Thottal Thodarum

Sep 5, 2010

கொத்து பரோட்டா –06/09/10

நான் இணை இயக்குனராக வேலை செய்யும் படத்தின் ஷூட்டிங் இன்று ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை! அதனால் ஐய்யா.. ஜாலி என்று சந்தோசப் படுபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை.. திடீர்னு நடுவுல நாலு எழுதி போட்டாலும் போடுவேன். சாக்குரதை.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஆர்டிஸ்ட் செலக்‌ஷன் நடந்து கொண்டிருக்கும் வேளையில் ஒருவர் மிக நீட்டான உடையணிந்து உட்கார்ந்திருந்தார். நான் யார் என்று கேட்ட போது இயக்குனரை பார்க்க வேண்டும் என்றும், தான் ஒரு தயாரிப்பாளர் என்று சொன்னார். இயக்குனர் வர மாலை ஆகும் என்பதால் என்ன விஷயம் சொல்லுங்கள் நான் சொல்லிவிடுகிறேன் என்றதும், பையிலிருந்து ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு, நான் தான் வின்னர் பட தயாரிப்பாளர், அவரை பற்றி பட உலகில் இருப்பவர்கள் எல்லாருக்கும் தெரியும். வின்னர் படம் வெற்றிப் படமாய் இருந்தும் அதனால் எந்த விதத்திலும் பெரியதாய் லாபம் சம்பாதிக்காதவர். அதே நடிகரை வைத்து அடுத்து பட தயாரிப்பு வேலையில் இறங்கி, அதனால் ஆன ப்ரச்சனை காரணமாய் நொடித்து போன கதை குமுதத்தில் வந்திருக்கிறது. இப்படத்தில் அவருக்கு நிச்சயம் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இயக்குனர் முதற்கொண்டு குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டுள்ளோம். அதெப்படி ஒரு தயாரிப்பாளர் வெற்றிப் படத்தை கொடுத்துவிட்டு பணம் சம்பாதிக்காமல் இருக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு விடை..விளம்பரம்: சினிமா வியாபாரம் புத்தகத்தில் இருக்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நேற்று நண்பர் முத்துப்பாண்டி என்னிடம் சிந்து சமவெளி படத்துக்கெல்லாம் விமர்சனம் எழுதுகிறீர்களே? என்று பெங்களூரிலிருந்து ஒரு மணி நேரம் பேசினார்.  நீண்ட வாக்குவாதம் எங்களுக்குள். மிக ஆரோக்கியமாக.. இது போல பல முறை எங்களிடையே நிகழ்ந்துள்ளது. ஏன் எழுதினால் என்ன என்று கேட்டேன். இம்மாதிரியான படங்களை பார்த்து எதிர்காலத்தில் மருமகள்கள் எல்லாம் மாமனாரை கரெக்ட் செய்ய பழகிவிடுவார்கள். சமுதாயத்தை கெடுத்துவிடும் படங்களை எடுக்கவே கூடாது என்றார். இப்படி படமெடுப்பவர் ஏன் நாளை அண்ணன் தங்கை உறவை வைத்து கொச்சைபடுத்தி படமெடுக்க மாட்டார் என்று கேட்டார். பல நண்பர்கள் உலக படங்களில் வரும் காட்சிகளையெல்லாம் பார்த்துவிட்டு, அற்புதமான கதை என்று சொல்வார்கள் அதையே தமிழில் எடுத்தால் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது. என்று கூக்குரலிடுவது. சினிமா