி சரோஜா, சந்துவின் அம்மா சீமா பிச்வாஸ், அவனது சர்தார்ஜி நண்பன், அந்தராமல்லி, என்று படம் நெடுக கேரக்டர்கள் கேரக்டர்கள் கேரக்டர்கள்.
எனக்கு இப்படத்தை பார்பதற்கு முன் அஜய் தேவ்கனை அவ்வளவாக பிடிககாது இதற்கு பிறகு தீவிரமாக ரசிக்க ஆரம்பித்துவிட்டேன். அப்படி ஒரு பெர்மாமென்ஸ். சந்துவாக வரும் விவேக் ஓப்பராயின் நடிப்பும் கச்சிதமாய் இருக்கும். படம் முழுவதும் மனிஷாவின் பாடிலேங்குவேஜ் அட்டகாசமாய் இருக்கும். நிறைய டபுள் வைட்டில் ஷாட்டுகள் வைக்கப்பட்டிருக்கும். மிக முக்கியமான காட்சிகளில் கூட சிங்கிள் ப்ரேமில் நம்மை அறியாமல் படத்தினுள் ஊடுருவ விட்டிருப்பார் இயக்குனரும், நடிகர்களும், ஒளிப்பதிவாளரும். இப்படத்தில் வரும் கல்லாஸ் பாடல் ஒரு காலத்தில் ஹிட் லிஸ்ட்டில் இருந்த பாடல். இஷா கோபிகர் ஈஷிக்கொள்ளும் அழகோடு இழைந்து இழைந்து நடந்து வருவதை பார்ப்பதே ஒரு அழகுதான்.
படம் முழுவதும் எந்த வித மான முஸ்தீப்பும் இல்லாமல் டப்பு டுப்பென சுட்டு கொல்வது அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருக்கும். மோகன் லால் ரொம்பவும் அலட்டிக் கொள்ளாமல் நடித்திருப்பார். கொஞ்சம் கொஞ்சமாய் பேசிப் பேசியே சந்துவை சரியான் நிலைக்கு கொண்டு வரும் போது மாலிக் பாயிடம் பேசவேண்டும் என்று சந்து சொல்ல போன் போட்டு தரும் மோகன்லால் அவர் பேசி முடித்ததும், மாலிக்கிடம் கன்வின்சிங்காக இந்த தொழிலை விட்டு விடு என்று சொல்ல அதற்கு மாலிக் ‘கமிஷனர் சார்.. நான் சந்து இல்லை.. மாலிக் பாய்.. வேண்டுமென்றால் உங்களுக்கு ஒரு சான்ஸ் தருகிறேன். என் பக்கம் வருவதற்கு என்று சொல்ல ஒரு அழுத்தமான புன்னைகையுடம் பதில் சொல்லி வைக்குமிடம் சூப்பர்ப்பாக இருக்கும்.. சந்தீப் செள்தாவின் பிண்ணனி இசை வரும் ஒரு கோரஸ் பாடல் செம பெப்.. முன்னர் பார்த்தது போல க்ளைமாக்ஸ் வரைக்கும் வாய் பிளந்து பார்க்க முடியவில்லை. க்ளைமாக்ஸ் கொஞ்சம் நீளம்தான். இருந்தாலும் மீண்டுமொரு பரபரப்பான ஹைஃபை கேங்ஸ்டர் படம் பார்பதானால் நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.
டிஸ்கி: பா.வே. படங்கள் என்றால் பார்க்க வேண்டிய படங்கள்
Comments
இங்க வந்த பின்னாடி 2-3 முறை பார்த்தாச்சி.
இதில மோகன்லால் நடிப்பும் நல்லா இருக்கும்..