இன்னொரு ரஜினியாக ஒருத்தர் வந்துவிட்டார் என்று விகடன் இவரது முதல் படமான பூவிலங்குக்கு விமர்சனம எழுதி வரவேற்றது. தொடர்ந்து பல ஹிட் படங்கள். என்பதுகளில் மீடியம் பட்ஜெட் படநாயகன் என்றாலே முரளிதான் என்று ஒரு விஷயம் ஓடிக் கொண்டிருந்தது. காலேஜ் ஹீரோ கேரக்டர் என்றால் அதுக்கு கேள்வி கேட்காமல் முரளியை தான் ஆப்ஷனாக வைக்குமளவுக்கு தமிழ் திரையுலகில் நிரந்தர யூத்தாக வலம் வந்தவர். சமீபத்தில் அவரது மகன் நடித்து வெளியான பாணா காத்தாடி படத்தில் கூட மருத்துவ கல்லூரி மாணவராக வந்து கலகலப்பு ஏற்படுத்தியவர்.
இப்படி ஒவ்வொரு டெக்னீஷியன்களுக்கும் ஒவ்வொரு நினைவுகள் முரளியை பற்றி. எங்கள் படப்பிடிப்பு நடக்குமிடத்தின் ஒரு சில கிலோ மீட்டர்கள் அருகிலேயே தான் அவரது வீடு இருந்ததால் பல பேர் மாற்று ஆட்களை வைத்துவிட்டு அவருக்கு அஞ்சலி செய்துவிட்டு வந்தார்கள்.
ஒரு வெளிப்புற படப்பிடிப்பு முடிந்து எல்லாரும் பேக்கப் ஆகிவிட்ட்ட பிறகு இயக்குனரும், முரளியும் ஹோட்டல் அறையில் உட்கார்ந்து அடுத்த கட்ட காட்சிகளை பற்றி பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள். பேச்சு சுவரஸ்யமாய் போக சரி ஊருக்கு கிளம்பலாம் என்று வெளியே வந்து பார்த்தால் எல்லாரும் கிளம்பி போய்விட்டிருக்க, மேனேஜருக்கு போன் செய்தால்.. ஹீரோவும் நீங்களும் ஷூட்டிங் முடிந்த பின் காரில் கிளம்பி போய்விட்டதாக சொன்னார்கள்.. நாங்களும் பேக்கப் செய்து கொண்டு வந்துவிட்டோம் சுமார்.. 200 கிலோ மீட்டர் வந்தாகிவிட்டது. வேண்டுமானல் உடனே ஒரு வண்டியை மாற்றி அனுப்புகிறோம் என்று சொல்ல.. விஷயம் தெரிந்த முரளி.. டைரக்டரிடம் எதுக்கு வேஸ்டா அவங்க வண்டிய அனுப்பி, அது இங்க வர்ற வரைக்கும் நாம வெயிட் செய்யறது.. பேசாம பஸ்சுல போயிறலாம் என்று சொல்லி, கிளம்பிவிட்டாராம் சென்னைக்கு. பஸ்சில் அப்போதைய பிரபல ஹிரோவுடம் பயணம் செய்வதில் மக்கள் ரொம்பவே சந்தோஷமடைந்தார்களாம். அப்படிப் பட்ட அருமையான மனிதர்.. என்று முரளியின் மரணம் குறித்து கண்களில் தளும்பிய நீருடன் நினைவோடிக் கொண்டிருந்தார் எங்களுடன் இணைந்து பணியாற்றும் மஞ்சுவிரட்டு என்கிற அப்படத்தின் இயக்குனர்.
சமீபத்தில் கூட ஒரு டிஸ்கஷனில் நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோது.. “இன்னைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட் கேரக்டர்ல முரளின்னு சொன்னா நம்புறா மாதிரி இருக்கிற ஒரே ஆள் என்றார் நண்பர் ஒருவர். மக்கள் மனதில் மிகவும் யூத்தான் ஒரு கெட்டப்பிலேயே இருந்ததினால் என்னவோ.. மிகவும் யூத்தான வயதில் இறந்துவிட்டார் என்ற எண்ணமும் ஓடிக் கொண்டிருந்துதான் இருந்தது.
கேபிள் சங்கர்
Comments
நேற்று இந்த விஷயம் கேள்விபட்டவுடன் எனக்கு நினைவில் வந்தது “பானா காத்தாடி”யில் வந்த அவரது சிரித்த முகம். வெளியுலகத்திலும், ரசிகர் மத்தியிலும் அவர் இன்றும் காலேஜ் ஸ்டூடண்டாக நடிப்பதைக் கிண்டலும் கேலியுமாக பேசுவதை அந்த படத்தில் அப்படியே பயன்படுத்தி இருப்பார்கள்.. அதில் அவரும் துணைபோவார்..
சென்ற வாரம், விஜய் டிவியில் “கதையல்ல நிஜம்” நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.. அதில் அவர் தன் அம்மா பற்றி நெகிழ்ச்சியாக சொன்னார்.. அப்போது லெஷ்மி அவர்கள் அவரது அம்மா இப்போது எப்படி இருக்கிறார் என கேட்டபோது முரளி மனம் கலங்கி அதே நேரம் கேமராமுன் கண்ணீர் சிந்தி சீண் போடாமல் அடக்கமாக “அம்மா இப்போ இல்லங்க அம்மா(லஷ்மி)” என்று சொன்னார்.. இது ஒன்றே அவரது தண்மைக்கு சான்றாக இருந்தது..
நல்லவங்கள ஆண்டவன் தன்கிட்ட சீக்கிறம் கூட்டிக்குவான்ன்னு யாரு சொன்ன நியாபகம்..
ஆழ்ந்த வருத்தங்கள்
திரையில் மட்டும்மல்ல நிஜத்திலும் இதயதைப் பாரமாக்கி விட்டுச் சென்றுவிட்டார்.
அந்த காதல் மாணவனுக்கு என் அஞ்சலிகள்.
46 வயதிலேயே மறைந்தது அதிர்ச்சி அளித்த விஷயம் தான்....
அவரின் ஆத்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்.....
அவருடைய ஆன்மா சாந்தி அடைய அந்த பரம்பொருளை வேண்டுகின்றேன்!!
My deep condolence to his family
அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்....
கேபிள்.
ஆன்மசாந்திக்கு பிரார்த்திப்போம்..!
-
DREAMER
அவரது மரணச் செய்தி மனதை ரொம்பவே வருத்தியது.
இதயம் படத்தில் முரளி சொல்லும் கவிதை.
முரளி என்றுமே என் மனதில் பூத்த மலர்.