என்ற ஊடகம் வரும் முன்னரே இம்மாதிரியான கதைகள் நடக்கத்தான் செயிதிருக்கிறது. இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. என்பது தினசரிகளை பார்த்தாலே தெரிகிறது. இப்படியிருக்க, இம்மாதிரியான படங்களின் வெற்றி இப்படத்தை பற்றி பேசுவதில் தான் அடங்கியிருக்கிறது. தேவையில்லாத படமென்று நீங்கள் நினைத்தால் அதை இக்னோர் செய்யுங்கள். தானாகவே அதன் முன்னுரிமை இழந்து தவிர்க்கப்பட்டுவிடும். நானாவது படம் பார்த்துவிட்டு எழுதினேன்.  நண்பரோ.. அந்த படத்தை பார்க்காமலேயே ஒரு மணி நேரம் பேசினார். இதான் அப்படத்துக்கு கிடைக்கும் பப்ளிசிட்டி.  வெற்றி.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வார தத்துவம்
உன்னுடய அர்பணிப்பு கடலை விட ஆழமாக இருந்தால், உன்னுடய குறிக்கோள் மலையை விட உயரமானதாய் இருக்கும், உன்னுடய எதிர்காலம் சூரியனை விட பிரகாசமானதாய் இருக்கும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ இந்த வார குறும்படம்
மிகவும் சர்காஸ்டிக்கான ஒரு சின்ன குறும்படம்.. கார்த்திக் சுப்பாராஜுடையது. இந்த இரண்டு சொச்ச நிமிட குறும்படத்தில் நச்சென விஷயத்தை சொல்லியிருக்கிறார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
இந்த வார விளம்பரம்
சிகரட் பிடிப்பதினால் வரும் பிரச்சனைகளை குறித்து இந்தியன் கேன்சர் அசோசியேஷன் எடுத்த விளம்பரம். நச் விளம்பரம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
டைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப், லேட்டஸ்டா பாருங்க நித்யானந்தா மாட்டினாரு, ரஞ்சிதா எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா..? எப்பவுமே பொண்ணுங்க உசாரு.. எஸ்கேப்பாயிடுறாங்க..
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ ஏ ஜோக்
ராஜா ஒரு வேலைக்காகதவன். ஆனால் ராணிக்கு எந்நேரமும் செக்ஸ் வேண்டும் எனவே நிறைய ஆட்களுடன் தொடர்பு வைத்திருந்தது தெரிந்த ராஜா, வேட்டைக்கு புறப்படும் முன் தன் அரசவை மேஜிக் நிபுணரிடம் ஒரு கருவி செய்ய சொல்கிறான். அவனும் யார் கண்ணுக்கும் புலப்படாத ஒரு ஸ்பெஷல் கருவியை ராணியின் இடுப்பில் கட்டி விடுகிறான். அக்கருவி. ராணியின் இடுப்பின் கீழ் நீட்டமாக எது வந்தாலும் கட் செய்துவிடும். வேட்டை முடிந்து வந்து எல்லா மட்ட ஆட்களையும் செக் செய்ய எல்லோருடய லுல்லாவும் துண்டாகியிருந்தது. கடைசியாய் இருநத மந்திரியை செக் செய்ய அவருடய லுல்லா மட்டும் அப்படியே இருக்க, சந்தோசப்பட்ட ராஜா இவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுக்கலாம் என்று கேட்க, மந்திரி “பே…பே..”என்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கேபிள் சங்கர்

