பா.வே.படங்கள்- சத்யா
ராம்கோபால்வர்மா தன் முத்திரையை பாலிவுட்டில் பதித்த படம். இந்தியாவில் பல மாநிலங்களில் கேங்ஸ்டர்கள் படம் வருவதற்கு காரணமான படம் இது என்று சொன்னால் மிகையில்லை. மிக சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, மாபெரும் வெற்றியையும், படம் வெளிவந்த நேரத்தில் எல்லாரையும் ஹா.. என்று வாய்பிளக்க வைக்கும் மேக்கிங் கொண்ட படம் சத்யா.
சத்யா ஒரு சாதாரணமானவன். வாழ்வில் காயம் பட்டவன், அநாதை. ஹைதராபாத்திலிருந்து வேலை தேடி வருபவனை பம்பாய் வசீகரித்துக் கொள்ள, சர்வராய் வேலை செய்யும் இடத்தில் ஒரு லோக்கல் தாதா சத்யாவை அடிக்க, பதிலுக்கு முறைக்க, என்று ஆரம்பிக்கும் படம், தாதாவின் அல்லக்கை கையில் கத்தியை வைத்து மிரட்டும் போது, சரக்கென அவன் முகத்தில் அவன் கையினாலேயே கோடு போடுமிடத்திலிருந்து ஏற ஆரம்பிக்கும் கிராப் அப்புறம் இறங்கவே இறங்காது.
லோக்கல் தாதாவால் ஜெயிலில் அடைக்கப்படும் சத்யா அங்கேயும் முரட்டுத்தனமான அமைதியுடன் இருக்க, அங்கே ஒரு கொலை கேஸுக்காக ஜெயிலில் இருக்கும் பீக்கு மாத்ரே என்ற தாதாவுடன் சண்டையில் ஆரம்பித்து நட்பாக மாறி அவன் வாழ்க்கையை மாற்றுகிறது. அதன் பிறகு அவனது வாழ்க்கையை பீக்கு மாத்ரேதான் தீர்மானிக்கிறான். இதனைடையில் எதிர் வீட்டு வித்யாவுடனான காதல், அவளுக்கான பாடல் பாடும் வாய்ப்பு, அண்டர் வேர்ல்ட் பீக்கு மாத்ரேவின் அரசியல் அன்னதாதா, கல்லு மாமா, அந்த குண்டு ரவுடிப் பையன், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத அடியாள். பிச்சைக்காரனை போல அலையும் வக்கீல், எதிர் கோஷ்டி தாதாக்கள் என்று கண் முன் திரியும் நிஜமான நிழலுலக தாதாக்கள், கொஞ்சம் ஆரம்பத்தில் வயிற்றில் புளியை கரைத்தாலும் மெல்ல, மெல்ல அவர்களுடனான வாழ்கையை வாழ ஆரம்பித்துவிடுகிறோம். கல்லுமாமாவின் தீடீர் வில்லத்தனத்தையும், அவனின் குழந்தைத்தனமான பேச்சையும், அந்த குண்டு பையனின் இன்னொசென்ஸையும், சத்யாவின் அழுத்தமான அமைதியையும், பீக்கு மாத்ரேவின் ஆரவாரமான அட்டகாசமான சிரிப்பையும், அவனின் மனைவியின் காதலையும், ஊடலையும் ரசிக்கத்தான் செய்வோம்.
அதே போல தாதா குழுக்களுக்கான பிரச்சனைகள், அவர்களின் அரசியல், அரசியல் காரணமான் நெருக்கமாய் பழகியவர்களை சிரித்துக் கொண்டே, நொடிகளில் நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொல்லும் குரூரமும், நம்மை அதிரத்தான் செய்கிறது. இம்மாதிரியான தீவிரமான அடிதடி, கொலை, கதைகளில் காதல் கொஞ்சம் லேக்கான விஷயமான் இருந்தாலும், க்ளைமாக்ஸுக்கான டெப்த் அதில் தானிருப்பதால் பொறுத்துக் கொள்ளலாம். கமிஷனர் தன் பொறுப்பில் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு, தாதாக்களை அடக்க, என்கவுண்டர் செய்ய, இதை தடுக்க என்ன வழி என்று யோசிக்கும் போது, கமிஷனரையே கொல்லுமிடம், அதிர்ச்சி. ஆனால் அதுவே அவர்களின் இறுதியாத்திரைக்கான ஆரம்ப இடம் எனும் போது.. கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு.. என்ற விஷயம் நிச்சயமாகிறது.
படத்தின் முக்கியமான பலம் திரைக்கதையும், மேக்கிங்கும், வசனங்களும், அதில் இருக்கும் நேர்மையும்தான். சும்மா பில்டப்புக்காக தாதாகக்ள் எல்லாம் பஞ்ச் டயலாக் பேசாமல், நிதர்சன வாழ்க்கையை பிரதிபலிக்க வைத்த இயக்குனர் ராம் கோபால் வர்மாவுக்கு ஒரு சல்யூட்.
Satya- A Must Watch Film
Comments
எனக்கு ஒரு கேள்வி... அது என்ன துணை இயக்குனர் ஆனபின்பு பல பழைய படங்களின் விமர்சனங்கள். 'அயன்' படத்தி வரும் நிகழ்வுகள் உண்மைதானா?
எனக்கு ஒரு கேள்வி... அது என்ன துணை இயக்குனர் ஆனபின்பு பல பழைய படங்களின் விமர்சனங்கள். 'அயன்' படத்தி வரும் நிகழ்வுகள் உண்மைதானா? //
விஜய்சார் எனக்கும் அதே டவுட்தான்.. எப்படின்னா டைரக்டர் சீன் புடிங்கன்னு சொல்லி நிறைய படம் பார்த்து அதில் சிறந்ததை எழுதறார்னு நினைக்கின்றேன்...
தல உங்களோட களவாணி பட விமர்ச்சனம் இப்பதான் படிச்சேன் .... உங்க மேல இருந்த மரியாதையில பாதி காணாமபோயிடுச்சி .....************
எப்பவோ எழுதுன களவாணி படத்தோட விமர்சனத்த படிச்சிட்டு இப்ப வந்து குறை சொல்லுரிங்க?
உங்களுக்கு காந்திய சுட்ட விஷயம் தெரியாதோ?
அப்படி என்ன சார் மேல மரியாத நீங்க வெச்சிங்க, நூற்றுக்கணக்கான நல்ல பதிவுகளுக்கு நீங்கள் வாழ்த்து சொல்லவே இல்லையே?
"ராஜா"ன்னு பேரு இருக்குறவுங்க எல்லாம் இப்படித்தான் லூசு மாதிரி கமெண்ட் பன்னுவ்வாங்கனு எங்கயோ படிச்சா ஞாபகம். நான் சொல்லல எங்கேயோ..............