Post a Comment

46 comments:

Suresh.D said...

எனக்கு தான் இன்னைக்கு மொத வடை

R. Gopi said...

super, especially the part on sindhu samaveli

Suresh.D said...

முதல் படத்துக்கு வாழ்த்துக்கள்

எம்.எம்.அப்துல்லா said...

எங்கய்யா ஹா.பா, பா.ஸ்ரீ எல்லாம் இன்னும் காணோம்??

எம்.எம்.அப்துல்லா said...

பயபுள்ளைக லாங் வீக்கெண்டில் ஊரச் சுத்துக போல.

அன்பரசன் said...

//அதனால் ஐய்யா.. ஜாலி என்று சந்தோசப் படுபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை.. திடீர்னு நடுவுல நாலு எழுதி போட்டாலும் போடுவேன். சாக்குரதை. //

என்ன தல மிரட்டுறீங்க..

ம.தி.சுதா said...

தங்கள் வெற்றிப்படிகள் நீள வாழ்த்துக்கள்...

மதுரை சரவணன் said...

முதல் படத்துக்கு வாழ்த்துக்கள்... கடைசி ஜோக் ஓவர் செக்சி ... வாழ்த்துக்கள்.பகிர்வுக்கு நன்றி.

Rafeek said...

அது சரி.. என்ன படம்? யாரு இயக்குனர்? நிதி சகோதரர்கள் புரடக்‌ஷனா? டிடெய்ல் சொல்லுங்கப்பு!!

vasu balaji said...

வாழ்த்துகள் ஜி:)

பரிசல்காரன் said...

தத்துவம் மிகவும் ஆழமாக சிந்திக்க வைக்கிறது கேபிளானந்தரே...

பேரு ஸ்டான்லீ ங்க.. said...

//ஜாக் செத்தான்,பரத் பைத்தியமானான், ஜெய் செத்தான் "நித்யானந்தா மாட்டினாரு"//
அது ஏன் அவனுக்கு மட்டும் "ர்".? மரியாதையை நிமித்தமனாலும் உங்களை விட அவனுக்கு வயது குறைவுதான் .. இங்கதான் அவன் நின்னு ஜெயிக்கிறான்.

எஸ்.கே said...

தங்கள் வெற்றிப் பயணத்திற்கு வாழ்த்துக்கள்!

அந்த கேன்சர் விளம்பரம் ரொம்ப ரொம்ப சூப்பர்!

க ரா said...

வாழ்த்துகள்ணா :)

Unknown said...

முதல் படத்திற்கு வாழ்த்துக்கள்.

தத்துவம் மிக அருமை.

Renga said...

//டைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப், லேட்டஸ்டா பாருங்க நித்யானந்தா மாட்டினாரு, ரஞ்சிதா எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா..? எப்பவுமே பொண்ணுங்க உசாரு.. எஸ்கேப்பாயிடுறாங்க.. //

ஆணாதிக்கவாதின்னு முத்திரை விழுந்துவிடும்... என்று பயம் கொள்ளாமல்... உங்கள் கருத்தை தெளிவாக கூறி உள்ளீர்கள்... சபாஷ்...

சிவராம்குமார் said...

சீக்கிரமே டைரக்டர் ஆக வாழ்த்துகள்... அந்த சீ சீ ஜோக் பழசனாலும் சூப்பர்.. ஹி ஹி ஹி

Unknown said...

தலைவா அப்ப கூடிய சீக்கிரம் உங்ககிட்ட இருந்து அண்ணனின் ஆசை வெறி மாத்ரி படம் எதிர் பார்க்கலாம் என நினைக்கிறன். ஏன் என்றால் உங்களுக்கும் எனக்கும் மன முதிர்வு இருப்பதால், வாழ்த்துக்கள் .
அன்பன் பா.பாலமுருகன்

Jana said...

//உன்னுடய அர்பணிப்பு கடலை விட ஆழமாக இருந்தால், உன்னுடய குறிக்கோள் மலையை விட உயரமானதாய் இருக்கும், உன்னுடய எதிர்காலம் சூரியனை விட பிரகாசமானதாய் இருக்கும்.//

படப்பிடிப்புக்கு வாழ்த்துக்கள்.

vinu said...

naanum attendance pottukarean, appala yaarum naan classukku olunga varathillainnu complain pannidura poraanga

a said...

//
அதெப்படி ஒரு தயாரிப்பாளர் வெற்றிப் படத்தை கொடுத்துவிட்டு பணம் சம்பாதிக்காமல் இருக்க முடியும் என்று கேட்பவர்களுக்கு விடை..விளம்பரம்: சினிமா வியாபாரம் புத்தகத்தில் இருக்கிறது
//
அண்ணே இது அந்த தயாரிப்பாளர் மேல உள்ள கரிசனமா? இல்ல வியாபார யுக்தியா :)

//
எம்.எம்.அப்துல்லா சைட்...
பயபுள்ளைக லாங் வீக்கெண்டில் ஊரச் சுத்துக போல.
//
ஆமாண்னே........ இருந்தாலும் கடமை தவறாம பதிவெல்லாம் படிக்கிரம்ல.....

kalil said...

தல , கொத்து நச்னு இருக்கு....ஜோக் மட்டும் பழசு .. ஆனா நீங்க re-mix பண்ணின மாதிரி தெரியுது

Vediyappan M said...

கொத்து பரோட்டா வழக்கம்போல அருமை, அந்த ஏ ஜோக் எல்லைய கடந்து போயிட்ட்டிருக்கு. விண்ணர் பதயாரிப்பாளர் நிலமை வருத்தத்துக்கு உறியது,

Raju said...

டைட்டானிக் ஜாக் செத்தான், ரோஸ் எஸ்கேப், காதல் பரத் பைத்தியமானான், சந்தியா எஸ்கேப், சுப்ரமணியபுரம் ஜெய் செத்தான், சுவாதி எஸ்கேப், லேட்டஸ்டா பாருங்க நித்யானந்தா மாட்டினாரு, ரஞ்சிதா எஸ்கேப். மாரல் ஆப் த ஸ்டோரி என்னன்னா..? சாமியார்கள் எப்போதும் எ ந் நிலையிலும் மரியாதை இழப்பதில்லை.

சசிகுமார் said...

super sir

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தலைவரே... (படத்து பேரையும் சொல்லுங்க)

பித்தன் said...

முதல் படத்திற்கு வாழ்த்துக்கள்.

தத்துவம் மிக அருமை

சைவகொத்துப்பரோட்டா said...

இணை இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

வடுவூர் குமார் said...

சிக‌ரெட் விள‌ம்ப‌ர‌ம் தான் ந‌ச் என்று இருந்த‌து.

Ahamed irshad said...

வாழ்த்துக்கள்..

ஜோ.. ஜோ.. ஜோக்...க்..கு...வ..ர்ர்ர்ர்

thatraja said...

//ஜாலி என்று சந்தோசப் படுபவர்களுக்கு ஒர் எச்சரிக்கை.. திடீர்னு நடுவுல நாலு எழுதி போட்டாலும் போடுவேன். சாக்குரதை. //

ஜாலி-இங்கற word Blogல இருக்கும்போது why சாக்குரதை. please change to ஜாக்குரதை.

தமிழ இப்படி வளர்க்கணுமா... :-)

Anyway Nice Smoking Ad in this post.

R.Gopi said...

வாழ்த்துக்கள் சங்கர் ஜி....

எக்ஸ் மென் ஏன் இந்த கொலவெறியோட இருக்கார்?

Kumky said...

:))

வாசித்தேன்.

நன்றி.

Chitra said...
This comment has been removed by the author.
Chitra said...

//////பல நண்பர்கள் உலக படங்களில் வரும் காட்சிகளையெல்லாம் பார்த்துவிட்டு, அற்புதமான கதை என்று சொல்வார்கள் அதையே தமிழில் எடுத்தால் கலாச்சாரம் கெட்டுப் போய்விட்டது. என்று கூக்குரலிடுவது. சினிமா என்ற ஊடகம் வரும் முன்னரே இம்மாதிரியான கதைகள் நடக்கத்தான் செயிதிருக்கிறது. இன்னமும் நடந்து கொண்டுதானிருக்கிறது. என்பது தினசரிகளை பார்த்தாலே தெரிகிறது.////

நீங்கள் சொல்வது தவறு, நீங்கள் சொல்வது போல சினிமா என்கிற ஊடகம் வரும் முன்னரே இம்மாதிரியான கதைகள் நடந்து கொண்டு தான் இருந்தது நான் மறுக்கவில்லை ஆனால் அதற்காக அதை சினிமாவில் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, சினிமா என்பது அனைத்து தரப்பு மக்களாலும் பார்க்க படுகின்ற ஒன்று, கெட்டவைகளை சட்டென்று உள்வாங்கி கொள்வது மனித இயல்பும் கூட...உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன், fire என்கிற திரைப்படம் வருவதற்கு முன்பு எத்தனை பேருக்கு ஓர் இனச்சேர்க்கை பற்றி தெரியும் ? ஆனால் அந்த படம் வந்த பிறகு அனைவருக்கும் அது என்ன என்று தெரியும்....தினசரிகளில் வந்து கொண்டு தான் இருக்கிறது இல்லை என்று மறுக்கவில்லை ஆனால் அதையே visual ஆக பார்க்கும்போது ஏற்படுகின்ற பாதிப்பு அதிகம்....இம்மாதிரியான படங்களை எடுக்கும்போது இயக்குனர்கள் யோசித்து எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஏன் என்றால் சினிமா துறையில் உள்ளவர்களுக்கு சமுதாய பொறுப்புணர்வு அதிகம் இருக்க வேண்டும்....வித்யாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்தால் அதற்கு ஆயிரம் வழிகள் இருக்கிறது அதை விட்டு விட்டு இப்படி சாக்கடை போல் படம் எடுக்க அவசியம் இல்லை என்பது என் கருத்து....

உங்கள்ளுக்கு ஒரு வேண்டுகோள்...இன்று சினிமா வை விட அதிகம் பயன் படுத்தும் ஊடகமாக இணையம் இருக்கிறது, அப்படி இருக்க உங்களுக்கும் சமுதாய பொறுப்புணர்வு இருக்க வேண்டும் என்று நினைக்கிறன்....இலவசமாக இடம் இருக்கிறது எழுத என்று மோசமான விஷயங்களை ஊக்குவிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

நன்றி...

இனிய தமிழ் said...

வாழ்த்துக்கள் நண்பரே...

அருண் said...

குரு சீக்கிரமே டைரக்டர் ஆக வாழ்த்துக்கள்.கொத்து சூப்பர்.

ஆட்டையாம்பட்டி அம்பி said...

கலாச்சாரம் என்றால் என்ன? அதற்க்கு விளக்கம் எனக்கு இது வரை புரியவில்லை. அறிஞர்கள் விளக்குவார்களா?

1925, 1950. 1975, 2000, வந்த பழைய பத்திரிக்கைகளை புரட்டிப் பார்க்கும் பொழுது அப்பொழுதும் இதே புலம்பல் --- நம்ம கலாச்சாரம் அழிந்து விட்டது அழிகிறது என்று?

எனது கேள்விகள்?

1). நமது கலாச்சாரம் அழிந்துவிட்டதா?
2). அல்லது எது நமது கலாச்சாரம்?

1925-ல் அனுசரித்தா?
1950-ல் அனுசரித்தா?
1975-ல் அனுசரித்தா?
2000-ல் அனுசரித்தா?
அல்லது இப்ப உள்ள கலாச்சாரமா?

மாற்றம் மட்டுமே இந்த உலகத்தில் மாறாதது என்று ஒரு அறிஞன் சொன்னான்!

Naadodigal said...

Bossu..இந்த ஜோக் ரொம்ப பழசு.....வர வர நீங்க,ஜோக்கையும், A ஜோக்கையும் மாத்தி போடுறீங்க....

Naadodigal said...

உங்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

pichaikaaran said...

”பதினைந்து நாட்களுக்கு ஷூட்டிங் இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா? என்று தெரியவில்லை!”

அப்படீனா சாப்பாட்டுக்கடை வராதா?

'பரிவை' சே.குமார் said...

முதல் படத்துக்கு வாழ்த்துக்கள்...

பாலா said...

வாழ்த்துகள் சங்கர்!!!!! :)

Thamizh said...

wishing you a great success in your endeavour. Eagerly looking for the movie, name of the movie, artist.... story as well...!

madurai partha said...

am also interested to work for assistant director.so please share your working area things

sarathy
dubai

Cable சங்கர் said...

பின்னூட்டமிட்டும், வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.. ஆணிகள் தொடர்ந்து இருப்பதால் எல்லோருக்கும் தனித்தனியாய் பின்னூட்டமுடியவில்லை. மன்னிக்கவும்.